Posts

Showing posts from 2023

Charles Tleoplilus Ewald Rhenius சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்

  பிறப்பு        சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் நவம்பர் 5, 1790 - ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் இறந்து விட்டார். தாயார் கேத்தரின் டாரதி, இவரோடு பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். தனது 14 - ஆம் வயதில் தன் தாய்க்கு உதவ வேலை தேடி எழுத்தர் வேலையில் சேர்ந்தார். ஊதியம் போதவில்லை. இதை அறிந்த இவரின் பெரியப்பா தன் பண்ணையில் ஈடுபடுத்தி தன்னோடு வைத்துக் கொண்டார். இந்தியா வருகை             1807 - ஆம் ஆண்டு கிறிஸ்தவ சமய ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள பெர்லின் சென்றார். அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று 1812 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 - ஆம் நாள் குரு பட்டம் பெற்றார். 1814 - ஆம் ஆண்டு ஜீலை 4 - ஆம் தேதி சர்ச் மிஷன் சங்கம் ( CMS) சார்பில் இந்தியாவுக்கு ஊழியராக வந்தார். இந்தியா வந்த இவர் தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னை சென்றார். அங்கு அன்னி வேன் சாமரன் ( Annie Van Some...

மேரி ஜோன்ஸ் Mary Jones

Image
இன்று நம்மில் அநேகருடைய கரங்களில் வேதாகமம் உண்டு. அதை வாசிப்பவர்களும் நேசிப்பவர்களும் ஏராளம். நாம் கொடுத்து வைத்தவர்கள். கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். கடந்த காலங்களில் நிலைமை வேறு. கல்வி கற்றவர்கள் மிகக் குறைவு. வேத புத்தகங்கள் தயாரிக்க ஏராளமாகப் பணம் தேவைப்பட்டது. பள்ளிக்கூடங்களும் இல்லை. மக்களுடைய வாழ்க்கைத் தரம், கல்வி அவர்களை அக்கரை கொள்ளச் செய்யவில்லை. மூன்று வேளை உணவு தேடுவதற்கு அவ ர்களுக்கு நேரம் போதாது. இரவு பகலாய் கடின உழைப்பில் ஈடுபட்டு வந்தார்கள். 18-ம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நிலை எங்கும் காணப்பட்டது. 1704-ம் ஆண்டில் வேல்ஸ் நாட்டின் வட பகுதியிலுள்ள டின்டால் என்ற சிற்றூரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் மேரி. ஏழையாய்ப் பிறந்த அவள் கிறிஸ்துவுக்குள் ஒரு இலட்சியப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். தகப்பனார் ஒரு நெசவுத் தொழிலாளி. தாயும் அவரோடு சேர்ந்து உழைத்தால் தான் குடும்பப் பொருளாதாரத்தை ஓரளவு சரிக்கட்டி வாழ்க்கை நடத்தமுடியும். எனவே வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாப் பொறுப்பும் மேரியைச் சேர்ந்தது.  மேரி உழைப்பின் சின்னம். ஓடி ஓடி மகிழ்ச்சியோடு வேலைகளைச் செய்து வந்தாள், நல்...

ஹக்கிவ்கா, Ha Chev Ka

Image
  ஹக்கிவ்கா – பேராயர் ரிச்சர்ட்சனாக மாறிய கதை.  வங்காள விரிகுடா கடல்... இது கார் நிக்கோபார் தீவை சூழ்ந்திருந்தது. இத்தீவில் நிக்கோபாரி இன மக்கள் நிரம்பியிருந்தனர். ஆதிவாசி இனம்! நிர்வாணம் வாழ்க்கை! வேட்டையாடுவதே இவர்களது தொழில்.  19 – ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் அவை! மிஷனெரி வேதப்பன் சாலமோன் இத்தீவில் அடியெடுத்து வைத்தார். இவர் தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்தவர். 12 ஆதிவாசி பையன்களை தேர்ந்தெடுத்து, பள்ளிக்கூடம் அமைத்து கல்வியறிவு கொடுத்தார். அதோடு கிறிஸ்துவையும் அவ்வாலிபர்களுக்கு அறிமுகம் செய்தார். நிக்கோபாரி மக்களுக்கு அவர்கள் இன மக்களே சுவிசேஷம் சொல்ல வேண்டுமென ஏவப்பட்டார். 12 பையன்களில் ஹக்கிவ்கா என்ற வாலிபனும் இருந்தான். பள்ளி வாழ்வை வெற்றியோடு முடித்த ஹக்கிவ்கா பர்மாவிற்கு வேதாகம உயர்கல்வி பயில அனுப்பப்பட்டான். பின் வெற்றியோடு திரும்பி வந்த ஹக்கிவ்கா, தான் கல்வி பயின்று உருவாக்கப்பட்ட பள்ளியில் ஓர் ஆசிரியரானான். அவனும் தன் இன மக்களுக்கு கிறிஸ்து வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்தான். நவ நாகரீகத்தையும், கல்வியையும் அறிமுகம் செய்ய எண்ணினான். உலகத்தின் வேகமான போக்கை...

Vedhanayagam Sastriar வேதநாயகம் சாஸ்திரியார்

Image
  1774 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் கிறிஸ்தவ குடும்பம் ஒன்றில் வேதநாயகம் சாஸ்திரியார் மகனாகப் பிறந்தார். தனது ஐந்தாம் வயதில் இலக்கண வித்துவான் வேலுப்பிள்ளையிடம் இலக்கணம் பயின்று, அதில் சிறந்தும் விளங்கினார். ஆனால் சிறு வயதிலேயே தன் தாயாரை இழந்ததால், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் குறைந்து தன் தாத்தாவின் மாடுகளை மேய்த்து வந்தார். 1783 ஆம் ஆண்டு இவரது தகப்பன் தேவசகாயம் தன் மகன் இலக்கியம் மற்றும் கணிதத்தை கற்க வேண்டும் என்பதற்காக ஆசிரியரை வீட்டிற்கு வந்து கற்பிக்குமாறு ஏற்பாடு செய்தார். பத்தாம் வயதில் ஒருநாள் மரச்சிலுவை ஒன்றை தரிசனமாக கண்டார். அன்று முதல் அவருடைய வாழ்க்கை மாறியது. கிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார். 1785 ஆம் ஆண்டு ஜெர்மானிய மிஷனெரி ஸ்வார்ட்ஸ் ஐயர் நெல்லைக்கு வந்தார். வேதநாயகத்தின் துடிப்பான செயலும், பேச்சும் அவரை அதிகம் கவரவே, அவரது தகப்பனாரின் அனுமதியோடு அவரை தஞ்சைக்கு அழைத்து வந்தார். ஸ்வார்ட்ஸ் ஐயர் அவர்கள் பல பாடங்களை வேதநாயகத்திற்கு கற்றுக் கொடுத்தார். அப்போது தஞ்சை மராட்டிய மன்னரின் மகனான நான்காவது சரபோஜியும் வேதநாயகத்துடன் பயின்றார்.  வேதநாயகத...

மார்த்தாள் மால்ட் Martha Mault

Image
  தென் தமிழகம் இன்று அறிவிலும், அரசியலிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறதென்றால், கடல் கடந்து வந்து அங்கு பணியாற்றிய மூத்த முன்னோடி ஊழியர்களே காரணம் என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக, வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கிடந்த பெண்கள் இன்று சமுதாயத்தில் உயர்ந்திருப்பதற்கும் இவர்களே காரணம். 19-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மறுமலர்ச்சிக்கு இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்த சார்லஸ் மால்ட் மற்றும் அவரது மனைவி மார்த்தாள் மால்ட் பல காரியங்களைச் செய்தனர். 1818 - ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமானது. திருமணமான ஒரு வாரத்திலேயே இருவரும் இந்திய தேசத்திற்கு சுவிசேஷத்தை சுமந்து கொண்டு வந்தனர். கடும் எதிர்ப்புகள் மத்தியிலும் தேவனுடைய பணியை தைரியமாக செய்து வந்தனர். தென் தமிழகத்தின் கால சூழ்நிலை மற்றும் கலாச்சாரம்  அவர்களை அதிகம் பாதித்த போதும் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் சகித்தார்கள்.1821 - ஆம் ஆண்டு, முதல் அச்சுக்கூடத்தை நாகர்கோவிலில் நிறுவினார்கள்.          மார்த்தாள் மால்ட் பெண்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையை கொண்டு வந்தார். பெண்களுக்கான முதல் போர்டிங் பள...

Donald Andenson McGavran டொனால்ட் மெக்காவரன்

Image
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அவைகள் நிறைவேற சிலர் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் கனவுகள் கண்டே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.        சுவிசேஷகர் டொனால்ட் ஆண்டர்சன் மெக்காவரன் அவருக்கு வித்யாசமான ஆசை இருந்தது. வட இந்தியாவில் கூட்ட நெரிசலாக இருக்கும் பாசஞ்சர் ரயிலில் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும். அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்டு மரிக்க வேண்டும். அவ்வழியில் உள்ள கிராமத்திலேயே தன் உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும். இதுதான் அவரது ஆசை. வித்தியாசமாக இருக்கிறதல்லவா? தொடர்ந்து வாசியுங்கள்.         டொனால்ட் மெக்காவரன் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவ மிஷனெரியாக வாழ்ந்தவர். 1897 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ என்ற ஊரில் மிஷனெரி பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர் ஜான் மெகாவரன் - ஹெலன் அமெரிக்கா தேசத்திலிருந்து இந்தியாவிற்கு மிஷனெரிகளாக வந்தவர்கள். இந்தியாவில் ஆரம்ப கல்வியைக் கற்ற மெக்காவரன், தன் மேற்படிப்புகளை அமெரிக்காவில் பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனை...

Isabellah Thoburn

Image
  இசபெல்லா தோபர்ன் "இந்தியப் பெண் ஒருவருக்கு கல்வி கற்பிப்பதை விட 50 அடி உயரமுள்ள சுவரில் ஏறுவது சுலபம்" என்று இந்தியாவின் ஆண்களுக்கென முதல் கல்லூரியை ஆரம்பித்த அலெக்சாண்டர் டஃப் என்ற மிஷனெரி கூறுகிறார். ஆம், 18 - ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெண்களின் நிலை இப்படித்தான் இருந்தது. ஜேம்ஸ் தோபர்ன் என்ற மெத்தடிஸ்ட் பிஷப் வட இந்தியாவிற்கு வந்த போது எந்த பெண்ணிற்கும் எழுத படிக்க தெரியவில்லை. இந்துக்கள் மத்தியில் பெண் கல்வியை பற்றிய ஆழ்ந்த தவறான கருத்துக்கள் காணப்பட்டது. இந்நிலையை மாற்ற விரும்பிய ஜேம்ஸ் 1866 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தன் தங்கைக்கு இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து கூறினார். இறையியல் கல்வி கற்ற இசபெல்லா தோபர்ன் தான் செய்ய வேண்டிய பணி மிகவும் பெரியது என எண்ணி இந்தியாவிற்கு வர தயாரானார். அவரோடு இணைந்து கிளாரா A.சுவைன் அவர்களும் 1869 ஆம் ஆண்டு நவம்பர் 3 - ஆம் தேதி பாஸ்டனிலிருந்து புறப்பட்டனர்.              1870 - ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் நாள் மும்பை பட்டணத்தில் கப்பல் இறங்கினர். இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு அதிக பாரம் ...

பண்டிதர் ராமாபாய், Pandit Ramabai (Tamil & English)

Image
வைதீக இந்துவான ஆனந்த் சாஸ்திரி தான தர்ம செயல்கள் செய்வதை தமது கடமையாக எண்ணி ஏராளமாக செலவு செய்து வந்தார். நாளடைவில் தனது சொத்தை முழுவதுமாக இழந்துவிட்டார். இருந்தாலும் பக்தி நிறைந்த அவர், புண்ணிய ஸ்தலங்கள் தோறும் சென்று நீராடியும், கோயில்களுக்கு சென்று தெய்வங்களை தரிசித்தும் தன் நேரங்களை செலவு செய்து வந்தார். சமஸ்கிருதம் கற்றறிந்த இவர், வேத நூல்களை மற்றவர்களுக்கு போதித்தும் வந்தார்.  அந்நாட்களில் தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று.அப்பொழுது அவர்கள் வசித்த சென்னை பட்டணமும் அதிக பாதிப்புக்கு உள்ளானது. எங்கு பார்த்தாலும் மக்கள் பசியோடு இருப்பதை காண முடிந்தது. ஆனந்த் சாஸ்திரியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகாரத்திற்காக அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர். அவர்களுடைய மத கட்டுப்பாட்டின்படி இழிவான யாதொரு வேலையையும் அவர்கள் செய்யக்கூடாது. தாழ்ந்த வேலைகளை செய்யக்கூடாதபடி பெருமை உள்ளவர்களாய் இருந்தார்கள். ஏனென்றால், உலகப் பிரகாரமான கல்வியை பெற்றிருப்பதால் எவ்வகையிலும் சம்பாதித்திருப்பார்கள். ஆகவே மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களின் கருத்து. எனவே ஆனந்த் சாஸ்திர...

இசபெல்லா வயட் (பேராயர் கால்டுவெல்லின் மகள்) Isabella Wyatt (daughter of Archbishop Caldwell) (Tamil & English)

Image
இடையன்குடியில் பணியாற்றி வந்த பேராயர் கால்டுவெல் - எலைசா மால்ட் தம்பதியினருக்கு தேவன் ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளுமாக ஏழு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார். ஏழு பிள்ளைகளும் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைய தேவன் உதவி செய்தார். பெற்றோர் பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் உறுதுணையாய் இருந்தார்கள். அதனால் பிள்ளைகள் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவும், தங்களை சுற்றி வாழ்ந்த மக்களின் ஏழ்மையையும் அவர்கள் மத்தியில் காணப்பட்ட தேவையையும் நன்கு அறிந்து கொள்ள உதவியது. ஏழு பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் செய்த ஊழியத்திற்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இவர்களின் பெண் குழந்தைகளில் மூத்த பிள்ளையாக பிறந்த இசபெல்லாவைப் பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்க உள்ளோம். இவர் கால்டுவெல் தம்பதியினரின் இரண்டாவது பிள்ளை. 1848 - ஆம் ஆண்டு இசபெல்லா இடையன்குடியில் பிறந்தார்.பத்து வயதாய் இருக்கும்போது, கால்டுவெல் ஐயர் குடும்பமாக ஒரு முறை இங்கிலாந்திற்கு சென்றனர். அச்சமயம் இங்கிலாந்தில் மாபெரும் ஆன்மீக எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் குடும்பமாக க...

Eliza Caldwell எலைசா கால்டுவெல்(கால்டுவெல் மனைவி) In Tamil & English

Image
எலைசா மால்ட், நாகர்கோவிலில் முதல் L.M.S. மிஷினெரியாக பணியாற்றி வந்த  சார்லஸ் மால்ட் ஐயர் மற்றும் மார்தா மால்ட் அம்மையாருக்கு 1822 ஆம் ஆண்டு மூத்த மகளாக திருவிதாங்கூரில் பிறந்தார். இங்கிலாந்தின் பூர்வீக குடும்பங்களை சேர்ந்த இவரது பெற்றோர், தேவனின் தெளிவான அழைப்பிற்கு இணங்கி, இந்தியாவில் குறிப்பாக நாகர்கோவிலில் கால்பதித்தனர். அச்சமயம் எலைசா பிறந்ததால் மிஷனெரி பயிற்சியுடன் சேர்ந்து தமிழ் மொழி பயிற்சியும் அவர் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்றார். நாகர்கோவிலில் தன் தந்தையார் மால்ட் ஐயர் நடத்திய அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்களை பிழைதிருத்தும் பணி செய்து வந்தார். எலைசாவின் தாயார் திருமதி. மால்ட் அம்மா அவர்கள் நாகர்கோவிலில் பெண்கள் தங்கியிருந்து உணவருந்திக் கற்கும் பெண்கள் போர்டிங் பள்ளியொன்றை துவங்கினார்கள். அப்பள்ளியே தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் போர்டிங் பள்ளியாகும். மேலும் தையற்கலை கற்பிப்பதற்கு ரேந்ரா தையல் பள்ளியை தொடங்கினார். நாகர்கோவிலில் கிறிஸ்தவப் பெண்களுக்கு வருவாய் தரும் குடிசைத் தொழிலை கற்றுத்தந்த பெருமை மால்ட் அம்மையாரையே சாரும். தாய் செய்த...