இசபெல்லா வயட் (பேராயர் கால்டுவெல்லின் மகள்) Isabella Wyatt (daughter of Archbishop Caldwell) (Tamil & English)


இடையன்குடியில் பணியாற்றி வந்த பேராயர் கால்டுவெல் - எலைசா மால்ட் தம்பதியினருக்கு தேவன் ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளுமாக ஏழு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார். ஏழு பிள்ளைகளும் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைய தேவன் உதவி செய்தார். பெற்றோர் பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் உறுதுணையாய் இருந்தார்கள். அதனால் பிள்ளைகள் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவும், தங்களை சுற்றி வாழ்ந்த மக்களின் ஏழ்மையையும் அவர்கள் மத்தியில் காணப்பட்ட தேவையையும் நன்கு அறிந்து கொள்ள உதவியது. ஏழு பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் செய்த ஊழியத்திற்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இவர்களின் பெண் குழந்தைகளில் மூத்த பிள்ளையாக பிறந்த இசபெல்லாவைப் பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்க உள்ளோம். இவர் கால்டுவெல் தம்பதியினரின் இரண்டாவது பிள்ளை.

1848 - ஆம் ஆண்டு இசபெல்லா இடையன்குடியில் பிறந்தார்.பத்து வயதாய் இருக்கும்போது, கால்டுவெல் ஐயர் குடும்பமாக ஒரு முறை இங்கிலாந்திற்கு சென்றனர். அச்சமயம் இங்கிலாந்தில் மாபெரும் ஆன்மீக எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் குடும்பமாக கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கியதில் இசபெல்லா தன் பெற்றோரை விட்டு வழிதவறி சென்று விட்டார். இச்செய்தி கூட்டத்தினருக்குள் காட்டுத் தீ போல் பரவியது. இசபெல்லாவை தொண்டர் படையினரும், காவல் துறையினரும் தேட ஆரம்பித்தனர். சிறுமியை எங்கும் காணவில்லை. 

வழி தெரியாமல் ஓரிடத்தில் நின்றிருந்த சிறுமியை காவல் துறையினர் அழைத்து, "நீ யாரம்மா? உன் பெயர் என்ன? ஊர் என்ன? என்று விசாரித்தனர். அச்சிறுமியோ, "என் ஊர் இடையன்குடி" என்றார். அந்நாட்டு மக்களுக்கு அப்படியொரு ஊரைப் பற்றி தெரியவில்லை. சிறிது நேரத்தில் பெருங்கூட்டம் கூடிற்று. மறுபடியும் ஒரு காவலர் சிறுமியை அணுகி, அவர் பெற்றோரைப் பற்றி விசாரித்தார். கடைசியாக, ஒரு வழியாக சிறுமி தன் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டார். பின்பு இடையன்குடி என்ற ஊர் இந்தியாவில் இருப்பதாக கால்டுவெல் ஐயர் கூற, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதன் மூலம் இசபெல்லா இடையன்குடியை எவ்வளவாக நேசித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

முதல் கிறிஸ்மஸ் மரவிழா:

ஒவ்வொரு ஆண்டும் இடையன்குடியில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். கிறிஸ்து பிறப்பின் நிகழ்வை மக்கள் உண்மையான மனதுடன் அனுபவித்துக் கொண்டாடினார்கள். குறிப்பாக, 1864 - ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இசபெல்லா முதன் முதலாக கிறிஸ்துமஸ் மரவிழா நிகழ்ச்சியை நடத்தினார்கள். மக்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தென்னிந்தியாவின் முதல் கிறிஸ்மஸ் மரவிழாவாகவும், திருநெல்வேலி பேராயத்தின் முதல் கிறிஸ்மஸ் மரவிழாவாகவும் இன்றளவும் நினைவு கூறப்பட்டு வருகிறது. 

போர்டிங் பள்ளியில் இசபெல்லாவின் பங்கு :

     இசபெல்லா தன் தாயார் நடத்தி வந்த இடையன்குடி பெண்கள் போர்டிங் பள்ளிக்கு மிகவும் உதவியாக இருந்தார். 1856 - 62 வரையிலான தனது படிப்பை இங்கிலாந்தில் தூய. மேரி ஹாலில் முடித்து, 1863 - இல் மறுபடியும் இடையன்குடி வந்த முதல் நாளிலிருந்து போர்டிங் பள்ளியை சிறந்த முறையில் கவனித்து வந்தார். போர்டிங் பள்ளியை நடத்த தன் தாயார் பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்படுவதை பார்த்தார். இசபெல்லாவும், அவர் சகோதரி மார்த்தா லூயிஸாவும் இங்கிலாந்தில் உள்ள தங்கள் தோழிகளுக்கு கடிதம் எழுதினார்கள். போர்டிங் பிள்ளைகள் கிறிஸ்தவ விசுவாசத்திலும், அன்பிலும் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் பொருளாதாரத் தேவைகளைப் பற்றியும் அதில் குறிப்பிட்டு இருந்தார்கள். இதன் பயனாக லண்டனில் உள்ள பென்ஸஸ் என்ற குருவானவர் 100 பவுன்ஸ் (அன்றைய மதிப்பு 1060 ரூபாய்) அனுப்பினார். அதன் மூலம் போர்டிங் பள்ளியை நடத்துவதற்கான தேவைகள் சந்திக்கப்பட்டது. இவ்வாறு பிள்ளைகளும் இடையன்குடிக்காகவே வாழ்ந்தார்கள். 

திருமணம் மற்றும் ஊழியம்:

      இசபெல்லா கால்டுவெல்லுக்கும், நாகர்கோவிலில் தேவ பணியை செய்து வந்த வயட் ஐயருக்கும் தேவ சித்தத்தின் படி 1868 - ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் திருச்சிராப்பள்ளியிலுள்ள புத்தூர் பகுதியில் மிஷனெரிப் பணியை துவங்கினார்கள். இசபெல்லா, தன் முதல் பணியாக பெண்கள் பள்ளியொன்றை ஆரம்பித்தார்கள். 1880 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 - ஆம் தேதி பெண்களுக்கான முதல் பள்ளி திருச்சி புத்தூரில்  ஆரம்பிக்கப்பட்டது. 1880 - க்கு முன் மூடப்பட்டுக் கிடந்த சகல பரிசுத்தவான்கள் பெண்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளியையும், போர்டிங் பள்ளியையும் மறுபடியும் திறந்து வைத்து நடத்த ஆரம்பித்தார்கள். முதன்முதலில் ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு 15 பெண் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பின்பு 36 மாணவிகளாக உயர்ந்தது. ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக திருநெல்வேலியிலிருந்து தன்னார்வமாக பணிபுரிய விருப்பமுள்ளவர்களை வரவழைத்து,  அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, ஆசிரியர்களாக நியமித்தார். 

சில ஆண்டுகளில் ஆண்கள் போர்டிங் பள்ளியையும் துவக்கினார். தற்போது இந்த பள்ளிக்கூடம் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 -  ஆம் நாள் சகல பரிசுத்தவான்களின் திருநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே போல் 1891 - ஆம் ஆண்டு நவம்பர் 1 - ஆம் நாள் அன்றும், திருச்சி புத்தூர் சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்திற்கு இசபெல்லா வயட் அம்மாள் அஸ்திபாரமிட்டார். அஸ்திபாரம்  இடும் ஆராதனையை வயட் ஐயர் நடத்தினார். கால்டுவெல் ஐயரின் மாதிரிகளைப் பின்பற்றி வயட் ஐயர்  ஊழியம் செய்தார். இவ்வாலயத்தை கட்டி முடிக்க பல்வேறு நபர்களிடமிருந்து பணம் சேகரித்து, சுமார் நான்கு ஆண்டுகளில் கட்டி முடித்தார். 1895 - இல் ஜெல் அத்தியட்சர் ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார். 

தாயைப்போல் பிள்ளை...

தன் தாயைப் போலவே இசபெல்லா அம்மையாரும் கல்வி, சுவிசேஷ ஊழியம் மற்றும் மருத்துவ ஊழியம் போன்றவற்றை செய்து வந்தார். வியாதியுள்ள ஏழைகளுக்கு தன் தாய் எப்படி உதவினார்களோ, அதேபோல் இசபெல்லா வயட் அம்மையாரும் மருந்தளித்து உதவி செய்தார்கள். இசபெல்லா வயட் அம்மையாரை "இறைநலம் பெற்ற திருமகள்" என்றும், "மருத்துவர் கையால் குணமாகாத நோய்களும் இசபெல்லா வயட் அம்மையார் கைபட்டால் தீர்ந்து ஒழியும்" என்றும் பலர் பாராட்டினர். 

சில சாட்சிகள்:

      இசபெல்லா அம்மையார் மூலம் தேவன் எண்ணற்ற அற்புதத்தை புத்தூர் மக்கள் வாழ்வில் செய்தார். புத்தூர் போர்டிங் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தார். ஆனால் அப்பெண்ணிற்காக இசபெல்லா அம்மையார் இடைவிடாது ஜெபித்து, அவரை உற்சாகப்படுத்தி வந்தார். என்ன ஆச்சரியம், மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும், தேவன் அப்பெண்ணை ஆசீர்வதித்து ஆண் பிள்ளையை கொடுத்தார். 

மற்றொரு பெண் - அவளுக்கும் திருமணம் முடிந்து 17 ஆண்டுகளான நிலையில், குழந்தை இல்லாமல் மன வருத்தத்துடன் தன் குறைகளை இசபெல்லாவிடம் கூறினாள். அம்மையார் அப்பெண்ணிடம், தனக்கு குறைதீர்க்கும் வரம்  இல்லை என்று  கூற, அப்பெண்ணோ அவ்விடம் விட்டு நகராமல் அழுதபடி இருந்தாள். மிகவும் மனம் வருந்திய இசபெல்லா வயட் அம்மையார்,  அப்பெண்ணிற்கு சத்து மாத்திரைகளையும், சத்தான உணவையும் ஜெபித்து வழங்கினார். தேவ தயவினால் அப்பெண் சரீரத்தில் நல்ல ஊட்டச்சத்தை பெற்றதோடு, மலடு நீங்கி குழந்தை பாக்கியத்தையும் பெற்றாள். இசபெல்லா வயட் அம்மாள் ஆசீர்வாதத்தினாலே மலடு நீங்கி மகப்பேறு கிடைத்தது என்று ஊர் அறிய அனைவரிடமும் கூறினாள். மக்கள் அம்மையாரை ஒரு தெய்வத்தாய் என போற்றினார்கள். இசபெல்லா அம்மையாரோ, "தன்னிடம் தெய்வீகத் தன்மை இல்லை; மாறாக தேவனாலேயே ஆயிற்று" என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்கள். 

தன் தாய் எலைசா கால்டுவெல் அம்மையார் இடையன்குடி மக்களுக்காக எப்படி பாடுபட்டாரோ, அதேபோல மகள் இசபெல்லா வயட் அம்மையாரும் திருச்சி - புத்தூர் மக்களுக்காக அரும்பாடுபட்டார். தேவன் வயட் - இசபெல்லா தம்பதியினருக்கு ஆறு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார். அன்றைய நாட்களில் திருச்சி மாநகரம் ரோம கத்தோலிக்கர்களால் நிறைந்து காணப்பட்டது. தேவன் இத்தம்பதிகளை வல்லமையாக பயன்படுத்தினார். சுவிசேஷத்திற்கு திறந்த வாசலைத் தந்தார். 3000 கிராமங்களைக் கொண்ட இம்மாவட்டத்திலிருந்து சுமார் 32 கிறிஸ்தவர்களே ஆலய ஆராதனையில் பங்கெடுத்து வந்த நிலை மாற ஆரம்பித்தது. வயட் ஐயர், ஜான் ஷராக் போன்ற தேவ மனிதர்கள் இணைந்து சுமார் 600 கிராமங்களை சந்தித்து, 4000 மக்களுக்கு மருத்துவ உதவியையும், 8000 மக்களுக்கு சுவிசேஷத்தையும் கூறினார்கள். விதைத்ததின் பலனை கண்ணார காண ஆரம்பித்தனர். இதில் இசபெல்லா வையட் அம்மையாரின் பங்கு இன்றியமையாதது. சுமார் 25 ஆண்டுகள் மிஷன் பள்ளி மற்றும் பிள்ளைகள் மத்தியில் தன்னுடைய ஊழியத்தை செய்து முடித்து விட்டு, 1933 - ஆம் ஆண்டு தன் உலக ஓட்டத்தை  முடித்து மறுமைக்குள் பிரவேசித்தார். 

தங்கள் சொந்தம், சொத்து, சுகம் என அனைத்தையும் துறந்து இந்தியர்களுக்காக சேவை செய்ய முன் வந்தது எத்தனை பெரிய தியாகம். இன்றும் இவர்களை சரித்திரம் சாட்சியிடுகிறது. நாம் எதை? யாருக்காக? தியாகம் செய்துள்ளோம் என சிந்தித்துப் பார்ப்போம். எதையாவது சாக்கு சொல்லாமல் கிறிஸ்துவுக்காக நம்மால் முடிந்ததை அல்ல; தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதை செய்ய முயற்சி எடுப்போம்.

God blessed the Archbishop Caldwell-Eliza couple, who were working in Idiangudi, with seven children: four sons and three daughters. God helped all seven children grow in wisdom, education, God's grace, and human kindness. Parents were very supportive of their children's spiritual lives. It helped the children grow in the knowledge of Christ and to know well the poverty of the people who lived around them and the need found among them. All seven children were very helpful in their parents' ministry. In this article, we are going to look at Isabella, who was born as the eldest of their daughters. She was the Caldwell couple's second child.

 In 1848, Isabella was born in Midtown. When she was ten years old, the Caldwell Eyre family travelled to England. At that time, a great spiritual awakening conference was held in England. They participated as a family. Caught in a crowd, Isabella got lost from her parents. The news spread like wildfire among the crowd. Volunteers and police began searching for Isabella. The girl was nowhere to be found. The police department called the girl, who was standing somewhere without knowing the way, and asked, "Who are you? What is your name? What is your town?" The people of that country do not know about such a town. Soon, a large crowd gathered. Again, a policeman approached the girl and inquired about her parents. Finally, somehow, the girl was reunited with her parents. Then Caldwell Eyre said that there is a town called Uthangudi in India, and everyone was surprised. Through this, we can understand how much Isabella loved Idaiyangudi.

The First Christmas Tree Festival: Every year, Christmas is celebrated very well in Uthangudi. People truly enjoyed and celebrated the birth of Christ. In particular, the Christmas festival of 1864 was celebrated with great fanfare. Isabella hosted the first Christmas tree party. There was no limit to the happiness of the people. It is still remembered as the first Christmas Tree Festival in South India and the first Christmas Tree Festival of the Tirunelveli Archdiocese.

 Isabella's Role in Boarding School: Isabella was very helpful at the Idiankudi Girls Boarding School run by her mother. Pursued his studies in England from 1856–62. After finishing at Mary Hall, she took excellent care of the boarding school from the first day of her re-entry in 1863. She saw his mother struggling financially to run a boarding school. Isabella and her sister Martha Louisa wrote letters to their friends in England. It mentioned how boarding children were brought up in Christian faith and love, as well as their economic needs. As a reward, a priest named Pence in London sent 100 pounds (Rs. 1060 at that time). It met the requirements of running a boarding school. Thus, the children also lived in the middle class.

 Marriage and Ministry: Isabella Caldwell and Wyatt Iyer, who was doing divine work in Nagercoil, got married in 1868 according to divine will. After marriage, both of them started missionary work in the Puttur area of Tiruchirappalli. Isabella started a girls' school as her first mission. On January 6, 1880, the first school for girls was started in Puttur, Trichy. All Saints' Girls Teacher Training School and Boarding School, which had been closed before 1880, were reopened. First, 15 girls were admitted to the teacher training school. Later, it increased to 36 students. Due to a shortage of teachers, he recruited volunteers from Tirunelveli, trained them, and appointed them as teachers.

 Within a few years, he also started a boarding school for boys. Now this school has grown into Puttur Bishop Heber High School. All Saints' Day is observed on November 1 every year. Also on November 1, 1891, Isabella Wyatt Ammal laid the foundation stone for All Saints Church, Puttur, Trichy. Wyatt Ayer conducted the groundbreaking ceremony. Wyatt Ayer followed the model of Caldwell Ayer. He collected money from various people to build this temple and completed it in about four years. 1895: Jell Athiyatsar consecrated the temple.

Mother like child: Like her Ammayair,Isabella was involved in education, evangelism, and medical work. Just as her mother helped the sick and poor, so did Isabella Wyatt's mother by giving medicine. Many praised Isabella Wyatt as "a blessed lady" and said that "diseases that could not be cured by the hand of a physician would be cured by the hand of Isabella Wyatt."

 Some Witnesses: Through Isabella, God performed countless miracles in the lives of the people of Puttur. A woman who was working as a teacher at Puttur Boarding School was in a position where she had no chance of giving birth. But Ammyari Isabella continued to pray for her and encourage her. What a surprise! Even when the doctors gave up, God blessed the woman and gave her a son. Another woman—she too had been married for 17 years and was childless—lamented her grievances to Isabella. Ammaiyar told the woman that she did not have the gift to solve the problem, but the woman did not move from there and cried. Ammyari Isabella Wyatt, deeply moved, prayed and offered the girl nutritional pills and nutritious food. By the grace of God, the woman got good nutrition in her body and was blessed with a child without barrenness. Isabella Wyatt told everyone in the town that she was barren and had a child because of her mother's blessing. People worshipped Isabella Ammaiyar as a goddess. Isabella glorified God by saying, "She had no divine nature but was made by God."

 Just as her mother, Eliza Caldwell, worked for the people of Idyankudi, her daughter, Isabella Wyatt, also worked hard for the people of Trichy-Pudtur. God blessed the Wyatt-Isabella couple with six children. In those days, the city of Trichy was full of Roman Catholics. God used this couple powerfully. He opened the door to evangelism. In this district of 3000 villages, only about 32 Christians were participating in temple worship, and the situation started to change. Men of God like Wyatt Iyer and John Sharrock together visited about 600 villages, gave medical help to 4000 people, and evangelised 8000 people. They began to see the fruits of their sowing. Isabella Wyatt's role in this is essential. After about 25 years of mission school and ministry among children, he completed his world tour in 1933 and entered the afterlife.

 What a great sacrifice they made to serve the Indians by renouncing all their belongings, property, and happiness. History bears witness to them even today. What are we? For whom? Let us think that we have made a sacrifice. Not what we can do for Christ without making excuses for something; let us try to do what God expects of us.

Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!