Dr. Nancie Monelle (Tamil & English)

நான்சி மோனெல் அமெரிக்க தேசத்தின் நியூயார்க் பட்டணத்தில் 1841 - ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே தன்னுடைய தகப்பனாரை இழந்ததால், தகப்பனுடைய அன்பு கிடைக்காமலேயே வாழ பழகிக் கொண்டார். ஆகவே மனதளவில் கிறிஸ்துவுக்குள் எதையும் தன்னால் செய்ய முடியும் என்ற வேகத்துடனும் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் அன்பு அவரை செயல்பட உந்தித் தள்ளியது. 

அந்நாட்களில் இந்தியாவில் காலனிய ஆட்சி நடந்து வந்ததால், வெவ்வேறு சபை பிரிவுகளைச் சார்ந்த மிஷனெரிகள் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக உலகின் பல மூலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவிற்குள்ளும் அநேக மிஷனெரிகள் வந்து சுவிசேஷ பணியை செய்து கொண்டிருந்தனர்.. குறிப்பாக, ஆண் மருத்துவ மிஷனெரிகள் பலர் வந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். பெண் மருத்துவ மிஷனெரிகள் இந்தியாவில் பணி செய்வது சற்று கடினமான காரியமாக இருந்தது. வித்தியாசமான கால சூழ்நிலை, கலாச்சாரம், பின்தங்கிய சமுதாயம் போன்றவை அவர்களுக்குத் தடையாக அமைந்தது. அதிலும் தகவல் பரிமாற்றம், இடத்திற்கு இடம் மாறுபடுவதால், அவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. இதன் மத்தியிலும் நான்சி மோனெல் இந்தியாவில் பணி செய்ய வந்தார்.

1872 - ஆம் ஆண்டு நான்சி மோனெல், நியூயார்க் அரசாங்க கல்லூரியில் மருத்துவராக பட்டம் பெற்றார். அறுவை சிகிச்சையில் முதலிடம் பெற்று நிபுணராகி, ஓராண்டு பயிற்சியின் போதே மருத்துவ மிஷனெரியாக தன்னை தேவனிடம் அர்ப்பணித்தார். அயல்நாட்டு பெண் மிஷினெரி ஸ்தாபனமானது(The Women's Foreign Missionary Society), இவ்வாறு ஊழியத்திற்கென்று அர்ப்பணித்த பெண் மருத்துவர்களை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பியது. டாக்டர் நான்சி மோனெல் இந்தியாவின் லக்னோ மாவட்டத்திற்கென்று குறிக்கப்பட்டார். 1873 - ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் மருத்துவ மிஷனெரியாக கால் பதித்து, பணியாற்ற ஆரம்பித்தார். அயல்நாட்டு பெண் மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலம் அனுப்பப்பட்ட இரண்டாவது மருத்துவர் நான்சியே. இந்தியாவில் மருத்துவ ஊழியர் கிடைக்கப்பெற்ற இரண்டாவது பட்டணம் என்ற பெருமை லக்னோவிற்கு கிடைத்தது.

அச்சமயம் இந்தியாவில் பெண்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி போன்றவை எளிதில் கிடைக்கக்கூடாத காரியமாக இருந்தது. குறிப்பாக, பெண்களுக்கு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. வயதான பெண்களைக் கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிடுவார்கள் . இவற்றை கேள்விப்பட்ட மருத்துவர் நான்சி, அப்பெண்களுக்கு மருத்துவ சேவை வழங்க முடிவு செய்தார். மருத்துவ சேவையுடன் சுவிசேஷமும் ஒவ்வொருவரின் வீட்டிற்குள் சென்றது. இவரது மருத்துவ சேவை மிகவும் பிரபலமானது. இவரைப் பற்றி கேள்விப்பட்ட ஹைதராபாத் மன்னர் தங்கள் மாநிலத்தில் பணியாற்ற டாக்டர் நான்சிக்கு அழைப்பு விடுத்தார். 

ஹைதராபாத்தில் வாழ்ந்த உயர் கலாச்சார வகுப்பைச் சார்ந்த பெண்கள், பிரபுக்கள் ஆகியோர் மத்தியில் மருத்துவ சேவை செய்ய நான்சி பணியமர்த்தப்பட்டார். யாருடைய உதவியுமின்றி தனியொரு பெண்ணாக வாழ்ந்த நான்சியை அரசாங்கம், ராஜ மரியாதையுடன் நடத்தியது. அவர் மருத்துவச் சேவை செய்ய பிரயாணத்திற்கு உதவியாக யானை, சிப்பாய் படைகள், பாடகர் குழு போன்றவற்றை அளித்து அவர்களின் பணியை உற்சாகப்படுத்தியது. அமெரிக்காவிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு எத்தனை கௌரவம்?

மூன்று ஆண்டுகள் நான்சி ஹைதராபாத்தில் பணி செய்தார். 1877 - ஆம் ஆண்டு டாக்டர் ஹென்றியை திருமணம் செய்து, இரவு பகலாக இருவரும் மருத்துவ சேவையை செய்தனர்.ஒரு நாள் தேவன் டாக்டர் நான்சியுடன் இடைப்பட்டார். தேவன் தன்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தது பணக்காரர்களுக்காக அல்ல; சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்களுக்காக மட்டுமே என்பதை மிகத் தெளிவாக உணர்ந்தார். உடனடியாக மருத்துவமனையை கட்டியெழுப்ப தீர்மானம் செய்தார். மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மருத்துவமனை மற்றும் மருந்தகம் ஸ்தாபித்ததோடு, சுமார் 40,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். எந்தவித ஜாதி, மத வேறுபாடுமின்றி கணவன் - மனைவி இருவரும் அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை அளித்தனர்.

1880 - ஆம் ஆண்டு இருவரும் மொராதாபாத் பட்டணத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கும் தங்கள் மருத்துவப் பணியை முழு வேகத்துடன் செய்து வந்தனர். 1890 - ஆம் ஆண்டு வட இந்தியாவில் காலரா பெருமளவில் பரவிக்கொண்டிருந்தது. தொற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் மரண எண்ணிக்கையும் அதிகரித்தது. டாக்டர் நான்சி, காலரா நோயால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். தனக்கும் அந்நோய் தொற்றிக் கொள்ளும் என்ற பயம் சிறிதளவுமின்றி அம்மக்களோடு நேரம் செலவழித்தார். டாக்டர் நான்சியின் ஊக்கமான வார்த்தைகள் மக்களை உற்சாகப்படுத்தியது. தொற்றுநோயிலிருந்தும் அவர்கள் தப்பிக்கவும் உதவியது. 

இது ஒருபுறமிருக்க, குழந்தை திருமணங்கள், விதவைகளின் கொடுமைகள் போன்ற தவறான செயல்களும் அந்நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இளம் பெண்களும், இளம் விதவைகளும் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டனர். சிலர் அவர்களை தவறாகவும் நடத்தினார்கள். குழந்தை பருவத்திலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், கணவர்கள் மிகவும் வயதானவர்களாக இருப்பார்கள். வயது காரணமாக அவர்கள் மரித்தாலும் அவற்றிற்கு மனைவிகளையே காரணம் கூறி, குற்றம் சாட்டப்பட்டு இரக்கமின்றி கொலை செய்தனர்.

1890 ஆம் ஆண்டு இதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் சட்டம் கொண்டுவர பல மக்கள் முயற்சி செய்தனர். டாக்டர் நான்சியோ, இவற்றை தடுத்து நிறுத்த மனு ஒன்றை தயார் செய்தார். அவற்றில் சுமார் 55 பெண் மருத்துவர்களிடம் கையெழுத்தை பெற்று ஆளுநரிடம் சமர்ப்பித்தார். பெண்களின் திருமண வயதை 14 என அதிகரிக்கவும், குழந்தை திருமணம் ஒழிக்கப்படவும் அதில் வலியுறுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இளம் விதவைகள், கிறிஸ்தவ விசுவாசிகள், பிற சமய பெண்கள், மிஷனெரிகள் என பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் எண்ணற்ற மனுக்கள் குவிந்தன. ஆண்டவருடைய அளவற்ற கிருபையால் அரசாங்கம் இதனை அங்கீகரித்தது. பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்பட்டது. இளம் விதவைகளுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த 30 ஆண்டுகள் டாக்டர் நான்சி மோனெல் இந்திய தேசத்தில் தேவனுடைய உன்னதமான பணியை செய்தார். மருத்துவராக, மொழிபெயர்ப்பாளராக, பெண்களுக்கான வழக்கறிஞராக செயல்பட்டு சமுதாயத்தில் அழியாத இடத்தைப் பெற்றார். 

1903 ஆம் ஆண்டு டாக்டர் நான்சி மோனெல் இந்த உலக வாழ்க்கையை விட்டு, தேவனோடு நித்திய நித்தியமாக வாழ சென்று விட்டார். அவருடைய அன்பு நிறைந்த வார்த்தைகளும், இரக்க உள்ளம் கொண்ட சேவை பணிகளும் எண்ணற்ற ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்தியது. இதனை வாசிக்கிற நண்பர்களே, இன்று நம்முடைய வார்த்தை மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறதா? கிறிஸ்துவுக்குள்ளாக அவர்களை நடத்துகிறதா? என சிந்தித்துப் பார்ப்போம்.

 "எதை செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" கொலோசெயர் 3:24

Nancie  Monelle was born in the year 1841 in New York, USA. Having lost her father at an early age, she got used to living without her father's love. So mentally, she lived with such speed that she could do anything in Christ. Each day, the love of Christ moved her to action.

 Due to the colonial rule in India in those days, missionaries belonging to different denominations were sent to many corners of the world to preach the gospel. Many missionaries came and did evangelistic work in India. In particular, many male medical missionaries came and worked with dedication. Women medical missionaries working in India were a bit more difficult. Different time situations, cultures, backward societies, etc. became obstacles for them. Moreover, communication with each other was very difficult as the exchange of information varied from place to place. In spite of this,Nancie  Monelle came to work in India.

 1872: Nancie  Monellel graduated as a physician from New York State College. She excelled in surgery and became an expert, and he dedicated himself to God as a medical missionary during a year's training. The Women's Foreign Missionary Society was founded and sent dedicated women doctors to many parts of the world. Dr. Nancie  Monellel is assigned to Lucknow district, India. In 1873, he started working as a medical missionary in India. Nancie was the second doctor sent by the Foreign Woman Missionary Establishment. Lucknow has the distinction of being the second city in India where medical staff is available.

 Medicine and education were not easily available to women in India at that time. In particular, women were denied access to hospital delivery. They gave birth at home with old women. If there is a problem during delivery or if the baby is harmed, they refuse to take him to the hospital. Hearing this, Doctor Nancy decided to provide medical services to the women. Evangelism went into everyone's home, along with medical service. Her medical services are very famous. The King of Hyderabad heard about him and invited Dr. Nancie to work in his state.

 Nancie was hired to provide medical services to the high-cultured women and aristocrats living in Hyderabad. Living as a single woman with no help from anyone, Nancie was treated with royal respect by the government. It encouraged their work by providing them with elephants, troops of soldiers, choirs, etc. to help them travel to perform medical services. How much honour for a woman from America?

 For three years, Nancie worked in Hyderabad. 1877: Married to Dr. Henry; both of them practised medicine day and night. One day, God intervened with Dr. Nancie. God did not bring himself to India for the rich; she realized very clearly that only for the poor women in the society. She immediately decided to build a hospital. Within three years, the hospital and dispensary were established and treated about 40,000 patients. Both husband and wife provided medical services to all people, irrespective of caste and religion.

 In 1880, both shifted to Moradabad. There too, they were doing their medical work at full speed. 1890: Cholera was rampant in North India. As the rate of infection increased, so did the death toll. Dr. Nancie met cholera victims in person and cheered them up. She spent time with Amma without the slightest fear of contracting the disease. Dr. Nancie's words of encouragement inspired people. It also helped them survive the epidemic.

 Apart from this, malpractices such as child marriages and widow abuse were also taking place in those days. Young women and young widows were marginalised in society. Some even mistreated them. Because girls are married off at a young age, husbands tend to be very old. Even if they died of old age, they blamed their wives and killed them mercilessly.

 In 1890, many people tried to get the government to pass a law to stop this. Dr. Nancie prepared a petition to stop these. He obtained signatures from about 55 women doctors and submitted them to the governor. In it, she insisted on raising the marriage age of girls to 14 and abolishing child marriage. Apart from that, countless petitions were also collected from various people, like affected young widows,Christian believers, women of other religions, and missionaries. By God's immeasurable grace, the government approved this. The marriageable age of women was raised. The Act was also introduced to provide basic rights to young widows.

 For the next 30 years, Dr. Nancie Monelle did God's noble work in Indian Country. She earned an immortal place in society as a doctor, translator, and advocate for women.

 In 1903, Dr. Nancie  Monelle left this earthly life and went to live eternally with God. Her loving words and compassionate service led countless souls to Christ. Friends reading this, is our word encouraging others today? Is it leading them into Christ? Let's think about it.

  "Whatever you do, do it not for men, but for God." 

Colossians 3:24


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!