Schwartz மாதிரியா? அல்லது ஒருமாதிரியா? REV.SWARTZ Ministry (Tamil & English)


தலைவனின் முக்கிய பணி அநேக புதிய தலைவர்களை உருவாக்குவதே. தேவன் நமக்கு தலைமைத்துவத்தை அளிப்பது இரும்பு போல் பிடித்து ஆளுகை செய்ய அல்ல; மக்களுக்கு உதவியாக இருந்து அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கவே ஆகும். வேதத்தில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள், தேவன் தங்களுக்கு அளித்த தலைமைத்துவ பொறுப்பை சிறப்பாக செய்து முடித்தார்கள். அதன் விளைவாக அனேகதலைவர்கள் எழும்பினார்கள். பவுலை தொடர்ந்த தீமோத்தேயு, தீமோத்தேயு மூலம் உருவாக்கப்பட்ட தீத்து என தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதை நாம் பார்க்கலாம்.

நமக்கு முன்பாக வாழ்ந்து சென்ற முன்னோடி மிஷனெரிகளும் தங்கள் தலைமைத்துவ பொறுப்பை உண்மையோடும் உத்தமத்தோடும் நிறைவேற்றி சென்றனர். அவர்களின் பதவி, பணம், அதிகாரம் என அனைத்தையும் தியாகம் செய்து முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்தார்கள். அது மட்டுமல்லாது அநேகரை தலைவர்களாக உருவாக்கி அவர்களும் தேவ பணியை தொடர உற்சாகப்படுத்தினார்கள்.

சிறந்த தலைமைத்துவத்திற்கு உதாரணமாக “திருநெல்வேலியின் தந்தை” என்றழைக்கப்படும் சுவார்ட்ஸ் ஐயர் அவர்கள் விளங்கினார்கள். 1776 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி சோனன் பர்க் என்னும் ஜெர்மனியின் சிறிய பட்டணத்தில் பிறந்த கிறிஸ்டியன் பிரெட்ரிக் சுவார்ட்ஸ் அவர்கள் தன் இளம் வயதிலேயே தன்னுடைய தாயை இழந்தார். சுவார்ட்ஸின் தாயார் மரிப்பதற்கு முன்பாக தன்னுடைய கணவரையும், போதகரையும் அழைத்து தன் மகன் சுவார்ட்ஸை சுவிசேஷம் அறிவிக்கப்படாத நாட்டில் சுவிசேஷத்தை அறிவிக்க செல்லும் ஊழியனாக வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த தாயார் தன் மகனை குறித்து வைத்திருந்த இத்தனை பெரிய தரிசனத்தின் விளைவாக கிறிஸ்தவம், தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி நல்ல பலன்களை கொடுத்தது. தரங்கம்பாடி, திருச்சி, தஞ்சாவூர் என பல பகுதிகளில் சுவார்ட்ஸ் ஐயர் மூலம் சுவிசேஷம் மிக வேகமாக பரவியது. அது மட்டுமல்லாது, பல ஊழியர்களை திருநெல்வேலிப் பகுதிக்குள் அனுப்பியும் வைத்தார்.

1750 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் நாள் சுவார்ட்ஸ் மிஷனரியுடன் இன்னும் சிலர் தமிழகத்திற்கு ஊழியம் செய்ய புறப்பட்டனர்.அக்கப்பல் பயணம் இவர்களுக்கு மிகவும் கடினமாகவும், ஆபத்தாகவும் இருந்தது. காய்ச்சல், புயல் என ஒன்பது மாத பயண நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டு 30.7.1950 அன்று தரங்கம்பாடி வந்து சேர்ந்தனர்.

சுவார்ட்ஸ் ஐயரின் தலைமைத்துவப் பணிகள்:

உபதேசிமார்களுக்கு பயிற்சி:

சுவார்ட்ஸ் ஐயர் இரவு பகல் பாராது தமிழ் மொழியைக் கற்றார். சுமார் நான்கு மாதங்களுக்குள் தமிழை கற்றுக் கொண்டு, தனது முதல் பிரசங்கத்தை சீகன்பால்கு ஆலயத்தில் தமிழில் பிரசிங்கித்தார். தினமும் மாலை நேரத்தில் உள்ளூர் மக்களை சந்திக்க செல்வார். தன்னுடன் ஒரு சில உபதேசியார்களையும் அழைத்து சென்று ஊழியம் செய்ய பயிற்சி அளிப்பார். ஒவ்வொரு நாள் காலையிலும் உபதேசியார் செய்ய வேண்டிய ஊழியத்தைப் பற்றி கற்றுக் கொடுப்பார். மாலையில் தாங்கள் செய்த ஊழியத்தைப் பற்றி அவர்கள் சுவார்ட்ஸ் ஐயரிடம் அறிவிப்பார்கள். இதன் மூலமாக தரிசனம் உள்ளமற்றும் ஊழிய வாஞ்சை உள்ள உபதேசியார்கள் எழும்பினார்கள்.

எளிமை:

தரங்கம்பாடியில் சந்தோஷமாக பணி செய்து வாழ்ந்து வந்த சுவார்ட்ஸ் ஐயர், சுவிசேஷம் அறிவிக்கப்படாதிருந்த திருச்சி பட்டணத்தில் சுவிசேஷத்தை சொல்ல கடந்து சென்றார். பரந்து, விரிந்து காணப்பட்ட திருச்சி பட்டணத்தில் அநேக சவால்களை சந்தித்தார். அவருக்கு ஒரு மாதத்திற்கு 10 பகோடாக்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதன் மதிப்பு இங்கிலாந்தில் உள்ள பண மதிப்பில் பாதி அளவே இருந்தது. இந்த வருமானத்தைக் கொண்டு அவர் எப்படி வாழ்ந்தார்? அவரது படுக்கை அறையை விட சற்று பெரிதாக உள்ள அறையை ராணுவ அதிகாரி ஒருவர் அவருக்கு கொடுத்தார். பழைய கட்டிடமாக இருந்தாலும் மிகவும் திருப்தியுடன் சுவார்ட்ஸ் ஐயர்ஊழியம் செய்தார். உள்ளூர் மக்கள் சமைத்துத் தந்த ஒரு தட்டு சாதத்தையும், காய்கறிகளையும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார். இவ்விதமாக எளிமையாக வாழ்ந்து, சுவிசேஷகனுடைய ஊழியத்தை செய்வது ஒன்றையே அவர் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

ஆத்துமாக்கள் மீது கரிசனை:

திருச்சியில் சுவார்ட்ஸ்ஐயர் பணியாற்றிய நாட்களில் யுத்தங்கள் நடைபெற்று வந்ததால், ஆங்கிலேய ராணுவ வீரர்களுக்கு சிற்றாலயம் இல்லாமல் இருந்தது.சுவார்ட்ஸ் ஐயரின் எளிமையானமற்றும் கனிவான பழக்கங்கள் ஆங்கிலேய வீரர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுக்கு அவர் குருவானவராக இருந்து வேத வசனங்களையும், நித்தியத்தை குறித்தும் பிரசங்கித்து வந்தார். யுத்த காலம் என்பதால்மரிக்கும் தருவாயில் இருந்தராணுவ வீரர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிக்க தீவிரமாக செயல்பட்டார். கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு ஆத்துமா கூட மரணத்தை சந்திக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

சமூகப்பணி:

சுவார்ட்ஸ் ஐயர் சுவிசேஷப் பணி மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் அரும்பாடுபட்டார். திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, வெஸ்ட்ரி பள்ளி போன்ற புகழ்பெற்ற பள்ளிகளை நிறுவினார். இன்று இப்பள்ளிகளின் மூலமாக சிறப்புமிக்க ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள் என அநேகர் உருவாகி வருகின்றனர். சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட தலைவராகவும் சுவார்ட்ஸ் ஐயர் விளங்கினார்.

பாவத்திற்கு எதிர்ப்பு:

தஞ்சாவூரில் மராத்திய அரச குடும்பத்தை சேர்ந்த பிராமணப் பெண்ணான கோகிலாவை உடன்கட்டை ஏற்றுவதற்கு முன் ஆங்கிலப் படை தளபதி லிட்டில்டன் காப்பாற்றினார். லிட்டில்டனும், கோகிலாவும் திருமணம் செய்யாமல் கணவனும் மனைவியுமாக வாழ ஆரம்பித்தார்கள். கோகிலா தஞ்சாவூரில் சுவார்ட்ஸ் ஐயரால் ஞானஸ்நானம் பெற விரும்பினார். இப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழும் போது ஞானஸ்நானம் கொடுக்க முடியாது என அவர் மறுத்துவிட்டார். லிட்டில்டன் மரித்தபின் கோகிலாவுக்கு குளோரிந்தா என்று சுவார்ட்ஸ் ஐயர் பெயர் வைத்து ஞானஸ்நானம் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட எந்த ஒரு கிறிஸ்தவனும் பாவம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பாவம் செய்யும் கிறிஸ்தவனை கண்டால் எச்சரிக்கவும் தயங்கமாட்டார்.

பண ஆசை இல்லாதவர்:

24.8.1785 அன்று தஞ்சாவூரிலிருந்து பாளையங்கோட்டைக்கு வந்து குளோரிந்தா ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார். குளோரிந்தாசுவார்ட்ஸ்ஐயரின் பயணச் செலவிற்கு 100 ரூபாய் கொடுத்தார். அதை வாங்க மறுத்தசுவார்ட்ஸ் அவரிடமே பணத்தை திருப்பிகொடுத்துவிட்டார். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல தனக்கு உதவ முன்வரும் மக்கள் அனைவரிடமும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடும் பழக்கம் அவருக்கு இருந்தது. சுவார்ட்ஸ் ஐயருக்கு ஆங்கில அரசாங்கமும், இந்திய இளவரசர்களும் ஏராளமான நன்கொடைகளை கொடுத்திருந்தனர். அவர் மரித்த பின் தன் சொத்தில் ஒரு சிறுபகுதியை மட்டும் தன்னுடைய உறவினர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் கொடுக்கச் சொன்னார். மீதியுள்ள அவருடைய சொத்து முழுவதையும் ஊழியத்திற்கு என்று கொடுத்தார். பண ஆசை என்பதைசுவார்ட்ஸ் ஐயர் முற்றும் வெறுத்தவர்.

கரிசணை :

தஞ்சாவூரில் கணவனை இழந்து திக்கற்றவர்களாய் இருந்த விதவைகளுக்கு உதவி செய்யசுவார்ட்ஸ் ஐயர் விரும்பினார். வீடுகளையும் கட்ட ஆரம்பித்தார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது தஞ்சாவூர் மன்னரின் உதவியை நாடினார். அரசரும் உதவி செய்தார். விதவைகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு அவர்கள் அங்கு குடியேற உதவி செய்தார்.

உதவும் குணம்:

ஹைதர் அலியின் முற்றுகைக்குப் பின் தஞ்சாவூரில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. உணவு பொருட்களை சேகரித்து மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களோ அவற்றை கொள்ளையடித்து சென்றனர். மக்கள் பசியால் வாடினார்கள். தஞ்சாவூர் மக்கள் சுவார்ட்ஸ் ஐயரின் மேல் கொண்ட நம்பிக்கையினால் அவரை உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியை செய்ய கேட்டுக் கொண்டனர். அவரும் மகிழ்ச்சியோடு அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு மக்களுக்கு உதவி செய்தார். புற மதத்தை சேர்ந்த அம் மக்கள், தங்கள் அதிகாரிகளை அல்ல சுவார்ட்ஸ் ஐயரையே உண்மையுள்ளவர் என்று நம்பினார்கள்.

சாட்சியுள்ள வாழ்க்கை:

ஹைதர் அலிக்கும் இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனிக்கும் யுத்தம் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டது. யுத்தம் நிகழாமல் சமரசம் செய்யும் முயற்சிகளும் செய்யப்பட்டன. இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியார் சமாதான தூது அனுப்பலாம் என யோசித்தனர். அவர்களுக்கு குருவானவராக இருந்த சுவார்ட்ஸ் ஐயரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.”அந்த கிறிஸ்தவனை எங்களிடத்தில் அனுப்புங்கள், அவர் எங்களை ஏமாற்ற மாட்டார்” என சாட்சியும் பகர்ந்தார். சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், ஹைதர் அலி “இந்த வணங்கத்தக்க பாதிரியாரை என் தேசம் எங்கும் செல்ல அனுமதி அளிக்கிறேன்” என்றார். வேறு சமயம் மன்னனானாலும், சாட்சி சொல்லும் படியான வாழ்க்கையை வாழ்ந்தவர் சுவார்ட்ஸ் ஆவார்.

ஊழியர்கள் எழும்பினார்:

1785ம் ஆண்டில் தேவசகாயம் பிள்ளைக்கு போதித்து,பயிற்சி அளித்து அவரை பாளையங்கோட்டைக்கு உதவி உபதேசியாராக அனுப்பி வைத்தார். ஒருநாள் இரவு சுவார்ட்ஸ் ஐயர் தேவசகாயம் வீட்டிற்கு சென்றபோது, அவரது மகன் வேதநாயகம் இரவு படுக்கைக்குப் போகும் முன் ஜெபித்து விட்டு சென்றதை பார்த்தார். அந்த சிறுவனின் தேவ பக்தியைக் கண்ட சுவார்ட்ஸ் அவனை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பினார். பெற்றோர் சம்மதத்துடன் அவனை தஞ்சாவூருக்கு அழைத்து சென்று பயிற்றுவித்தார். வேதநாயகம் சிறந்த ஞானம் உள்ளவர். தேவன் அவருக்கு பாடல் எழுதும் வரத்தை தந்தார். தஞ்சாவூர் அரண்மனையில், அரசபையில் அமரும் படியான நிலையையும்அவர் அடைந்தார். அவர்தான் புகழ்பெற்ற வேதநாயகம் சாஸ்திரியார். அன்று அவர் இயற்றிய கிறிஸ்தவ கீர்த்தனை பாடல்களை இன்று நாம் பாடிவருகின்றோம். அவரை தொடர்ந்து அவரது சந்ததியினரும் அழியாத, இனிமையான அவருடைய பாடல்களை பாடி தேவனுக்காக ஊழியம் செய்து வருகின்றனர்.

இவர் மட்டுமல்லாது மேலும் பல ஊழியர்களை திருநெல்வேலி பகுதிக்குள் ஊழியம் செய்ய பயிற்றுவித்து அனுப்பி வைத்தார். குளோரிந்தா, சத்தியநாதன், தாவீது சுந்தரானந்தம், ஞானப்பிரகாசம், ஜெனிக்கே ஐயர் என பல ஊழியர்கள் எழும்பினார்கள். இவர்கள் பெயர் இன்றும் சரித்திரத்தில் இடம்பெற்று சந்ததி சந்ததியாக நினைவு கூறப்பட்டும் வருகிறார்கள் என்றால் சுவார்ட்ஸ் ஐயரின் சிறந்த தலைமைத்துவமே முக்கிய காரணமாகும். 48 ஆண்டுகள் இந்தியாவிலேயே அரும்பணிகள் செய்த சுவார்ட்ஸ் ஒரு முறை கூட தன் தாயகம் திரும்ப வில்லை.

எளிமை, தியாகம், அர்ப்பணம், உயர்ந்த தரிசனம் என தலைமைத்துவத்திற்குதேவையான அடிப்படை குணங்கள் அனைத்தும் சுவார்ட்ஸ் ஐயரிடம் காணப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது,”நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறதுபோல நீங்கள் என்னை பின்பற்றுகிறவர்களாய் இருங்கள் “(1கொரிந்தியர் 11:1) என்று கூறுகிறார். இன்று ஆண்டவர் நம்மிடமும் இத்தகைய முன்மாதிரியான தலைமைத்துவத்தை எதிர்பார்க்கிறார். பவுல் கூறியதை போல நாம் நம்மிடம் பழகும் மக்களிடம் என்னை பின்பற்றுங்கள் என்று தைரியமாக கூற முடியுமா? நம்மிடத்தில் இருந்து மக்கள் எதை கற்றுக் கொள்ளுகிறார்கள்? பவுலை போன்று, சுவார்ட்ஸ் ஐயரை போன்று முன்மாதிரியான தலைமைத்துவத்திற்கு என நம்மை அர்ப்பணிப்போம். நம் மூலம் தேசத்தை அசைக்கும் தலைவர்கள் எழும்பட்டும்.

 A leader's main job is to create many new leaders. God does not give us leadership to rule like iron; it is about helping people and making He lost his mother at a young age. Before Swartz's mother died, she called her husband and pastor and asked them to raise her son as an evangelist in an unevangelized country. As a result of the great vision that the mother had for her son, Christianity spread to many parts of Tamil Nadu and gave good results. Evangelism spread very fast through Schwartz Iyer in many areas like Tharangambadi, Trichy, and Thanjavur. Not only that, he sent many employees to the Tirunelveli area.

On January 21, 1750, Swartz Missionary and some others left for Tamil Nadu. The journey by boat was very difficult and dangerous for them. They reached Tharangambadi on July 30, 1995, after suffering a lot during the nine months of travel due to fever and storms.

 Schwartz Iyer's Leadership Tasks: Training for Preachers: Schwartz Iyer studied Tamil day and night. Having learned Tamil within about four months, he preached his first sermon in Tamil at Seeganpal temple. Every evening, he goes to meet local people. He would take a few preachers along with him and train them for ministry. Every morning, the preacher would teach about the ministry to be done. In the evening, they report to Schwartz Iyer about their ministry. Through this, preachers with vision and a desire to serve arise.

SimplicitySwartz Iyer, who was happily working and living in Tharangambadi, passed through the unevangelized town of Trichy to evangelise. He faced many challenges in the sprawling city of Trichy. He was paid 10 pagodas a month. Its value was half that of money in England. How did he live with this income? An army officer gave him a room slightly bigger than his bedchamber. Although it was an old building, Schwartz worked very satisfactorily. He happily ate a plate of rice and vegetables cooked by the locals. In this way, he had only one goal: to live simply and do the work of the evangelist.

Concern for Souls: During Schwartzier's service in Trichy, wars were raging and the British soldiers had no shelter. Swartz Eyre's simple and kind manners endeared him to the English soldiers. He became their teacher and preached the scriptures and eternity. During the war, he actively preached about Jesus Christ to the dying soldiers. He was very careful that not a single soul should die without accepting Christ.

 Social workSchwartz Iyer not only evangelised but also strove to improve the standard of living of the people. Trichy established famous schools like Bishop Heber High School and Vestry School. Today, many distinguished teachers, government officials, and doctors are being produced through these schools. Schwartz Iyer was also a leader who cared about society.

 Resistance to sin: At Thanjavur, the English commander Lyttleton saved Kokila, a Brahmin girl from the Maratha royal family, before she could be betrothed. Littleton and Kokila started living as husband and wife without getting married. Kokila wanted to be baptized by Schwartz Iyer at Thanjavur. He refused to be baptised while living such a sinful life. After Littleton's death, Kokila was baptised by Schwartz Iyer as Clorinda. He was determined that no Christian who accepted Jesus Christ should sin. He will not hesitate to warn a Christian who is sinning.

A person who is not greedy for money: On August 24, 1885, he came from Thanjavur to Balayankot and consecrated the Clorintha temple. 100 towards the travel expenses of Chlorintha Schwarzeyer. The Schwarzes refused to buy it and returned the money to her. He had a habit of returning money to all the people who came forward to help him, not just one or two. The British government and Indian princes had given Schwartz Iyer huge donations. After his death, he asked to give only a small part of his property to his relatives and acquaintances. He gave the rest of his property to the ministry. Schwartz Iyer absolutely hated the desire for money.

consideration: Schwartz Iyer wanted to help the distraught widows in Thanjavur. He also started building houses. When he was short of money, he sought the help of the king of Thanjavur. The king also helped. He built houses for widows and helped them settle there.

 Helpful QualitiesHyder Ali's siege was followed by a deadly famine in Thanjavur. Officers were appointed to collect food items and distribute them to the people. They looted them. People were starving. The people of Thanjavur had faith in Schwartz Iyer and asked him to do the food distribution. He also gladly accepted the responsibility and helped people. The heathens believed that Schwarzeyer was faithful, not their authorities.

Witness Life: There was a situation of war between Hyder Ali and the English East India Company. Efforts were made to reconcile without war. They thought that the English East India Company might send a peace envoy. Swartz, who was their teacher, asked him to send Iyer. "Send that Christian to us; he will not deceive us," cried the witness. Although the reconciliation talks failed, Haider Ali said, "I will allow this venerable priest to go anywhere in my country." Schwartz was a man who lived a life of witnessing, even though he was a king in another era.

The staff rises: In 1785, Devasagayam taught and trained Pillai and sent him to Palayamgottai as an assistant preacher. One night, when Swartz Iyer visited Devasagaya's home, he saw that his son Vedanayaka had left to pray before going to bed. Seeing the boy's piety, Schwartz wanted to take him with him. With the consent of his parents, he took him to Thanjavur and trained him. Vedanayaka is a man of great wisdom. God gave him the gift of songwriting. He also attained the status of sitting in the royal court in the Thanjavur palace. He is the famous Vedanayagam Shastri. Today we are singing the Christian hymns he composed that day. Following him, his descendants continue to serve God by singing his immortal and sweet songs.

Not only this, he trained and sent many other workers to work in the Tirunelveli area. Clorintha, Sathyanathan, Davidu Sundaranand, Gnanaprakasam, Jenike Iyer, and many other workers rose up. If their names are still mentioned in history and are being remembered from generation to generation, it is the great leadership of Swartz Iyer that is the main reason. Swartz spent 48 years in India and never returned home.

Simplicity, sacrifice, dedication, and high vision are all essential qualities of leadership found in Schwartz Iyer. When the apostle Paul wrote to the church in Corinth, Follow my example, as I follow the example of Christ," (1 Corinthians 11:1) The Lord expects such exemplary leadership from us today. Can we boldly say, "Follow me to the people we interact with, as Paul said? What do people learn from us? Let us commit ourselves to exemplary leadership like Paul and Schwartz Iyer. May the leaders who shake the nation arise through us.

 

 

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)