Posts

Showing posts with the label grand father of Dr.Ida Scudder

John Scudder (Part I) first American Medical Missionary in India (Tamil & English)

Image
இன்று இந்தியாவில், குறிப்பாக வேலூரில் புகழ் பெற்று விளங்கும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியைப் பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அக்கல்லூரியை தோற்றுவித்த டாக்டர் ஐடா ஸ்கடரின் வாழ்வு நம் அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். மருத்துவ வசதி கிடைக்காத ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியும், அநேக மருத்துவர்களை உருவாக்கியும் வாழ்ந்து மறைந்தவர். கிராமப் புற சுகாதார மையங்களை ஏற்படுத்தி, மக்களின் வாழ்வை தூய்மையாக்கிய தோடு, கிறிஸ்துவின் அன்பையும் அவர்களுக்கு கொடுத்தவர். இவரால் தாதியர் பயிற்சி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு, அநேக பெண்களுக்கு பயிற்சி அளித்ததால், அநேக பெண் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டனர். உலகமே இவரை போற்றுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இவருடைய பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் என அவருடைய குடும்பம் அதி முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. அவர்களின் முறையான பிள்ளை வளர்ப்பு, இந்த உலகமே திரும்பி பார்க்கும் உயர்ந்த பெண் மணியாக டாக்டர் ஐடா ஸ்கடரை மாற்றியது. தேவனுக்கு பணி செய்வதையே அவர்கள் தங்களுடைய வாழ்வின் முக்கிய குறிக் கோளாக கொண்டு இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் அன்ப...