மேரி ஜோன்ஸ் Mary Jones




இன்று நம்மில் அநேகருடைய கரங்களில் வேதாகமம் உண்டு. அதை வாசிப்பவர்களும் நேசிப்பவர்களும் ஏராளம். நாம் கொடுத்து வைத்தவர்கள். கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். கடந்த காலங்களில் நிலைமை வேறு. கல்வி கற்றவர்கள் மிகக் குறைவு. வேத புத்தகங்கள் தயாரிக்க ஏராளமாகப் பணம் தேவைப்பட்டது. பள்ளிக்கூடங்களும் இல்லை. மக்களுடைய வாழ்க்கைத் தரம், கல்வி அவர்களை அக்கரை கொள்ளச் செய்யவில்லை. மூன்று வேளை உணவு தேடுவதற்கு அவ ர்களுக்கு நேரம் போதாது. இரவு பகலாய் கடின உழைப்பில் ஈடுபட்டு வந்தார்கள். 18-ம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நிலை எங்கும் காணப்பட்டது.

1704-ம் ஆண்டில் வேல்ஸ் நாட்டின் வட பகுதியிலுள்ள டின்டால் என்ற சிற்றூரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் மேரி. ஏழையாய்ப் பிறந்த அவள் கிறிஸ்துவுக்குள் ஒரு இலட்சியப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். தகப்பனார் ஒரு நெசவுத் தொழிலாளி. தாயும் அவரோடு சேர்ந்து உழைத்தால் தான் குடும்பப் பொருளாதாரத்தை ஓரளவு சரிக்கட்டி வாழ்க்கை நடத்தமுடியும். எனவே வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாப் பொறுப்பும் மேரியைச் சேர்ந்தது.

 மேரி உழைப்பின் சின்னம். ஓடி ஓடி மகிழ்ச்சியோடு வேலைகளைச் செய்து வந்தாள், நல்ல குணசாலி. அவள் கை பம்பரம் போல் சுழலும். மேரி ஒரு நல்ல கர்த்தருடைய பிள்ளையாக வளர்ந்து வந்தாள். அவள் தந்தை ஜோன்ஸூம் தாய் மாலியும் கர்த்தருக்குப் பயப்படுதலை அவளுக்கு நன்கு போதித்திருந்தார்கள். வீடுகளில் வேதாகமம் இல்லாத காலம் அது. பண வசதி படைத்த குடும்பங்கள் கூட வேதாகமத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத போது ஏழை மேரிக்கு அது எப்படிக் கிடைக்கும்? ஒவ்வொரு நாளும் தங்கள் கடின உழைப்புக்குப் பின் தங்கள் ஊரிலுள்ள சிற்றாலயத்திற்குச் சென்று மாலை நேரங்களில் தேவனைத் தொழுது கொள்வார்கள். சிற்றாலயத்தில் போதகர் கற்றுக் கொடுக்கும் வேத வசனங்களை வீட்டில் வந்து அடிக்கடி சொல்லிச் சொல்லி மூவரும் மகிழ்ந்தார்கள். ஜெபிக்கும் போதெல்லாம் வேத வசனங்களை உபயோகித்தே ஜெபிப்பார்கள். ஒரு நாள் இனிப்பான செய்தி ஒன்று மேரிக்கு கிடைத்தது. உடனே தன் சிநேகிதி பெற்றியைத் தேடி ஓடினாள்.

 "பெற்றி! நம் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் வருகிறதாம்!"

 "யார் சொன்னார்கள் மேரி, சும்மா கதை அளக்காதே."

 "இல்லை! அப்பாவும் அம்மாவும் பொய் சொல்ல மாட்டார்கள்!"

சற்று நேரத்திற்குள் மேரியின் முகம் வாடியது. மனத்தில் ஒரு ஏக்கம். பள்ளிக்கூடம் வருவது நல்லதுதான். எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டால் வேதாகமத்தை படிக்கலாம். ஆனால் அந்நாட்களில் வேல்ஸ் தேசம் முழுவதிலும் ஒரு சில வேதாகமங்களே இருந்தன!

அந்த மூன்று வாரங்களும் மூன்று மாதங்களாக மேரிக்குக் காணப்பட்டது. ஆவலோடு எதிர்பார்த்த பள்ளிக்கூடம் வந்து விட்டது. தன் வேலைகளை எல்லாம் சீக்கிரம் முடித்து, நல்ல ஆடைகளையும் உடுத்திக் கொண்டாள். வழியில் பெற்றியைச் சந்தித்த போது அவள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவள் ஊரில் பெரியவர்களுக்குக்கூட படிக்கத் தெரியாது. அவள் பெற்றோர்கள் படிக்கவில்லை. தேவன் மேரிக்கு அந்த சிலாக்கியத்தை கிடைக்கப் பண்ணினாரே!

 அந்தப் பள்ளிக்கூடம் அல்ப ஆயுசுப் பள்ளிக்கூடம். குளிர்காலம் முடிந்தால் பள்ளிக்கூடம் முடிந்துவிடும். 25 மைல் தொலைவில் உள்ள பாலா என்ற பட்டணத்திலிருந்து தாமஸ் ஐயரவர்கள் ஏழைக் கிறிஸ்தவர்கள் மேல் கொண்ட கரிசனையால் தொடங்கப்பட்ட அவ்வூர் ஆலயத்திலுள்ள வேதாகமத்தை வாசிக்கக் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு ஆசிரியரை தாமஸ் அனுப்பியிருந்தார். இரண்டு மைல் தொலைவிலுள்ள அந்த ஆலயத்திற்கு மேரியும், பெற்றியும் பாடங்களை கற்க நடந்து வருவார்கள். ஆசிரியர் எல்லீஸ் மாணவர்களுக்கு தினமும் பாடம் கற்றுக் கொடுத்தார்;.

 சில வாரங்களில் மேரி சொற்களைக் கற்று விட்டாள். இப்பொழுது அவளால் வாக்கியங்களைக்கூட வாசிக்க முடியும்! வேதாகமம் என்ற அந்தப் பெரிய புத்தகம் ஒரு மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்தது. வேத புத்தகத்தைத் திறந்து வாசிக்கும்படி மேரியை ஒரு நாள் வகுப்பில் எல்லீஸ் கூப்பிட்ட பொழுது அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி, 'கடவுள் வார்த்தைகளை நான் வாசிக்கப் போகிறேன்'.

மேரி தான் வாசித்த வசனங்களை மனப்பாடம் செய்து விட்டாள். வாழ்க்கைக்கு எவ்வளவு பயனுள்ளதாய் அது இருக்கிறது! எனக்குச் சொந்தமாக ஒரு வேதப்புத்தகம் இல்லையே!

வீடு திரும்பும் போதெல்லாம் இந்த எண்ணம் அவள் உள்ளத்தை வாட்டும்.

ஒரு நாள் பெற்றோர்கள் மேரியின் முகவாட்டத்தைக் கண்டனர்.

 "பள்ளிக்கூடத்தில் ஏதாவது மேரிக்கு நடந்து விட்டதோ? படிப்பு வரவில்லையோ? 


இல்லையப்பா, என் கவலையெல்லாம் எனக்கென்று சொந்தமாக ஒரு வேதபுத்தகம் இல்லையே! என்பதுதான். அதை என்றாவது நான் வாங்கமுடியுமா? நாம் மிகவும் ஏழைகளாயிற்றே!"


"மேரி விலையேறப் பெற்றஅப்புத்தகத்தை வாங்க ஏராளம் பணம் தேவைப்படுவது உண்மைதான். ஆனால் கர்த்தர் உன் விருப்பத்தை நிறைவேற்றுவார். கவலைப்படாதே. நான் உனக்காக இரண்டு கோழிகளைத் தருகிறேன். முட்டைகளையெல்லாம் விற்றுப் பணம் சேர்த்துக் கொள்".


தந்தை ஜோன்ஸ் தேன் வளர்க்கும் பெட்டி ஒன்றை மேரியின் பைபிளுக்காகக் கொடுத்துவிடத் தீர்மானித்தார்;.

மேரி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தாள். முட்டைகளும், தேனும் பணமாகி விரைவாக அவள் கையில் ஒரு வேதபுத்தகமாக மலரும் நன்னாளை எண்ணி எண்ணி இன்புற்றாள்.

ஆசிரியர் எல்லீஸ் ஞாயிற்றுக் கிழமைகளில் தன் பள்ளிக்கூடத்தில் பெரியவர்களையும் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஒரு ஞாயிற்றுக் கிழமை மேரியின் பெற்றோரும் அவளுடைய வகுப்பில் இருந்தார்கள். வேதத்தை நன்கு வாசிக்கக் கற்றுக்கொண்ட மேரியை 105-ஆம் சங்கீதத்தை முன்னே வந்து வாசிக்கச் சொன்னார், ஆசிரியர். மேரி நடுக்கத்துடன் முன்னே சென்று வாசித்தாள்.

“கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்”.மேரி வேல்ஸ் மொழியில் இவ்வசனத்தைத் தெளிவாக வாசித்து முடித்தபோது எல்லாரும் மேரியைக் குறித்து மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பெற்றோர்களின் பெருமிதத்திற்கு அளவேயில்லை. அந்த ஊர்ப்பணக்காரியான எவான்ஸ் அம்மாள் தான் சொந்தமாக வேதபுத்தகம் ஒன்று வாங்கின செய்தியை மேரியிடம் கூறி, "நீ எப்பொழுது வேண்டுமானாலும் என் வீட்டிற்கு வந்து என் வேத புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம்!" என்;று அழைத்தார்கள். அவளுக்கு நம்பவே முடியவில்லை. "இயேசப்பா எனக்கு எவ்வளவு நல்லவர்! எவான்ஸ் ஆண்டி வீட்டிற்குப் போனால் இப்பொழுது வேதபுத்தகம் படிக்கலாமே".

துள்ளிக் குதித்து தனது உள்ளத்தில் ஆண்டவருக்கு ஆயிரம்நன்றி கூறினாள். சனிக்கிழமை தோறும் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடிந்துவிடுவாள் மேரி. எவான்ஸ் அம்மாள் வீட்டிற்கு ஓடி வேதத்தை வாசிப்பாள். வசனங்களைத்தேடித் தேடி மனப்பாடம் செய்வாள். பெற்றோரிடம் அவற்றைச் சொல்லி மகிழ்வாள்.

ஆனால் அவள் மனத்தில் மட்டும் எப்பொழுதும் நான் என் சொந்த வேத புத்தகத்தைத் திறந்து வாசிக்கப் போகிறேன்? என்ற ஏக்கம் இருந்து வந்தது.

டின்டால் ஊரிலிருந்து பள்ளிக்கூடம் வேறு ஊருக்குப் போய்விட்டது. ஆசிரியர் எல்லீஸூம் சென்று விட்டார். இப்போது மேரிக்குள் ஒரே சந்தோஷம் எவான்ஸ் அம்மாள் வீட்டில் உள்ள வேதாகமமே! சனிக்கிழமை வந்துவிட்டால் அவளுக்கு ஒரு விருந்து சாப்பிடுவது போலவே இருக்கும்!

மேரி கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்க்கத் தொடங்கினாள். முட்டைகளும், தேனும் கொண்டு சந்தையில் விற்று வருவாள். மேரிக்கு அவள் தந்தை ஒரு மரப்பெட்டி உண்டியல் செய்து கொடுத்திருந்தார்;. அடிக்கடி அதைக் குலுக்கிப் பார்ப்பாள். அந்த சில நாணயங்கள் எழுப்பும் ஓசை மேரிக்கு வேதாகமத்தின் மேலிருந்த ஆசையை இன்னும் அதிகரிக்கச் செய்யும். "நான் இன்னும் கஷ்டப்பட்டு உழைப்பேன். விரைவில் வேதாகமம் எனக்கு சொந்தம் ஆகிவிடும்", என்பாள்.

மேரி சில நாட்கள் கழித்து வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடத் தொடங்கினாள். மற்றவர்களுக்குச் சொந்தமான வயல்களில் காலை முதல் மாலை வரை வேலை செய்து வந்து பணம் சம்பாதித்தாள். அந்நாட்களில் வயலில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம். எனவே குறைந்த கூலிக் காசு மேரியின் உண்டியலைச் சீக்கிரம் நிரப்ப முடியாது என்று கண்டவள், அதற்கு மேலாக சொந்தத் தொழில் ஒன்று தொடங்கினாள். பெண்கள் தெருவில் நடந்து செல்லும் போது கால் உறைகளைப் பின்னிக் கொண்டே செல்வதைப் பார்த்திருக்கிறாள். எனவே மேரியும் நடக்கும் போது அவளுடைய கைகளால் பின்னத் தொடங்கினாள்.

அவள் தயாரித்த கால் உறைகளை அவள் தந்தை ஜோன்ஸ் தன் துணி வியாபாரத்துக்காக செல்லும் பக்கத்துப் பட்டணங்களில் விற்று மேரிக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து வந்தார்;. உணவு, உடை மற்றும் குடும்பச் செலவுகள் பெருகிக் கொண்டே வந்தது. ஆனால் மேரிக்கு உணவு உண்ணுவதை விட, உடை உடுத்துவதைவிட, வேதத்தைச் சொந்தமாக வாங்கிவிட வேண்டும் என்ற விருப்பம் அதிகம். அவள் வாழ்வில் அதுவே மேலோங்கி நின்றது. சில வருடங்களாக அவள் புத்தாடைகள் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் உடைகள் கிழிந்தாலும் அவற்றைத் தைத்து உடுத்திக் கொண்டாள். வேதபுத்தகம்! விலையேறப் பெற்ற செல்வம்! எப்படியும் வாங்கிவிட வேண்டும்! இதுதான் அவள் நெடுநாளைய கனவு.

ஆறு வருடங்கள்! வேனிற் காலங்களிலெல்லாம் நீண்ட மணி நேரம் வயல்களில் வேலை செய்தாள். பனி மிகுந்த குளிர் காலங்களில் துணி நெசவு செய்வாள், காலுறைகள் பின்னுவாள். முட்டை, தேன் விற்பாள்.

ஒரு நாள் உண்டியலில் சேமித்த பணத்தை எண்ணிப் பார்;த்தாள். அவள் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அம்மா, கொஞ்சம்தான் குறைகிறது. எனக்கு சீக்கிரம் பைபிள் கிடைத்துவிடும். உற்சாகத்தால் கத்தினாள். தந்தையும் பணத்தை எண்ணிப் பார்த்தார். ஆம், இன்னும் கொஞ்சமிருந்தால் வேதாகமம் வாங்கிவிடலாம்.

போதகரும் சபையிலுள்ள சில விசுவாசிகளும் வேதாகமத்தின் மேல் அவளுக்கிருந்த வாஞ்சையை அறிந்து அவளுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க முன்வந்தார்கள். மேரியின் பெற்றோரும் அவளுடைய வேதாகமத்திற்குப் பணம் சேமித்துவைத்ததை அவளிடம் கூறிய போது அவள் கால்கள் நிலை கொள்ளவில்லை! ஆடினாள், பாடினாள், தாய் தந்தையரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். போதகர் வீட்டிற்கு ஓடோடிச் சென்றாள்.

ஐயா, எனக்கு வேதாகமம் வாங்கிக் கொடுங்கள். போதுமான பணம் சேர்த்து விட்டேன். வாசிக்கச் சிறந்த அந்தப் புத்தகத்தை எனக்கு விரைவில் சொந்தமாக்குங்கள். அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நின்றது.

மேரி, பாலா பட்டிணத்தைச் சேர்ந்த தாமஸ் சார்லஸ் ஐயரவர்களிடம் தான் வேதாகமங்கள் உண்டு. நீ பாலா பட்டணம் சென்று உனது நண்பர் டேவிட் எட்வர்ட்ஸை சந்தித்தால் அவர் உன்னை தாமஸ் ஐயரிடம் கூட்டிக் கொண்டு போவார்;. வேல்ஸ் மொழி வேதாகமம் கிடைப்பது அரிது. எனினும் முயற்சி செய். தேவன் உனக்கு உதவி செய்வார்;.

போதகருக்கு நன்றி கூறி புறப்படும் சமயம் மீண்டும் அவர் குரல் ஒலித்தது. மேரி 40 கிலோ மீட்டர் நீ நடந்து செல்ல முடியுமா? உன் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா? தன்னந்தனியாக காட்டு வழியில்… மேரி ஓடிக் கொண்டே பதில் கூறினாள்.

எதுவுமே எனக்குக் கடினமல்ல. எனக்கு வேதாகமம் கிடைத்தால் போதும். எப்படியும் இயேசப்பா தருவார்…

மேரி அதிகாலையில் எழுந்துவிட்டாள். அதற்கு முன்பே அவள் பெற்றோர் எழுந்து அவள் பிரயாணத்திற்காக சாப்பாடு மற்றும் ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். மேரி கர்த்தர் உன் பிரயாணத்தை வாய்க்கச் செய்வார். கர்த்தர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார். இயேசப்பா உன்னோடு நடந்து வருகிறார். போய் வா மகளே. வேதாகமத்தோடு வெற்றியாகத் திரும்பு.

தாய் வழியனுப்பினாள். தந்தை ஜெபித்து மகளை தேவனுடைய கரத்தில் ஒப்படைத்தார். கரடு முரடான பாதை. கள்ளர் பயம் நிறைந்த இடங்கள்! பதினைந்து வயது நிரம்பிய வாலிபப் பெண்! தனித்துச் செல்கிறாள்! இல்லை, கர்த்தர் அவளைச் சுமந்து செல்கிறார். குன்றுகளைக் கடந்து, பள்ளத்தாக்குகளைத் தாண்டிச் செல்கிறாள். ஓரிரு சமயங்களில் வழியறியாமல் திகைக்கிறாள். மதிய நேரம் அருகில் இருந்த சிற்றோடையில் பகல் உணவை முடித்து, ஓடையின் தண்ணீரைக் குடித்து மீண்டும்தெம்பாக வழிநடக்கிறாள்.

வேத புத்தகத்தின் மேல் கொண்ட தாகம் அவளை இழுத்துச் செல்ல வழியெல்லாம் இரட்சிப்பின் பாடல்களை நம்பிக்கையின் கீதங்களாக இசைத்து முன்னேறுகிறாள். 

வழியில் ஒரு வயதான பாட்டி, பொக்கை வாயை அசைத்துப் பேசுகிறாள்.

"எங்கே அம்மா போகிறாய்?"

"வேதபுத்தகம் வாங்க."

என்ன ஆசை, பாரு உனக்கு?

"ஆமாம் பாட்டி. நாளை வேதத்தோடு திரும்பிவிடுவேன். அப்போது சந்திக்கிறேன். இப்போது அவசரம்!"

உறுதியாக எட்டெடுத்து வைத்து நடக்கிறாள் ஏந்திழை!

பாட்டி தனது மங்கலான கண்களைக் கூர்மையாக்கி அவள் செல்லும் திசையையே நோக்குகிறாள். அவள் உருவம் மறையும் வரை நின்று நோக்குகிறாள்.

"புதையல் அருமை தெரிந்தவள் புறப்பட்டுச் செல்கிறாள்". பாட்டியின் உள்ளம் மகிழ்கிறது.

மலைகள் வளர்ந்து செல்கின்றன. கரடு முரடான பாதைகள் வளைந்து கொள்கின்றன.”உமது வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு அவர்களுக்கு இடறலில்லை”.

வசனம் நிறைவேறுவது போல் மேரியின் பயணம் முடிகிறது. பாலா வந்து விட்டது. டேவிட் எட்வர்ட் என்பவரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள். பெரியவர் அன்போடு உள்ளே அழைத்துச் சென்று உபசரிக்கிறார். காலையில் இருவரும் சென்று தாமஸ் சார்லஸ் ஐயரைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதிகாலையில் மேரி எழுந்துவிட்டாள். அவள் உள்ளத்தில் துள்ளும் மகிழ்ச்சி.

தான் இப்போது பாலா பட்டணம் வந்துவிட்டேன். வேதாகமம் கிடைக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். இன்னும் சில நிமிடங்களில் எனக்கு வேதப் புத்தகம் சொந்தம். தேனிலும் தெளிதேனிலும் மதுரமான புத்தகம். தங்கச் சுரங்கம்! திக்கற்றவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அரங்கம்.

அநேகர் தங்கள் படுக்கைகளில் கதவு கீல் முனையில் ஆடுவது போல் ஆடிக் கொண்டிருக்கும் நேரம் எட்வர்ட்ஸ் போன்ற சிலர் இந்த வேத புத்தகத்தின் மூலம் தேவனைத் தேடி அவர் சமூகத்தை நாடிக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ந்தாள்.

புறப்படலாமா! தாமஸ் ஐயரவர் என்னைவிட அதிகாலையில் எழுந்து வேதத்தை இருட்டோடே படிக்கும் பழக்கமுடையவர்.

வெளியே நடந்து சென்றார்கள். சிறிது தூரத்தில் தாமஸ் ஐயரவருடைய வீடு இருப்பதையும் அவர் அறையில் விளக்கொளி தெரிவதையும் மேரிக்குச் சுட்டிக் காண்பித்தார்.

மேரியின் உள்ளம் பதைபதைத்தது. காரணம் எட்வர்ட்ஸ் சந்தேகத்தைக் கிளப்பினார். ஜெபித்துக் கொள், வேதாகமம் அவரிடம் இருக்க வேண்டும்! ஒரு சில வேல்ஸ் வேத புத்தகங்களே வருகிறது. வந்தவுடன் விற்றுப் போகிறது.

கதவைத் தட்டின போது தாமஸ் வெளியே வந்தார்;. மேரியின் உள்ளம் வேகமாக அடித்துக் கொண்டது.

வேதாகமம் உண்டா? அது தனக்குக் கிடைக்குமா? வீட்டுக்குள் அவர்களை அழைத்துச் சென்று பேசினார்.

"ஒரே ஒரு வேல்ஸ் வேதாகமம் உண்டு. அது ஒரு நண்பருக்காக வைத்திருக்கிறேன். வேறு ஒன்றும் தற்போது கைவசம் இல்லை".

மேரியின் உள்ளம் உடைந்தது! கண்களில் கண்ணீர் வெள்ளம்! அவள் அடைத்து வைத்த கதறல் அழுகையாக மாறிற்று!

"மேரி 25 மைல்கள் நடந்து வந்திருக்கிறாயா? என்ன செய்வது அம்மா!

"ஐயா எப்படியாவது கொடுங்கள்".

"வேதாகமத்தின் விலை அதிகமாயிற்றே?"

"ஆறு வருடங்கள் உழைத்து நான் சேர்த்த பணம் இதோ இருக்கிறது ஐயா! எனக்கு வேதத்தைக் கொடுங்கள்". – தேம்பிக் கொண்டே பணப் பையை நீட்டினாள். "ஆமாம், சிறு பெண்ணாயிருக்கிறாயே, உனக்குப் படிக்கத் தெரியுமா?"

"உங்கள் மூன்று மாத வேதப் பள்ளியில்தான் நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். ஐயா, அதிக காலம் என் ஆண்டவருடைய புத்தகத்திற்காக காத்திருந்து விட்டேன். தாமதம் வேண்டாம். தயவு செய்து இல்லையென்று சொல்லாதிருங்கள்".

தாமஸ் ஐயர் உள்ளம் உருகிற்று. மனம் இளகிப் பேசினார். "என்னுடைய நண்பருக்கு ஆங்கில வேதாகமம் கொடுத்துவிடுகிறேன். மேரி, இதோ வேல்ஸ் வேதாகமம். எடுத்துக் கொள்".

மேரி ஸ்தம்பித்து மரம் போல நின்றாள். அவளால் தன் கண்களை நம்ப முடியவில்லை. இது அற்புதமான புத்தகம். கவனமாய் வாசிக்க வேண்டும். ஜெபித்துக் கொண்டே வாசிக்க வேண்டும். வாசிப்பதை தியானிக்க வேண்டும். கீழ்ப்படிய வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். பகிர்ந்தளிக்க வேண்டும். இதைப் படிக்கும் போது தேவனே அதை உனக்கு உணர்த்துவார். சென்றுவா மகளே. தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.

மேரி வேத புத்தகத்தை வாங்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். தேவன் என் ஜெபத்தை எனக்குக் கேட்டு அருளிய புத்தகம் இது.

எட்வர்ட்ஸ் வீட்டில் அவசரமாகக் காலை உணவை முடித்து அவருக்கு நன்றி கூறி புறப்பட்டாள்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேரிக்காக கவலையோடு காத்திருந்த பெற்றோர்கள் முகம் மலர்ந்தது. கவலை தீர்க்கும் பெட்டகத்தோடு வீடு வந்து சேர்ந்தாள் மேரி!

எல்லாருக்கும் தனது அரும்பெரும் பொக்கிஷத்தைக் காண்பித்து மகிழ்ந்தாள். 

மேரியோ தன் தேவனிடம் ஒரேயொரு விண்ணப்பத்தை ஏறெடுத்தாள். "என் ஆண்டவரே! இந்தப் புத்தகம் வேல்ஸ் தேசத்தில் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்கக் கிருபை செய்யும்".

மேரியைப் போன்றவர்களின் ஜெபம் தேவ சமூகத்தில் எட்டியது. 1799-ம் ஆண்டு 10,000 வேத புத்தகங்களும் 2000 புதிய ஏற்பாடுகளும் வேல்ஸ் மொழியில் தயாராயிற்று.

1804 – ம் ஆண்டு மார்ச் 7-ம் நாள் லண்டன் மாநகரின் விடுதி ஒன்றில் 300 பேர் கூடி வேதம் அனைவருக்கும் கிடைக்க ஜெபித்தனர். அன்று 70 மொழிகளில் மட்டும் வேதம் மொழிபெயர்க்கப்பட்டது. இன்று 1763 மொழிகளில் வேதம் மொழி பெயர்ப்பாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 36 மொழிகளில் முழு வேதாகமும், 30 மொழிகளில் புதிய ஏற்பாடும், 77 மொழிகளில் வேதத்தின் ஒரு சில பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

மேரியைப் போன்ற வேதத்தை நேசிக்கின்ற கிறிஸ்தவர்களின் இன்றைய திருச்சபையின் பிரதான தேவை.


Many of us today have a Bible in our hands. There are many people who read and adore it. We’re blessed to have one in our hands and must be thankful for that. The situation was different in the past. Very few were educated. A lot of money was needed to print the Bible. There were no schools. People's standard of living and education did not make them wealthy. They did not have enough time to find three meals a day. They were engaged in hard work day and night. This condition was prevalent till the end of the 18th century. 

In 1704, Mary Jones was born in a poor family in a small town called Tyndall. Though she was born poor, soon she was growing into an ideal woman in Christ. Her father was a weaver and her mother also had to join him to work everyday to support the family. So the responsibility of the household and garden belonged to Mary.

Mary was a symbol of labor. Her hand spins like a top as she worked her way cheerfully. She was also a girl of great character. Mary grew up as a good child of God. Her father Jones and mother Mali brought her up in the fear of the Lord. It was a time when there were no Bibles in homes. Poor Mary did not have access to the Bible because even wealthy families could not afford it. Every day after their hard work they went to church in the evening. The three enjoyed reciting the scriptures taught by the pastor in the church often at home. Whenever they pray, they pray using scriptures. One day Mary got some sweet news. She immediately ran to find her friend Patri. 

Patri! A school is coming to our town!" 

“Who said Mary, don't lie." 

“No! Mom and Dad wouldn’t lie!" 

In no time Mary's face went sad. There was a longing in the mind to attend school. If you learn to write, you could read the Bible. But in those days there were only a handful of Bibles in all of Wales!

Those three weeks appeared to Mary as three months. The eagerly awaited school had opened. She finished all her work early and dressed in nice clothes to do to school. She was overjoyed when she met Patri on the way. Even the adults in her village did not know how to read. Her parents were not educated. God made that gift available to Mary! 

That school is was short term school which closes when winter is over. Out of concern for the poor Christians, a priest named Thomas from a village 25 miles away sent a teacher. Mary and Patri walked 2 miles and went to that distant church to learn their lessons. The teacher Ellis taught the students daily and within weeks Mary had learned the words. Now she could even read sentences! That big book called the Bible was placed on a table. How delighted Mary was when Ellis called on Mary in class one day to open the Bible and read.

‘I'm going to read God's words'.

Mary memorized the verses she read and felt they were useful for life. She often wondered how nice it would be to have a Bible of her own. Every time she returned home, this thought haunted her. One day, her parents saw Mary's face and thought, 

“Has something happened to Mary at school? Was she not coping well at school?”

“My only worry is that I don't have a Bible of my own. Will I ever be able to afford it? Aren’t we very poor to own one!” 

“ Mary, it is true that you need a lot of money to buy the expensive book. But the Lord will fulfill your heart’s desire. Don't worry. I will give you two chickens. Sell all the eggs and save the money you make from it".

Father Jones decided to give Mary a honey-harvesting box to save for her bible. Mary was overwhelmed with joy. Eggs and honey turned into money and quickly blossomed into a scripture in her hand and she enjoyed reading it. Teacher Ellis used to include adults in his school on Sundays. Mary's parents were also in her class one Sunday. Mary, who had learned to read the scriptures well, was asked by the teacher to come forward and recite Psalm 105. Mary nervously went ahead and read.

"Give praise to the Lord, proclaim his name;
make known among the nations what he has done.” she proudly read in Welsh and everyone was happy for Mary. There was no measure to how proud her parents' were. A wealthy lady in their village named Evan’s offered to share her Bible with Nary and said, "Anytime you want to read the Bible, you can come over to my place and read it!" She couldn't believe it. "How good Jesus is to me!” she proclaimed. She thanked madam Evans for sharing the Bible with her. Every Saturday Mary will finish the work soon and would run to Evans’ home and read the scriptures. She would search for verses and memorize them. She enjoyed telling them to her parents. But only in her mind she always longed to read her own copy of the Bible.

The school moved out of Tyndall town to another town. Teacher Ellis had also left. Now the only joy in Mary’s life was the Bible in Evans' mother's house! It's like having a party for her when Saturday comes around! Mary worked hard and started saving money. She sold eggs and honey in the market. Mary was gifted a wooden money box by her father. She shook it often and the sound made by those few coins would further increase Mary's desire to own her Bible. "I will work harder. Soon the scriptures will be mine," she would say. Mary started growing vegetables in the home garden after a few days. She earned money by working from morning to evening in other’s fields. In those days the wages of those who worked in the fields were very low. So finding that the low wages could not fulfil Mary's needs quickly enough, she started her own business on top of that. She had seen women knitting leg covers while walking down the street. So Mary began knitting with her hands as she walked.

Her father used to sell the foot coverings she made in the neighboring towns where he went for his cloth business and gave the money to Mary. Food, clothing and family expenses kept mounting. But Mary was more interested in buying her own Bible than eating, or wearing clothes. That desire dominated her life. She hadn’t bought any new clothes in years. Even though her clothes were torn, she sewed and dressed in them. The Bible! Expensive wealth! Must get myself one anyway! 

That was all she wanted for six years! She worked in the fields for long hours during autumn. In snowy winters, she weaved cloth socks and sold eggs and honey. One fine day she counted the money she had saved in her bank account. She was beyond happy. “Mom, it's a little less. I will get the Bible soon.” She screamed with excitement. Father also counted the money and said, “Yes, if you have a little more, you can buy the Bible.

The pastor and some of the believers in the congregation learned of her desire for scriptures and offered to give her some money. When Mary's parents told her that they had saved money for her Bible, she couldn't stand her feet! She danced, sang, hugged and kissed her parents. She ran to the preacher's house. Sir, buy me the Bible. I have saved enough money. Help me own that wonderful book soon. There were happy tears in her eyes. Thomas Charles of Bala city said, “If you go to Balatown and meet your friend David Edwards, he will take you to Thomas, who will help you get one. Welsh language Bibles are rare. Try it though. God will help you. His voice rang out again as she thanked the pastor and left. “Mary, could you walk 40 kilometers? Will your parents agree? Through a jungle on your own? 

Mary answered as she ran.

Nothing is difficult for me. If I can get the Bible, that's enough. Jesus will make a way for it. Mary got up early in the morning. Before that her parents were up and had prepared food and preparations for her journey. May the Lord make your journey successful. The Lord will command his angels to guard you in all your ways. Jesus is walking with you. Come on daughter. Come back victorious with the Bible. Mother sent her way. The father prayed and entrusted his daughter to God. Rough road. Places full of thieves! Fifteen-year-old teenage girl venturing alone! The Lord carried her. She crossed the hills and the valleys. A couple of times she got confused. At midday she finished her lunch at a nearby stream, drank the water from the stream and walked back. All the way her thirst for the scriptures pulled her forward,and she progressed singing songs of salvation as hymns of hope. On the way there was an old grandmother who asks her, "Where are you going little girl? “

"To buy a Bible." 

“ What is this desire that you have?”

“ Yes, Grandma. I will return tomorrow with the Bible and I will meet you then. I’m in a hurry now!"

With firm steps, she went on her way.

 The old lady sharpened her blurry vision and looked in her direction. She stands and watched until the she disappeared and rejoiced for the fact that the little girl knew the 

beauty of the treasure she runs after. 

The mountains were enormous and the roads were rough and rugged. “But those who love your scriptures will not stumble."

Mary's journey ended just as the verse was fulfilled and she had arrived at Bala. She knocked on David Edward’s door where she’s welcomed and treated. They had both decided to visit Thomas Charles in the morning. 

Mary woke up early in the morning and her heart leapt with joy.

When she finally arrived in Bala town, she was glad she had come to the place where the scriptures were. She would own her very own Bible in a few minutes - A book sweeter than the sweetest honey, a gold mine! It comforts those who are lost.

She was glad to know someone like Edwards who sought God through the Bible. 

Let's go! Thomas used to wake up earlier in the morning and read the scriptures in the dark, even earlier than she did. 

They walked out. He pointed out to Mary that Thomas’s house was a short distance away and that he could see the light in the room. Mary's heart sank. Because Edwards raised suspicions of the Bible would be available. He asked her to pray that he would have the Bible! Only a few Welsh Bibles were available and sold very soon. 

Thomas came out when there was a knock on the door. Mary's heart started to beat faster.

Is there a Bible? Will she get one? He took them inside the house and talked to them. 

“I have only one Welsh Bible. I have saved it for a friend. I have nothing else at present". Mary was heartbroken and there were tears in the eyes! 

Her pent-up screams turned into cries. 

“Have you walked 25 miles just for this?”

“Sir, please give it somehow". 

“It is too expensive now!”

“Sir, here is the money I have earned after six years of hard work! Please give me the Bible". Sighing, she held out her money bag. 

“Yes, you little girl, but can you read?" 

“I learned to read and write in your three month Bible school. Sir, I have been waiting for my Lord's scripture for too long and don’t want any more delays. Please don't say no". Thomas was heartbroken and spoke kindly.

“I will give my friend an English Bible. Mary, here is the Welsh Bible. Take it."

Mary stopped and stood shocked. She couldn't believe her eyes. “This is a wonderful book. Read it carefully. It should be read prayerfully and be meditated upon. You must obey and must adhere to it. It should be preached. God will make you realize it while reading this. Go and may God bless you. 

Mary took the scripture and hugged it close. This is the book that God answered my prayer and blessed me with. 

She hastily finished breakfast at Edwards house and thanked him and left. 

Everyone was awaiting her return. Her parents who were anxiously waiting for Mary, lit up on seeing her. Mary came home with a box that could take away all her worries! 

She enjoyed showing everyone her new treasure. Mary made only one request to her God. "My Lord! This book should grace every house in Wales". The prayers of those like Mary reached the community of God. By 1799, 10,000 Bibles and 2,000 New Testaments were produced in Welsh.

On March 7, 1804, 300 people gathered in an inn in the City of London and prayed for the Bible to be available to all. At that time the Bible was translated into only 70 languages. Today the Bible has been translated into 1763 languages. In India alone, the entire Bible has been translated into 36 languages, the New Testament into 30 languages, and parts of the Bible into 77 languages. 

The Church today needs more scripture-loving Christians like Mary.

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!