Posts

Joshua Marshman ஜாஷ்வா மார்ஷ்மேன் (Tamil & English)

Image
1768 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட்பெரி மாகாணத்தில் ஜாஷ்வா மார்ஷ்மேன் பிறந்தார்.  தன் தந்தை செய்து வந்த நெசவுத் தொழிலையே மார்ஷ்மேன் செய்து வந்ததால் சமுதாயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த அடையாளமும் இன்றி ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல மார்ஷ்மேனின்  உள்ளம் இயேசுவுக்காக எதையாவது செய்ய உந்தித் தள்ளியது. கிறிஸ்துவின் அன்பிற்கு அடிபணிந்த அவர் பிரிஸ்டல் அகடமியில் கஷ்டப்பட்டு சேர்ந்து லத்தீன்,  கிரேக்கம், எபிரேயம், சீரியா ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.  அங்கு கல்வி பயின்று வந்த நாட்களில்,  பாப்திஸ்து மிஷனெரி சொசைட்டி மூலம் வெளியிடப்பட்ட மாத இதழை படிக்க ஆரம்பித்தார் . அதன் மூலம் இந்தியாவில் பணியாற்றி வந்த வில்லியம் கேரியின் ஊழியங்களை பற்றி  தெரிந்துகொண்டார்.  தேவையுள்ள இந்திய தேசத்தை பற்றிய பாரம் அவரை அழுத்த,  இந்தியாவில் பணி செய்ய தன்னை ஆண்டவரிடம்  முழுமையாக அர்ப்பணித்தார். 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் நாள் தன் மனைவி ஹன்னா உடன் இந்தியா வந்தார். கப்பலிலிருந்து செராம்பூர் இறங்கிய உடன்  கரையில் நின்று கொண்டிருந்த அனைத்து மக்களுக்கும் முன்பாக மு

Rev. Thomas Gajetan Ragland இராக்லாந்து (Tamil & English)

Image
அக்டோபர் 22 ஆம் தேதி காலையில் விடியும் வேளை வந்து விட்டது என்று எண்ணி மூன்று மணிக்கே மிஷனெரி இராக்லாந்து படுக்கையை விட்டு எழுந்து விட்டார். நிலா வெளிச்சத்தை கிழக்கு வெறுப்பு என்று நினைத்தார். முந்தின  இரவே  பாளையங்கோட்டைக்கு அனுப்பவேண்டிய கடிதங்களை எழுதி முடித்திருந்ததால் கடிதங்களை பாளையங்கோட்டைக்கு கொண்டு போகும்  நபரை எழுப்பி அக்கடிதங்களையும்,  சென்னைக்கு தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்களையும் கொடுத்து அம்மனிதனை அனுப்பிவிட்டார். அதன்  பின்னரே நேரத்திற்கு முன் தான் விழித்துக்கொண்டதை உணர்ந்தார். உடன் ஊழியர்  ப்வெனும் விழித்துக்கொண்டார்.  அவர் இராக்லாந்திடம் "நேரம் இருக்கிறது,  சற்று படுத்து உறங்குங்கள்" என்று கூற,  "இல்லை,  தூக்கம் போய்விட்டது" என்று கூறி தனது வேதாகமத்தை எடுத்து வாசித்து,  தியானித்து,  ஜெபிக்க உட்கார்ந்தார்.  ஒரு மணி நேரம் அதில்  செலவிட்ட பின்  அதிகாலை நேரம் ஆகிவிட்டதை அறிந்து வெளியே சென்று உலாவப் புறப் பட்டார். காலை ஆகாரம்  அருந்திய பின் அவரும் ப்வெனும் அந்த வார வரவு செலவு கணக்குகளை தயாரிக்க உட்கார்ந்தனர். உடனே ராக்லாந்து  நாம் இருவரும் இ

FRANCIS ASBURY ஆஸ்பரி (Tamil & english)

Image
  ஆஸ்பரி 1770 களில் வாழ்ந்த ஒரு மெத்தடிஸ்ட் சபை பிரசங்கியார். சுற்று சவாரி பிரசங்கி ( Itinerant Preacher) என்னும் முறையை ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்த பயன்படுத்தியவர் இவர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார். இவ்வாறு 50 ஆண்டுகள் குதிரையில் சுவிசேஷ பணியை செய்து வந்தார். சரீரத்தில் சுகவீனம் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் நீண்டகாலம் கெட்டுப்போகாத ஒரு உணவினால் தன்னை பலப்படுத்திக் கொண்டு ஆத்தும ஆதாய பணியை செய்து வந்தார். அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய குடியிருப்புகளில் இருந்தவர்களை ஆண்டவருக்குள் வழிநடத்த இந்த குதிரை சவாரி முறையை பயன்படுத்தினார். ஆங்காங்கே ஆலயங்களையும் கட்டி எழுப்பினார். 1771ம் ஆண்டு ஆஸ்பரி இந்த குடியிருப்பு பகுதிக்கு வந்த பொழுது முழு அமெரிக்காவிலும் 600 மெத்தடிஸ்ட் கிறிஸ்தவர்களே இருந்தனர். ஆனால் இவர் ஊழியம் செய்த 45 வருடங்களுக்குப் பின்னர், அந்த தொகை இரண்டு இலட்சமாக பெருகியது. அவரைப் போல 700 சுற்று சவாரி பிரசங்கிமார்களை எழுப்பினார்.   அவருடைய சுவிசேஷப் பணி கிட்டத்தட்ட பவுல் அப்போஸ்தலனின் முறைகளைப் ப

லோத் கேரி (1780-1828) Lot Carey ( Tamil & English)

Image
 லோத் கேரி ஒரு பாப்திஸ்து சபை போதகர்.  1820ல் லைபீரிய காலனி உருவாக ஒரு காரணமாக செயல்பட்டார். 1780 இல் வெர்ஜீனியாவில் உள்ள சார்லஸ் சிட்டி என்ற நகரில் அடிமையாக பிறந்ததால் ஜான் பௌரி  என்பவரிடம் அடிமையாக வாழ்ந்து வந்தார். இவரது எஜமான் ஒரு மெத்தடிஸ்ட் போதகர் என்பதால் கேரிக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது. 1807 ஆம் ஆண்டு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கொடுக்கப்பட்ட செய்தி இவருக்குள்  மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்“ என்ற வாக்கியம் மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் ஒலித்து,  இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தது. இதன் விளைவாக அவர் ஒரு புது மனிதனாக மாற்றம் பெற்று, மாபெரும் மகிழ்ச்சியையும்,  ஈடு இணையில்லா சந்தோஷத்தையும் தரும் இரட்சிப்பின் அனுபவத்தையும் பெற்று கொண்டார்.   கேரி ரிஷ்மனன் என்னும் பகுதியில்  அமைந்த முதல் பாப்திஸ்து சபையில் இணைந்தார்.  அது வெள்ளை மற்றும் கருப்பு இன அடிமைகள் மற்றும் சுயாதீன ரின் சபையாக இருந்தது. அக்காலத்தில் நடந்த சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களின் காரணமாக அநேக மெத்தடிஸ்ட் மற்றும் பாப்திஸ்து போதகர்கள்  தங்கள் சபையை சேர்ந்

மாம்பழச் சங்க விழா Mambala Changam (Tamil & English)

தென்னகத்தின் மீட்பிற்காக மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மிஷனரிகளாக வந்த பல போதகர்கள்,  அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் அரும் பெரும் தொண்டாற்றினார்கள்.  அவர்களின் முயற்சிகளுக்கு பலனாகவே இன்று தென் தமிழகத்தில் பல நூறு பள்ளிக்கூடங்கள்,  ஆலயங்கள்,  சமுதாய மேம்பாட்டுப் பணிகள் போன்றவை என்றும் அழியாது உயர்ந்து நிற்கிறது. “திருநெல்வேலியின் அப்போஸ்தலன்” என்று அழைக்கப்பட்ட முன்னோடி ஊழியர் ரேனியஸ் ஐயர் அவர்கள் இத்தகைய சிறப்புமிக்க தொண்டாற்றியது மட்டுமல்லாது, மக்கள் மனதில் பதிந்திருந்த ஜாதிவெறி,  மூடநம்பிக்கைகள்,  ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற அதிக முயற்சி எடுத்தார். அக்காலத்தில் புதிதாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு பிற மதத்தினரால் கடும் உபத்திரவம் ஏற்பட்டது. எனவே அப்பகுதிகளில் மிஷன் சார்பில் நிலங்களை வாங்கி, அங்கு புதிய கிறிஸ்தவர்களை குடியேறும் படி செய்தார். இதனால் டோனாவூர் உட்பட சுமார் 25 கிறிஸ்தவ கிராமங்கள் ரேனியஸ் ஐயர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கிராமங்களில் செயல்பட்டுவந்த சபைகளில் பல ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அனுதினமும் காலை மாலை ஆராதனை,  தேவ ச

Just PUSH

Image

ANNIE ARMSTRONG ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் (Tamil & English)

Image
 ஆனி ஆர்ம்ஸ்ட்ராங்            மிஷனரிப் பணி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எல்லாம் காடு மலைகளில் ஊழியம் செய்வது மட்டுமே. இன்னும் சிலருக்கு காட்டுமிராண்டிகள் மத்தியில் ஊழியம் செய்வது என்பது நினைவிற்கு வரும். இது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் இருந்த இடத்திலிருந்தே மிஷனெரி பணியை நம்மால் செய்ய முடியுமா?  முடியும் என்று  ஆனி ஆர்ம்ஸ்ட்ராங் வாழ்ந்து காட்டியுள்ளார்.            இவர் அன்னை தெரசாவை போல ஏழை மக்களை அரவணைத்து ஆதரித்தவர் இல்லை; பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று நோயுற்றவர்களை கவனிக்கும் தாதியும் அல்ல; ஆனால் ஆண்டவர் தனக்கு கொடுத்த எழுத்துத் திறமையை கொண்டு மிஷனெரி பணிகளை தாங்கினார். தேவன் தன்னை கொண்டு செய்யப் போகும் மாபெரும் திட்டத்தை மனதில் கொண்டு திறம்பட செயலாற்றினார்.              தன் முழு இருதயத்துடன் இயேசுவை நேசித்த இவர் மிஷனெரிகளுக்கு உதவிட வேண்டும் என்ற வார்த்தையினால் கடிதங்கள் எழுதுவதின் மூலம் தன் பணியை ஆரம்பித்தார். விரல்கள் அத்தனையும் மூலதனங்கள் ஆயின. அவைகளே தேவ ஊழியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவிகள் ஆயின.              தட்டச்சு மூலமாகவும் தன் கை படவும் ம