Damien டாமியன் (Tamil & English)
டாமியன் பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் ( Molokai Island) என்பது சிறு தீவு . தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள் . தொழுநோயால் தாக்கப்பட்டோ ர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்டு , கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை கழித்தனர் . மக்களால் மட்டுமல்ல , கடவுளாலும் கைவிடப்பட்டு விட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர் . அவர்களுக்கு உதவி செய்யவும் , நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பாற்றவும் யாரும் முன்வரவில்லை . காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு . 1873- ஆம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடிப் புறப்பட்டான் ஒரு இளைஞன் . அவர் தான் டாமியன் ஆவார் . பலர் அவரை தடுத்தனர் . ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார் . மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ கொடுமையாய் இருந்தன . வியாதியின் கொடுமையால் நடைபிணங்களாக , உடலெல்லாம் புண்களாக , சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர் . அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன...