Dr. Nancie Monelle (Tamil & English)
நான்சி மோனெல் அமெரிக்க தேசத்தின் நியூயார்க் பட்டணத்தில் 1841 - ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே தன்னுடைய தகப்பனாரை இழந்ததால், தகப்பனுடைய அன்பு கிடைக்காமலேயே வாழ பழகிக் கொண்டார். ஆகவே மனதளவில் கிறிஸ்துவுக்குள் எதையும் தன்னால் செய்ய முடியும் என்ற வேகத்துடனும் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் அன்பு அவரை செயல்பட உந்தித் தள்ளியது. அந்நாட்களில் இந்தியாவில் காலனிய ஆட்சி நடந்து வந்ததால், வெவ்வேறு சபை பிரிவுகளைச் சார்ந்த மிஷனெரிகள் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக உலகின் பல மூ லை களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவிற்குள்ளும் அநேக மிஷனெரிகள் வந்து சுவிசேஷ பணியை செய்து கொண்டிருந்தனர்.. குறிப்பாக, ஆண் மருத்துவ மிஷனெரிகள் பலர் வந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். பெண் மருத்துவ மிஷனெரிகள் இந்தியாவில் பணி செய்வது சற்று கடினமான காரியமாக இருந்தது. வித்தியாசமான கால சூழ்நிலை, கலாச்சாரம், பின்தங்கிய சமுதாயம் போன்றவை அவர்களுக்குத் தடையாக அமைந்தது. அதிலும் தகவல் பரிமாற்றம், இடத்திற்கு இடம் மாறுபடுவதால், அவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது...