Posts

Showing posts with the label Bible Translator

மெரிலின் லசோலா, Merlin Lasola (Tamil & English)

Image
பாப்புவா நியூ கினித் தீவில் வாழும் மக்கள் 700 விதமான மொழிகளைப் பேசுகிறார்கள் . அதில் செப்பிக் இவாம் என்பதும் ஒன்று . அம்மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்துக் கொடுக்க மெரிலின் லசோலா என்ற பெண் ஊழியர் புறப்பட்டுச் சென்றார் . செப்பிக் இவாம் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது . அது ஒரு பேச்சு மொழி ஹவுனா கிராமத்தில் தளம் அமைத்து தன் உடன் ஊழியருடன் மெரிலின் தனது ஊழியத்தை ஆரம்பித்தார் . அவ்வூரில் மந்திரவாதிகள் அதிக சுறுசுறுப்பாகவே காணப்பட்டனர் . யாருக்காவது சுகமில்லை என்றால் அவர்களது கூரிய மூங்கிலால் நெற்றியைக் கீறுவார்கள் . பின் அதிலிருந்து வெளிப்படும் இரத்தம் சுகவீனத்தினிமித்தம் கெட்டு விட்டது என்று கூறி ஒருவித இலையை வாயில் மென்று கொண்டே அவர்கள் காயமுண்டாக்கின நெற்றியில் துப்புவார்கள் . அதன் மூலம் அசுத்த ஆவிகள் நோய்கண்டவர்களிடமிருந்து நீங்குவதாக அந்த ஊர் மக்களை மந்திரவாதிகள் ஏமாற்றி வந்தனர் . அவர்கள் அப்படி உமிழ்வதால் மந்திரவாதிகளை " துப்புவோர் " என்ற பெயரில் அழைத்தனர் .     மெரிலின் தன் உடன் ஊழியருடன் அன்றாடம் மொழி பெயர்த்த பகுதிகளை அவ்வூர் முதியவர்களைக் கூடிவரச் செய்து இரவு...

Bartholomaus Ziegenbalg சீகன்பால்கு ஐயர் (Tamil & English)

Image
 சீகன்பால்கு ஐயர் ஜெர்மனி தேசத்திலிருந்து தன்னுடைய 23ஆம் வயதில் தமிழ்நாட்டில் தரங்கம்பாடிக்கு வந்தார். 13 ஆண்டுகள் மாத்திரமே ஊழியம் செய்த அவர் தன்னுடைய 36வது வயதில் மரித்துப் போனார். வாலிப வயதில், வாழ வேண்டிய வயதில், திருமணமான மூன்று ஆண்டுகளில் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்ந்தார். ஆனால் அவர் வாழ்ந்த நாட்களில் தனக்கென வாழாமல் தேவனுக்கென வாழ்ந்த உத்தம ஊழியராக வாழ்ந்தார். கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகளை சந்தித்து சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அவருக்காக முன்வைத்த கால்கள் ஒருபோதும் பின்னிட்டுப் பார்க்கவில்லை. தேவன் தன்னை கொண்டு நிறைவேற்ற உள்ள திட்டத்தை செயல்படுத்த சீகன்பால்க் தன் தரிசன பார்வையை கூர்மையாக்கினார். தன் எண்ணங்களை கிறிஸ்துவின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுத்து பரந்த தரிசனத்தை பெற்றுக்கொண்டார். அவர் மரித்த போது அவருடைய சரீரம் தரங்கம்பாடியில் அவர் கட்டிய எருசலேம் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள தூணில் கீழ் கண்ட வாசகம் எழுதப்பட்டுள்ளது. பர்தலோமேயு சீகன்பால்க் • முதன்முதல் இந்தியா வந்த புராட்டஸ்டண்ட் அருள் தொண்டர் • முதன்முதல் அரசின்...

Joshua Marshman ஜாஷ்வா மார்ஷ்மேன் (Tamil & English)

Image
1768 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்பெரி மாகாணத்தில் ஜாஷ்வா மார்ஷ்மேன் பிறந்தார்.  தன் தந்தை செய்து வந்த நெசவுத் தொழிலையே மார்ஷ்மேன் செய்து வந்ததால் சமுதாயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த அடையாளமும் இன்றி ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல மார்ஷ்மேனின்  உள்ளம் இயேசுவுக்காக எதையாவது செய்ய உந்தித் தள்ளியது. கிறிஸ்துவின் அன்பிற்கு அடிபணிந்த அவர் பிரிஸ்டல் அகடமியில் கஷ்டப்பட்டு சேர்ந்து லத்தீன்,  கிரேக்கம், எபிரேயம், சீரியா ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.  அங்கு கல்வி பயின்று வந்த நாட்களில்,  பாப்திஸ்து மிஷனெரி சொசைட்டி மூலம் வெளியிடப்பட்ட மாத இதழை படிக்க ஆரம்பித்தார் . அதன் மூலம் இந்தியாவில் பணியாற்றி வந்த வில்லியம் கேரியின் ஊழியங்களை பற்றி  தெரிந்துகொண்டார்.  தேவையுள்ள இந்திய தேசத்தை பற்றிய பாரம் அவரை அழுத்த,  இந்தியாவில் பணி செய்ய தன்னை ஆண்டவரிடம்  முழுமையாக அர்ப்பணித்தார். 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் நாள் தன் மனைவி ஹன்னா உடன் இந்தியா வந்தார். கப்பலிலிருந்து செராம்பூர் இறங்கிய உடன்  கரையில் ந...