Posts

Charles Thomas Studd (CT Studd) (Tamil & English)

Image
            கிரிக்கெடிற்கு ஒரு புது வடிவத்தையே இன்றைய தலைமுறையினர் உருவாக்கி விட்டனர்.கிரிக்கெட்... இப்ப வந்த விளையாட்டு அல்ல. முதுமையும் பழைமையும் நிறைந்த விளையாட்டுகளில் ஒன்று. பதினெட்டாம் நூற்றாண்டில் பலரால் பெரிதும் விளையாடப்பட்ட இவ்விளையாட்டில் ஆங்கிலேயர்கள் அதிகம் கவனம் செலுத்தினார்கள். கிரிக்கெட் வீரர் ஒருவரும் மிஷனெரியாக அர்ப்பணித்து ஊழியம் செய்ய சென்றார். என்ன? கிரிக்கெட் விளையாடிய வீரர் மிஷனெரியானாரா? இது சற்று விஷேசமான சங்கதி தான்.   ஆம் ! 1860 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த Charles Thomas Studd பதினாறாம் வயதிலேயே மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரராக வாழ்ந்து வந்தார். அனைவரும் விரும்பக் கூடிய கதாநாயகனாகவும், தன்னுடைய கல்லூரியின் கேப்டனாகவும் C.T.Studd திகழ்ந்தார் . பணம் ,புகழ், இளமை, துடிப்பு ஆகியவை அவரை கிரிக்கெட் விளையாட்டு மலையின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. புகழின் உச்சியில் இருந்த ஸ்டட், 1878ஆம் ஆண்டு தன்னுடைய இளம் வயதில் ஊழியர் ஒருவருடனான சந்திப்பில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார் . அனுதினமும் தன்னுடைய விளையாட்டில் கவன

பரிசுத்த பிரான்சிஸ் அசிசி, Francis of Assisi ( tamil & English)

Image
இத்தாலி தேசத்தில் 13-ம் நூற்றாண்டின் பரிசுத்தவான் என அழைக்கப்பட்ட பிரான்சிஸ் அசிசிஇ வித்தியாசமாக வாழ்ந்தார். அவர் நம்மைப் போல் சாதாரண மனிதர் தான் என்றாலும், தேவன் அவரை அசாதாரணமான காரியங்களை செய்ய பயன்படுத்தினார். வேதத்தில் நோவா தேவனோடு சஞ்சரித்தது போல, பிரான்சிஸ் அசிசியும் தேவனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.அவர் அனுதினமும் : 1. தேவனோடு சஞ்சரித்தார்.  2. பரிசுத்தமான வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார். 3. ஜனங்களிடம் அன்பு கூர்ந்தார். இம்மூன்றையும் ஒரு நாள் தவறாது அனுதினமும் கடைபிடித்து வந்தார். இவர் மூலமாக தேவன் 157 அசாதாரணமான அற்புதத்தை இத்தாலியில் செய்தார். அவற்றில் ஒன்றை நாம் இங்கு பார்க்கலாம். பிரான்சிஸ் அசிசி இயற்கையோடு பேசி கர்த்தரை துதிக்கும் பழக்கம் கொண்டவர். தேவன் படைத்த மிருகங்கள், விலங்குகள் என அனைத்தும்,இவர் தேவனை துதிக்கும் போது, அவருடன் இணைந்து துதிக்கும். இவர் துதித்துக் கொண்டே சாலையில் நடந்து செல்லும் போது, சாலையின் இருபுறத்திலும் உள்ள மரங்கள்,செடி, கொடிகள் சந்தோஷமாக அசைந்து, இவரோடு சேர்ந்து தேவனைத் துதிக்கும். ஆற்றோரம் செல்லும் போது, மீன்க

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

Image
வைக்கோல் போர் ஜெபம்" வாசிப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதா? தொடர்ந்து வாசியுங்கள்.  பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க தேசத்தில் எழுப்புதல் அலை வீச தொடங்கியது. அநேக மிஷனெரி ஸ்தாபனங்கள் அங்கு உருவானது. வில்லியம்ஸ் டவுன் என்ற அழகிய கிராமத்தில் உள்ள மக்கள் மத்தியிலும் தேசத்தை குறித்த பாரமும், ஜெப வாஞ்சையும் ஊற்றப்பட்டது. குறிப்பாக அங்குள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் ஜெபிக்கும் ஜெப சேனைகள் எழும்பிற்று. அங்கு பயின்று வந்த மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக கூடி ஜெபித்து வந்தனர்.   1806 ஆம் ஆண்டு 23 வயதான சாமுவேல் ஜே. மில்ஸ் என்ற வாலிபன் சுவிசேஷத்தை அகில உலகுக்கும் பறைசாற்ற வேண்டும் என்ற பெரிய தரிசனத்தோடு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தான். ஒவ்வொரு வாரமும் மரத்தடியில் தன்னுடைய நான்கு நண்பர்களுடன் ஜெபித்து வந்தான். ஜெபிப்பதற்கு முன்பாக மூத்த ஊழியர் வில்லியம் கேரி பற்றிய புத்தகத்திலிருந்து தினமும் ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு, உலக நாடுகளுக்காக, குறிப்பாக ஆசிய நாடுகளுக்காக ஜெபித்து வந்தார்கள். கடைசி அத்தியாயத்தை வாசித்த அன்றைய தினம், மிகப்பெரிய தரிசனத்தை தேவன் அவர்களுக்கு த

வில்லியம் டிண்டேல் William Tyndale, Father of English Bible Translators

Image
டிண்டேலின் இளமைக்காலம்: வில்லியம் டிண்டேல் 1494ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார். சிறு வயது முதலே மிகவும் பயபக்தியுடன் வளர்க்கப் பட்டார். பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ,ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முந்தைய கால மூடநம்பிக்கைகள் இவரை சிந்திக்க வைத்தன. ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இதன் விளைவு,அவரை ஒரு சபை சீர்திருத்தவாதியாக உருவாக்கியது. மார்ட்டின் லுத்தர் மற்றும் சில புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகளின் கருத்து இவரை மிகவும் கவர்ந்தது.1521 ம் ஆண்டு இவர் கத்தோலிக்க குருவாக குருத்துவம் பெற்றார். திரும்பவும் தன் ஊருக்குத் திரும்பி, அங்குள்ள சபையின் போதகரானார்.டிண்டேலின் முற்போக்குத்தனமான சிந்தனைகளும், கத்தோலிக்க பழமைவாதத்திற்கு எதிரான இவர செயல்களும் சபை தலைவர்களின் கவனத்தைதிருப்பியது.  முதல்ஆங்கில வேதம் :  1523ல் டிண்டேல் லண்டன் திரும்பி புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்த நினைத்தார். ஆனால் அது சட்ட விரோதமானது என அறிந்து, வேதாகமத்தை சொந்த மொழியில் அச்சிட்டு தர

Schwartz மாதிரியா? அல்லது ஒருமாதிரியா? REV.SWARTZ Ministry (Tamil & English)

Image
தலைவனின் முக்கிய பணி அநேக புதிய தலைவர்களை உருவாக்குவதே. தேவன் நமக்கு தலைமைத்துவத்தை அளிப்பது இரும்பு போல் பிடித்து ஆளுகை செய்ய அல்ல; மக்களுக்கு உதவியாக இருந்து அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கவே ஆகும். வேதத்தில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள், தேவன் தங்களுக்கு அளித்த தலைமைத்துவ பொறுப்பை சிறப்பாக செய்து முடித்தார்கள். அதன் விளைவாக அனேகதலைவர்கள் எழும்பினார்கள். பவுலை தொடர்ந்த தீமோத்தேயு, தீமோத்தேயு மூலம் உருவாக்கப்பட்ட தீத்து என தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதை நாம் பார்க்கலாம். நமக்கு முன்பாக வாழ்ந்து சென்ற முன்னோடி மிஷனெரிகளும் தங்கள் தலைமைத்துவ பொறுப்பை உண்மையோடும் உத்தமத்தோடும் நிறைவேற்றி சென்றனர். அவர்களின் பதவி, பணம், அதிகாரம் என அனைத்தையும் தியாகம் செய்து முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்தார்கள். அது மட்டுமல்லாது அநேகரை தலைவர்களாக உருவாக்கி அவர்களும் தேவ பணியை தொடர உற்சாகப்படுத்தினார்கள். சிறந்த தலைமைத்துவத்திற்கு உதாரணமாக “திருநெல்வேலியின் தந்தை” என்றழைக்கப்படும் சுவார்ட்ஸ் ஐயர் அவர்கள் விளங்கினார்கள். 1776 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி சோனன் பர்க் என்

John Wesley’s 22 Self Examination Questions(In both Tamil and English)

Image
ஜான் வெஸ்லியின் 22 சுய பரிசோதனை கேள்விகள்/John Wesley’s 22 Self Examination Questions 1. நான் தெரிந்தோ அல்லது தெரியாமலோ என்னுடைய உண்மையான உள்ளான மனிதனை விட ஒரு சிறந்த மனிதனை உருவாக்கி இவ்வுலகிற்கு காண்பிக்கிறேனா? வேறு வகையில் சொல்ல போனால் நான் நயவஞ்சகனா? Am I consciously or unconsciously creating the impression that I am better than I really am? In other words, am I a hypocrite? 2. என்னுடைய எல்லா செயல்களிலும் வார்த்தைகளிலும் உண்மையுள்ளவனாக இருக்கிறேனா? அல்லது நான் செய்பவற்றை பெரிது படுத்தி சொல்லுகிறேனா? Am I honest in all my acts and words, or do I exaggerate? 3. என்னிடத்தில் நம்பி கூறப்பட்ட விஷயங்களை / இரகசியங்களை மற்றவர்களிடம் துணிந்து கூறுகிறேனா? Do I confidentially pass on to another what was told to me in confidence? 4. என்னை மற்றவர்கள் நம்ப முடியுமா? நான் நம்பிக்கைக்கு உரியவனா? Can I be trusted? 5. நான் ஆடை அணிகலன்கள், நண்பர்கள், வேலை மற்றும் எனது பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக உள்ளேனா? Am I a slave to dress, friends, work, or habits? 6. நான் சுய-உணர்வுள்ளவ

Bishop Polycarp, Christian bishop of Smyrna (tamil & English)

Image
ரோம சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் விசுவாசிகள் அதிக சித்திரவதைக்கு உள்ளானார்கள். கிறிஸ்துவை மறுதலித்து ரோம கடவுளை வணங்க கட்டளை பிறப்பித்திருந்த காலம் அது. ரோம கடவுளை வணங்காதவர்கள் சிங்கத்திற்கு இரையாக போடப்பட்டனர். கிறிஸ்துவை பின்பற்றியதால் பலவித சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாயினர். அப்போஸ்தலனாகிய யோவானின் சீடர்களில் ஒருவராக இருந்த போலிகார்ப் மரணத்தைக் கண்டு பயம் கொள்ளாத விசுவாச வீரராக வாழ்ந்து வந்தார். கிறிஸ்துவின் நிமித்தம் துன்பப்படுவதை இன்பமாக எண்ணியவர். சிமிர்னா பேராயராக பணியாற்றி வந்த 86 வயதான போலிகார்ப்பை கொல்ல ரோம அரசாங்கம் வகை தேடிவந்தனர். அவரை கைது செய்வதற்கு மூன்று நாட்கள் முன்பதாக, அவர் தனது அறையில் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது தனது தலையணை, தீப்பற்றி எரிவதைப் போன்ற தரிசனத்தை கண்டார். அன்று முதல் தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தான் விரைவில் உயிரோடு எரிக்கப்படப் போவதாக கூறினார். போர்வீரர்கள் போலிகார்ப்பை பிடிக்க வந்த அன்றும், கிறிஸ்துவின் சித்தம் மட்டுமே நடக்கும் என்று கூறி அவர்களிடம் தனக்கு ஒரு மணி நேரம் ஜெபிக்க அனுமதி தர கோரி