வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)
வைக்கோல் போர் ஜெபம்" வாசிப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதா? தொடர்ந்து வாசியுங்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க தேசத்தில் எழுப்புதல் அலை வீச தொடங்கியது. அநேக மிஷனெரி ஸ்தாபனங்கள் அங்கு உருவானது. வில்லியம்ஸ் டவுன் என்ற அழகிய கிராமத்தில் உள்ள மக்கள் மத்தியிலும் தேசத்தை குறித்த பாரமும், ஜெப வாஞ்சையும் ஊற்றப்பட்டது. குறிப்பாக அங்குள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் ஜெபிக்கும் ஜெப சேனைகள் எழும்பிற்று. அங்கு பயின்று வந்த மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக கூடி ஜெபித்து வந்தனர். 1806 ஆம் ஆண்டு 23 வயதான சாமுவேல் ஜே. மில்ஸ் என்ற வாலிபன் சுவிசேஷத்தை அகில உலகுக்கும் பறைசாற்ற வேண்டும் என்ற பெரிய தரிசனத்தோடு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தான். ஒவ்வொரு வாரமும் மரத்தடியில் தன்னுடைய நான்கு நண்பர்களுடன் ஜெபித்து வந்தான். ஜெபிப்பதற்கு முன்பாக மூத்த ஊழியர் வில்லியம் கேரி பற்றிய புத்தகத்திலிருந்து தினமும் ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு, உலக நாடுகளுக்காக, குறிப்பாக ஆசிய நாடுகளுக்காக ஜெபித்து வந்தார்கள். கடைசி அத்தியாயத்தை வாசித்த அன்றைய தினம், மிகப்பெரிய தரிசனத்தை தேவன் அவர்...
Comments
Post a Comment