William Carey-4 (Tamil & English)

 ‌
வில்லியம் கேரி தான் செய்த ஒவ்வொரு பணியையும் தேவ‌‌ ஒத்தாசையோடும், பெலத்தோடும் செய்து வந்தார். தேவன் அவரை‌ வல்லமையாக‌ பயன்படுத்தினார். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கங்கை நதியில்‌ கூடுவது வழக்கம். தங்களுக்குக்‌ குழந்தை இல்லை என்றும், கங்காதேவி தங்களுக்குக் குழந்தை ‌தந்தால் ஒரு குழந்தையை கங்கா தேவிக்கே திரும்ப கொடுப்போம் என்று அவர்கள் உறுதி கூறுவார்கள். எனவே ஆயிரமாயிரமான பெண்கள் தங்கள் உறுதியை நிறைவேற்ற ஜனவரி மாதம் கங்கை நதியில்‌ கூடுவார்கள். "தேவி எழும்பி வருகிறாள்" என்ற குரல் கேட்டவுடன் தங்கள் அழகுப்‌ பிள்ளைகளை கங்கை நதியில்‌ வேகமாக வீசுவார்கள். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும். இந்த நிகழ்வை தடுக்க வேண்டி கேரி, தேவனை நோக்கி ஜெபித்து வந்தார். வெல்லெஸ்லி பிரபு‌ இந்தியாவின் கவர்னர் என்ற முறையில் இதனைத் தடை செய்து சட்டம் போட முடியுமா? என்று யோசித்து அவரைத் தொடர்பு கொண்டார். "இந்து மக்களின் வேதத்தில் இப்படி‌ச் செய்வது எழுதி இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் மத உரிமைகளில் நான் தலையிட இங்கிலாந்து அரசு அனுமதி தரவில்லை" என்றார். இதைக் குறித்து கேரியை ஆராய்ச்சி செய்யவும் கூறினார்.
 ‌ வில்லியம் கேரி நதியில் குழந்தைகளை வீசுவதைப் பற்றி இரவு‌ பகலாக இந்து மத நூல்களை ஆராய்ந்து, படித்தார். ஆனால் அதைக் குறித்து எதுவும் எழுதப்படவில்லை என்று கண்டறிந்தார். இதனை வேகமாக பிரபுவிடம் கூறினார். தேவனுடைய கிருபையால் "கங்கை நதியில் குழந்தைகளை யாரும் வீசக் கூடாது" என்ற சட்டம் வெல்லெஸ்லி பிரபு மூலம் பிறந்தது. பவுர்ணமி தினத்தன்று இந்திய சிப்பாய்கள் கங்கை நதியோரத்தில் நிறுத்தப்பட்டனர். அந்த நாள் முதல் இப்பழக்கம் நிறுத்தப்பட்டது. கேரியின் ஜெபம் கேட்கப்பட்டது.
      மேலும் உடன்கட்டை ஏறும் பழக்கமும் அந்நாட்களில் காணப்பட்டது. கணவன் இறந்த பின்னர் மனைவி வாழ்வதற்கு உரிமை இல்லை. அவளைப் பிடித்து கட்டி, கட்டைகளை அடுக்கி, அதன் மேல் கிடத்தி உயிரோடு எரித்து விடுவார்கள். இந்த "சதி" முறை கேரியின் மனதை அதிகம் பாதித்தது. அநேக வருடங்கள் இதற்காக ஜெபித்து வந்தார். ஒரு நாள் காலை வேளையில் அவரது வீட்டருகில் மூன்று பெண்களை அங்குள்ள மக்கள் கதற கதற கட்டுவதை பார்த்தார். மிக இளமையான பெண்கள். கணவர்கள் இறந்ததால் இனி அவர்கள் வாழ மறுக்கப்பட்டது. எவ்வளவோ கெஞ்சியும் அவர்களை எரித்தனர். ஒரு சில மணி நேரத்தில் உடல் கருகி துடிதுடித்து மரித்தனர். இதனைப் பார்த்த கேரியின் உள்ளம் உடைந்தது. இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணினார். இதனைப் பற்றிய குறிப்புகளை சேகரித்தார். ஒரே வருடம் பத்தாயிரம் பெண்கள் இப்படி தீயிடப்பட்டுள்ளதை அறிந்தார். இதற்கு சட்டம் கொண்டு வர வேண்டி வெல்லெஸ்லி பிரபுவை அணுகினார். அவர் இந்துக்களின் வேதத்தில் இது கூறப்படவில்லை என்றால் சட்டம் கொண்டு வரலாம் என்று கூற கேரி, மறுபடியும் எல்லா வேதங்களையும் புரட்டி அலசினார். அப்படி எதுவும் எதிலும் எழுதப்படவில்லை. இதனை உடனே வெல்லெஸ்லி பிரபுவிடம் தெரிவித்தார். ஆனால் அதற்குள் பிரபு ஓய்வு‌ பெற்று இங்கிலாந்து சென்று விட்டார். கேரி துக்கத்துடன்‌ திரும்பினர். எனினும் தேவனிடம் விடாது மன்றாடினார்.
     இருபது வருடங்கள் கழிந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஆலய ஆராதனை நடத்த கேரி ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்பொழுது அரசாங்க அதிகாரி ஒருவர் கேரியை சந்திக்க வந்தார். வந்தவர் கேரியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் புதிய கவர்னர் ஜெனரலின் கையொப்பம் இருந்தது. ஏதோவொரு சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அவற்றை வங்காள மொழியில் மொழி பெயர்க்க கேரியை கேட்டிருந்தனர். அது உடன்கட்டை ஏறுவதைத் தடை செய்யும் சட்டம்! வில்லியம் கேரி மகிழ்ச்சியினால் துள்ளினார். தன்னுடன் பணியாற்றியவர்களை ஆராதனை நடத்தச் சொல்லிவிட்டு, சட்டத்தை வங்காள மொழியில் மொழி பெயர்த்தார். சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது . பெண்களின் உள்ளம் மகிழ்ந்தது. உடன்கட்டை ஏறும் பழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டது. கேரியின் இந்த ஜெபமும் கேட்கப்பட்டது.
          ஒரு நாள் கேரியின் அச்சுக்கூடம் தீப்பற்றி எரிந்தது. அன்று அவர் செராம்பூரில் இல்லை. கல்கத்தா சென்றிருந்தார். விலையுயர்ந்த புத்தகங்கள், இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்த 12,000 ரீம் உயர்ந்த ரக பேப்பர்கள், அச்சுக்கள் அனைத்தும் பாழாயின. ஆனால் அதைவிட அழகான ஓர் அச்சுக்கூடத்தை உடனடியாக உருவாக்க தேவன் உதவி செய்தார். வேதாகமத்தை மராட்டி, ஹிந்தி, ஒரியா, தெலுங்கு, பஞ்சாபி, அசாமி போன்ற மொழிகளில் மொழி பெயர்த்தார்.1832 - ம் ஆண்டு கேரி 44 மொழிகளில் வேத புத்தகம், புதிய ஏற்பாடு மற்றும் சுவிசேஷ பகுதிகளை வெளியிட்டார். பூக்கள், செடிகள், விவசாயம் இவைகளில் மனதைப் பறி கொடுத்த கேரி, இந்திய விவசாய சங்கத்தின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். அவரது மகன் பேலிக்ஸ் பர்மா தேசத்திற்கு மிஷனெரியாக புறப்பட்டுச் சென்றார். பர்மிய மொழியில் வேதத்தை மொழி பெயர்த்து, அதனை அச்சடிக்க தன் தகப்பனிடம் கல்கத்தாவிற்கு அனுப்பினார். இத்தனை பாடுகள், துன்பங்களை தகப்பன் சந்திப்பதை மகன் கண்கூடாக பார்த்த போதும் ஊழியத்தை வெறுக்காது தேவனுக்காக பணி செய்ய சென்றது எத்தனை ஆச்சரியம்.
       தனக்காக, தன் குடும்பத்திற்காக என வாழாமல் தன் இறுதி மூச்சு வரை தேவனுக்காகவே வாழ்ந்து தன் உலக ஓட்டத்தை வில்லியம் கேரி வெற்றியோடு ஓடி முடித்தார். தேவப் பணிக்காக தன் பெலன், தன் வருமானம்‌ அனைத்தையும் அள்ளி இறைந்தார்.1834 - ம் ஆண்டு ஜுன் 8-ம் தேதி‌ கர்த்தருக்குள் மரித்து இதே இந்திய மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார். ஜெபத்தின் மூலமும் திடமான விசுவாசத்தின் மூலமும் கேரி எல்லா தடைகளையும் வென்றார். ஜெபத்தா‌ல் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என நிரூபித்து சென்றார். நமக்கு வில்லியம் கேரி எப்படி முன் உதாரணமாக வாழ்ந்துள்ளாரோ, நாமும் அடுத்த தலைமுறைக்கு முன் உதாரணமாக வாழ தீர்மானிப்போம்.

William Carey performed every task he undertook with godly harmony and strength. God used him mightily. Every year on the full moon day in January, thousands of women with their children gather at the river Ganges. They will promise that they are childless and will give a child back to Goddess Ganga if she gives them a child. So thousands of women gather at the Ganges in January to fulfil their vows. When they hear the voice of "The Goddess is Rising," they throw their beautiful children into the river Ganges. It has been going on for centuries. Gary prayed to God to prevent this from happening. Can Lord Wellesley, as the Governor of India, ban this and legislate? Thinking that he had contacted him. "If it is written in the scriptures of the Hindu people to do this, we cannot do anything. Because the British government does not allow me to interfere with religious rights."

William Carey spent day and night researching and reading Hindu scriptures about throwing children into the river. But he found that nothing was written about it. He quickly told this to Prabhu. By the grace of God, the law "No child shall be thrown into the river Ganges" was born by Lord Wellesley. Indian soldiers were stationed on the banks of the Ganges on the full moon day. This practise was stopped that day. Gary's prayer was answered.

Also, the practise of climbing the Ughandatta was seen in those days. After the death of the husband, the wife has no right to live. They would catch her, tie her up, stack logs, lay her on top of them, and burn her alive. This method of "conspiracy" took a heavy toll on carey's mind. He prayed for this for many years. One morning near his house, he saw three women being beaten up by the people. Very young women. Their husbands died, and they were denied the right to live any longer. They burned them, no matter how much they begged. Within a few hours, the body was charred and throbbing. Carey was heartbroken to see this. He thought that this should be prevented somehow. Collected notes on this. He learned that ten thousand women were set on fire in a single year. He approached Lord Wellesley to legislate for this. Carey again turned over all the scriptures to say that if this is not said in the Hindu scriptures, he can legislate. Nothing like that is written anywhere. This was immediately reported to Lord Wellesley. But by then, Prabhu had retired and gone to England. Carey returned with grief. However, he begged God not to let go.

Twenty years have passed. carey was getting ready to lead a church service on Sunday. Then a government official came to meet carey. The visitor handed carey a letter. It bore the signature of the new Governor General. Some laws were written in English. Carey was asked to translate them into Bengali. It is a law that prohibits collusion! William Carey jumped for joy. He asked his co-workers to conduct worship and translated the law into Bengali. The law was promulgated. The hearts of women rejoiced. The habit of climbing the hill has been completely stopped. This prayer of carey was also heard.

 One day, carey's print shop caught fire. He was not in Serampore that day. He had gone to Calcutta. Expensive books, 12,000 reams of high-quality paper, and prints shipped from England were all ruined. But God immediately helped to build a more beautiful printing house. He translated the scriptures into Marathi, Hindi, Oriya, Telugu, Punjabi, and Assamese. In 1832, Carey published the Bible, New Testament, and Gospels in 44 languages. Carey, who was passionate about flowers, plants, and agriculture, was selected as the president of the Indian Agricultural Society. His son Felix left as a missionary to Burma. He translated the Vedas into Burmese and sent them to Calcutta to his father for printing. It is surprising that the son did not hate the service and went to work for God even though he saw his father face so many hardships and sufferings.

William Carey successfully finished his world race by living for God till his last breath without living for himself or his family. He poured all his wealth and income into God's work. He died in the Lord on June 8, 1834, and was buried on the same Indian soil. Carey overcame all obstacles through prayer and steadfast faith. He went on to prove that there is nothing that prayer cannot achieve. As William Carey has lived by example for us, let us resolve to live by example for the next generation.


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!