Charles Thomas Studd (CT Studd) (Tamil & English)

           
கிரிக்கெடிற்கு ஒரு புது வடிவத்தையே இன்றைய தலைமுறையினர் உருவாக்கி விட்டனர்.கிரிக்கெட்... இப்ப வந்த விளையாட்டு அல்ல. முதுமையும் பழைமையும் நிறைந்த விளையாட்டுகளில் ஒன்று. பதினெட்டாம் நூற்றாண்டில் பலரால் பெரிதும் விளையாடப்பட்ட இவ்விளையாட்டில் ஆங்கிலேயர்கள் அதிகம் கவனம் செலுத்தினார்கள். கிரிக்கெட் வீரர் ஒருவரும் மிஷனெரியாக அர்ப்பணித்து ஊழியம் செய்ய சென்றார். என்ன? கிரிக்கெட் விளையாடிய வீரர் மிஷனெரியானாரா? இது சற்று விஷேசமான சங்கதி தான். 

 ஆம் ! 1860 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த Charles Thomas Studd பதினாறாம் வயதிலேயே மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரராக வாழ்ந்து வந்தார். அனைவரும் விரும்பக் கூடிய கதாநாயகனாகவும், தன்னுடைய கல்லூரியின் கேப்டனாகவும் C.T.Studd திகழ்ந்தார் . பணம் ,புகழ், இளமை, துடிப்பு ஆகியவை அவரை கிரிக்கெட் விளையாட்டு மலையின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. புகழின் உச்சியில் இருந்த ஸ்டட், 1878ஆம் ஆண்டு தன்னுடைய இளம் வயதில் ஊழியர் ஒருவருடனான சந்திப்பில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார் . அனுதினமும் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தினாலும் ஆண்டவருக்கென்று தனது சிறப்பான நேரத்தை அவர் தர ஒரு நாளும் மறந்ததே இல்லை. இத்தகைய பலமான உறவு ஸ்டட்டின் வாழ்க்கையை இன்னும் ஒரு படி உயர்த்தி விட்டது. ஒருநாள் தேவ சமூகத்தில் காத்திருக்கும் போது தேவன் ஸ்டட்யை முழு நேர பணியாளராக அழைத்தார் . இதனை சற்றும் எதிர்பாராத ஸ்டட் மிகுந்த போராட்டத்தில் இருந்தார். விளையாட்டு துறையில் சிறந்த இடத்தில் இருக்கும் ஸ்டட் மிஷனெரியாகச் செல்வதை மக்களும் விரும்ப இல்லை. ஆனால் தேவனுடைய தெளிவான நடத்துதலை உணர்ந்த ஸ்டட், உலகப்பிரகாரமான அனைத்து ஆசீர்வாதங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, தேவ பணிக்குத் தன்னை அர்ப்பணித்தார்.  

ஒரு முழு நேர பணியாளராக சீன தேசத்தில் தன்னுடைய ஊழியப் பயணத்தை தொடங்கினார். சீன உடை, கலாச்சாரம், உணவு என்று சீன தேச மக்களின் வாழ்க்கைக்குத்தக்க தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டார். தேவன் இவர் மூலமாக அநேக மக்களை சந்தித்தார். சீன தேச எழுப்புதலுக்கு இவ்வீரரின் பங்கு மிக முக்கியமானது. தனது 25ம் வயதில் தனக்கென்று வைத்திருந்த25000 பவுன்களையும் ஊழியத்திற்காக கொடுத்துவிட்டார். இளம் மிஷனெரியான ஐரீசை திருமணம் செய்து தன்னுடைய ஊழியத்தை தொடர்ந்து செய்து வந்தார். அடிக்கடி இங்கிலாந்து தேசம் சென்று ஊழியத்திற்கு தேவையான நிதியை திரட்டி வந்தார். அநேக கனிகளை கிறிஸ்துவுக்குள்ளாக கொண்டு வந்த இக்கிரிக்கெட் வீரர்1900ம் ஆண்டு ஊட்டி பகுதியில் குருவானவராக பணியாற்றினார். ஆறு வருடங்கள் இந்தியாவில் இருந்த ஸ்டட்.1910ம் ஆண்டு நரமாமிச பட்சிணிகளுக்கு மிஷனெரிகள் தேவை என்ற விந்தையான விளம்பரம் அவரைக் கவர்ந்தது. நற்செய்தியை அறிவிக்க ஆப்பிரிக்கா புறப்பட்டார். அது முதல் தான் மரிக்கும் வரை ஆப்பிரிக்க தேசத்தில் ஊழியத்தை செய்து வந்தார். பணம், புகழ், திறமை, இளமை, அறிவு என்று அனைத்தையும் இவர் பெற்று இருந்தாலும் அவற்றை தேவனுக்கு முன்பாக குப்பை என எண்ணினார். ஆயிரம் ஆயிரம் ரன்களை அல்ல, ஆயிரமாயிரம் ஆத்துமாக்களை தேவனுக்கென்று சொந்தமாக்கினார். தன்னையும், பிறரையும் சார்ந்து வாழாமல்,கிறிஸ்துவையே சார்ந்திருந்த தியாக தொண்டர் ஸ்டட், தனது 70வது வயதில் தேவனுடைய ராஜ்யத்திற்கு சென்றார் . பணங்களைத் தேடி அவர் செல்லவில்லை, அன்புள்ள மனங்களைத் தேடி சென்றார். அன்று விதைத்த விதை இன்றும் அநேக பூக்களைப் பூத்துக்குலுங்கச் செய்கிறது. நரகத்தின் நுழைவு வாசலில் ஒரு மீட்பின் கடையை நடத்த விரும்புகிறேன் என்று இவர் கூறுகிறார். இவ்வீரர் உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர் தானே. அழிந்து போகும் ஆத்துமாக்களை தேவன் அண்டையில் வழிநடத்திய C.T.ஸ்டட் போன்று நம்மையும் தேவன் பயன்படுத்த அவரிடம் அர்ப்பணிப்போம்.

 

Today's generation has created a new format for cricket. Cricket is not a new game. One of those games that is both new and old. In the eighteenth century, the British paid much attention to this game, which was widely played. A cricketer also dedicated himself as a missionary and went to work. What makes a cricketer a missionary? It's a rather special association.

Yes! Born in England in 1860, Charles Thomas Studd became a very talented cricketer at the age of sixteen. C.T. Studd was the lovable hero and captain of his college. Money, fame, youth, and vibrancy have taken him to the top of the mountain of cricket. Studd, who was at the height of his fame, accepted Jesus Christ as his personal Saviour in 1878, when he met a servant at a young age. Although he focused on his sport every day, he never forgot to give his best time to the Lord. Such a strong relationship has elevated Stutt's career to another level. One day, while waiting for God to present, God called Studd a full-time employee. Unexpectedly, Studd was in a great struggle. People also don't want to go as a student missionary to the best place in the sports industry. But Studd, realising God's clear dealings, cast off all worldly blessings and devoted himself to God's work.

 He began his ministry in China as a full-time minister. He changed himself completely to suit the life of the Chinese people in terms of Chinese dress, culture, and food. God met many people through him. The role of this player is very important for the Chinese national awakening. At the age of 25, he gave away his own £25,000 to the ministry. He married Iris, a young missionary, and continued his ministry. He used to visit England often to raise funds for the ministry. This cricketer, who brought many fruits to Christ, worked as a guru in the Ooty area in 1900. After six years in India, Studd was attracted by a strange advertisement in 1910 that wanted missionaries for cannibals. Africans set out to preach the gospel. From then until his death, he was doing ministry in African countries. Money, fame, talent, youth, and knowledge he got, but he considered them rubbish before God. He did not make thousands of runs, but thousands of souls belong to God. Studd, a self-sacrificing volunteer who did not depend on himself or others but depended on Christ, went to the kingdom of God at the age of 70. He didn't go looking for money; he went looking for kind hearts. The seed sown that day still makes many flowers bloom. He says he wants to run a redemption shop at the entrance to hell. This player is truly to be admired. Like C.T. Studd, who led perishing souls to God's neighbour, let us consecrate ourselves to God for his use.

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)