Alexander Duff (Tamil &English)

1806 - ஆம் ஆண்டு ஏப்ரல் 25 - ஆம் தேதி ஜேம்ஸ் டப்ஃக்கும் ஜின் ராட்ரேக்கும் பிறந்த அலெக்ஸாண்டர் டப்ஃ என்பவர் தனது பள்ளி நாட்களில் முதல் மாணவனாகவும் படிப்பில் சிறந்தவனாகவும் காணப்பட்டார். டாக்டர். சாமர்ஸ் என்ற தலை சிறந்த ஆசிரியரின் மாணவனாக இருந்த அவர் கல்லூரியிலேயே முதல் மாணவனாக வெளிவந்தார்.

 சீனாவின் மிஷனெரியாகப்‌ பணிபுரிந்து வந்த டாக்டர் மோரிஸனுடன் நெருங்கிய தொடர்பு உடைய தனது தோழன் ஜான் உர்க் ஹார்ட் மூலம் மிஷனெரி பணிக்கு செல்லும் விருப்பத்தை பெற்றார். 1827- ஆம் ஆண்டு முழுநேர பணிக்கென்று தன்னை ஒப்புக் கொடுத்திருந்த தன் நண்பன் மறுமைக்குள் செல்லவே, அவரது தோழன் அலெக்ஸாண்டர் டப்ஃ அப்பணியில் நுழைய முடிவு செய்தார்.

புனித ஆன்டிரூஸ் பேராயம் மூலம் பிரசங்கிக்கும் அனுமதி பெற்ற இவர் 1829 - ஆம் ஆண்டு, ஸ்காட்லாண்டு திருச்சபையின் மூலம் கிடைத்த அழைப்பிற்கிணங்கி கல்கத்தாவிற்கு மிஷனெரியாக செல்ல முடிவு செய்தார்; ஆகஸ்டு 12 - ஆம் தேதி அன்று டாக்டர் சாமர்ஸ் மூலமாக ஆனி ஸ்காட்டிரிஸ்டேல் என்ற அம்மையாருடன் திருமணத்தில் இணைந்ததுடன், அன்றைய தினமே, புனித ஜார்ஜ் ஆலயத்தில் போதகராக அபிஷேகம் செய்யப் பெற்றார்.

இரண்டு முறை கப்பல் சேதத்திற்கு பிறகு தனது உடைமைகளையெல்லாம் இழந்தவராக, (பாக்ஸ்டர்ஸ் வேதாகமும் பாடல் புத்தகமும் தவிர) நன்றி பெருக்கோடு இந்திய மண்ணில் கரை சேர்ந்தார். இவரது கப்பல் சேதத்தைக் கேள்விப்பட்ட அந்நாட்டு‌ மக்கள், 

நிச்சயமாக இம்மனிதன் இந்தியாவில் அதி முக்கியமான வேலை செய்வதற்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட தேவனுக்கு பிரியமானவன் என்றே கருதினர்.

கல்கத்தாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் இவைகளை பார்வையிட்ட பின்னர் தனக்குக் கூறப்பட்டிருந்த அறிவுரையை மாற்றிக் கொண்டு, கல்கத்தாவிலேயே தனது நிர்வாகத்தை அமைக்க முடிவு செய்தார். முந்தைய மிஷனெரி, டாக்டர் வில்லியம் கேரி, அந்நாட்டை சேர்ந்த ராஜா ராம் மோகன் ராய் ஆகிய இருவருடைய ஆதரவின் பேரில் அப்பள்ளி 1830 - ஆம் ஆண்டு ஜூலை 13 - ம் தேதி திறக்கப்பட்டது.

      மிக குறுகிய காலத்தில் வங்காள மொழியில் முன்னேற்றம் காண்பித்ததோடு ஒவ்வொரு மாணவன் கையிலும் சுவிசேஷங்களை கொடுக்க, வாசிக்க உற்சாகமளித்தார். அம்மாணவர்கள் முதலில் மறுத்தாலும் பின் ராஜாராம் மோகன் ராயின் அறிவுரையின் பேரில் பெற்றுக் கொண்டனர்.

     முதலில் டப்ஃ தானாகவே தினம் ஆறுமணி நேரம் ஆங்கில வழி போதனா முறைப்படி கற்றுக் கொடுத்து வந்தார். பின்னர் அதனை வங்காள மொழி வழியாக கற்றுக் கொடுக்க தீர்மானித்தார். வேலை முன்னேற்றம் அடைந்ததில், கல்கத்தாவிலிருந்து 40 கி.மி. தூரத்தில் ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிர்வாகம் குறுகிய காலத்தில் புகழ் பெற்று விளங்கியது. மேலும் வேதாகமமும் மக்கள் மனதில் முக்கிய இடம் பெற, "இந்து மார்க்கம் ஆட்டத்திலுள்ளது"என்ற ஆர்ப்பாட்ட குரல்கள் அடிக்கடி ஒலித்தது. அனைத்து எதிர்ப்புக்களையும் மௌனமான முறையில் அலெக்ஸாண்டர் டப்ஃ  சந்தித்தார். ஆனால் அநேக திருமுழுக்குகள் தொடர்ந்தன. அதில் முதன்மையானவர் மறைதிரு. கே.எம். பானர்ஜி என்ற கிருஷ்னா மோகன் பானர்ஜியானவர். விரைவில் ஒரு மூங்கில் சிற்றாலயமும், டாக்சி என்ற 70 மைல் தூரத்தில் ஒரு கிளை பள்ளியும் எழுப்பப்பட்டது.

    ‌‌ அதனை பார்வையிட்டு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்ட அலெக்ஸாண்டர் டப்ஃ கட்டாயத்தின் பேரில் தாயகம் அனுப்பப்பட்டார். அங்கும் தனது வல்லமை நிறைந்த சொல்லாற்றலின் பேரில் சொந்த மக்கள் அனைவரையும் எழுப்புதல் அடையச் செய்ததுடன், ஒரு முறை கூட கண்ணீர் வடிக்காத மக்களை கண்ணீர் விடச் செய்தார். விரைவில் 1835 ஆம் ஆண்டு மாரிஸ் கல்லூரியில் "டாக்டர் ஆப் டிவைனிடி" பட்டம் சூட்டப்பட்டார். எந்த ஊழிய அழைப்புகளையும் அலெக்ஸாண்டர் டப்ஃ மறுக்காது சென்றதன் பேரில் அநேக இளம் தலைமுறையினர் வட இந்தியாவுக்குச் செல்ல தங்களை அர்ப்பணித்தனர். மருத்துவர்களால் வேலை செய்ய மறுப்பு பெற்ற இவர் தனது சொல்லாற்றலை எழுத்தாற்றலில் காண்பிக்க முற்பட்ட போது, அவை "இந்தியா", " இந்திய மிஷனெரி இயக்கம்” என்ற 'புத்தக வடிவம் பெற்றது.

1839 - ஆம் ஆண்டு மறுபடியும் இந்தியாவுக்கு காலடி எடுத்து வைத்தார். சமுதாயத்தில் உயர்ந்திருந்த, அநேக படித்த இளைஞர்களின் திருமுழுக்குகள் அடுத்தடுத்து நடைபெற்றதின் நிமித்தம் கல்கத்தா பிராமணர்களின் சமுதாயம், எச்சரிப்படைந்து அலெக்ஸாண்டர் டப்ஃ - யை துரத்தி விட முயற்சித்தனர். அவரோ சிறிதும் தளராது, திருமுழுக்குப் பெற்று துரத்தப்பட்ட மக்களை சேர்த்துக் கொண்டு பராமரித்தார்.

1850ல் டப்ஃ ன் உடல் நிலைமை மிக கவலைக்கிடமாக இருந்தபடியினால் மீண்டும் தாயகம் திரும்பினார். 1850 -  ஆம் ஆண்டு இங்கிலாந்து சபை பொதுக் கூடுகையில் 5 சொற்பொழிவுகளை ஆற்றினார். அதன்பின் ஒவ்வொரு சபை மன்றங்களாகச் சென்று, அநேகரை மிஷனெரி ஊழியத்தில் ஊக்குவித்ததுடன் வெளிநாட்டு, பிரிட்டிஷ் வேதாகம சங்கத்திற்காகவும்  உழைத்தார்.

சுதந்திர சபை சங்கத்தின் பிரதமபேராயராக 1851 - ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து 1854 - இல் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று மிகக் கடினமாக உழைத்தார். மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு வந்த அவர் மிக விரைவில், 1200 மாணவர்கள் கொண்ட புதிய கல்லூரி ஒன்றை நிர்மாணித்தார். மிகக் குறுகிய காலத்தில் மறுபடியும் நோய்வாய்ப்பட்ட அவர் இறுதியாக தாயகம் செல்வது என்று தீர்மானித்தார். அதனை அறிந்த அனைத்து வகுப்புக்களைச் சேர்ந்த மக்களும் கூடி அவரை கௌரவிக்க முடிவு செய்தனர். தனக்கு வந்த எல்லா பணத்தொகைகளையும், ஊதியங்களையும் ஏற்க மறுப்பு தெரிவித்த அவருக்கு அவரது நண்பர்களால் ஒரு வீடு பரிசளிக்கப்பட்டது. 'அதுவே அவர் ஓய்வு பெற்றபோது தங்கி இருந்த வீடாகும்'. 1865 - ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு ஒளியாகவும், சந்தோஷமாகவும் இருந்த அவருடைய அருமை மனைவி, மரணத்தினால் அவரை விட்டு பிரிந்தார். தனிமையை மிகவும் உணர்ந்த அவர், தனது நேரத்தை, வேதாகமத்தை வாசிப்பதிலே செலவழித்தார்.

1873 ஆம் ஆண்டு மறுபடியும் Moderator - ஆக  நியமிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது 70.1878 - ஆம் ஆண்டில் தனது உடல் நிலை குறைவினால் தான் வகித்து வந்த எல்லா அலுவலக பதவிகளையும் ராஜினாமா செய்தார். ஆனால் எழுத்துக் கலையை தொடர்ந்தார். அவரது உடல் நிலை கவலைகிடமான பொழுது அவரது இரண்டாம் மகன் கல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்டார். அவரிடம், "தான் தினமும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாக இருப்பதாக கூறினார்".

1878 - ஆம் ஆண்டு பிப்ரவரி 12 - ஆம் தேதி அன்று, அவர் முழு சமாதானத்துடன் மறுமைக்குள் சென்றார். அந்த புனிதமான புழுதி எடின்பர்க் இடத்திலுள்ள கல்லறைக்குள் வைக்கப்பட்டது. அனைத்து விசுவாசத்தையும் சேர்ந்த மதத்தினரும், அனைத்து மிஷனெரி இயக்கங்களின் பிரதிநிதிகளும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். “இவ்வுலகில் அவரது ஊழியம் தேவனின் ஆசீர்வாதங்களால் முடிசூட்டப்பட்டிருந்தது" என்று அவரைப் பற்றி  கூறப்பட்டது.


Born on April 25, 1806, to James Duff and Jean Rattreck, Alexander Duff was a first-class student and academically brilliant during his school days. A student of a great teacher named Dr. Somers, he came out as the first student in the college.

 Through his friend John Urgh Hart, who was closely associated with Dr. Morrison, who was working as a missionary in China, he got the desire to go on missionary work. In 1827, his friend Alexander Duff decided to enter the workforce after his friend had committed himself to full-time work.

 Licenced to preach by the Archdiocese of St. Antirose, he decided to go as a missionary to Calcutta in 1829, following an invitation from the Church of Scotland. On August 12, 1829, he was united in marriage by Dr. Somers to Mrs. Anne Scottrisdale, and on the same day he was ordained a priest at St. George.

 Having lost all his possessions (except Baxter's Bible and hymn book) after being shipwrecked twice, he thankfully landed on Indian soil. The people of that country heard of the damage to his ship. Surely this man was considered dear to God and had been chosen to do the most important work in India.

After visiting the schools and colleges in Calcutta, he changed the advice given to him and decided to set up his administration in Calcutta itself. The school was opened on July 13, 1830, with the support of the previous missionary, Dr. William Carey, and Raja Ram Mohan Roy, a native of the country.He demonstrated rapid progress in Bengali language proficiency and encouraged students to read and distribute gospels. At first, the Ammans refused, but on the advice of Rajaram Mohan Roy, they accepted.

 At first, Duff taught himself six hours a day using the English medium of instruction. Then he decided to teach it in Bengali. In progress of work, 40 km from Calcutta A school was started far away. This administration became famous in a short time. And for the Bible to take centre stage in the minds of the people, voices of protest that "Hinduism is at play" were often heard. All opposition was met with silence by Alexander Duff. But many baptisms continued. Foremost among them is Hide. K.M.Krishna Mohan Banerjee, alias Banerjee A bamboo temple was soon built, and a branch school was built 70 miles away in Taxi.

On his way back from visiting it, Alexander Duff fell ill and was forced to return home. There too, he roused all his own people with his powerful eloquence and brought to tears those who had never shed tears. Shortly thereafter, in 1835, he was awarded the degree of "Doctor of Divinity" at Maurice College. Many of the younger generation committed themselves to North India, as Alexander Duff refused any ministry calls. Refused to work by doctors, when he tried to express his eloquence in writing, it took the form of a book called "India" or "Indian Missionary Movement".

In 1839, he again set foot in India.The Brahmin community of Calcutta was alarmed by the successive baptisms of many educated youths who were high in society and tried to drive Alexander Duff out. He too did not relent, and baptized and nurtured the outcasts.

In 1850, Duff's health was so critical that he returned home.1850 - Delivered 5 sermons at the General Assembly of England. After that he visited every congregation and encouraged many in missionary work and also worked for foreign and British Bible Society.

In 1851, he took charge as the Prime Minister of the Independent Congregational Society. Three years later, in 1854, he went to the West and worked very hard. Coming to India for the third time, he soon built a new college with 1200 students. After falling ill again in a very short time, he finally decided to go home.  People of all classes came together and decided to honor him. He was gifted a house by his friends who refused to accept all the money and wages that came his way. 'That was the house he stayed in when he retired'. In 1865 his lovely wife, who had been the light and joy of his home, left him by death. Feeling very lonely, he spent his time reading the scriptures.

He was again appointed as Moderator in 1873.He was then aged 70. In 1878, due to failing health, he resigned from all the offices he held. But he continued writing.  His second son was summoned from Calcutta when his health became critical. He told him that "he rejoices in Christ every day".

On February 12, 1878, he passed into the hereafter in complete peace. The sacred dust was placed in a tomb in Edinburgh Place.  Religious people of all faiths and representatives of all missionary movements attended the funeral procession. It was said of him that “His ministry in this world was crowned with the blessings of God”.


Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!