ஹென்றி மார்ட்டின் Henry Martin (Tamil & English)
ஹென்றி மார்ட்டின் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டார். தனது இரண்டாம் வயதில் உடல் சுகவீனம் காரணமாக தாயாரை இழந்தார். தகப்பனாரால் கைவிடப்பட்டு அனாதை ஆனார். இவரது பாட்டியம்மா இவரை ஆண்டவருக்குள்ளாக வளர்த்து,ஆண்டவரிடம் நெருங்கி சேர உதவி செய்தார்கள். வாலிப வயதில் அனேக சபை ஊழியங்களில் ஆர்வமுடன் பங்குபெற ஆண்டவர் உ தவி செய்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த இவர்,வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.வழக்கறிஞராக மாற வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வந்தார். ஆனால் ஆண்டவர் அவரை தாயின் கருவில் உருவாகும் முன்னமே முன் குறித்து இருந்ததினால் அவர் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றினார். அச்சமயங்களில் வில்லியம் கேரியின் வாழ்க்கை வரலாறு இவரை அதிக அளவில் பாதித்தது. வில்லியம் கேரியின் ஊழியங்கள் மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகளால் அதிகம் கவரப்பட்டார்.தானும் இந்திய தேசத்திற்கு சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் பண்ணினார்.கல்லூரி படிப்பை முடித்ததும் இவரது திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டது.மணப்பெண்ணான லிடியா, அவரிடம் "ந...