வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

வைக்கோல் போர் ஜெபம்" வாசிப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதா? தொடர்ந்து வாசியுங்கள்.
 பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க தேசத்தில் எழுப்புதல் அலை வீச தொடங்கியது. அநேக மிஷனெரி ஸ்தாபனங்கள் அங்கு உருவானது. வில்லியம்ஸ் டவுன் என்ற அழகிய கிராமத்தில் உள்ள மக்கள் மத்தியிலும் தேசத்தை குறித்த பாரமும், ஜெப வாஞ்சையும் ஊற்றப்பட்டது. குறிப்பாக அங்குள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் ஜெபிக்கும் ஜெப சேனைகள் எழும்பிற்று. அங்கு பயின்று வந்த மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக கூடி ஜெபித்து வந்தனர். 

 1806 ஆம் ஆண்டு 23 வயதான சாமுவேல் ஜே. மில்ஸ் என்ற வாலிபன் சுவிசேஷத்தை அகில உலகுக்கும் பறைசாற்ற வேண்டும் என்ற பெரிய தரிசனத்தோடு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தான். ஒவ்வொரு வாரமும் மரத்தடியில் தன்னுடைய நான்கு நண்பர்களுடன் ஜெபித்து வந்தான். ஜெபிப்பதற்கு முன்பாக மூத்த ஊழியர் வில்லியம் கேரி பற்றிய புத்தகத்திலிருந்து தினமும் ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு, உலக நாடுகளுக்காக, குறிப்பாக ஆசிய நாடுகளுக்காக ஜெபித்து வந்தார்கள். கடைசி அத்தியாயத்தை வாசித்த அன்றைய தினம், மிகப்பெரிய தரிசனத்தை தேவன் அவர்களுக்கு தந்தார். அப்புத்தகத்தில், கிறிஸ்துவின் சுவிசேஷம் சென்றிராத நாடுகளின் வரைபடங்கள், புள்ளிவிவரங்கள், சுவிசேஷத்தை உலகத்திற்குள் கொண்டு செல்ல ஏற்படும் சவால்கள் போன்றவற்றை வாசித்தனர். நண்பர்கள் ஐந்து பேரும் அதற்காக ஜெபிக்க ஆரம்பித்த வேளையில், கார்மேகம் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. நண்பர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு வைக்கோல் போர் அண்டை அடைக்கலமாயினர். அதன் அடியில் நின்று கொண்டே தங்கள் இதயத்தை தேவ சமூகத்தில் ஊற்றினார்கள். தேவன் தங்களையும் பயன்படுத்த அப்பொழுதே தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தனர். பின்பு, ஒவ்வொரு தேசங்களின் பெயர்களையும் சொல்லி ஜெபிக்க ஆரம்பித்தனர். ஆண்டவர் சாமுவேல் மில்ஸிற்கு அநேக தரிசனங்களையும் திட்டங்களையும் தந்தார். அவற்றை தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, " கல்லூரி மாணவர்களாகிய நம்மால் என்ன செய்ய முடியும்? " என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். மில்ஸ் அவர்களிடம், " தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை" என்று மிகுந்த விசுவாசத்தோடு பதில் கூறினார்.

 அன்றிலிருந்து அவர்களுடைய ஜெப கூடுகை "வைக்கோல் போர் ஜெபக் கூடுகை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் உலக அளவில் செயல்படும் ஓர் இயக்கமாக மாறியது. இவர்கள் ஜெபிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எழும்ப ஆரம்பித்தனர். முதன் முறையாக 1812 ஆம் ஆண்டு, அமெரிக்க தேசத்திலிருந்து புறப்பட்ட ஒரு குழு, இந்திய துணைக் கண்டத்திற்கு ஊழியம் செய்ய வந்தனர். முக்கிய ஊழியர்களான அதோனி ராம் ஜட்சன், லூதர் ரைஸ் போன்றோர் மில்ஸ் உருவாக்கிய இயக்கத்திலிருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. American Bible Society மற்றும் United Foreign Missionary Society போன்ற பெரிய ஸ்தாபனங்கள் உருவாக சாமுவேல் மில்ஸ் காரணமானார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை சுவிசேஷம் சென்றிராத ஆசிய கண்டம், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குள் அனுப்பினார்கள். வைக்கோல் போர் ஜெபக் கூடுகை ஆரம்பித்த முதல் 50 ஆண்டுகளில் 1250 மிஷனெரிகள் அமெரிக்க தேசத்தின் கிராமங்கள் மற்றும் பட்டணங்களிலிருந்து எழும்பினார்கள். எபிரேயம்,இலத்தீன், கிரேக்கம் என பல மொழிகளில் திறமை பெற்ற வாலிபர்கள் தங்களை அர்ப்பணித்து சென்றனர். இதன் விளைவாக வேதாகமம் இல்லாத அநேக மொழிகளில் வேதாகமும் மொழிபெயர்க்கப்பட பிரயோஜனம் மாய் இருந்தது. இன்றும் இந்த வைக்கோல் போர் ஜெபகுழுவின் நினைவுச் சின்னம் அமெரிக்காவின் வில்லியம்ஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 

 1818 ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி தனது 35ஆம் வயதில், சாமுவேல் ஜான் மில்ஸ் தன்னுடைய ஓட்டத்தை முடித்து தேவ சமூகத்தில் இளைப்பாற சென்றுவிட்டார். ஆனால் அவருடைய ஜெபம், தரிசனம், வைராக்கியம் பல ஆயிரம் ஊழியர்களை எழுப்பியது. இதை வாசிக்கும் அன்பர்களே, ஒருவேளை நம்முடைய ஜெப வாழ்வு சோர்ந்து போன நிலையில் இருக்கலாம். இன்று தேவன் நம்மை ஆளுகை செய்ய,வழிநடத்த ஒப்புக் கொடுப்போம். நம்முடைய ஜெபம் தேவனையே அசைக்கும்; நம்முடைய ஜெபம் அசாதாரணமான காரியங்களை செய்யும்.

Does reading the "straw war prayer" sound different? Read on. At the end of the eighteenth century, a wave of revival began to sweep the American nation. Many missionary establishments sprung up there. In the beautiful village of Williamstown, the nation's burden and prayer were also poured out. Prayer groups have sprung up, especially at Williams College. The students who came were gathering in small groups and praying.

 In 1806, 23-year-old Samuel J. A young man named Mills stepped into college with a great vision to evangelise the world. Every week, he used to pray under the tree with his four friends. Before praying, they read a chapter daily from the book of Senior Worker William Carey and prayed for the nations of the world, especially the nations of Asia. On the day they read the last chapter, God gave them a great vision. In the booklet, they read maps, statistics of countries where the gospel of Christ had not gone, and the challenges of taking the gospel into the world. As the five friends began to pray for it, a dark sky enveloped them and rain began to fall. Friends formed a straw-battle neighbourhood shelter to protect themselves. Standing beneath it, they poured their hearts into God's presence. They devoted themselves completely to God's use of them. Then they started praying by saying the names of each nation. The Lord gave Samuel Mills many visions and plans. When he shared them with his friends, they wondered, "What can we do as college students?" Mills answered them with great faith, "Nothing shall be impossible with God."

 From then on, their prayer meeting was called the "Straw War Prayer Meeting". It later became a global movement. Within a few years of their beginning to pray, hundreds of workers began to rise up. In 1812, for the first time, a group from America came to the Indian subcontinent to minister. It is noteworthy that key workers such as Adoni Ram Judson and Luther Rice were sent to the movement created by Mills. Samuel Mills was responsible for the formation of such great institutions as the American Bible Society and the United Foreign Missionary Society. Thousands of workers were sent to countries like Asia, India, and Africa where the gospel had not gone. In the first 50 years since the beginning of the Straw War Prayer Meeting, 1250 missionaries arose from the villages and towns of the American nation. Youths who were proficient in many languages, such as Hebrew, Latin, and Greek, dedicated themselves. As a result, it was useful to have the Bible translated into many languages that did not have the Bible. Today, a memorial to this straw war prayer group is kept at Williams College in the United States. On June 16, 1818, at the age of 35, Samuel John Mills finished his run and went to rest in the presence of God. But his prayer, vision, and zeal raised thousands of workers. Beloved, reading this, perhaps our prayer life is exhausted. Let's allow God to rule and guide us today. Our prayer moves God. Our prayer can do extraordinary things.

 

Comments

Post a Comment

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines