பண்டிதர் ராமாபாய், Pandit Ramabai (Tamil & English)



வைதீக இந்துவான ஆனந்த் சாஸ்திரி தான தர்ம செயல்கள் செய்வதை தமது கடமையாக எண்ணி ஏராளமாக செலவு செய்து வந்தார். நாளடைவில் தனது சொத்தை முழுவதுமாக இழந்துவிட்டார். இருந்தாலும் பக்தி நிறைந்த அவர், புண்ணிய ஸ்தலங்கள் தோறும் சென்று நீராடியும், கோயில்களுக்கு சென்று தெய்வங்களை தரிசித்தும் தன் நேரங்களை செலவு செய்து வந்தார். சமஸ்கிருதம் கற்றறிந்த இவர், வேத நூல்களை மற்றவர்களுக்கு போதித்தும் வந்தார். 

அந்நாட்களில் தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று.அப்பொழுது அவர்கள் வசித்த சென்னை பட்டணமும் அதிக பாதிப்புக்கு உள்ளானது. எங்கு பார்த்தாலும் மக்கள் பசியோடு இருப்பதை காண முடிந்தது. ஆனந்த் சாஸ்திரியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகாரத்திற்காக அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர். அவர்களுடைய மத கட்டுப்பாட்டின்படி இழிவான யாதொரு வேலையையும் அவர்கள் செய்யக்கூடாது. தாழ்ந்த வேலைகளை செய்யக்கூடாதபடி பெருமை உள்ளவர்களாய் இருந்தார்கள். ஏனென்றால், உலகப் பிரகாரமான கல்வியை பெற்றிருப்பதால் எவ்வகையிலும் சம்பாதித்திருப்பார்கள். ஆகவே மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களின் கருத்து. எனவே ஆனந்த் சாஸ்திரியின் குடும்பம் மூன்று ஆண்டுகளாக உபவாசித்து தெய்வங்களின் நாமங்களை திரும்பத் திரும்ப உச்சரித்தும் யாதும் பயனில்லை. தெய்வங்கள் துணை செய்யவும் முன்வரவில்லை. கோயில் கோயிலாக நடந்து சென்றனர். இனி தாங்கள் பிரயாணம் செய்ய முடியாத நிலையை எட்டிய போது, அருகில் உள்ள ஒரு கோவிலில் அடைக்கலம் புகுந்தனர். அந்தோ பரிதாபம்! அக்கோவிலில் இருந்தும் துரத்தப்பட்டனர். தற்கொலை தான் முடிவு என யோசித்துக் கொண்டிருந்தனர். ஒரு சில மாதங்களுக்குள் ஆனந்த் சாஸ்திரியும் அவர் மனைவியும் பசியால் மரித்து விட்டனர். பிள்ளைகளும் ஒவ்வொருவராய் மரிக்கத் தொடங்கினர். தேவனுடைய அளவற்ற கிருபை அக்குடும்பத்தின் மீது இருந்ததால் ராமாபாய் மற்றும் அவளது சகோதரனும் காப்பாற்றப்பட்டார். 

ஒரு நாள் இருவரும் தங்களை மாய்த்துக்கொள்ள எண்ணி, ஆற்று மண்ணினால் கழுத்து வரை தங்களையே மூடிக் கொண்டனர். இந்த முறையும் கர்த்தருடைய தயவும் கிருபையும் அவர்கள் உயிரை காப்பாற்றியது. 1858ஆம் ஆண்டு 23ஆம் தேதி சென்னை பட்டணத்தில் பிறந்த ராமாபாய், சிறுவயதிலேயே அதிக துன்பத்திற்கு ஆளானார். பக்தியில் குடும்பம் சிறந்து விளங்கினாலும், அத் தெய்வத்தால் அவருக்கு கிடைக்க வேண்டிய அன்பும், சமாதானமும் கிடைக்கவில்லை. 

1878ல் தன் சகோதரனுடன் அடைக்கலம் தேடி கல்கத்தா பட்டணம் சென்றடைந்தார். அங்கு ஒரு சில விசுவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர்கள் நடத்திய ஆராதனை முறைகளும், ஊழியங்களும், ராமாபாயை வெகுவாய் கவர்ந்தது. பின்னர் கல்கத்தாவில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகளோடும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. சொற்பொழிவு ஆற்றும் ஆற்றலை பெற்ற ராமாபாயின் பேச்சு அநேக பண்டிதர்களை கவர்ந்தது. அவர் அறிவை பாராட்டி அவருக்கு "பண்டிதர்" என்ற பட்டம் சூட்டினர். அது முதல் அவர் பண்டிதர் ராமாபாய் என்று அழைக்கப்பட்டார்.

பண்டிதர் ராமாபாய் தனது 22 ஆம் வயதில் ஒரு பெங்காலிய மனிதனை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக காணப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகளுக்குள் காலரா வியாதியால் மரித்துப் போனார். 24-வது வயதிலேயே ராமாபாய் தன் மகள் மனோரமாவுடன் பூனா செல்ல நேர்ந்தது. அங்கு கிறிஸ்துவை பற்றி மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பாவம் செய்து சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களும், இழிவான குலத்தை சேர்ந்தவர்களுக்கும், கிறிஸ்துவ சமுதாயத்தில் விமோசனம் உண்டு என்பதை கற்றுக் கொண்டார். இந்தியாவில் மட்டுமின்றி, உலகில் வேறெந்த நாட்டிலும் பாவிகளை நேசிக்கும் மகானும், பெண்களை உயர்த்தி சிறப்பிக்க கூடியவரும் கிறிஸ்து ஒருவரேயன்றி வேறொருவரும் இல்லை என திட்டமாய் அறிந்து கொண்டார்.

அன்று முதல் ராமாபாய் மனதில் இந்தியா கிறிஸ்துவை எப்படி நம்பும் என்று சிந்திக்க ஆரம்பித்தார். மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் இயேசுவுக்கு சொந்தமாவது சாத்தியமா? என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. மேலை நாடுகளில் காணப்படுவது போல, அநேக மிஷன் ஸ்தாபனங்கள் செயல்பட்டால் நலமாயிருக்குமே! ஏன் மிஷனெரிகள் முன் வருவதில்லை என திரும்பத் திரும்ப யோசித்தார். "மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீ ஏன் செய்யக்கூடாது? மற்றவர்கள் செய்யும்படியாக எதிர்பார்ப்பது எத்தனை எளிது" என்று தேவன் தன்னிடம் பேசுவதை ராமாபாய் உணர்ந்தார்.

அந்த உயரிய, சிறந்த தேவனின் கட்டளைக்கு ராமாபாய் கீழ்ப்படிய மறுக்கவில்லை. "கர்த்தர் உபயோகித்தால் நானே இப்பறந்த இந்தியாவில் வாழும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு, ஏழை குழந்தைகளுக்கு புத்தூயிர் அளிக்க முடியும்" என்று கர்த்தரின் வார்த்தையை சவாலாக ஏற்றுக் கொண்டு வைராக்கியத்துடன் துரிதமாக செயல்பட ஆரம்பித்தார். மேலும் ஜார்ஜ் முல்லர், ஜான் பேட்டன், ஹட்சன் டெய்லர் போன்ற தேவ மனிதர்களைப் போன்று, தனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வாழ்க்கையில் கிறிஸ்துவுக்காக எதையாகிலும் சாதித்து விட வேண்டும் என்று தீர்மானித்தார்.

1883 ஆம் ஆண்டு, இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்காக போதிய பயிற்சியை பெற்றுக்கொள்ள இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் உவர்ன்டேஜ் சகோதரிகளின் ஆவிக்குரிய போதனைகளும், பாவத்திற்கு உட்பட்ட பெண்களுக்கென்று அவர்கள் மேற்கொண்ட பணிகளும் ராமாபாயை பெருமளவில் கவர்ந்தது. அவரை சாதனை புரிய தூண்டியது. கிறிஸ்துவுக்காக மட்டுமே வாழ்ந்து மடிய வேண்டும் என வாஞ்சித்தார். கிறிஸ்துவுக்கென்றே செயல்படும் இயக்கம் ஒன்றை நிறுவினர். "சாரதா சர்தான்" என்ற இல்லத்தை பெண்களுக்காகவே உருவாக்கினார். அதில் அநேக விதவைகள், ஒதுக்கப்பட்ட பெண்கள், இழிவு குலத்தார், ஏழை பிள்ளைகள் போன்றோர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் மீது தனது அன்பையும், மனவுருக்கத்தையும் பொழிந்து, அவர்களின் ஆன்மீக, சரீர தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். இல்லத்தின் தேவைகளை சந்திக்க கர்த்தரையே நம்பினார். இல்லத்தில் வந்தவர்கள் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி அவர் வற்புறுத்தவில்லை. வேதத்தை வாசிக்கவும் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, ராமாபாயிடம் காணப்பட்ட தாழ்மை, அன்பு, பொறுமை, தன்னலமற்ற செயல்கள் போன்றவை அவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்தியது. மேலும் ராமாபாய் காயப்பட்ட பெண்களுக்கு தாயாகவும், தோழியாகவும், அவர்கள் பிழைக்கத் தேவையான கைத்தொழிலை கற்றுக் கொடுக்கும் சிறந்த ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

ராமாபாயின் பணிகள் பல இடங்களுக்கும் பரவியது. சாரதா சர்தான் நிரம்பி வழிந்தது. ஆகவே பூனாவிற்கு அருகில் உள்ள கேதான் என்ற இடத்தில் ஒரு நிலம் வாங்கி புதியதோர் இல்லம் ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு முக்தி என்று பெயரிட்டார். அற்பமான ஆரம்பமாக இருந்தாலும், இரண்டு இல்லங்களும் பெரியதாக வளர்ந்தது. முக்தியில் மட்டும் 2000 பிள்ளைகளும் பெண்களும் பயன்பெற்றனர். 100க்கும் மேலான உதவியாளர்கள் அவருக்கு இருந்தனர். "ஆண்டவருக்கு நான் கீழ்ப்படிந்த நாள் முதல் வெகு பாக்கியசாலியாக இருக்கிறேன். எனது எல்லா தேவைகளுக்கும் அவரையே சார்ந்திருப்பது எத்தனை மகிமை" என்கிறார் ராமாபாய்.

1922 ஆம் ஆண்டு, கரைந்திட்ட மெழுகுவர்த்தியாய் வாழ்ந்து முடித்த ராமாபாய், இவ்வுலகை விட்டு கடந்து சென்றார். அவரது பணியும், புகழும் கலங்கரை விளக்கென உலகம் முழுவதும் பரவி விட்டது. "என்னை பயன்படுத்தியவர் உன்னையும் பயன்படுத்த வல்லவர்" என்பதே ராமாபாயும் கடைசி வார்த்தைகள். இன்றைக்கும் வரலாற்றில் பேசப்படும் நபராய் ராமாபாய் வலம் வருகிறார். ராமாபாய் போல நீங்களும் கிறிஸ்துவுக்கென்று எதையாகிலும் நிலையான சவாலை மேற்கொள்ள தீர்மானம் எடுங்கள்.

In English

Anand Shastri, a devout Vedic Hindu, considered charitable deeds as his responsibility and spent lavishly for the same. Eventually he lost his entire property. However, he was full of piety and used to spend his days visiting holy places, temples and taking holy bath, and visiting deities. He learned Sanskrit and used to teach the Vedic scriptures.

In those days, there was a severe famine in the country. And the city of Chennai, where they lived, was also heavily affected. People were hungry everywhere. Anand Shastri's family is no exception.

They wandered around for food. Due to their religious restrictions, any menial job is considered an abomination and a disrespect to their position. In their opinion since they had a higher education status, it is not a requisite to ask for others help. So, Anand Shastri's family fasted for three years and chanted the names of the deities to no avail. The gods and goddesses did not come forward to help. They wandered from temple after temple.

When they reached the point where they could no longer travel, they took refuge in a nearby temple. What a pity! They were also chased out of the temple. They thought suicide was their ultimate destiny. Within a few months, Anand Shastri and his wife starved to death. Children started dying one by one. Due to God’s abundant grace, Ramabai and her brother were saved.

One day both of them decided to commit suicide and covered themselves up to their necks with river mud. This time also God's favor and grace saved their lives. Born on 23rd April 1858 in Madras, Ramabai suffered a lot in her childhood. Although the family excelled in devotion, she did not get the love and peace she deserved from the deity.

In 1878, she sought refuge with her brother and reached Calcutta. There she got a chance to interact with few believers. Ramabai was greatly impressed by their worship and services. Later she also had the opportunity to interact with the activists who lived in Calcutta. Ramabai's eloquent speech attracted many pandits. Her knowledge was appreciated, and she was given the title of "Pandit". Since then, she was known as Pandit Ramabai.

Pandit Ramabai married a Bengali man at the age of 22. He was against Christianity, and he died of cholera within two years. At the age of 24, Ramabai moved to Pune with her daughter Manorama. In Pune, she got the opportunity to learn more about Christ. Also, she learned that only Christian Society had salvation for women who had sinned and were neglected by society, and those who belonged to lowly castes. She was determined that not only in India, but in any country across the world, the saint who loves sinners and who can exalt women and raise them is none other than Jesus Christ.

From that day Ramabai began to think about how to make the whole of India believe in Christ. Is it possible that India can belong to Jesus like other countries? These questions arose in her mind again and again. It would be great if there were many mission institutions functioning as seen in the West! She repeatedly wondered why the missionaries did not come forward. Ramabai felt God speaking to her, "Why don't you do it without expecting others to do the same? How easy it is to expect others to do it."

Ramabai did not refuse to obey the order of that great & mighty God. "If God uses me, I can revive the oppressed women and poor children living here in India," she accepted the Lord's word as a challenge and started working quickly with zeal. And like godly men as George Muller, John Baiden, and Hudson Taylor, she determined to accomplish something for Christ in the one and only life given to her by God.

In 1883, she went to England to get adequate training for the advancement of Indian women. Ramabai was greatly impressed by the spiritual teachings of the Uverntage Sisters in England and their work for sinful women. Ramabai was greatly impressed by their work for women. It inspired her to achieve great things for Christ. She wanted to live and die for Christ alone. She founded a movement for Christ. She created a house called "Sharada Sardaan" for women. Many widows, outcast women, low castes, poor children etc. were included in it. She showered her love and affection, and fulfilled their spiritual and physical needs. She trusted the Lord to meet the needs of this household. She did not force anyone who came to the house to accept Christ. She never forced anyone to read the Bible. Instead, Ramabai's humility, love, patience, and selfless actions lead them to Christianity. And Ramabai served as a mother, a friend to the injured women and a great teacher who taught them the crafts they needed to survive.

Ramabai’s deed and good work started spreading to many places. Sarada Sardan overflowed with many needy people. So, a plot of land was purchased at Ketan near Pune and the new home was established. She named it as “Mukti”. Despite the humble beginnings, both houses grew into greatness. 2000 children and women benefited from Mukti alone. She had more than 100 assistants to support the households. "I have been very blessed since the day I obeyed the Lord. How glorious it is to depend on Him for all my needs," says Ramabai.

In the year 1922, Ramabai, whose life as a melted candle, passed away from this world. Her deeds and fame spread like a beacon light across the world. Ramabai's last words were "He who has used me can use you." Even today, Ramabai is a focal point in history. Like Ramabai, you can also accept the challenges and bring many to Christ.


Comments

Post a Comment

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)