Posts

Showing posts with the label John Tucker

ஜான் டக்கர் John Tucker

Image
  ஜான் டக்கர் இங்கிலாந்து தேசத்தின் கெண்ட் மாநிலத்தில் உள்ள சவுத் பரோ (South Borough) என்ற இடத்தில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் (Christ's College, Oxford,), 1813 ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றார். பின் அக்கல்லூரியின் பேராசிரியராக நியமிக்கப்பட்டு பணி செய்து வந்தார். இந்நாட்களில் தேவன் தன் மீது வைத்துள்ள அழைப்பை உணர்ந்து, அதற்குக் கீழ்ப்படிந்தார். 1818 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆலயத்தின் போதகராக தேவனுடைய ஊழியத்தை செய்து வந்தார். அச்சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கத்தின் (Church Missionary Society - CMS) சென்னை தொடர்பு குழுவின் செயலாளராக 1833 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.  சென்னை பட்டணத்தில் ஜான் டக்கர்:                இப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இந்தியாவிற்கு வந்தார். சென்னை பட்டணத்தில் இன்று ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படும் அன்றைய "பிளாக் டவுன்" பகுதியில் அமைந்துள்ள CMS ஆலயத்தில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். 1833 முதல் 1847 ஆம் ஆண்டு வரை மிஷனை வளர்ச்சி அடையச் செய்தார். ஐரோ...