William Carey -1 (Tamil & English)

"What are you planning to do, William?" asked his friend. "I'll travel the world. How about you?" "I have two looms and I'll be a weaver”. “But it will not be within four walls." said William Carey. He had youthful energy and zest to serve the Lord while he was a sickly man. His father, knowing his son's illness, wanted him to be a cobbler and trained him in the profession. Carey became a cobbler and worked from home. He placed a notice outside his cottage saying 'Old Shoes bought and sold'. During his weekdays, he did his work but spent his weekends at church preaching and attending church. He had a leather globe at home and his heart longed to travel around the world with missionary zeal. He learned all the facts about countries and stuck them on the globe. He joined a Baptist church to become a missionary. The priests stopped him by saying he was hasty and the Lord would somehow save them even if he didn't go. He was deeply grieved by their reply and decided that he must begin a mission service himself. He researched on world mission services. He had 2 children when he had this vision. In 1792, he had a mission conclave where he exhorted everyone to expect great things from the Greatest God. The first offering collected in the meeting was Rs. 259/-. That was the day the Baptist Mission Service was born. Returning home, he told his wife and older son Felix about his plan to become a missionary to India. Due to the internal confusion with France, England had decided that all missionaries get permission from the East India Company to travel. With his family alongside, Carey reached India after 6 months. His friend warned Carey since he felt it was a path deep down to a dark well. The route from London to Calcutta was rife with dangers. Though he felt that way, the cords of prayers for him by his friends were his only confidence. The footsteps of Carey that journeyed to India never retraced back to his home country. Dear Friend, are you able to hear the heartfelt cries of the Savior? Read more on Carey's life and take a firm decision on what you want to do with your life.
God bless!

“படிப்பு முடிந்த பின்னர் நீ என்ன செய்யப் போகிறாய் வில்லியம்” என்றான் அவனது பள்ளி தோழன்.
“பல நாடுகளுக்கும் செல்ல போகிறேன். நீ என்ன செய்யப் போகிறாய்”
“வீட்டில் இரண்டு புதிய தறிகள் உண்டு. நெசவு செய்யப்போகிறேன்”
“எங்கள் வீட்டிலும் இரண்டு புதிய தறிகள் உண்டு. ஆனால் எனது பணியோ பூட்டப்பட்ட அறையினுள் இல்லை” என்றார் வில்லியம் கேரி.
வயது இளமையானது. மனம் தூய்மையாய் இருந்தது. அவனுடைய சிந்தனை எல்லாம் தேவ பணி என்பதே. ஆனால் அவனுடைய உடலோ பெலவீனமாய் இருந்தது. தன் பிள்ளையின் பெலவீனத்தைப் பார்த்த தந்தை தன் மகனிடம், “மகனை வீட்டிற்குள் இருந்து செய்யும் வேலை தான் உனக்குத் தகுந்தது” என்று கூறி செருப்பு தைக்கும் கலையை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். பயிற்சிக்குப் பின் கேரியும் வீட்டிலிருந்தவாறே அத்தொழிலை செய்ய ஆரம்பித்தார். “பழைய செருப்புகள் வாங்கவும், விற்கவும் படும்” என்ற பலகை வீட்டு வாசலில் தொங்கிற்று. வாரத்தின் ஐந்து நாட்கள் இத்தொழிலையும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் ஆலய ஆராதனையைத் தேடிச் சென்றும் பிரசங்கம் செய்ய சென்று விடுவார்.
அவரது அறையில் ஓர் அழகிய உலக உருண்டை தோலினால் செய்யப்பட்டு இருந்தது. விரல்கள் செருப்பில் இயங்கினாலும் உள்ளம் உலகிற்காக ஏங்கியது. மிஷனெரி பாரம் அவரை நாளுக்கு நாள் அழுத்தியது. பல நாடுகளைப் பற்றிய தகவல்களை சேகரித்து அந்த உலக உருண்டையில் மாட்டி வைத்தார். பாப்டிஸ்ட் சபை குருமார்கள் மாநாடு ஒன்றில் சுவிசேஷத்தை அறியா மக்களுக்கு அதனை அறிவிப்பது நமது பொறுப்பு என்று கூறி தன்னை அர்ப்பணித்தார். அச்சபையின் மூப்பர்களோ, “சிறுவனே, அவசரப்படாதே, புறமதத்தினர் மனந்திரும்ப வேண்டுமென்பது தேவனுடைய சித்தமானால் அவர் அதனை எப்படியும் செய்வார். அதற்காக நாங்களும் நீயும் கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அன்று அதிக துக்கத்துடன் தன் வீட்டிற்கு திரும்பினார். தேவன் தனக்கு கொடுத்துள்ள தரிசனத்தை நிறைவேற்ற தான் ஒரு புதிய மிஷனெரி இயக்கத்தை ஆரம்பிப்பதுதான் வழி என்று கேரி தீர்மானம் செய்தார். இரவும் பகலும் உலக நாடுகளிலுள்ள மிஷனெரி தேவைகளை பற்றி படித்து ஆராய்ந்து ஓர் கட்டுரை எழுதினார். அப்பொழுது அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.
1792 ஆம் ஆண்டு மே மாதம் ஓர் மிஷனெரி கூடுகையை ஏற்படுத்தினார். உலக நாடுகளின் தேவையை பற்றி எடுத்துக்கூறி ஓர் மிஷனெரி இயக்கத்தை உருவாக்குவதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார். “தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார். தேவனுக்காக பெரிய காரியங்களை சாதிக்கப் பார்” என்ற வாசகத்தை வெளியிட்டார். அந்த மிஷனெரி முகாமில் முதல் மிஷனெரி காணிக்கை எடுக்கப்பட்டதில் ரூ.259/- கிடைக்கப்பெற்றது. அன்று தேவனுடைய அளவற்ற கிருபையால் பாட்டிஸ்ட் மிஷனெரி சங்கம் பிறந்தது. அன்று தனது வீட்டிற்கு திரும்பிய கேரி, தன் மனைவியிடமும், தன் ஒரு வயது மூத்த மகன் பெலிக்ஸிடமும் புதிய மிஷனெரி சகாப்தம் உருவாகிப் பிறந்ததையும், தான் அதன் முதல் மிஷனெரியாக இந்தியா செல்ல தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் கூறினார்.
அந்நாட்களில் பிரான்ஸ் தேசத்தில் உள்நாட்டுக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தியாவை இங்கிலாந்து வியாபார பூமியாக்கிக் கொண்ட நாட்கள் அது. இந்தியாவிற்குச் செல்ல விரும்பும் எந்த ஆங்கிலேயனும் கிழக்கிந்திய கம்பெனி என்ற அந்த ஆங்கிலேய வர்த்தகக் கம்பெனியின் அனுமதியின்றி செல்ல இயலாது. அந்த கம்பெனியோ தனது கப்பலில் எந்த மிஷனெரியையும் ஏற்றிச் செல்வது இல்லை என்ற சட்டத்தை வைத்திருந்தது. அன்று லண்டனில் இருந்து கல்கத்தா துறைமுகம் சென்றடைய குறைந்தது ஆறு மாதம் ஆகும். பிரயாணச் சிக்கல்கள், தூரம், பாதுகாப்பின்மை ஆகிய அனைத்தையும் அறிந்தும் கேரி குடும்பம் புறப்பட்டது. “கேரி யாருக்கும் எந்த அறிவும் இல்லாத ஓர் புதிய உலகிற்கு நீ போகிறாய்” என்று வழியனுப்ப வந்த நண்பர் கூறினார். அதற்கு கேரி, “ஆம் சகோதரனே, அடிவாரத்தில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்க முடியாத ஓர் ஆழமான கிணற்றில் இறங்குவது போல் உணருகிறேன். ஆயினும் எனது சகோதரர்கள் அனைவரும் ஜெபம் என்னும் கயிற்றை இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள். அப்பொழுது எல்லாம் வெற்றியாகும்” என்று கூறினார். விசுவாசத்தோடு எடுத்து வைத்த கேரியின் கால்கள் அதன் பின்பு ஒருபோதும் தங்கள் தாய் நாட்டை திரும்பிப் பார்த்ததில்லை. இதனை வாசிக்கும் நண்பரே, நம்முடைய இருதயத்தால் தேவனின் இதயக் கதறுதலை கேட்க முடிகிறதா? கேரியை குறித்து தொடர்ந்து வாசியுங்கள். திட்டமான தீர்மானம் எடுங்கள்.

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)