ஜான் கெடி John Geddie (Tamil & English)
ஜான் கெடி ஏப்ரல் 10,1815- ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார் . பிறந்த சில நாட்களிலேயே கெடி மிகவும் பலவீனப்பட்டு மரண தருவாயில் இருந்தார் . அவரின் பெற்றோர் அவருக்காக பாரப்பட்டு ஜெபித்தனர் . அவர் குணமாக்கப்பட்டால் அவரை ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்வதாக ஜெபித்தனர் . அவர் கொடூரமான மக்கள் மத்தியில் பயமில்லாமல் ஊழியம் செய்வார் என்று யாரும் நினைத்து பார்த்ததில்லை . ஜான் ஒரு சிறந்த மாணவனாக இருந்தார் . தன் சிறுவயதில் எந்நேரமும் புத்தகத்தை படித்துக் கொண்டே இருப்பார் . தனது 19- ம் வயதில் இரட்சிப்பை பெற்று பிரஸ்பெடிரியன் சபையோடு சேர்ந்தார் . தன் இளவயதில் வேதாகம கல்வியில் ( Theology ) சேர்ந்தார் . மார்ச் 13, 1838- ஆம் ஆண்டு போதகராக நியமிக்கப்பட்டார் . அதே ஆண்டு போதகராக நியமிக்கப்பட்டார் . அதே ஆண்டு சார்லெட் அம்மையாரை திருமணம் செய்தார் . New Hebrides - இல் ( தற்கால Vanvatu நாட்டின் ) Melensian மற்றும் Polynesian தீவுகளில் வாழும் நர மாமிச பட்சிகள் மத்தியில் ஊழியம் செய்ய நவம்பர் 30, 1846- ல் கெடி தன் குடும்பத்தோடு புறப்பட்டார் . அக்டோபர் 17, 184...