பரிசுத்த பிரான்சிஸ் அசிசி, Francis of Assisi ( tamil & English)
இத்தாலி தேசத்தில் 13-ம் நூற்றாண்டின் பரிசுத்தவான் என அழைக்கப்பட்ட பிரான்சிஸ் அசிசிஇ வித்தியாசமாக வாழ்ந்தார். அவர் நம்மைப் போல் சாதாரண மனிதர் தான் என்றாலும், தேவன் அவரை அசாதாரணமான காரியங்களை செய்ய பயன்படுத்தினார். வேதத்தில் நோவா தேவனோடு சஞ்சரித்தது போல, பிரான்சிஸ் அசிசியும் தேவனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.அவர் அனுதினமும் : 1. தேவனோடு சஞ்சரித்தார். 2. பரிசுத்தமான வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார். 3. ஜனங்களிடம் அன்பு கூர்ந்தார். இம்மூன்றையும் ஒரு நாள் தவறாது அனுதினமும் கடைபிடித்து வந்தார். இவர் மூலமாக தேவன் 157 அசாதாரணமான அற்புதத்தை இத்தாலியில் செய்தார். அவற்றில் ஒன்றை நாம் இங்கு பார்க்கலாம். பிரான்சிஸ் அசிசி இயற்கையோடு பேசி கர்த்தரை துதிக்கும் பழக்கம் கொண்டவர். தேவன் படைத்த மிருகங்கள், விலங்குகள் என அனைத்தும்,இவர் தேவனை துதிக்கும் போது, அவருடன் இணைந்து துதிக்கும். இவர் துதித்துக் கொண்டே சாலையில் நடந்து செல்லும் போது, சாலையின் இருபுறத்திலும் உள்ள மரங்கள்,செடி, கொடிகள் சந்தோஷமாக அசைந்து, இவரோடு சேர்ந்து தேவனைத் துதிக்கும். ஆற்றோரம் செல்லும் போது, ம...