பரிசுத்த பிரான்சிஸ் அசிசி, Francis of Assisi ( tamil & English)

இத்தாலி தேசத்தில் 13-ம் நூற்றாண்டின் பரிசுத்தவான் என அழைக்கப்பட்ட பிரான்சிஸ் அசிசிஇ வித்தியாசமாக வாழ்ந்தார். அவர் நம்மைப் போல் சாதாரண மனிதர் தான் என்றாலும், தேவன் அவரை அசாதாரணமான காரியங்களை செய்ய பயன்படுத்தினார். வேதத்தில் நோவா தேவனோடு சஞ்சரித்தது போல, பிரான்சிஸ் அசிசியும் தேவனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.அவர் அனுதினமும் : 1. தேவனோடு சஞ்சரித்தார்.
 2. பரிசுத்தமான வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
3. ஜனங்களிடம் அன்பு கூர்ந்தார். இம்மூன்றையும் ஒரு நாள் தவறாது அனுதினமும் கடைபிடித்து வந்தார். இவர் மூலமாக தேவன் 157 அசாதாரணமான அற்புதத்தை இத்தாலியில் செய்தார். அவற்றில் ஒன்றை நாம் இங்கு பார்க்கலாம். பிரான்சிஸ் அசிசி இயற்கையோடு பேசி கர்த்தரை துதிக்கும் பழக்கம் கொண்டவர். தேவன் படைத்த மிருகங்கள், விலங்குகள் என அனைத்தும்,இவர் தேவனை துதிக்கும் போது, அவருடன் இணைந்து துதிக்கும். இவர் துதித்துக் கொண்டே சாலையில் நடந்து செல்லும் போது, சாலையின் இருபுறத்திலும் உள்ள மரங்கள்,செடி, கொடிகள் சந்தோஷமாக அசைந்து, இவரோடு சேர்ந்து தேவனைத் துதிக்கும். ஆற்றோரம் செல்லும் போது, மீன்கள் துள்ளித்துள்ளி கர்த்தரை புகழ்ந்து பாடும். ஆச்சரியமாக உள்ளதல்லவா? ஒரு முறை காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த நரி ஒன்று அருகிலுள்ள கிராமத்திற்குள் நுழைந்து, மக்களை துன்புறுத்தி அக்கிராம மக்களின் வாழ்வாதாரமான ஆடு, மாடு, கோழிகளை கடித்து வந்தது. பிரான்சிஸ் அசிசி, அக்கிராம மக்களை சந்திக்கச் சென்ற போது, நரியின் சேட்டைகளை மக்கள் மூலம் கேட்டறிந்தார். காட்டிற்குள் சென்று நரியை பார்க்க விரும்பிய பிரான்சிஸ் அசிசியை அக்கிராம மக்கள், அவர் உயிருக்கு ஆபத்து வரும் என்று கூறி தடுத்தனர். பிரான்சிஸ் அசிசியோ, காட்டிற்குள் சென்று நரியிடம் தன் பேச்சை தொடங்கினார். "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அமைதியாய் இரு" என்று அவர் கூறிய மறுநிமிடத்திலேயே அந்நரி தன் வாலைச் சுருட்டி அமைதியாக நின்றது. மேலும் அவர்,"மக்களை கஷ்டப்படுத்துவது தவறு; இனி இப்படி தவறு செய்ய கூடாது; வா! மக்களிடம் மன்னிப்பு கேட்கலாம்" என்று அன்பாக கூறியவுடன், நரி அவரோடு அமைதியாக நடந்து வந்தது. கிராமத்திற்குள் நரியுடன் நடந்து வந்த அசிசியை பார்த்தவுடன் மக்களின் இருதயம் தூக்கி வாரிப் போட்டது. நரி மக்களைக் கண்டவுடன், முழங்காலிட்டு,தன் வாலை சுருட்டி தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டது.பிரான்சிஸ் அசிசியும் மக்களிடம், நரியுடன் உடன்படிக்கை செய்ய கேட்டுக் கொண்டார். அவர்களும் அப்படியே நரியுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு அன்பாக பழகி வந்தார்கள்.அதன் பின் நரி காட்டிற்குள் செல்லாமல் மக்களோடு மக்களாக கிராமத்திலேயே தங்கியது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து நரி மரித்துப் போனது. அந்நரியை கிராம மக்களே தங்கள் கிராமத்தில் அடக்கம் பண்ணினார்கள். இந்நரியைப் போன்று பூமியில் தேவன் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளும் பிரான்சிஸ் அசிசிக்கு இணங்கி, தேவனைத் துதித்தது. நாம் துதிக்கும் போது தேவ பிரசன்னம் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளும். தேவ பிரசன்னம் இருக்கும் போது, பர்வதங்கள் கூட மெழுகு போல உருகுமல்லவா?
1. இன்று நம்முடைய துதி எப்படிப்பட்டதாய் உள்ளது?
2. நாம் தேவனோடு சஞ்சரிக்கிறோமா?
3. பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
4. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மில் தேவனை காண்கிறார்களா? 

Francis of Assisi, a 13th-century saint in Italy, lived a different life. Although he was an ordinary man like us, God used him to do extraordinary things. As Noah walked with God in the scriptures, Francis of Assisi also had a close relationship with God. He daily: 1. Walked with God. 2. He gave importance to holy living. 3. He loved people. He used to follow these three without fail every day. Through him, God performed 157 extraordinary miracles in Italy. Let us see one of them here. Francis of Assisi had a habit of talking to nature and praising God. All the animals and creatures created by God, when he praises God, praise along with him. When he walks on the road while praising, the trees, plants, and vines on both sides of the road shake happily and praise God along with him. As they move along the river, the fish leap and sing praises to the Lord. Isn't it amazing? Once upon a time, a fox living in the forest entered a nearby village, harassed the people, and bit the goats, cows, and chickens that were the livelihood of the villagers. Francis of Assisi heard the fox's antics through the people when he visited the villagers. Francis of Assisi, who wanted to go into the forest to see the fox, was prevented by the villagers, who said that his life would be in danger. Francis Assisi went into the forest and began his conversation with the fox. The moment he said, "Be still in the name of Jesus Christ," the fox curled its tail and stood still. And when he kindly said, "It is wrong to make people suffer; don't make this mistake again; come! Let's apologise to the people," the fox walked quietly with him. As soon as they saw Assisi walking into the village with the fox, the hearts of the people were lifted. When the fox saw the people, it knelt down, curled its tail, and apologised for its mistake. Francis of Assisi also asked the people to make a pact with the fox. They also made a peace agreement with the fox and used to be friendly. After that, the fox did not go into the forest and stayed with the people in the village. After about two years, the fox died. The villagers buried the fox in their village. Like this fox, all the creatures God created on earth obeyed Francis of Assisi and praised God. When we praise, God's presence completely overwhelms us. Do not even the mountains melt like wax in the presence of God?

1. What is our praise like today?

2. Are we walking with God?

3. Emphasis on holiness?

4. Do those around us see God in us?

 

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)