John Wesley’s 22 Self Examination Questions(In both Tamil and English)

ஜான் வெஸ்லியின் 22 சுய பரிசோதனை கேள்விகள்/John Wesley’s 22 Self Examination Questions

1. நான் தெரிந்தோ அல்லது தெரியாமலோ என்னுடைய உண்மையான உள்ளான மனிதனை விட ஒரு சிறந்த மனிதனை உருவாக்கி இவ்வுலகிற்கு காண்பிக்கிறேனா? வேறு வகையில் சொல்ல போனால் நான் நயவஞ்சகனா? Am I consciously or unconsciously creating the impression that I am better than I really am? In other words, am I a hypocrite?

2. என்னுடைய எல்லா செயல்களிலும் வார்த்தைகளிலும் உண்மையுள்ளவனாக இருக்கிறேனா? அல்லது நான் செய்பவற்றை பெரிது படுத்தி சொல்லுகிறேனா? Am I honest in all my acts and words, or do I exaggerate?

3. என்னிடத்தில் நம்பி கூறப்பட்ட விஷயங்களை / இரகசியங்களை மற்றவர்களிடம் துணிந்து கூறுகிறேனா? Do I confidentially pass on to another what was told to me in confidence?

4. என்னை மற்றவர்கள் நம்ப முடியுமா? நான் நம்பிக்கைக்கு உரியவனா? Can I be trusted?

5. நான் ஆடை அணிகலன்கள், நண்பர்கள், வேலை மற்றும் எனது பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக உள்ளேனா? Am I a slave to dress, friends, work, or habits?

6. நான் சுய-உணர்வுள்ளவனாக அல்லது சுய பச்சாதாபம் உள்ளவனாக அல்லது சுய நீதியுள்ளவனாக காணப்படுகிறேனா? Am I self-conscious, self-pitying, or self-justifying?

7. இன்று வேதாகமம் என்னில் வாழ்கிறததா? Did the Bible live in me today?

8. வேதாகமம் என்னோடு பேச அதற்கு நான் நேரம் ஒதுக்குகிறேனா? Do I give it time to speak to me everyday?

9. நான் ஜெபத்தில் மகிழ்ந்து களிகூறுகிறேனா? Am I enjoying prayer?

10. நான் கடைசியாக யாரிடம் என் விசுவாசம் குறித்து கூறினேன்? When did I last speak to someone else about my faith?

11. நான் செலவழிக்கும் பணத்திற்காக நான் ஜெபிக்கிறேனா? Do I pray about the money I spend?

12. நான் படுக்கைக்கு சரியான நேரத்திற்கு சென்று சரியான நேரத்தில் காலையில் விழிக்கிறேனா? Do I get to bed on time and get up on time?

13. நான் தேவனுக்கு எந்த காரியத்திலாவது கீழ்படியாமல் இருக்கிறேனா? Do I disobey God in anything?

14. என் மனசாட்சிக்கு பொருந்தாத காரியங்களை செய்கிறேனா? Do I insist upon doing something about which my conscience is uneasy?

15. நான் என் வாழ்வில் எந்த பகுதியிலாவது தோற்கடிக்க பட்டுள்ளேனா? Am I defeated in any part of my life?

16. நான் பொறாமை உள்ளவனாகவும், சுத்தமற்றவனாகவும், பிறரை எப்போதும் விமர்சிக்கிறவனாகவும், எரிச்சல் உள்ளவனாகவும், விரைவில் காயப்படுத்துகிறவனாகவும் அல்லது நம்பிக்கையற்றவனாகவும் இருக்கிறேனா? Am I jealous, impure, critical, irritable, touchy, or distrustful?

17. நான் எனது ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவழிக்கிறேன்? How do I spend my spare time?

18. நான் பெருமையுள்ளவனா? Am I proud?

19. நான் மற்றவர்களைப் போல அல்ல விசேஷமாக பிறரை பழிக்கும் பரிசேயர் போல் அல்ல என்று தேவனுக்கு நன்றி செலுத்துகிறேனா? . Do I thank God that I am not as other people, especially as the Pharisees who despised the publican?

20. யாரையாவது அல்லது யாரிடமாவது எனக்கு பயம், வெறுப்பு, கசப்பு, அதிக அளவில் விமர்சித்தல், அவர்கள் மீது அதிக அளவு கசப்பை மனதில் வைத்து இருத்தல், மரியாதை குறைவாக நடத்துதல் போன்ற காரியங்களை செய்கிறேனா? Is there anyone whom I fear, dislike, disown, criticize, hold a resentment toward or disregard? If so, what am I doing about it?

21. நான் எப்போதும் முறுமுறுக்கிறவானாகவோ அல்லது குறை சொல்லுகிறவானகவோ காணப்படுகிறேனா? Do I grumble or complain constantly?

22. கிறிஸ்துவை நான் உண்மையில் உணர்கிறேனா?Is Christ real to me?

Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!