ஜான் டக்கர் John Tucker

 


ஜான் டக்கர் இங்கிலாந்து தேசத்தின் கெண்ட் மாநிலத்தில் உள்ள சவுத் பரோ (South Borough) என்ற இடத்தில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் (Christ's College, Oxford,), 1813 ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றார். பின் அக்கல்லூரியின் பேராசிரியராக நியமிக்கப்பட்டு பணி செய்து வந்தார். இந்நாட்களில் தேவன் தன் மீது வைத்துள்ள அழைப்பை உணர்ந்து, அதற்குக் கீழ்ப்படிந்தார். 1818 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆலயத்தின் போதகராக தேவனுடைய ஊழியத்தை செய்து வந்தார். அச்சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கத்தின் (Church Missionary Society - CMS) சென்னை தொடர்பு குழுவின் செயலாளராக 1833 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள் நியமிக்கப்பட்டார். 

சென்னை பட்டணத்தில் ஜான் டக்கர்:

               இப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இந்தியாவிற்கு வந்தார். சென்னை பட்டணத்தில் இன்று ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படும் அன்றைய "பிளாக் டவுன்" பகுதியில் அமைந்துள்ள CMS ஆலயத்தில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். 1833 முதல் 1847 ஆம் ஆண்டு வரை மிஷனை வளர்ச்சி அடையச் செய்தார். ஐரோப்பிய - ஆசிய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் மற்றும் இந்தியர்களுக்கு இடையே உறவை உருவாக்கிய முதல் போதகர் இவர். மேலும் அவர்களுக்கு அநேக கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும் ஆந்திர மாநில மக்களுக்காக தெலுங்கு மிஷன் பணியை தொடங்கி, சென்னை பட்டணத்திலிருந்து ஒருங்கிணைத்து வந்தார். இவர் பணியாற்றிய பிராட் வேய் - தேவாலயம் பின்னர் அவரது பெயரில் டக்கர் சபை என்று அழைக்கப்பட்டது. இன்றும் இத்தேவாலயம் ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறது. பழமையான ஆங்கிலக் கட்டிடக் கலை, லண்டனில் தயாரிக்கப்பட்ட பைப் ஆர்கன் மற்றும் பல பழமையான மிஷன் நினைவுகளை இன்றும் இத்தேவாலயம் பாதுகாத்து வருகிறது.

              ஜான் டக்கர் ஐயர் அவர்கள் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள பல பகுதிகளில் கல்விப் பணியை ஆரம்பித்தார். அநேக கல்வி நிறுவனங்களை உருவாக்கி மக்கள் கல்வி அறிவை பெற்றுக்கொள்ள வழிகாட்டினார். கல்வியோடு கூட கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் அறிவித்து வந்தார். சென்னை பட்டணத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்து வந்த பல போதகர்களை ஒன்று சேர்த்து அவர்களை குழுவாக செயல்பட ஊக்கமளித்தார். அதுமட்டுமல்ல, அப்போதகர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவும் உதவினார். ஜான் டக்கர் பெயரையோ புகழையோ எதிர்பார்க்காமல் கிறிஸ்துவின் சித்தத்தை செய்வதை மட்டுமே தெரிந்து கொண்டார். போதகராகப் பணியாற்றிக் கொண்டே இத்தகைய மிஷனெரிப் பணியில் ஈடுபட்டு வந்ததால், சென்னையில் பெரிய எழுச்சி உண்டானது.   

திருநெல்வேலியில் ஜான் டக்கர்: 

             1836 ஆம் ஆண்டு ஜான் டக்கர் திருநெல்வேலிக்கு வந்தார். அங்கு மிஷனெரியாகவும் கல்வியாளராகவும் தன் பணியை செய்து வந்தார். அங்கு பணியாற்றி வந்த SPG நிறுவனத்தோடு இணைந்து சமுதாய முன்னேற்றப் பணியைச் செய்து வந்தார். அக்காலத்தில் தென் தமிழகத்தில் குழந்தை திருமணம், தேவதாசி முறைகள் போன்றவை சமுதாயத்தில் அதிக அளவில் காணப்பட்டது. அதுமட்டுமல்ல, பெண்கள் கல்வி கற்பது என்பது சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. பெண்கள் சமுதாயத்தில் இழிவாக நடத்தப்பட்டனர். ஆண்களைக் கண்டால் வீட்டிற்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்வதைப் போன்ற அநேக காரியங்கள் ஜான் டக்கர் உள்ளத்தை உடைத்தது.

பெண்கள் வாழ்வில் ஒளி:

          கல்வி மட்டுமே பெண்களை மாற்ற முடியும் என உணர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த தன் உடன் பிறந்தவர்கள், சபை உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கும் தமிழகப் பெண்களின் நிலையைப் பற்றி பல கடிதங்களை எழுதினார். இப்பெண்கள் வாழ்வில் ஒளியேற்ற உங்கள் உதவி அதிகம் தேவை என அதில் குறிப்பிட்டு இருந்தார். இக்கடிதங்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ஜான் டக்கரின் சகோதரி சாரா டக்கர் மனதில் இந்தியப் பெண்களைக் குறித்ததான பாரம் உண்டானது. இப்பெண்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டுமென துடித்தார். ஆனால் அவரது உடலிலோ பலவீனம்! அவரது இரு கால்களும் ஊனமாய் இருந்ததால் அவரால் நடக்க இயலாது. சக்கர நாற்காலியின் உதவியுடன் மட்டுமே அவர் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். ஆனாலும் அவரால் அமர்ந்திருக்க இயலவில்லை. தன்னுடைய தோழிகளிடம் இவற்றை பகிர்ந்து கொண்டார். அவர்களும் தமிழகப் பெண்களுக்கு உதவி செய்ய தீர்மானம் செய்தனர்.

              1843 ஆம் ஆண்டு முதலூருக்கு அருகில் உள்ள கடாட்சபுரத்தில் ஜான் டக்கர் பெண்களுக்கான பள்ளியை நிறுவினார். இதற்கு சாரா டக்கர் அம்மையாரே முழு நிதியையும் அனுப்பி வைத்தார். தன் தோழிகளிடமிருந்தும், தான் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் தன்னுடைய சகோதரர் ஜான் டக்கருக்கு அனுப்பி வைத்தார். முதன் முறையாக பெண்களுக்காக கடாட்சபுரத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியையும், சாத்தான்குளத்தில் பள்ளிக்கூடத்தையும் அதோடு கூட பிள்ளைகள் தங்கி படிப்பதற்கான விடுதியும் தொடங்கப்பட்டது. சாரா டக்கர் அம்மையார் தன் நண்பர்களிடமிருந்து மட்டும் உதவியை பெறாமல், தன்னால் இயன்றதை சரீர பெலவீனத்தின் மத்தியிலும் பல விதங்களில் உதவி செய்தார். தையல் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்தார். தன்னுடைய பிறந்தநாளுக்கு யாரேனும் பரிசு கொடுக்க விரும்பினால் அதைப் பொருளாகக் கொடுக்காமல் பணமாக கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இப்படியாக தான் சேர்த்த பணத்தை இந்திய பெண்களின் கல்விக்காக இந்தியாவிலிருக்கும் தன் சகோதரருக்கு அனுப்பினார்.   

மீண்டும் இங்கிலாந்து பயணம்: 

              இதற்கிடையில் ஜான் டக்கர் உடல் பெலவீனமடைந்தது. மருத்துவ சிகிச்சைக்காக 1847 ஆம் ஆண்டு மறுபடியும் தன் தாய்நாட்டான இங்கிலாந்திற்கு சென்றார். 1833 ஆம் ஆண்டு முதல் 1847 ஆம் ஆண்டு வரை இந்திய மண்ணில் அவர் செய்த பணிகள் மிகவும் பிரமாண்டமானது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில், தென் தமிழகத்தில் ஐரோப்பியா, ஆசியா மற்றும் இந்தியா என்ற பன்முக கலாச்சார ஊழியத்தை ஆரம்பித்தவர் ஜான் டக்கர். தமிழ் - தெலுங்கு என வட்டார மொழிப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். சென்னை தொடர்பு செயலராக அவரது பொறுப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு குறுகிய ஆண்டுகள் இந்தியாவில் பணி செய்தாலும், இவரது ஊழியம் திருப்புமுனையை கொண்டு வந்தது என்றே கூறலாம்.  

            1847 ஆம் ஆண்டு தன் தாய்நாடான இங்கிலாந்துக்குச் சென்ற ஜான் டக்கர், அங்கும் தலைமை செயலகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1852 ஆம் ஆண்டு வரை இப்பொறுப்பை நிறைவேற்றினார். அங்கு பணி செய்தாலும், தமிழகப் பெண்களின் வாழ்வையே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். பார்ப்பவர்களிடம் எல்லாம் அவற்றைக் குறித்து பேசி, தன் பாரத்தைப் பகிர்ந்து கொண்டார். அநேக கடிதங்களை எழுதி பல்வேறு நபர்களுக்கும் அனுப்பினார். தேவன் கிரியை செய்ய ஆரம்பித்தார்.

 சாரா டக்கர் இன்ஸ்டியூஷன்:

                   1852 ஆம் ஆண்டு முதல் ஜான் டக்கர் West Hendred பகுதியில் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார். 1857 ஆம் ஆண்டு சாரா டக்கர் அம்மையார் தேவராஜ்ஜியத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அதற்கு முன்பதாகவே தேவன் தமக்கு கொடுத்த தரிசனத்தை தன்னுடைய நண்பர்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்து விட்டுச் சென்றார். அவருடைய மறைவிற்குப் பின் அவர் நண்பர்களும், சகோதரர் ஜான் டக்கரும் நெல்லை பெண்களின் கல்விக்காக நிரந்தரமான ஒரு ஸ்தாபனம், சாரா டக்கர் நினைவாக இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதேபோல, நிதியையும் திரட்டினார்கள். ஜான் டக்கர் அந்த நிதியை, திருநெல்வேலியில் பணிபுரிந்து வந்த ஊழியர்களான போதகர் எட்வர்ட் சார்ஜென்ட், பேராயர் கால்டுவெல் மற்றும் ஜான் தாமஸ் ஐயர் அவர்களிடம் அனுப்பினார். அவர்கள் ஒன்றிணைந்து, பெண்களுக்கான பள்ளிகளைத் தொடங்கினார்கள். அந்தப் பள்ளிகள் வளர்ந்து பின்னர் சாரா டக்கர் இன்ஸ்டியூஷன் என்று உருவானது.

          ஜான் டக்கர் சார்பாக இம்மூவரும் நிலையில் நெல்லைப் பெண்களுக்காக எடுத்த முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கது. பெண்கள் வாழ்வு முன்னேற ஆரம்பித்தது. இன்றும் இந்நிறுவனம் இலட்சக்கணக்கான பெண்களுக்கு ஒளி கொடுத்து உயர்த்தி வருகிறது. இத்தரிசனத்தை வித்திட்ட ஜான் டக்கரின் செயல் இன்று நம் ஒவ்வொருவராலும் பின்பற்ற வேண்டியவை. தென்னிந்தியாவில் பெண்களுக்கான முதல் கல்லூரி சாரா டக்கர் கல்லூரி என்ற பெருமை, அந்தரிசனத்தை உள்வாங்கி, அதை நிறைவேற்ற பிரயாசப்பட்ட ஜான் டக்கர் ஐயரையே சேரும். அவர் எழுதிய கடிதங்கள் அநேகம், குறிப்புகள் பல்லாயிரம்! ஒவ்வொரு எழுத்தும் அவரது ஏக்கங்களாக பிரதிபலித்தது. ஆனால் அவரது ஒரே வாஞ்சே என்னவென்றால், தன்னுடைய மரணத்திற்குப் பின் தன்னுடைய வாழ்க்கையை எந்த நாளிதழிலும் வெளியிடக் கூடாது என்று விருப்பம் தெரிவித்தார். ஏனெனில் தன்னைவிட, தன்னை தெரிந்து கொண்ட தேவனையே பிரியப்படுத்த விரும்பினார். அதனுக்கேற்ப, அவரைப் பற்றி பெரிய தகவல்களும் கிடைக்கவில்லை.

            1873 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் ஜான் டக்கர் இவ்வுலக ஓட்டத்தை முடித்துவிட்டு தேவராஜ்ஜியம் சென்றார். அவரது பணிக்கு இன்று சாரா டக்கர் கல்லூரியானது முக்கிய சான்றாக விளங்குகின்றது. 

           இன்றும் வாலிபர்களே, எனக்கு தாழ்ந்து இல்லை, திறமை இல்லை என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். தேவனுடைய பணியைச் செய்ய தாலந்து, திறமை தேவையில்லை. அர்ப்பணம் இருந்தால் போதும் தேவன் நிச்சயம் உங்களை எடுத்து பயன்படுத்துவார்.

John Tucker

John Tucker was born in 1792 in South Borough, Kent county in England. He received his B.A. degree from Christ's College, Oxford University, in 1813. Subsequently, he was appointed as a professor at the same college, where he served for a period of time. During this period, he perceived God’s divine calling in his life and obeyed it. In 1818, he began serving as a clergyman within the Church of England. At that time, on August 28, 1833, he was appointed as the Secretary of the Madras Corresponding Committee of the Church Missionary Society (CMS).

John Tucker in Chennai:

John Tucker arrived in India to fulfill this responsibility. He started his ministry at the CMS Church, situated in the area formerly known as "Black Town"—now called as George Town—in Chennai. He supported the growth of the mission from 1833 to 1847. He was the first pastor to establish relationships between people of European-Asian descent and Indians; furthermore, he organized and conducted numerous gatherings for them. Additionally, he initiated the Telugu Mission for the people of Andhra Pradesh and coordinated its operations from Chennai. Later on, the church in Black Town where he served was subsequently renamed in his honor as "Tucker Church". To this day, this church continues to glorify the name of the Lord. It continues to preserve the classic English architecture, a pipe organ manufactured in London, and various other relics of the early mission era.

Rev. John Tucker started his educational ministry in Chennai and in its neighboring regions. He established numerous educational institutions, thereby helping the people to acquire literacy. Alongside education, he also proclaimed the Gospel of Christ. He brought together pastors who were engaged in various God's ministry in Chennai city and encouraged them to work collectively as a team. Furthermore, he helped these pastors to grow in their own spiritual lives. Rev. John Tucker chose only to fulfill the will of Chris without seeking any name or fame. His missionary endeavors alongside serving as a pastor brought a great spiritual revival across Chennai.

John Tucker in Tirunelveli:

John Tucker arrived in Tirunelveli in 1836. There, he worked both a missionary and as an educationist. He collaborated with the SPG, an organization which was active in the region at the time and worked for the social upliftment. In those day, social evils such as child marriage and the Devadasi system were rampant in Southern Tamil Nadu. Moreover, the very concept of women education was perceived as an impossibility. Women were treated with contempt within the society. Rev. John Tucker was deeply distressed by numerous practices such as women retreating indoors and bolting their doors upon merely seeing a man.

A beacon in women's Lives:

Realizing that education alone could transform the lives of women, he wrote numerous letters to his siblings, fellow church members, and friends living in England, describing the plight of women in Tamil Nadu. In these letters, he emphasized that their assistance was urgently needed to brighten the lives of these women. These letters created a deep burden of concern for Indian women in the heart of Sarah Tucker—John Tucker’s sister—who was residing in England. She wanted to do whatever she could to help these women within her capacity. However, being disabled in both her legs unable to walk and was physically frail. Her daily tasks were performed only with the aid of a wheelchair. Yet, she could not remain idle. She shared her concerns with her friends, and they, too, resolved to help the women of Tamil Nadu.

In 1843, John Tucker established a school for girls in Kadatchapuram, near Mudalur. The fund for this was sent entirely by Sarah Tucker herself. She sent the money she had saved personally, along with contributions from her friends, to her brother, John Tucker. For the first time, a teacher training institute for women at Kadatchapuram and a school for girls at Sathankulam along with a hostel for the student to stay and study were inaugurated. Sarah Tucker did not merely solicit aid from her friends. Despite her physical frailty, she herself contributed in various ways to this cause. She saved the money she earned from tailoring work. Furthermore, she requested that if anyone wanted to present her a gift for her birthday, they should give it in the form of money and not as a material object. In this manner, she collected funds and sent them to her brother in India to support the education of Indian women.

Return to England:

Meanwhile, John Tucker’s health began to fail. In 1847, he returned back to his homeland, England, for medical treatment. The work he accomplished on Indian soil between 1833 and 1847 was truly monumental. In the mid-19th century, John Tucker pioneered a multicultural ministry in southern Tamil Nadu encompassing European, Asian, and Indian cultures. He gave importance to ministry in regional languages like Tamil and Telugu. His role as the Corresponding Secretary in Chennai was of immense significance. Although he served in India for relatively a short period time, it can truly be said that his ministry brought about a pivotal turning point.

Upon returning to his homeland, England, in 1847, John Tucker was appointed as a Secretary at the headquarters there. He held this responsibility until 1852. Even while working there, his thoughts were constantly about the lives of the women of Tamil Nadu. He spoke about this with whomever he met and shared his burden with them. He wrote numerous letters and dispatched them to various individuals. And then, God began to work.

The Sarah Tucker Institution:

From 1852, John Tucker served as a representative in the West Hendred region. In 1857, Mrs. Sarah Tucker had her home calling into God’s Kingdom. However, prior to her departure, she implanted the seed of the vision which God had entrusted to her into the hearts of her friends. Following her demise, her friends along with her brother, John Tucker, decided to establish a permanent institution in India in memory of Sarah Tucker dedicated to the education of women in the Tirunelveli region. Accordingly, they raised the necessary funds. John Tucker sent these funds to Rev. Edward Sargent, Bishop Caldwell, and Rev. John Thomas who serving as missionaries in Tirunelveli. Together they started schools for girls. These schools developed and subsequently became the Sarah Tucker Institution.

The initiatives undertaken by these three individuals on behalf of John Tucker to uplift the women of Tirunelveli are truly commendable. The lives of women began to improve significantly. To this day, this institution continues to serve as a beacon of light, empowering and uplifting hundreds of thousands of women. The deeds of John Tucker, who sowed the seeds of this vision, serve as an example for each of us to emulate today. The honor of making the Sarah Tucker College the first college for women in South India rightly belongs to Rev. John Tucker, who internalized that vision and worked tirelessly to fulfil it. He penned numerous letters and wrote thousands of notes; every single word reflected the deep yearnings of his heart. Yet, his sole desire was that, after his death, no account of his life should ever be published in any of the newspapers; for he sought to please the God who chose him rather than to please himself. Accordingly, not much information is available about him.

On January 16, 1873, John Tucker completed his earthly race and entered into God’s Kingdom. Today, Sarah Tucker College stands as a significant testament to his ministry.

Dear young people, today you may be thinking, "I lack talents," or "I lack skills." Neither talent nor skill is required to carry out God's work. Dedication alone is sufficient; God will surely make use of you.


Comments

Popular posts from this blog

LADY DOAK COLLEGE | Katie வில்கஸ் | கேட்டி வில்காக்ஸ்

John Hyde, ஜான் ஹைடு

பேராயர் நியூபிகின் 1909-1998 ArchBishop New Begin (Tamil & English)