Posts

Showing posts with the label Scholar

பேராயர் நியூபிகின் 1909-1998 ArchBishop New Begin (Tamil & English)

Image
  1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பேராயர் நியூபிகின் இங்கிலாந்தில் உள்ள நியூகாஸல் என்ற ஊரில் பிறந்தார். வெள்ளை உருவம் கொள்ளை கொள்ளும் பார்வை உடைய இவர், மிகப்பெரிய சிந்தனையாளர், அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் வழிகாட்டி, இறையியல் வல்லுனர் என இவரைப் பற்றிக் கூறிக் கொண்டே செல்லலாம். கேம்பிரிட்ஜில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். பின்னர் தேவனுக்காக ஊழியம் செய்ய அர்ப்பணித்தவராய் இறையியல் படிப்பை தொடர்ந்தார். 1936 ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்று, தமிழ்நாட்டில் உள்ள ஸ்காட்லாண்டு திருச்சபைக்கு மிஷனெரி ஊழியராக பணிபுரிய அனுப்பப்பட்டார். இங்கு வந்தவுடன் தமிழ் மொழியை நன்கு கற்றறிந்து "பாவமும் இரட்சிப்பும்" என்ற தமது முதல் புத்தகத்தை 1937 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் ஊழியம் செய்யும்போது வெளியிட்டார்.  1947 ஆம் ஆண்டு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தென்னிந்திய திருச்சபையின் பேராயராக அபிஷேகம் செய்யப்பட்டு மதுரை - ராமநாதபுரம் பேராயத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் 1965ஆம் ஆண்டு சென்னையிலும் பேராயராக பொறுப்பேற்றா...