William Carey-3 (Tamil & English)


அச்சுக் கூடம் வாங்கியாயிற்று. அதில் வேலை செய்ய ஆட்கள் அநேகர்  தேவைப்பட்டனர். அச்சுக்கலை தெரிந்த ஒருவர் குறிப்பாக வார்டு என்ற அந்த வாலிபன் இங்கிலாந்திலிருந்து வரமாட்டானா  என கேரி ஆவலோடு எதிர்பார்த்தார். அவரது 15 வயது மூத்த மகன் பேலிக்ஸ் தன் தகப்பனோடு தானும் உதவி செய்வேன் என்று உதவ முன் வந்தான். வில்லியம் கேரிக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்த தேவன் இங்கிலாந்தில் கிரியை செய்ய ஆரம்பித்தார். மூன்று குடும்பங்களும், ஒரு சகோதரியும் இந்தியாவிற்கு புறப்பட்டு வந்தனர். அவர்களில் வார்டும் ஒருவர்.  அவர்களைப் பார்த்தவுடன் கேரிக்கு மிகவும் சந்தோஷம். தான் எதிர்பார்க்கும் பெரிய காரியங்களை தேவன் தனக்குத் தருகிறார் என்று கேரி புரிந்து கொண்டார்.
       செராம்பூர் பகுதியானது டேனிஷ் அரசுக்கு சொந்தமாக இருந்தது. அதனால் கிழக்கு இந்திய கம்பெனியின் தொந்தரவு இல்லாமல் இருந்தது. எனவே கேரியின் குழுவினர் செராம்பூரில் தங்கி தங்கள் பணியை செய்து வந்தனர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலை வேளையில் அனைவரும் கூடி அந்த வாரத்தின் பணிகளை பரிசீலனை செய்து, புதிய வாரத்திற்கு தங்கள் வேலையை திட்டம் செய்து தங்களை ஆயத்தப்படுத்தினர்.இந்தியர் இயேசுவை அறிய வேண்டுமென்பதே அவர்கள் எண்ணமாய் இருந்தது. தேவன் கிரியை செய்ய ஆரம்பித்தார். தச்சுத் தொழில் செய்யும் கிருஷ்ணப்பல் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது முழு குடும்பமும் இரட்சிக்கப்பட்டனர்.ஊரார் அதனிமித்தம் அவரைத் துன்புறுத்தினர். அவரது வீட்டை சூறையாடி, திருமணம் நிச்சயம் செய்திருந்த அவரது மகளை தூக்கிக் கொண்டு சென்றனர். இந்நாள் வரை அவள் என்ன ஆனாள் என்று தெரியாது. ஆயினும் தேவன் அவர்களைத் தேற்றினார். கிறிஸ்துவை மறுதலிக்காமல் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டனர்.
        கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு பேர் ஞானஸ்நானம் எடுக்க முன் வந்தனர். ஒன்று கிருஷ்ணப்பல், மற்றொரு நபர் அவரது 15 வயது மகன் பேலிக்ஸ். இருவரும் ஆயத்தமாயினர். ஒருநாள் காலை வேளையில் பாடல் பவனி நதியை நோக்கி ஆரம்பமானது. வழியில் மற்ற மத மக்களும் ஆச்சரியத்துடன் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலுடன் பின் தொடர்ந்தனர். ஆற்றின் படி வழியாக கேரி தண்ணீருக்குள் இறங்கினார். கிருஷ்ணப்பல்லிடம் வங்காள மொழியிலும், தனது மகனிடம் ஆங்கிலத்திலும் ஆராதனை நடத்தினார். சுற்றியிருந்த மக்களிடம் திருமுழுக்கு என்றால் என்ன? ஏன் அவசியம் என்பதையும் விளக்கினார். மகா அமைதி! நதிக்கரை முழுவதும் தேவ பிரசன்னம் நிரம்பியது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் இருவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. தேவன் தொடர்ந்து கிரியை செய்ய ஆரம்பித்தார். இரண்டு பிராமண குலத்து சகோதரர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். ஒரு முஸ்லிம் சகோதரன் இரட்சிப்பைப் பெற்று கொண்டார். அற்புதமான தேவன் செராம்பூரில் தனது சிறிய உறுதியான சபையை ஸ்தாபித்தார்.
         அந்நாட்களில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு அரசாங்க வேலையாக வரும் வாலிபர்களுக்கு வங்காளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்க ஒரு கல்லூரி கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இந்தியாவின் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு வில்லியம் கேரியை இந்த மொழிகளை கற்றுக் கொடுக்கும் பேராசிரியராக நியமித்தார். மிஷனெரி பணியை செய்ய வந்த நான், கல்லூரியில் பணி புரிவதா என யோசித்து, தேவசித்தத்திற்காக ஜெபித்தார். தேவனின் திட்டம் அதுவே என தெளிவாக உணர்ந்த கேரி, அதனை ஏற்றுக் கொண்டார். புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் செராம்பூரிலிருந்து கல்கத்தா சென்று கல்லூரியில் பணியாற்றினார். அந்நாட்களில் கேரி அநேக இந்திய நூல்களை ஆங்கிலத்தில் எழுதத் துவங்கினார். அதில் இராமாயணமும் ஒன்று. ஆங்கிலம் - வங்காளம் இலக்கணம் எழுதினார். கல்லூரியில் அவருக்கு சிறந்த ஊழிய வாய்ப்பு கிடைத்தது. வெல்லெஸ்லி பிரபு மிஷனெரிகளை கல்கத்தாவிற்குள் அனுமதிப்பது இல்லை. ஆனால் கேரியின் நிமித்தம் அவருடன் பணிபுரியும் பிற எல்லா மிஷனெரிகளுக்கும் அன்பு பாராட்டினார்.
          வெல்லெஸ்லி பிரபு 1804-ம் ஆண்டு இந்தியாவிலுள்ள ராஜாக்கள், இங்கிலாந்து நாட்டு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் பிரதானிகள் என அனைவரையும் கல்கத்தாவில் உள்ள அரசு மாளிகையில் கூடி வரச் செய்தார். அந்த மிக முக்கிய கூட்டத்தில் வில்லியம் கேரியை ஹிந்தி மொழியில் சிறப்புரை ஆற்ற பிரபு கேட்டிருந்தார். வில்லியம் கேரி பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும் வல்லமையுடனும், தாழ்மையுடனும் மிகுந்த ஞானத்துடனும் உரையாற்றினார். குறிப்பாக லண்டனிலுள்ள தனது இளமைப்பிராயம் முதல் அன்று வரையுள்ள தனது சாட்சியையும், தான் ஒரு மிஷனெரி என்பதையும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் பேசினார். அனைவரும் மகா அமைதியுடன் அந்த அரிய உரையாடலைக் கேட்டனர். இந்தியாவில் ஹிந்தி மொழியில் ஓர் வெள்ளைக்காரன் ஆற்றிய முதல் உரையாடல் இதுவே. தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்த ஒரு சாதாரண மனிதனுக்கு தேவன் அளித்த மிகப்பெரிய சிலாக்கியத்தைப் பார்த்தீர்களா? நாமும் தேவனுக்கு கீழ்ப்படிவோம். வில்லியம் கேரியைக் குறித்து தொடர்ந்து வாசியுங்கள்.
     

 The printing house was bought. Many people needed to work on it. Carey looked forward to seeing if someone who knew typography would come from England, especially a young man named Ward. His 15-year-old eldest son, Felix, came forward to help with his father. Knowing that William Carey needed people, God began to work in England. Three families and one sister were leaving for India. Ward was one of them. Carey is very happy to see them. Carey understood that God was giving him the great things he was hoping for. The Serampore region belonged to the Danish government. So it was undisturbed by the East India Company. So carey's crew stayed in Serampore and did their work. Every Saturday evening, everyone gathered to review the work of the week, plan their work for the new week, and prepare themselves. Their intention was to make Indians know Jesus. God began to work. Krishnapal, a carpenter, accepted Jesus as his personal saviour. His entire family was saved by him. The villagers persecuted him for that. They ransacked his house and carried away his daughter, who was sure to get married. To this day, we don't know what happened to her. Yet God chose them. They did not deny Christ but held fast to Him.

 Baptism was arranged for those who accepted Christ. Two people came forward to be baptised. One is Krishnapal, and the other is his 15-year-old son Felix. Both are ready. One morning, the song started towards the Bhavani River. Other religious people on the way also followed in wonder to see what was going to happen. Carey descended into the water through the river steps. He offered worship to Krishnapalli in Bengali and to his son in English. What does baptism mean to the surrounding people? He also explained why it is necessary. Great peace! The entire bank of the river was filled with the presence of God. They were both baptised in the name of Jesus Christ. God continued to work. Two Brahmin brothers accepted Jesus. A Muslim brother got salvation. The wonderful God established his small, firm congregation in Serampore.

 In those days, a college was established in Calcutta to teach Bengali and Sanskrit to the youths who came to India from England for government work. Lord Wellesley, then Governor General of India, appointed William Carey as a professor to teach these languages. Having come to do missionary work, I thought about working at a college and prayed for God. Realising that this was God's plan, carey accepted it. He went to Calcutta from Serampore and worked at the college on Wednesday, Thursday, and Friday. During those days, Carey started writing many Indian books in English. The Ramayana is one of them.  wrote English-Bengali grammar. He got a great ministry opportunity in college. Lord Wellesley did not allow missionaries to enter Calcutta. But for carey's sake, he loved all the other missionaries working with him.

In 1804, Lord Wellesley convened the King of India, British officials, judges, and chieftains at the Government House in Calcutta. Prabhu had asked William Carey to deliver a keynote address in Hindi at that very important meeting. William Carey spoke with power, humility, and great wisdom, filled with the Holy Spirit. In particular, he spoke about his testimony from his youth in London to that day, about being a missionary, and about Jesus Christ. Everyone listened to that rare conversation in great silence. This is the first dialogue in Hindi by a white man in India. Have you seen the great reward that God gave to an ordinary man who obeyed the voice of God? We will also obey God. Read more about William Carey. 

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)