Dr Paul Brand (Tamil & English)
டாக்டர் பால் பிராண்டின் தகப்பனார் ஜெசிமென் பிராண்ட் தொழுநோயாளிகளின் மத்தியில் பணி செய்தவர்.இவர் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை பகுதியில் பிறந்து வளர்ந்தார்.1914 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி பிறந்தார்.பெற்றோர் ஊழியத்தில் முழுநேரமாக பணியாற்றியதால் இவரது தங்கையை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பும் பால் பிராண்டின் மேல் இருந்தது. இவரது தாயார் இவரிடம், "மகனே, இந்த அடர்ந்த இருண்ட காட்டிற்குள் நீ தனியாக இருப்பதாக நினைக்க வேண்டாம் ;ஆண்டவர் உன் கூடவே இருந்து உன்னை கவனித்து காப்பாற்றுவார்" என்று தினமும் ஊழியத்திற்கு செல்லும் முன் கூறுவார்கள். அதனால் பால் பிராண்டின் விசுவாசம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பித்தது. காட்டுப்பகுதிக்குள் இவர்கள் வாழ்ந்ததால் சரியான கல்வி வசதி பால் பிராண்டுக்கு கிடைக்கவில்லை. எனவே பால் பிராண்டின் தாயார் ஆசிரியராக இருந்து ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களை தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார். பால் பிராண்ட் தன் தந்தையின் ஊழியத்தை அதிகம் நேசித்து கவனித்து வந்தார். பால் பிராண்டின் 15வது வயதில் அவரது தந்தை கொடிய காய்ச்ச