Posts

Showing posts with the label bishop Richardson

ஹக்கிவ்கா, Ha Chev Ka

Image
  ஹக்கிவ்கா – பேராயர் ரிச்சர்ட்சனாக மாறிய கதை.  வங்காள விரிகுடா கடல்... இது கார் நிக்கோபார் தீவை சூழ்ந்திருந்தது. இத்தீவில் நிக்கோபாரி இன மக்கள் நிரம்பியிருந்தனர். ஆதிவாசி இனம்! நிர்வாணம் வாழ்க்கை! வேட்டையாடுவதே இவர்களது தொழில்.  19 – ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் அவை! மிஷனெரி வேதப்பன் சாலமோன் இத்தீவில் அடியெடுத்து வைத்தார். இவர் தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்தவர். 12 ஆதிவாசி பையன்களை தேர்ந்தெடுத்து, பள்ளிக்கூடம் அமைத்து கல்வியறிவு கொடுத்தார். அதோடு கிறிஸ்துவையும் அவ்வாலிபர்களுக்கு அறிமுகம் செய்தார். நிக்கோபாரி மக்களுக்கு அவர்கள் இன மக்களே சுவிசேஷம் சொல்ல வேண்டுமென ஏவப்பட்டார். 12 பையன்களில் ஹக்கிவ்கா என்ற வாலிபனும் இருந்தான். பள்ளி வாழ்வை வெற்றியோடு முடித்த ஹக்கிவ்கா பர்மாவிற்கு வேதாகம உயர்கல்வி பயில அனுப்பப்பட்டான். பின் வெற்றியோடு திரும்பி வந்த ஹக்கிவ்கா, தான் கல்வி பயின்று உருவாக்கப்பட்ட பள்ளியில் ஓர் ஆசிரியரானான். அவனும் தன் இன மக்களுக்கு கிறிஸ்து வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்தான். நவ நாகரீகத்தையும், கல்வியையும் அறிமுகம் செய்ய எண்ணினான். உலகத்தின் வேகமான போக்கை தன் நிக்கோபார