Posts

Showing posts with the label William Ault

வில்லியம் ஆல்ட் William Ault (Tamil & English)

Image
வில்லியம் ஆல்ட் இங்கிலாந்து தேசத்தில் ஷு தயாரிக்கும் ஜாபேஸ் ஆல்ட் என்பவருக்கு 1778ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.இவரது தாயும், தந்தையும் தெய்வ பக்தியுள்ள மகனாக இவரை வளர்த்து வந்தார்கள். வில்லியம் தனது 7வது வயதிற்குள் 6 முறை வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடித்திருந்தார்.தான் வாழ்ந்து வந்த பகுதியில் ஞாயிறு பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 1808ம் ஆண்டு  இங்கிலாந்து தேசத்தில் உள்ள மெத்தடிஸ்ட் திருச்சபையின் போதகராக இந்த வில்லியம் ஆல்ட் பணி அமர்த்தப்பட்டு ஆண்டவரின் ஊழியத்தை செய்து வந்தார்.ஒரு வாரத்தில் சுமார் 25 இடங்களில் கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கம் செய்து வந்தார். இலங்கை தேசத்தில் இயேசு கிறிஸ்து இல்லை, அவரை அறிவிக்க ஊழியர்களும் இல்லை என்று கேள்விப்பட்ட வில்லியம் ஆல்ட் தான் ஒரு மிஷனெரியாக இலங்கை தேசத்திற்கு செல்ல வேண்டுமென ஆவியானவரால் உந்தித் தள்ளப்பட்டார்.   இலங்கை தேசத்திற்கு செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு மிஷனெரி சங்கத்திற்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டார்.திருமணம் முடித்திருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்று அவர்கள் பதில் கடிதம் அனுப்பினார்கள். தேவன் தனக்கு வாழ்க்கைத் துணையாக நி...