Clarinda -Clorinda (Tamil & English)



குளோரிந்தாள் அம்மையாரின் பழைய பெயர் லட்சுமி என்னும் கோகிலா என்று கூறப்படுகிறது. 1746 - ஆம் ஆண்டு பிறந்த இவர் மராட்டிய பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.  அவரது தந்தைதஞ்சை மன்னரின் தலைமைப் புரோகிதர். ஒரு நாள் தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் சிறுமியாக இருந்த கோகிலா மற்றப் பெண்களுடன் மலர்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நச்சுப் பாம்பு கோகிலாவைக் கடித்தது. சிறுமியர் இது கண்டு கூக்குரலிட்டனர். அப்பொழுது காவலிலிருந்த ஆங்கிலப் போர் வீரன் லிற்றில்டன் என்பவர் ஓடி வந்து உடைவாளால் பாம்பு கடித்த இடத்தைக் கீறி, தன் வாயால் உறிஞ்சி விஷத்தை துப்பியவுடன் கோகிலா பிழைத்தாள்.

ஆண்டுகள் பல சென்றன. லிற்றில்டன் தலைமையில் ஒரு சிறிய படை  சென்னையிலிருந்து தஞ்சைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் வயல் நடுவிலே பாதையில் வந்து கொண்டிருந்தபோது ஆற்றின் ஓரம் மேடான இடத்தில் ஒரு கூட்டம் காணப்பட்டது. அங்கே ஒரு பிணம், அடுக்கப்பட்டு விறகுக் கட்டைகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. இறந்தவன் ஒரு பிராமணன். கோகிலாவின்  கணவர். பிணத்தை அவள் சுற்றி வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டாள்.

 மேளதாளங்கள்  முழங்கின. முதல் முறை சுற்றினவள் இரண்டாவது சுற்றில் மயங்கினாள். மூன்றாவது சுற்று இழுத்துவரப்பட்டாள். பின்னர் அவளது கணவனின் பிணத்தருகில் கிடத்தப்பட்டாள். நெய் ஊற்றப்பட்டது. நெருப்பிடப் போனபோது சிப்பாய்கள் பாய்ந்து அவளை மீட்டனர். பிராமணர் வாக்குவாதம் பண்ணினர். லிற்றில்டன் அவளை குதிரையில் படுக்க வைத்த நிலையிலேயே தன் வீரர்களுடன் அரண்மனைக்கு கொண்டு சென்றான். நடந்தவற்றை மன்னரிடம் கூறினான். அதற்குள் பிராமணர்களும் வந்தனர். மன்னர் புரோகிதரிடம் மகளை அழைத்துச் செல்லும்படி கூறினார். அவளை ஏற்பது பாவம் என்று கருதியதால், அவளது தந்தையும் மற்ற பிராமணரும் மறுத்துவிட்டனர். எனவே மன்னர் லிற்றில்டனை அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டார். லிற்றில்டன் தான் ஒரு ஆங்கிலேயன் என்றும், வேறு மதத்தை சேர்ந்தவன் என்றும் கூறி மறுத்துப் பார்த்தான். அப்போது, அவன்தான் அவள் சிறுமியாக இருந்தபோது பாம்பு கடியில் மரணத்தருவாயில் காத்தவன் என்ற உண்மையும் வெளிப்பட்டது. இரு முறை அவளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய லிற்றில்டனே கோகிலாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று மன்னர் கட்டளையிட்டார்.

அக்காலத்தில் ஆங்கிலப் படையில் ஒருவன், இராணுவத்திலிருக்கும் காலத்தில் திருமணம் செய்ய மாட்டேன் என்று ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தால்தான் ஆங்கிலப்படையில் சேர்க்கப்படுவார்கள். அவ்வாறே லிற்றில்டனும் எழுதிக் கொடுத்தமையால் கோகிலாவை திருமணம் செய்ய முடியவில்லை. ஆனாலும் அவர்கள் ஒருமித்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் 1773 - ஆம் ஆண்டு கர்னலாக பதவி உயர்வு பெற்ற லிற்றில்டன் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். கோகிலாவையும் தன்னுடன் அழைத்து வந்தார். இராணுவத்திலிருந்த சிப்பாய்களின் பிள்ளைகளுக்குத் திருமுழுக்குக் கொடுக்கவும், திருவிருந்து ஆராதனைக்காக சுவார்ட்ஸ் ஐயர் வரும்போதெல்லாம் கோகிலாவும் ஆராதனையில் பங்கு பெறுவார். கோகிலா தனக்கு திருமுழுக்கு கொடுக்க வேண்டும் என்று சுவார்ட்ஸிடம் கேட்டபோது சுவார்ட்ஸ் ஐயர் மறுத்துவிட்டார். இங்கிலாந்து நாட்டுச் சட்டப்படி, ஒப்பந்தப்படி லிற்றில்டன் கோகிலாவை மணக்க முடியாது. கோகிலாவுக்கு வேறு ஆதரவும் இல்லை. எனவே லிற்றில்டனும் கோகிலாவும் சேர்ந்தே வாழ வேண்டியதாயிருந்தது. சுவார்ட்ஸ் ஐயர் கோகிலாவுக்கு திருமுழுக்கு கொடுக்க மறுத்தாலும் கோகிலா இயேசுவை பற்றிப் பிடித்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் லிற்றில்டன் இங்கிலாந்துக்குச் சென்று தனது இராணுவ சேவை ஒப்பந்தத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பி வந்து கோகிலாவை முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி இங்கிலாந்துக்குச் சென்றார். அந்தோ பரிதாபம்! இங்கிலாந்து சென்ற லிற்றில்டன் மரணமடைந்தார். அவருக்கு இங்கிலாந்திலும், இந்தியாவிலுமிருந்த  சொத்துக்களுக்கெல்லாம் கோகிலாவையே வாரிசாக நியமித்தார். லிற்றில்டன் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் விட்டுச் சென்ற சொத்துக்கள் அனைத்தும் கோகிலாவுக்குக் கிடைத்தது. கோகிலா இப்போது சீமாட்டி. ஆனால் மறுபடியும் ஒரு விதவையானாள். 

இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்க சுவார்ட்ஸ் ஐயர் வந்த போது கோகிலாவும் திருமுழுக்கு கேட்டாள். சுவார்ட்ஸ் நன்கு விசாரித்த பின் கோகிலாவுக்கு குளோரிந்தா என்று பெயரிட்டார். (25.02.1778 - இல் திருமுழுக்கு பெற்றாள் என்று தந்தை பால்கடம்பாவனம் என்ற பெரியாரும், 03.03.1778 - இல் என்று   prof. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்களும் கூறுகின்றனர்)

குளோரிந்தா திருமுழுக்கு பெற்ற போது அவருக்கு வயது 32. திருமுழுக்குப் பெற்ற பின்னரே அநேக மக்களை ஆண்டவரண்டை  வழிநடத்தினார். பல ஜாதி மக்களையும் அவர் கிறிஸ்துவண்டை வழிநடத்தினார். ரோமன் மார்க்கத்தில் இருந்தும் பலர் குளோரிந்தாவின் ஊழியத்தில் புராட்டஸ்டன்ட் சபைக்குள் வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் வேதநாயக சாஸ்திரியாரின் தந்தை தேவசகாயம் ஆவார்.

தன்னையும், தன் நேரத்தையும், தன் செல்வத்தையும்  இயேசுவுக்கு அர்ப்பணித்து அவருடைய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். முதன் முதலில் தன் சுவிசேஷ ஊழியத்தை குளோரிந்தா தன் குடும்பத்திலேயே தொடங்கினார். ஏராளமான துண்டு பிரதிகள், நூல்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்து படிக்க உற்சாகப்படுத்தினார். தன் வளர்ப்பு மகன் ஹென்றி, தன் வளர்ப்பு மகள் மேரி, தன்னிடம் வேலை செய்யும் சாராள், தோட்ட வேலை செய்யும் ஜோதி என எல்லாரும் கிறிஸ்துவின் அன்பிற்குள் வர உதவி செய்தார். அத்துடன் அவரது ஊழியம் நின்றுவிடவில்லை.

உயர்குலத்து பெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து இயேசு கிறிஸ்துவின் அன்பை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினார். குளோரிந்தாவின் புகழ் பாளையங்கோட்டையில் மட்டுமல்லாது, திருநெல்வேலியிலும் பரவத் தொடங்கியது. உபதேசத்துடன் நில்லாது, அவரது வாழ்வு முழுவதும் ஆவியின் கனிகளால் நிரம்பி காணப்பட்டன. தாழ்மை, ஞானம், ஈகை, அடக்கம், அன்பு போன்ற குணங்கள் பலரையும் ஈர்த்தது. எக்குலத்தைச் சார்ந்தவரானாலும் அனைவரும் தேவனின் பிள்ளைகள் என்றும், அனைவரும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குளோரிந்தாவிற்கு திருநெல்வேலி திருச்சபையின் தந்தை என அழைக்கப்பட்ட ஸ்வார்ட்ஸ் ஐயரே குருவாகவும், ஆவிக்குரிய தகப்பனாகவும் விளங்கினார். அவரிடம் வசனங்களை குறித்ததான ஆழமான காரியங்களை கற்றறிந்தார்.  ஆங்கிலம், தமிழ், மராட்டி ஆகிய மூன்று மொழிகளிலும் குளோரிந்தா தேர்ச்சி பெற்று விளங்கினார்.

1783 - இல் குளோரிந்தா அம்மையார், தம் சொந்த செலவில் ஓர் ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார். 1785 - ல் சுவார்ட்ஸ் ஐயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அந்த ஆலயம் பாப்பாத்தி  அம்மாள் கோயில் என்று அழைக்கப்பட்டது. குளோரிந்தாள் தினம் என்றும், குளோரிந்தாள் ஞாயிறு என்றும் நாம் அழைப்பது ஆலய பிரதிஷ்டை நாளையே. இச்சபையை முன்னின்று நடத்திய குளோரிந்தாள் அம்மையார் கிபி 1870 - இல் சபையை ஒழுங்குபடுத்தி சபை மக்கள் அனைவர் பெயர்களும் அடங்கிய ஒரு பதிவேடு ஒன்றை தயாரித்தார் அதில் 40 பெயர்கள் இருந்தது. சத்தியநாதன் உபதேசியாரை நியமனம் செய்ததும் குருப்பட்டம் கொடுக்கச் செய்தார். சபை உபதேசியார் முறையையும் குளோரிந்தாள் அம்மையார் கொண்டு வந்தார். 

ஏழைகள், நோயாளிகள், தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்போர் யாவரையும் சந்தித்து உதவி செய்தார். முதலூரிலே கிறிஸ்தவர்களுக்கு துன்பம் ஏற்பட்டதைக் கேள்விப்பட்டு முதல்முறை சென்று பண உதவி செய்தார். பாளையங்கோட்டையில் பட்டாளக்காரர் முகாமுக்கு அருகில் ஏழை மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க ஒரு கிணற்றை வெட்டினார். செலவு முழுவதும் குளோரிந்தாவின் செலவுதான். அது பாப்பாத்தி அம்மாளின் கிணறு என்று அழைக்கப்பட்டு வந்தது.

குளோரிந்தா அம்மையார் 1787-இல் ஒரு குடிசையில் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். சுவார்ட்ஸ் ஐயர் இந்த செயலை ஆதரித்தார். அந்த பள்ளிக்கூடம் காலங்காலமாய் பல மாற்றமடைந்தது. இன்று தூய யோவான் கல்லூரியாக விளங்குகிறது. முதலூரிலும் குளோரிந்தா அம்மையார் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்.

குளோரிந்தா அம்மையார் தனது 60 - வது வயதில் 1806 - இல் மரணம் அடைந்தார். அவ்வாலயத்திலேயே அன்னாரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நெல்லை மாவட்டத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுகிறார்கள். இன்று உலகமே வியக்கும் வண்ணம் வளர்ந்து பெருகியுள்ள இத்திருச்சபையின் தாய் என குளோரிந்தா அம்மையார் அழைக்கப்பெற்றார். தேவனுக்காக எரிந்து பிரகாசிக்கும் விளக்காய் விளங்கினார். திருநெல்வேலியின் முதல் கிறிஸ்தவர்;  மட்டுமல்லாது, அவர் கட்டிய ஆலயமே திருநெல்வேலி திருமண்டலத்தின் முதல் ஆலயம். இன்றும் எல்லா மதத்தினரும் அங்கு வந்து செல்கின்றனர்.

மரித்து இன்றும் பேசப்படுகிற இவள் தன்னால் இயன்றதை செய்தாள். (மாற்கு 14 : 18) "உடம்பில் உயிர் ஒட்டியிருக்கும் வரை தான் என் ஆண்டவருக்காய் நான் ஏதாவது செய்ய முடியும்" என்று தேவனால் பயன்படுத்தப்பட்ட தேவ மனிதர் சாது சுந்தர் சிங் கூறுகிறார். ஆகவே கிறிஸ்துவுக்காக முழுமூச்சுடன் பணி செய்வோம். தேவன் நம்மை வழி நடத்துவார்.

The old name of Chlorinthal is said to be Kokila or Lakshmi. Born in 1746, she belonged to the Maratha Brahmin caste. Her father was the chief priest of the King of Tanjore. One day, when Kokila was playing with other girls in the gardens of the Tanjore palace, a poisonous snake bit her. The girls screamed at this. Kokila survived when Lyttleton, an English warrior who was on guard, came running and scratched the snake bite with his sword, swallowed the venom, and split it out.

 Many years passed. A small force under Lyttleton was sent from Chennai to Tanjore. As they were coming along the path in the middle of the field, they saw a crowd on the bank of the river. There was a corpse stacked and placed on top of logs. The deceased was a Brahmin. Husband of Kokila. She was forced to walk around the corpse. The cymbals sounded. She passed the first round and was mesmerized in the second round. She was drawn in the third round. She was then laid next to her husband's body. Ghee is poured. Soldiers rushed in and rescued her when she was on fire. Brahmins argued. Lyttleton carried her to the palace with his soldiers on horseback. He told the king what had happened. By then, the Brahmins had also come. The king asked the priest to take his daughter. Her father and other brahmins refused, considering it a sin to accept her. So the king ordered Lyttleton to be taken away. Lyttleton refused, saying he was an Englishman and of a different religion. Then it was revealed that he was the one who saved her from a snake bite when she was a little girl. The king ordered that Kokila be taken away by Littleton, who had twice saved her from the clutches of death. At that time, a member of the British army could only be inducted into the army if he signed a contract saying that he would not marry during his time in the army. Similarly, Lyttleton could not marry Kokila due to his writing. But they were forced to live together.

 In this case, in 1773, Lyttleton, who was promoted to colonel, was transferred to Palayankottai. He brought Kokila with him. To baptize the children of soldiers in the army, Kokila also participates in worship whenever Swartz Iyer comes for worship from the Lord. When Kokila asked Schwartz to baptize her, Schwartz Iyer refused. Under English law, Littleton cannot marry Kokila by contract. Kokila has no other support. So Littleton and Kokila had to live together. Although Schwartz Iyer refused to baptize Kokila, Kokila clung to Jesus and lived.

 In this case, Lyttleton went to England wanting to complete his military service contract and return to India to formally marry Kokila. What a pity! Lyttleton died in England. He appointed Kokila as the heir to all his properties in England and India. Kokila inherited all the properties Lyttleton left in England and India. Kokila is now a young girl. But she became a widow again.

When Swartz Iyer came to baptise the children of military officers, Kokila also asked for baptism. After careful investigation, Schwartz named Kokila Chlorinda. On February 25, 1778, Father Balkadambavanam said that she was baptised, and on March 3, 1778, Prof. Christopher Iyer also says thatClorinda was 32 when she was baptised. He led many people to the Lord only after they were baptised. He led many castes to Christianity. Many from the Roman faith also came into the Protestant congregation under Clorinda's ministry. One of those who came was Devasakayam, the father of Vedanayaka Shastriyar.

She dedicated herself, her time, and her wealth to Jesus, who devoted himself fully to her work. Clorinda first began her evangelistic ministry within her own family. He encouraged reading by buying and giving away many pamphlets and books. She helped her adopted son Henry, her adopted daughter Mary, her servant Sarah, and his gardener Jothy come to the love of Christ. And herministry did not stop. She brought noble women to her house and told them about the love of Jesus Christ. Clorinda's fame started spreading not only in Palayankottai but also in Tirunelveli. Not stopping with preaching, her whole life was filled with the fruits of the Spirit. Humility, wisdom, modesty, humility, and love attracted many. She emphasised that all are children of God, regardless of their origin, and that all should receive eternal life.

Schwartz Iyer, known as the Father of the Tirunelveli Church for Clorinda, was the Guru and spiritual father. From him, he learned profound things about verses. Clorintha is fluent in three languages: English, Tamil, and Marathi.

 1783: Clorinda  Ammyar started building a temple at her own expense. Consecrated in 1785 by Schwarz Iyer, the temple was called Papapati Ammal Temple. The Day of the Consecration of the Temple is what we call Chlorinthal Day and Chlorinthal Sunday. Mrs. Chlorinthal, who led the church, organised the church in 1870 AD and prepared a register containing the names of all the people in the church, which contained 40 names. Sathyanathan appointed the preacher and made him give the Gurupatam. Chlorinthal  Ammaiyar also introduced the method of congregational upadesiar.

 She met and helped the poor, the sick, and the downtrodden. After hearing about the suffering of Christians in Madalur, she first visited and offered financial assistance. At Palayangottai, the soldier dug a well near the camp to provide good water for the poor people. The entire cost is at Clorinda's expense. It was known as Papadi Ammal's well.

Clorinda Ammyar started the school in 1787 in a cottage. Schwartz-Iyer supported this action. The school underwent many changes over time. Today, it stands as Saint John's College. Ammyari-Clorintha also started a school in Madalur.

 Clorinda Ammyar  died in 1806 at the age of 60. Annar's body is buried in the same temple. They are called Vidivelli of Nellai district.Clorinda  Ammyar was called the mother of this church, which has grown and multiplied to the amazement of the world today. She was a shining lamp burning for God. First Christian of Tirunelveli; Moreover, the temple built by her was the first temple of Tirunelveli marriage temple. Even today, people of all religions visit there.

 She, who died and is still talked about, did what she could. (Mark 14:18)

"I can do nothing for my Lord as long as I have life in my body," says Sadhu Sundar Singh, a man of God used by God. So let's work wholeheartedly for Christ. God will guide us.

 

 


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!