Posts

Showing posts with the label Peggy Smith and Christine Smith

The Lewis Revival லூயிஸ் எழுப்புதல்

Image
   ஹெபிரிட்ஸ் தீவுகள் என்பது ஸ்காட்லாந்தின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தீவுகளின் தொகுப்பு. அவற்றில் மிகப்பெரிய தீவு லூயிஸ் மற்றும் ஹாரிஸ். 1949-ம் ஆண்டு அந்த தீவில் சுமார் 25000 மக்கள் வாழ்ந்தனர். அங்கு அழகான புல் கூரையுடைய குடிசைகள், நெசவுத்தொழில் மற்றும் ஏராளமான திருச்சபைகளும் இருந்தன. ஆனால் திருச்சபைகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. ஜெபமும் வேதவாசிப்பும் சடங்காச்சாரமாக மாறியது. இளைஞர்கள் திருச்சபைகளை விட்டு விலகி, நடன அரங்குகள், சினிமா கூடங்கள், மதுபானக் கடைகள் போன்றவற்றை நோக்கிச் சென்றனர். கிறிஸ்துவுக்கும் சபைகளுக்கும் தொடர்பில்லாததால், சபை குளிர்ந்து போன நிலையில் இருந்தது.            இப்படிப்பட்ட காலங்களில் பெக்கி ஸ்மித் மற்றும் கிறிஸ்டின் ஸ்மித் என்ற இரண்டு சகோதரிகள் பார்விஸ் என்ற கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வந்தனர். 84 வயதான பெக்கி கண் பார்வையற்றவர், அவரது சகோதரி கிறிஸ்டின் 82 வயது நிரம்பியவர். கடுமையான வாத நோயால் பாதிக்கப்பட்டதால், கூன் விழுந்த நிலைமையில் வாழ்ந்தார். அவர்கள் இருவரும் திருச்சபைக்...