குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!


பரஹத் என்பது அவரது இயற்பெயர்.

எகிப்தின் தலைநகராகிய கெய்ரோவில் ஒரு பிரபலமான நிறுவனத்தின் ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். ஒருநாள் விலை மதிப்புள்ள அவரது  கைக்கடிகாரம் காணாமல் போனது. அதன் நிமித்தம் இடிந்து போயிருந்தார்.சில நாட்களுக்குப் பின் ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

தெருவெல்லாம் குப்பை குவியலில் கோமேதகம் தேடுவது போல் கிளறித் திரியும் ஒரு மனிதன் அவரது வீட்டின் கதவைத் தட்டினான். அருவருப்போடும் அலட்சியப் போக்கோடும் அதட்டும் மொழியில் 'என்ன வேண்டும்' என்று கேட்டார்.

அந்த மனிதனின் முகத்தில் ஒரு அலாதி ஜொலிப்பு. தரித்திரத்தையும் மீறி பிரகாசமாய் அவனை வட்டமிட்டிருந்தது.

வந்தவன்,"ஐயா, உங்கள் பொருள் ஏதேனும் காணவில்லையா? இந்த அடுக்கத்தில் பலரிடம் கேட்டு விட்டேன். எவரும் எதையும் இழக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். நீங்கள் எதையும் இழந்து தவிக்கிறீர்களா?" என்று பணிவோடு கேட்டு  பரஹத்தின் பதிலுக்காகக் காத்திருந்தான்! 

"ஆமாம்! எனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பறிகொடுத்து சில நாளாய் தவியாய் தவிக்கிறேன்" என்றார்.

"அப்படியா? இதோ பாருங்கள். இது உங்களுடையது தானோ? "

"என்ன? இது. எப்படி..உன்னிடம்?"

"குப்பைகளுக்குள் இதை கண்டெடுத்தேன் ஐயா! இந்தாருங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்".

'"நான்கரை இலட்சம் பெறுமானமுள்ள இந்த வைரக் கற்கள் பதித்தக் கைக்கடிகாரத்தை நீயே வைத்துக் கொள்ள உனக்குத் தோன்றவில்லையா?" ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்டார்.

இந்த  கேள்விக்கு அவன் தந்த பதில் அவரை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது!

"ஐயா, நான் ஒரு கிறிஸ்தவன், மரணபரியந்தம் உண்மையாயிரு என்பது என் ஆண்டவர் எனக்கு சொல்லித்தந்த பாடம். பின் எப்படி நான் பிறர் பொருளை இச்சிக்க முடியும்" என்றான்.

தரித்திரனும் திருடாமல் வாழ முடியுமா? குப்பை பொறுக்கியும் மகானாக வலம் வர கூடுமா?
நம்ப முடியாமல் அவருக்கு அவரே தன் மனதில்  கேட்டுக் கொண்டார். கண் முன் நடக்கும் இந்த அபூர்வ நிகழ்ச்சியை அவரால்  இன்னும் நம்பவே முடியவில்லை. அவனது  பேச்சில் எதார்த்தம் இருந்தது. அவன் சாயலில் அவன் பின்பற்றும் இயேசு மட்டும் பளிச்சென்று வெளிப்படுவதை அவரால்  காண முடிந்தது.

பின் அவனிடம், "உன்னோடு நானும் உன் இயேசுவை வணங்க விரும்புகிறேன். வரலாமா"என்று கேட்டார். 

காலங்கள் உருண்டோடி விட்டன.

சாமான் என்ற புதுப் பெயரில் கெய்ரோவில் வாழும் 30,000 குப்பை பொறுக்கிகளின் மத்தியில் ஒரு ஊழியனாய் பரஹத்  உழைத்து வந்தார். குடிக்கும், வேசித்தனத்திற்கும் சகல அடிமைத்தனங்களுக்கும் விலங்கிடப்பட்டு நாற்றத்தில் தொற்றுநோயின் தாக்கத்தில் சிக்குண்டு வாழும் அம்மக்கள் மத்தியில் ஊழியம் செய்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. என்றாலும், "பரிசுத்த ஆவியானவர் எனக்குத் துணை புரிந்ததால் துணிந்து அந்த ஊழியத்தில் இறங்கிவிட்டேன்" என்று கூறுகிறார். 

அதற்கு முன்பு மூன்று வாரம் ஒரு மலை மீது அமர்ந்து தேவ பர்வத்தை நோக்கி உபவாச ஜெபத்தில் தரித்திருந்தார்.  பறந்து வந்த காகிதம் ஒன்று அப்பொழுது அவர் கைகளில் சிக்கியது. ஆச்சரியத்தோடு அதை பார்த்தார்.  அப்போஸ்தலர் 18:9 - 10 வசனங்கள் அந்தத் துண்டு காகிதத்தில், "நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே, நான் உன்னுடனே கூட இருக்கிறேன். இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு" என்று இருந்தது. அதை அவரது ஊழியத்தின் தேவ வாக்குத்தத்தமாக ஏற்று அன்று முதல் உழைத்து வந்தார்.

இன்றும் இந்த ஆலயம் சிறப்பாக இயங்கி வருகிறது. எகிப்திலேயே மிகப்பெரிய ஆலயம் இது. "குப்பைகளின் நகரம்" என்று அழைக்கப்படும் இப்பகுதி எண்ணற்ற குப்பை பொறுக்கும் மக்களாலேயே நிறைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 20,000 பேர் அமரக்கூடிய பெரிய ஆலயம். ஆலயத்தின் சுவர்களில் கிறிஸ்துவின் பிறப்பு, உயிர்த்தெழுதல் மற்றும் பல வேதாகம நிகழ்வுகள் கல்வெட்டுகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். குகைக்குள் அமைந்துள்ள இவ்வாலயம் Cave church என்று அழைக்கப்படுகிறது. அவரது  சபையில் 20,000 மக்கள் கலந்து கொள்கிறார்கள். சபைக்கு  மெர்சடீஸ் பென்ஸ் காரில் வருபவர்களும் உண்டு. சாதாரண குப்பை சேகரிப்பவர்களும் உண்டு. வேற்றுமைக் காணாத ஒற்றுமையோடு அவர்கள்  தேவனை கூடி ஆராதிக்கிறார்கள். 

கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 11 - ஆம் நாள் போதகர் சாமான் தனது 81- வது வயதில் தேவ இராஜ்ஜியம் சென்றார். அவரது அடக்க ஆராதனையில் சுமார் 40,000 மக்கள் கலந்து கொண்டனர். அவரது மரணம் Cave church மக்களுக்கு மட்டுமின்றி முழு நகரத்திற்குமே பேரிழப்பாக மாறியது. கெய்ரோவின் மகுட்டாப் மலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் மலைமீது இருக்கும் ஒரு கலங்கரை தீபமே! ஒரு தனி மனிதன் உத்தமத்தால் பிறந்த இந்த சபை உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரும் சவால். 

Treasure among the trash!

 His actual name was Farahat.

He was working as a consultant for a famous company in Cairo, the capital of Egypt. One day, his valuable watch went missing. He was devastated because of it. A huge surprise awaited him in a few days.

A man stood knocking at the door of his residence. He looked like someone scrawling through the street, as if searching for treasure amidst garbage. With disgust and in an authoritative tune, Farahat asked, “What do you want?”

There was a mysterious glow in the stranger’s face. It was shining brightly, surpassing the poverty that was lying beneath.

He inquired politely, "Excuse me, have you misplaced any of your possessions? I have inquired with several individuals in this area, and none have reported any losses. Is there anything you are missing?" He patiently awaited Farahat's response!

"Yes, I have misplaced my valuable watch and have been upset about it for a while," he expressed.

"Truly? Take a look here. Is this yours?"

"What? This… How did you..?"

"Sir, I discovered it in the trash! You can have it now."

"Don't you want to keep this diamond-encrusted watch, worth four and a half lakhs, for yourself?" he inquired, unable to hide his astonishment.

His response to this question caught him off guard!

He stated, "Sir, I am a Christian. My Lord has taught me to remain honest and true even unto death. Therefore, how can I desire to possess the belongings of others?"

Can a poor person live without stealing? Can even a garbage collector come around as a great man? He pondered in disbelief. He was still unable to comprehend the extraordinary occurrence unfolding before him. There was sincerity in his words. He could perceive that only Jesus was radiating brightly in his demeanor.

He then inquired, "I wish to worship alongside you and your Jesus. May I join?"

Time flew by. 

Farahat changed to Samaan and laboured as a minister among the 30,000 individuals who collected garbage in Cairo. Ministering to the community, who were affected by the scourge of alcoholism, prostitution, and various other forms of addictions, was not a simple task. Nonetheless, he stated, "The Holy Spirit sustained me, and I embarked on that mission."

Before that, he had spent three weeks sitting on a mountain, fasting and praying towards the mountain of God. Suddenly, a piece of paper flew into his hands. He gazed at it with astonishment. The verses on the paper, Acts 18:9-10, read,“Do not be afraid, but speak, and do not keep silent; for I am with you, and no one will attack you to hurt you; for I have many people in this city.” He held onto it as a promise for his ministry and commenced his work from that day.

To this day, this Church continues to thrive as the largest Church in Egypt. Situated in the "Garbage City", an area abundant with numerous garbage collectors, this expansive Church accommodates approximately 20,000 individuals. Adorned with inscriptions portraying Christ's birth, resurrection, and various biblical occurrences, this Church, known as the Cave Church, is nestled within a cave. About 20,000 individuals participate in the congregation, including those arriving in Mercedes-Benz cars alongside ordinary garbage collectors, all worshiping God with unwavering unity.

On October 11, 2023, Pastor Saman passed away at the age of 81. Approximately 40,000 individuals gathered to pay their respects at his funeral. His passing was a profound loss, not only for the members of the Cave Church, but for the entire city. Situated on Cairo's Mokattam Mountain, this Church stands as a shining lighthouse. The congregation, established through the dedication of one individual, serves as a significant challenge for all of us.


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh