Eliza Caldwell எலைசா கால்டுவெல்(கால்டுவெல் மனைவி) In Tamil & English
எலைசா மால்ட், நாகர்கோவிலில் முதல் L.M.S. மிஷினெரியாக பணியாற்றி வந்த சார்லஸ் மால்ட் ஐயர் மற்றும் மார்தா மால்ட் அம்மையாருக்கு 1822 ஆம் ஆண்டு மூத்த மகளாக திருவிதாங்கூரில் பிறந்தார். இங்கிலாந்தின் பூர்வீக குடும்பங்களை சேர்ந்த இவரது பெற்றோர், தேவனின் தெளிவான அழைப்பிற்கு இணங்கி, இந்தியாவில் குறிப்பாக நாகர்கோவிலில் கால்பதித்தனர். அச்சமயம் எலைசா பிறந்ததால் மிஷனெரி பயிற்சியுடன் சேர்ந்து தமிழ் மொழி பயிற்சியும் அவர் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்றார். நாகர்கோவிலில் தன் தந்தையார் மால்ட் ஐயர் நடத்திய அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்களை பிழைதிருத்தும் பணி செய்து வந்தார்.
எலைசாவின் தாயார் திருமதி. மால்ட் அம்மா அவர்கள் நாகர்கோவிலில் பெண்கள் தங்கியிருந்து உணவருந்திக் கற்கும் பெண்கள் போர்டிங் பள்ளியொன்றை துவங்கினார்கள். அப்பள்ளியே தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் போர்டிங் பள்ளியாகும். மேலும் தையற்கலை கற்பிப்பதற்கு ரேந்ரா தையல் பள்ளியை தொடங்கினார். நாகர்கோவிலில் கிறிஸ்தவப் பெண்களுக்கு வருவாய் தரும் குடிசைத் தொழிலை கற்றுத்தந்த பெருமை மால்ட் அம்மையாரையே சாரும். தாய் செய்த பணிகளைப் பார்த்து வளர்ந்த எலைசாவிற்கு பெண் கல்வியின் முக்கியத்துவம் நன்கு புரிந்தது. ஆகவே பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி அடைய தானும் தன்னால் இயன்ற பணியை செய்ய வேண்டும் என ஆர்வம் கொண்டார்.
திருமணம்:
அவரது 21 ஆம் வயதில் திருமண ஏற்பாடு ஆரம்பமானது. இடையன்குடியில் பணியாற்றி வந்த 29 வயதான கால்டுவெல் ஐயருக்கும் எலைசா மால்ட் அம்மையாருக்கும் 1844-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி நாகர்கோவிலில் உள்ள கல்கோயில் என்று அழைக்கப்படும் ஹோம் சர்ச்சில் திருமணம் நடந்தது. அத்திருமணத்தை கால்டுவெல் ஐயரின் நெருங்கிய நண்பரான மெஞ்ஞானபுரம் ஜான் தாமஸ் ஐயர் அவர்கள் நடத்தினார்கள். திருமணம் முடிந்த பின் இடையன்குடி மக்கள், புதிய தம்பதியரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதன்முதலாக ஒரு ஐரோப்பிய பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். மணவாழ்வு இன்பமாக ஆரம்பத்தது. இருவரது தரிசனமும் வாஞ்சையும் ஒன்று போல் அமைந்தது. எலைசா அம்மையாருக்கு தமிழ் நன்கு தெரிந்ததால் தன் கணவருக்கு கற்றுக் கொடுத்தார். "ஏட்டுத்தமிழை நூல்களின் வாயிலாக கற்றறிந்த கால்டுவெல் ஐயர், வீட்டுத் தமிழை வாழ்க்கைத் துணை எலைசா அம்மையாரிடம் கற்றதாக கூறுகிறார்.
முதல் போர்டிங் பள்ளி:
அக்காலத்தில் இடையன்குடியில் பெண்கள் கல்வி கற்றல் பெரும் தவறு என கருதினார்கள். பெண்களின் நிலைமையை கண்ட எலைசா அம்மையார் அவர்கள் வாழ்வை முன்னேற்ற வேண்டும் என விரும்பினார். போர்டிங் பள்ளியை உருவாக்க நினைக்கும் பொழுது கடுமையான எதிர்ப்பை சந்தித்தார். எனினும் முழு வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தார். திருமணமான இரண்டு மாதத்திற்குள்ளாகவே எலைசா அம்மையார் இடையன்குடியில் 1844-ஆம் ஆண்டு மே மாதம் பெண்கள் போர்டிங் பள்ளியை துவங்கினார். எலைசா அம்மையாரின் கணவர் கால்டுவெல் ஐயர் தன் மனைவிக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டு வந்தார். ஆரம்பத்தில் 8 பெண்களே சேர்ந்தார்கள். நாளடைவில் இந்த எண்ணிக்கை அதிகமானது. எலைசா அம்மையார் பெண்களுக்குச் செய்யப்பட வேண்டிய வேலைகளை மிகவும் திறம்பட செய்ததினால் கால்டுவெல் ஐயர் தன் சுவிசேஷப் பணியை முன்னிலும் அதிக ஈடுபாட்டுடன் செய்து வந்தார்.
முதல் பெண் தலைமை ஆசிரியர் :
பெண்கள் ஊழியத்தில் எலைசா அம்மையாருக்கு உதவியாக இடையன்குடியைச் சார்ந்த எலியனார் என்ற 18 வயது இளம் பெண் நியமிக்கப்பட்டார். எலைசா அம்மையார் அவருக்கு அதிக பயிற்சியளித்து அவர் திறம்பட பணியாற்ற உற்சாகப்படுத்தினார். அதின் விளைவாக 1844 - ஆம் ஆண்டு போர்டிங் பள்ளியின் ஆசிரியையும், மேட்ரனுமாக எலியனார் நியமிக்கப்பட்டார். அவரது பணியை பாராட்டி எலைசா அம்மையார் அவரை தலைமை ஆசிரியராக நியமித்தார். அக்காலத்தில் எலியனார்தான் முதல் இந்திய பெண் தலைமை ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் என கால்டுவெல் ஐயர் அவர்கள் எழுதுகிறார்.
ஜெனனா மிஷன்:
அப்பள்ளியில் பயின்ற பெண்கள் பெரியவர்களாகும் போது நல்ல கிறிஸ்தவ மனைவிகளாகவும், நல்ல தாய்மார்களாகவும் சிறந்து விளங்கினார்கள். அந்நாட்களில் பெண்களை வீடுகளிலும் வெளியிலும் வேற்று ஆண்கள் சந்தித்துப் பேசுவது என்பது மாபெரும் குற்றமாகக் கருதப்பட்டது. அதனால் சுவிசேஷ ஊழியம் செய்யவும், சபை ஆராதனைகளை நடத்தவும் பெண்களை ஈடுபடுத்த கால்டுவெல் தம்பதியினர் முயன்றார்கள். தாங்களாகவே முன்வந்து ஊழியத்தில் ஈடுபட விரும்பிய பெண்களை சிறுசிறு குழுக்களாக சேர்த்து ஜெபிக்கவும், ஊழியம் செய்யவும், வேதாகம அறிவில் வளரவும் பயிற்சி கொடுத்தார். அக்காலத்தில் உயர்குலப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாது. ஆகவே அவர்கள் வீடுகளில் வைத்தே கல்வி கற்பிப்பதற்காகவும், கிறிஸ்துவுக்குள் வளருவதற்காகவும் முதலில் இரண்டு பெண்களை நியமனம் செய்தார்கள். உயர்ஜாதி பெண்களுக்கு கல்வி அறிவும், வேத அறிவும் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஊழியத்திற்கு ஜெனனா என்று பெயரிட்டார். முதலில் இடையன்குடிக்கு அருகில் உள்ள குட்டம் என்ற கிராமத்தில் ஜெனனா மிஷன் ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது.
தையல் பள்ளி:
இடையன்குடி பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட எலைசா கால்டுவெல் அம்மையார் பெண்களே சுயமாக தொழில் செய்ய ஒரு தையல் பள்ளியை தொடங்கினார். அவர் தொடங்கிய ரேந்தா தையல் பள்ளியில் முதலில் 60 பெண்கள் சேர்ந்தார்கள். தையலுடன் லேஸ் பின்னவும் கற்றுக் கொடுத்தார்கள். இடையன்குடி நேந்தா தையல் பள்ளியில் பின்னப்படும் லேஸ்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. லண்டன், கிளாஸ்கோ போன்ற பிரிட்டிஷ் பட்டணங்களில் இடையன்குடி லேசுக்கு அதிக வரவேற்பு இருந்தது. எந்த விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருந்தார்கள். இப்பணத்தைக் கொண்டு அம்மையார், தையல் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்தார்கள்.
பிள்ளைகளின் பங்கு:
கால்டுவெல் - எலைசா தம்பதியினருக்கு தேவன் ஏழு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார். ஐந்து ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். பெண் பிள்ளைகளில் முதல் பெண் பிள்ளை இசபெல்லா. பிள்ளைகள் ஏழு பேரும் தங்கள் பெற்றோரின் ஊழியத்தில் பெருந்துணையாய் இருந்தார்கள். இசபெல்லா தன் தாய் எலைசா அம்மையார் நடத்திய போர்டிங் பள்ளிக்கு உதவியாக இருந்தார்கள். ஊழியத்தில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இடையன்குடியின் நிலைமைகள் கால்டுவெல் ஐயரின் பிள்ளைகள் மனதை அதிகம் பாதித்தது. தூத்துக்குடி, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் போர்டிங் பள்ளியை ஆரம்பித்து நடத்தினார்கள்.
போர்டிங் பள்ளியை நடத்த பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டனர். கால்டுவெல் ஐயரின் பிள்ளைகள் இங்கிலாந்தில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு நிதி தேவையை குறித்து எழுதினார்கள். இதன் பலனாக ப்வென்றன் என்ற குருவானவர் 100 பவுன்ஸ் (அன்றைய மதிப்பு 1060 ரூபாய்) அனுப்பினார். நன்றியுடன் பெற்றுக்கொண்ட கால்டுவெல் ஐயர் குடும்பம் போர்டிங் பள்ளியை சிறப்பாக நடத்தினார்கள்.
ப்வென்றன் எஸ்டேட்:
கால்டுவெல் ஐயர் தம்பதியினர், பெண்கள் போர்டிங் பள்ளிக்கு நிரந்தர வருமானம் வர முயற்சி எடுத்தார்கள். பயிர் செய்யும் விவசாய நிலங்களை வாங்கினார். அந்நிலங்களில் ஒன்றை நீரைச் சேமிக்க குளம் ஒன்றை வெட்டினார். அந்நிலங்களிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், மீதி வருமானத்தை பெண்கள் போர்டிங் பள்ளிக்கு மட்டுமே செலவிட்டார். ப்வென்றன் குளம் என்று பணம் அனுப்பிய குருவானவரின் பெயரையே சூட்டினார். அந்நிலங்களுக்கு ப்வென்றன் எஸ்டேட் என்று பெயரிட்டார். அக்குளம் கூடங்குளம் பகுதியில் உள்ளது. இவ்வாறு குடும்பமாக இடையன்குடிக்காக வாழ்ந்தார்கள்.
எலைசா அம்மையாரின் கடைசி நாட்கள்:
எலைசா அம்மையார் தன் வாழ்க்கையில் எவ்வளவு உதவியாக இருந்தாரென்பதை கால்டுவெல் ஐயர் இவ்வாறாக கூறுகிறார். "முதலில் மிஷினெரியாகவும், பின்பு அத்தியட்சராகவும், புதைபொருள் ஆராய்ச்சியாளராகவும், திராவிட மொழிநூல் வல்லுநராகவும் நான் ஏதாவது செய்தது உண்டானால், அவையெல்லாம் தேவ வழி நடத்துதலுக்கு உட்பட்டு என் அருமை மனைவி எலைசாவின் தீர்க்காலோசனை, அனுபவம், பொறுமை, சோர்வில்லாத ஆர்வம் முதலியவற்றாலேயே, என்னால் கடைசிவரை ஊழியம் செய்ய முடிந்தது" என்று தன் அன்பு மனைவி எலைசா அம்மையாரை பற்றி எழுதியுள்ளார்.
இடையன்குடிக்காக குடும்பமாக உழைத்த கால்டுவெல் பேராயர் அவர்கள் ஓய்வு பெற்ற போது தன் வயோதிகம் காரணமாக 1891-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் நாள் கொடைக்கானலில் கர்த்தருடைய இராஜ்ஜியம் சென்றடைந்தார். அவருடைய விருப்பப்படி சரீரம் இடையன்குடி திரித்துவ தேவாலயத்திற்குள்ளே நற்கருணை பீடத்திற்கு அடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து 1899 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி எலைசா கால்டுவெல் அம்மையார் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். அவரது உடலும் தன் கணவர் கால்டுவெல் மகானின் அருகிலேயே நற்கருணை பீடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
இடையன்குடிக்காகவே வாழ்ந்து தன் ஓட்டத்தை முடித்த இத்தம்பதியினரின் பணி மறக்க முடியாதது. சரித்திரத்தில் நீங்கா இடத்தை பெற்றுவிட்டது. தேவ இராஜ்ஜியம் இவர்கள் மூலமாக திடமாக அஸ்திபாரம் இடப்பட்டு இன்றும் அழியாது விளங்குகிறது. இன்று நம்முடைய பணி எப்படி உள்ளது? தேவ இராஜ்ஜியத்திற்கு உள்ளவைகளாக உள்ளதா? உலகத்திற்கு உள்ளதாக இருக்கிறதா?
நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். ரோமர் 15:21
Eliza Malt, first
L.M.S. at Nagercoil, worked as a missionary. She was born in Travancore in 1822
as the eldest daughter of Charles Malt Iyer and Martha Malt Ammaiyar. Her
parents, who belonged to the native families of England, heeded the clear call
of God and set foot in India, especially in Nagercoil. Since Elisa was born at
that time, along with missionary training, she also received Tamil language
training from her parents. She used to proofread Tamil books published in the
printing house run by his father, Malt Iyer, in Nagercoil. Elisa's mother,
Mrs.Malt Ammaiyar, started a boarding school for girls in Nagercoil where girls
could stay and eat. The school was the first boarding school for girls in South
India. Malt also started a tailoring school to teach tailoring. Malt Ammaiyar
is credited with teaching the lucrative cottage industry to Christian women in
Nagercoil. Growing up watching her mother's work, Elisa understood the
importance of female education. Therefore, she became interested in doing her
best to bring revival into women's lives.
Wedding: At the age of 21, the marriage arrangement began. 29-year-old Caldwell Iyer and Eliza Malt Ammaiyar, who was working in Idiangudi, were married on March 20, 1844, at the home church known as Galkoil in Nagercoil. The wedding was officiated by John Thomas Eyre of Menjananapuram, a close friend of Caldwell Eyre. After the marriage, the people of Idiangudi welcomed the new couple with joy. For the first time, they saw a European woman with surprise. The marriage began happily. Their vision and wishes became one. Elisa Ammaiyar knew Tamil well, so she taught it to her husband. Caldwell Iyer, who learned through Etutthamila texts, says that he learned home Tamil from his wife, Eliza Ammaiyar.
First Boarding School: At that time, in Idayankudi, women considered education a big mistake. Seeing the condition of women, Ammaiyar Eliza wanted them to improve their lives. Shefaced stiff opposition when she thought of setting up a boarding school. However, she started working at full speed. Within two months of her marriage, Ammaiyar Eliza started a boarding school for girls in Idayankudi in May 1844. They started a boarding school. Caldwell Iyer, the husband of Eliza Ammaiyar, was active by his wife's side. Initially, only eight girls joined. Over time, this number increased. Caldwell Eyre was even more involved in his evangelistic work than Ammaiyar Eliza, who did more effective work for women.
First Woman Headmaster: Elianor, an 18-year-old girl from Idiangudi, was appointed to assist Ammaiyar Eliza in the women's ministry. Ammaiyar Eliza gave her more training and encouraged her to work effectively. As a result, Eleanor was appointed teacher and matron of the boarding school in 1844. Appreciating herwork, Mother Eliza appointed her as the head teacher. Caldwell Iyer writes that Eleanor was the first Indian woman headmaster at that time.
Zenana Mission: The girls who attended the school became good Christian wives and mothers when they grew up. In those days, it was considered a great crime for men to talk to women inside and outside their homes. So the Caldwells tried to involve women in evangelism and leading congregational services. She trained women who wanted to volunteer in the ministry in small groups to pray, serve, and grow in biblical knowledge. At that time, upper-caste girls could not attend school. So they first appointed two women to educate and grow in Christ in their homes. She named the ministry Zenana, which was started to impart education and Vedic knowledge to upper-caste women. The Zenana Mission was first started in Kuttam, a village near Uthangudi.
Tailoring School: Concerned about the advancement of middle-class women, Eliza Caldwell started a sewing school for women to become self-employed. At first, 60 girls enrolled in Renda Tailoring School, which she started. They also taught lace knitting along with sewing. The laces woven at the Nenda Tailoring School in Idayankudi were exported to foreign countries as well. In British cities like London and Glasgow, Idyankudi lace was very popular. They were ready to buy at any price. Mother helped the students of the sewing school with this money.
Role of Children: God blessed the Caldwell-Eliza couple with seven children. There were four sons and three daughters. Isabella was the first of the girls. All seven children were great contributors to their parents' ministry. Isabella helped at the boarding school run by her mother, Eliza. Their role in the ministry was very important. The conditions of the slums took a heavy toll on Caldwell Eyre's children. They started and ran boarding schools in areas like Tuticorin and Pudukottai.
They were struggling financially to run a boarding school. Caldwell Eyre's children wrote to their friends in England in need of funds. As a result, a guru named Bwennan sent 100 pounds (the value of that day was 1060 rupees). The boarding school was well run by the grateful Caldwell-Eyre family.
Vennan Estate: The Caldwell Eyers tried to provide a permanent income for the girls' boarding school. He bought agricultural lands for cultivation. He cut a pond in one of those lands to save water. A portion of the income from those lands was given to the farmers who cultivated the crops, and the rest of the income was spent only on the girls' boarding school. He named the pond after the guru who sent the money. He named those lands Bwennan Estate. Akkulam is in the Kudankulam area. Thus, they lived as a family in the middle of nowhere.
The Last Days of Ammyari Eliza: This is how Caldwell Iyer describes how Ammyari Eliza helped him in his life. "If I have done anything, first as a missionary, then as an overseer, as an archaeologist, as a Dravidian linguist, all of them have been divinely guided, and by the advice, experience, patience, and untiring heart of my lovely wife Eliza, etc., I have been able to serve until the end." He wrote about his beloved wife, Eliza Ammaiyar.
Archbishop Caldwell, who worked as a family for Idayankudi, reached the Lord's Kingdom in Kodaikanal on August 28, 1891, due to his old age when he retired. According to his wishes, his body was interred under the eucharistic altar inside the Trinity Church in Idiankudi. Eight years later, on June 18, 1899, Mrs. Eliza Caldwell died at the age of 77. Her body was buried next to her husband, Caldwell, near the eucharistic altar.
The work of this couple, who lived and completed their careers in Idiankudi, is unforgettable. You have earned your place in history. The Kingdom of God was firmly established through them and remains undying even today. How is our work today? Are they belonging to the Kingdom of God? Does the world exist?
Rather, as it is written:
“Those who were not told about him will see, and those who have not heard will understand.” (Romans 15:21)
Very nice..www.selwyndevadossps.in
ReplyDeletePraise be to God
DeleteMy dad and mom always get reminded of this missionary couple, really encouraging
ReplyDeletePraise God. We should be thankful for such great missionaries.
DeletePraise God for their commitment and their work. We thank God such a great missionaries in Nagercoil area. ..., Rani Vanitha Moses
ReplyDeletePraise God
DeleteWonderful life
ReplyDeleteWonderful testimony
ReplyDeleteInspiring article
ReplyDeletePraise the Lord. Extremely thankful to God for sending such missionary families to Tamil Nadu. God is good all the time
ReplyDelete