தியோடர் ஹோவர்ட் சாமெர்வெல், இங்கிலாந்து தேசத்தில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இந்நாளில் அவர் வரைந்த ஓவியம் புவியல் சமூகக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த இசைக் கலைஞரும் கூட. இவர் பல திபெத்திய பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, பாடி அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். அவருடைய மருத்துவப் படிப்பின் இறுதி நாட்களில் முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்பட்டதால் அங்கு சென்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார்.
அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 29000 அடி உயரத்தில் இருந்த எவரெஸ்ட் மலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். டாக்டர் ஜார்ஜ் மல்லாரியின் தலைமையில் சென்ற போது ஏற்பட்ட கடுமையான பனிப் புயலின் காரணமாக ஜார்ஜ் மல்லாரி அப்பொழுதே மரணமடைந்தார். ஆகவே ஹோவர்ட் சாமெர்வெலின் மலை ஏறும் முயற்சியும் தோல்வியடைந்தது. மறுபடியும் ஹிமாலய மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஷெர்பாக்கள் என்னும் வழிகாட்டினர்கள் சுமார் பதினைந்து நபர்களோடு மறுபடியும் மலை ஏறினார். இடுப்பளவு பணியில் ஏற்பட்ட பனிச்சரிவில் (Avalanche) ஷெர்பாக்கள் அனைவரும் மரித்துப் போக டாக்டர் ஹோவர்ட் சாமெர்வெல் மட்டும் உயிர் தப்பினார். எவரெஸ்ட் மலையின் உச்சியில் சுமார் 28 ஆயிரம் அடி உயரம் வரை சென்றனர். அக்காலத்தில் யாராலும் இச்சாதனையை முறியடிக்க இயலவில்லை. மழை ஏற்றதற்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் போவர்மழை ஏற்றதற்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் ஹோவர்ட் பெற்றுள்ளார். பின்பு யாராலும் இச்சாதனையை முறியடிக்க இயலவில்லை.
ஏன் தனக்கு மட்டும் மரணம் வரவில்லை என்ற கேள்வியோடு இந்தியா முழுவதும் பயணப்பட ஆரம்பித்தார். கடைசியில் கன்னியாகுமரி அருகில் உள்ள நெய்யூரில் இருந்த மிஷன் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மக்களின் ஏழ்மையையும், மருத்துவ வசதிகள் இன்றி அவதியுறுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரே ஒரு மருத்துவரிடம் காலராவால் பாதிக்கப்பட்ட சுமார் 500 நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்த்தார். எந்த ஒரு பணி நியமனத்தையும், வருமானத்தையும் எதிர்பாராமல் நாற்காலி ஒன்றில் அமர்ந்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். இந்திய மக்களுக்கு கிறிஸ்துவும், சிகிச்சையும் தேவை என உணர்ந்தார். தேவன் தன்னை இதற்காகவே உயிருடன் வைத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு அதற்காக முழு மனதோடு செயல்பட ஆரம்பித்தார். இங்கிலாந்து தேசத்தில் தனக்கிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று நெய்யூர் மிஷன் மருத்துவமனைக்கு செலவு செய்தார். நிரந்தரமாக இந்தியாவிலேயே தங்கி இந்தியர்களுக்கு சுவிசேஷத்தையும் மருத்துவத்தையும் அளிக்க தன்னை அர்ப்பணித்தார். நாள் ஒன்றிற்கு 8 முதல் 16 அறுவை சிகிச்சைகள் வரை செய்து மருத்துவ துறையின் மூலம் பெரும் சேவை ஆற்றினார். சுமார் 25 ஆண்டுகள் நெய்யூரில் பணி செய்து விட்டு பின்பு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் தன் பணியை ஹோவர்ட் இறுதிவரை செய்தார்.
ஒருவேளை நாம் நினைத்தது ஒன்று, வாழ்க்கையில் நடப்பது வேறு என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். தேவன் அதன் மூலம் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை அறிந்து செயல்படுவது தான் சிறந்தது.
Theodore Howard
Somerwell, a surgeon in England He was very interested in painting. On this
day, his painting is kept in the Geological Society Hall. He is also a great
musician. He has sung and translated many Tibetan songs into English and has
won the hearts of everyone. During the final days of his medical studies, World
War I was taking place. He went there and worked as a surgeon because doctors
were needed to treat wounded soldiers there.
Although he was
a surgeon, he was more interested in mountain climbing. He attempted to climb
Mount Everest at a height of 29,000 feet. George Mallary died on the spot due
to a severe snow storm while he was headed by Dr. George Mallary. Howard
Somervell's attempt to climb the mountain also failed. Again, he climbed the
mountain with about fifteen people, guides called Sherpas who lived in the
foothills of the Himalayas. Dr. Howard Somerwell was the only one who survived
the avalanche, while all the Sherpas were killed. They went to the top of Mount
Everest, at a height of about 28,000 feet. At that time, no one was able to
break this tradition. Howard is an Olympic gold medalist in rain lifting. After
that, no one was able to break this achievement.
He started travelling
across India, wondering why death did not come to him alone. Finally, he went
to the mission hospital at Neyur, near Kanyakumari, and was shocked to see the
poverty of the people there and the lack of medical facilities. He saw around
500 cholera patients waiting in a long queue to be treated by a single doctor.
Without expecting any job appointment or income, he sat on a chair and started
giving treatment. He felt that the people of India needed Christ and healing.
He understood that God kept him alive for this purpose and started working for
it wholeheartedly. He sold all his property in England and spent it on the
Neyur Mission Hospital. He remained permanently in India and dedicated himself
to evangelising and healing Indians. He performed 8 to 16 surgeries per day and
rendered great service to the medical field. After working in Neyur for about
25 years, Howard ended his career at Vellore CMC Hospital.
Maybe we are
living in a state where what we thought was one thing is not what is happening
in life. It is best to act knowing what God wants to do with it.
Comments
Post a Comment