William Carey-2 (Tamil &English)

With three young children and an infant, Carrey's wife tearfully left with her husband to an unknown country. An East India Company ship refused to take them on board. They boarded a Danish ship and began their five-month sea voyage. Carrey and his wife took one last look at English soil before embarking. That was their last sight of the land which they never saw again.

Carrey's family was accompanied by Dr. Thomas’s family. Carrey studied Bengali whenever he had time on board. The five-month journey had left them very tired. They cheered for joy when they finally found the shores of Calcutta in India. The land of India was amazing to see. People's color, mind, customs, traditions, language, Kali's eyes, everything was new. William Carey aspired to speak fluent Bengali to the people. His family disliked rice and chapati. The taste of English food lingered on their tongues. Indian food especially did not agree with his wife Dorothy.

As it was a summer season the whole family fell sick. Their money was gone in three months. He decided to live in a neighbouring village because the quality of life in Calcutta and the cost of goods were high. Dr.Thomas left to practice as a doctor in Calcutta. After taking their belongings, they travelled for three days and reached the village. While coming by boat, they kept seeing various snakes, big monkeys jumping from tree to tree, and many more shocking scenes.

William Carrey worked in a dye factory. Soon he got the big responsibility of managing the factory. This responsibility helped him in many ways. The East India Company did not allow its fellow workers from England to become missionaries. So, Carrey made them come to Calcutta as employees of this factory. And even when no correspondence was received from England for seven months, he was able to support his family with the help he got in the factory.

At that time, a terrible poisonous fever spread in the area where he lived. All of Carrey's family were affected by the deadly flu. Their five-year-old son Thomas is a keen intellectual fluent in Bengali. He too was infected with the fever. The boy Thomas died without treatment. His parents were unable to get out of bed. There was no one to bury the boy's body. The people there did not even come forward to touch the boy's corpse because they were afraid that the white spirit would get hold of them. Carrey could not even dig a hole to bury his beloved son. Then a street cleaner offered to help. His mother could not accept the death of her boy, Thomas. Since then, she became mute and mentally retarded. William Carey had no one to comfort him in such a dire situation. It took seven months for him to receive a letter from England as well. However, Carrey did not give up. God chose him. His eldest son Felix was very helpful.

He prayed fervently to set up a printing house to print and publish the Holy Bible in Indian languages. In his letter to England about this, he wrote, "One of the missionaries you send me should know typography. Seven years ago, I met a young man named Ward there. That young man, who knew God, is skilled in typography. I did tell him, then, that he will be needed to work for God with me. Find him and send him to me." 
An advertisement appeared in the newspaper for a used printing press. Carrey, with great difficulty, bought it. His joy knew no bounds. How much does a foreigner care about Indian people? How is our concern?


 மூன்று சிறு பிள்ளைகளுடனும் ஒரு கைக்குழந்தையுடனும் கேரியின் மனைவி ஒரு விபரமுமே தெரியாத ஓர் நாட்டிற்கு கண்ணீருடன் தன் கணவனோடு புறப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் அவர்களை ஏற்ற மறுத்தது. டென்மார்க் நாட்டு கப்பல் ஒன்றில் அவர்கள் ஏறி தங்கள் ஐந்து மாத கடல் பிரயாணத்தை துவக்கினர். கேரியும், அவரது மனைவியும் இங்கிலாந்தின் மண்ணை கப்பல் ஏறும் முன் கடைசி முறையாக பார்த்தனர். அதுவே அவர்களின் கடைசி பார்வை. பின்பு அவர்கள் அந்த பூமியை பார்த்ததே இல்லை. 

கேரியின் குடும்பத்துடன் டாக்டர் தாமஸ் என்பவரின் குடும்பமும் பயணமானது. கேரி வங்காள மொழியினை கப்பலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயின்று வந்தார். அந்த ஐந்து மாத பிரயாணம் அவர்களை மிகவும் களைப்பாக்கிற்று. இறுதியில் இந்தியாவில் கல்கத்தாவின் கரைகளை அவர்கள் கண்டபோது மகிழ்ச்சியினால் ஆரவாரித்தனர். இந்திய பூமி பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. மக்கள் நிறம், மனம், பழக்கவழக்கம், பாரம்பரியம், மொழி, காளியின் விழி என எல்லாமே புதுமையாக இருந்தது. வில்லியம் கேரி, மக்களுடன் சரளமாக வங்காள மொழியில் பேச ஆசைப்பட்டார். அவரது குடும்பத்திற்கு அரிசி, சப்பாத்தி என எதுவும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டு உணவின் ருசி நாவில் இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக மனைவி டாரதிக்கு இந்திய உணவு ஒத்துக் கொள்ளவில்லை. 

அது ஒரு கோடைக்காலம் என்பதால் குடும்பம் முழுவதும் சுகவீனமடைந்தனர். அவர்களிடமிருந்த பணம் மூன்றே மாதத்தில் காலியானது. கல்கத்தாவின் வாழ்க்கைத் தரம், பொருட்களின் விலை அதிகமாக இருந்ததால் பக்கத்தில் உள்ள கிராமத்தில் வாழ முடிவு செய்தார். டாக்டர் தாமஸ் கல்கத்தாவில் மருத்துவராக பணியாற்ற இருந்து விட்டார். தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் பிரயாணமாகி கிராமத்திற்கு வந்தார். படகில் வரும் பொழுது விதவிதமான பாம்புகளையும், பெரிய பெரிய குரங்குகள் மரம் விட்டு மரம் தாவுவதையும், இன்னும் பல அதிர்ச்சியான காட்சிகளையும் பார்த்து கொண்டே வந்தனர். 

வில்லியம் கேரி சாயம் காய்ச்சும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். விரைவில் அத்தொழிற்சாலையை நிர்வகிக்கும் பெரிய பொறுப்பை பெற்றார். இப்பொறுப்பு பலவிதங்களில் அவருக்கு உதவியாக இருந்தது. இங்கிலாந்திலிருந்து வரும் தனது உடன் பணியாளர்களை கிழக்கிந்திய கம்பெனி, மிஷனெரி என்றால் அனுமதிக்கவில்லை. எனவே கேரி அவர்களை இந்த தொழிற்சாலையின் பணியாட்கள் என்ற முறையில் கல்கத்தா வர செய்தார். மேலும் இங்கிலாந்திலிருந்து பல மாதங்கள் பணம் வராமலிருக்கும் பொழுதும் தொழிற்சாலையில் பெற்ற உதவியினால் தன் குடும்பத்தை அவரால் பராமரிக்க முடிந்தது. 

அச்சமயம் அவர் வாழ்ந்த பகுதியில் பயங்கரமான விஷக்காய்ச்சல் பரவியது. கேரியின் குடும்பத்தினர் அனைவரும் அக்கொடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களது ஐந்து வயது மகன் தாமஸ் கூரிய அறிவுள்ளவன். சரளமாக வங்காள மொழியை பேசக்கூடியவன். அவனுக்கும் அக்காய்ச்சல் பரவியது. சிகிச்சை பலனின்றி சிறுவன் தாமஸ் மரித்து விட்டான். அவனது பெற்றோர்களோ படுக்கையை விட்டு எழும்ப முடியாத நிலையில் இருந்தனர். சிறுவனின் உடலை அடக்கம் செய்யக்கூட யாரும் இல்லை. அங்கிருந்த மக்கள் வெள்ளை ஆவி தங்களைப் பிடிக்கும் என்று பயந்து சிறுவனின் சடலத்தை தொடக்கூட முன்வரவில்லை. கேரிக்கோ தன் செல்ல மகனை அடக்கம் செய்ய குழி தோண்ட கூட முடியவில்லை. அப்பொழுது தெருவை சுத்தம் பண்ணும் மனிதன் ஒருவன் வந்து உதவி செய்தான். சிறுவன் தாமஸ் மரித்ததை தாயால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அன்றிலிருந்து அவர் பேசுவதில்லை. அவர் புத்தி சுயாதீனம் இழந்தவராக மாறினார். இப்படிப்பட்ட கொடிய சூழ்நிலையில் வில்லியம் கேரிக்கு ஆறுதல் அளிக்க யாருமில்லை. இங்கிலாந்திலிருந்தும் அவருக்கு கடிதம் வந்து ஏழு மாதங்கள் ஆனது. எனினும் கேரி சோர்ந்து போகவில்லை. தேவன் அவரை தேற்றினார். மூத்த மகன் பெலிக்ஸ் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தான்.

ஓர் அச்சுக்கூடம் அமைத்து பரிசுத்த வேதாகமத்தை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட ஊக்கத்தோடு ஜெபித்து வந்தார். இங்கிலாந்திற்கு இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "நீங்கள் எனக்கு அனுப்பும் மிஷனெரிகளில் ஒருவர் அச்சுக்கலை தெரிந்தவராக இருக்க வேண்டும். ஏழு வருடங்களுக்கு முன் வார்டு (Ward) என்ற வாலிபனை அங்கு சந்தித்தேன். தேவனை அறிந்த அந்த வாலிபன் அச்சுக்கலை தெரிந்தவன். நீ என்னுடன் தேவனுக்காக பணிபுரிய தேவைப்படுவாய் என கூறி இருந்தேன். அவனை கண்டுபிடித்து அனுப்புங்கள்" என்று எழுதியிருந்தார். 

உபயோகிக்கப்பட்ட ஓர் அச்சுக்கூடம் விலைக்கு வருவதாக பத்திரிக்கையில் விளம்பரம் வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு கேரி, அவற்றை வாங்கினார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அயல்நாட்டு மனிதருக்கு இந்திய மக்களை குறித்து எத்தனை அக்கறை? நம்முடைய அக்கறை எப்படி உள்ளது?

Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!