Vedhanayagam Sastriar வேதநாயகம் சாஸ்திரியார்
1774 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் கிறிஸ்தவ குடும்பம் ஒன்றில் வேதநாயகம் சாஸ்திரியார் மகனாகப் பிறந்தார். தனது ஐந்தாம் வயதில் இலக்கண வித்துவான் வேலுப்பிள்ளையிடம் இலக்கணம் பயின்று, அதில் சிறந்தும் விளங்கினார். ஆனால் சிறு வயதிலேயே தன் தாயாரை இழந்ததால், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் குறைந்து தன் தாத்தாவின் மாடுகளை மேய்த்து வந்தார். 1783 ஆம் ஆண்டு இவரது தகப்பன் தேவசகாயம் தன் மகன் இலக்கியம் மற்றும் கணிதத்தை கற்க வேண்டும் என்பதற்காக ஆசிரியரை வீட்டிற்கு வந்து கற்பிக்குமாறு ஏற்பாடு செய்தார். பத்தாம் வயதில் ஒருநாள் மரச்சிலுவை ஒன்றை தரிசனமாக கண்டார். அன்று முதல் அவருடைய வாழ்க்கை மாறியது. கிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார். 1785 ஆம் ஆண்டு ஜெர்மானிய மிஷனெரி ஸ்வார்ட்ஸ் ஐயர் நெல்லைக்கு வந்தார். வேதநாயகத்தின் துடிப்பான செயலும், பேச்சும் அவரை அதிகம் கவரவே, அவரது தகப்பனாரின் அனுமதியோடு அவரை தஞ்சைக்கு அழைத்து வந்தார். ஸ்வார்ட்ஸ் ஐயர் அவர்கள் பல பாடங்களை வேதநாயகத்திற்கு கற்றுக் கொடுத்தார். அப்போது தஞ்சை மராட்டிய மன்னரின் மகனான நான்காவது சரபோஜியும் வேதநாயகத்துடன் பயின்றார். வேதநாயகத...