Bishop Polycarp, Christian bishop of Smyrna (tamil & English)


ரோம சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் விசுவாசிகள் அதிக சித்திரவதைக்கு உள்ளானார்கள். கிறிஸ்துவை மறுதலித்து ரோம கடவுளை வணங்க கட்டளை பிறப்பித்திருந்த காலம் அது. ரோம கடவுளை வணங்காதவர்கள் சிங்கத்திற்கு இரையாக போடப்பட்டனர். கிறிஸ்துவை பின்பற்றியதால் பலவித சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாயினர். அப்போஸ்தலனாகிய யோவானின் சீடர்களில் ஒருவராக இருந்த போலிகார்ப் மரணத்தைக் கண்டு பயம் கொள்ளாத விசுவாச வீரராக வாழ்ந்து வந்தார். கிறிஸ்துவின் நிமித்தம் துன்பப்படுவதை இன்பமாக எண்ணியவர். சிமிர்னா பேராயராக பணியாற்றி வந்த 86 வயதான போலிகார்ப்பை கொல்ல ரோம அரசாங்கம் வகை தேடிவந்தனர். அவரை கைது செய்வதற்கு மூன்று நாட்கள் முன்பதாக, அவர் தனது அறையில் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது தனது தலையணை, தீப்பற்றி எரிவதைப் போன்ற தரிசனத்தை கண்டார். அன்று முதல் தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தான் விரைவில் உயிரோடு எரிக்கப்படப் போவதாக கூறினார்.

போர்வீரர்கள் போலிகார்ப்பை பிடிக்க வந்த அன்றும், கிறிஸ்துவின் சித்தம் மட்டுமே நடக்கும் என்று கூறி அவர்களிடம் தனக்கு ஒரு மணி நேரம் ஜெபிக்க அனுமதி தர கோரினார். மரணம் சமீபமாய் இருந்த போதிலும், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போலிகார்ப் ஜெபித்ததைக் கண்ட போர்வீரர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரை கழுதையில் ஏற்றி எரியூட்டப்பட வேண்டிய மைதானத்திற்கு அழைத்து வந்தனர். அவரைக் கொல்ல வேண்டும் என்ற உரத்த சப்தத்தோடு, இரத்த வெறியுடன் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. திடீரென்று பரலோகத்திலிருந்து, " போலிகார்ப் புருஷனாயிரு; போகார்ப் புருஷனாயிரு " என்று தொனித்த சப்தம் பலருடைய காதையும் எட்டியது. போகார்ப் இயேசுவை மறுதலிக்க வைக்க ரோம கவர்னர் அதிகம் முயற்சி எடுத்தார். கிறிஸ்துவை மறுதலித்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி அவரை மறுதலிக்க உந்தித் தள்ளினார். போகார்ப்போ, " 86 ஆண்டுகளில் என்னை ஒருநாளும் இயேசு கிறிஸ்து கைவிடவில்லை, எனது ராஜாவை நான் எப்படி மறுதலிப்பேன்" என்று வீர முழக்கமிட்டார். ரோமன் கவர்னர், "என்னிடம் கொடிய மிருகங்கள் உள்ளன, உன்னை அவைகளிடம் தூக்கி எறிந்தால், அடுத்த நிமிடமே நீ எதற்கு இறையாவாய்" என்றார். அதற்கு போகார்ப் சற்றும் பயப்படாமல், "அவைகள் என்னை தாக்க வரட்டும், எனது முடிவு எனது ஆண்டவரின் கையில் தான்" என்று கூறினார். ரோம கவர்னரோ, "ஒருவேளை உனக்கு மிருகங்களின் மீது பயம் இல்லை என்றால், உன்னை எரித்து விடுவேன்" என்றார். போகார்ப்பிடம் எந்த பயமுறுத்தல்களும் பயனளிக்கவில்லை. கிறிஸ்துவை மறுதலிக்க கூறியவர்களிடமும், கிறிஸ்துவின் அன்பை பற்றி எடுத்துக் கூறினார். மேலும், " நீ என்னை ஒரு மணி நேரம் எரிக்கும் தீயை வைத்து பயம் காட்டுகிறாய், ஆனால் எரியும் நரகத்தில், நித்திய நித்தியமாய் நீ வாழ போகிறதை குறித்த கவலை உனக்கு இல்லையா? மிருகங்களை கொண்டுவா அல்லது தீயில் என்னை போட்டு விடு, ஆனால் என் விசுவாசத்தை அசைக்க உன்னால் முடியாது" என்று வீரச் சவால் விட்டார்.

போலிகார்ப்பின் விசுவாசத்தைக் கண்ட யூதர்களும் மற்றவர்களும் அவரை எரிக்கும் படி கூக்குரலிட்டனர். ரோம கவர்னரின் உத்தரவுப்படி, உடனடியாக மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டு நடு மைதானத்தில் அடுக்கி வைக்கப்பட்டது. அவரை ஆணி அடித்து எரிக்க முற்பட்ட போதும் அவர், " என்னை இவ்வாறே விடுங்கள், இதுவரை பெலன் தந்த தேவன், இதையும் தாங்க எனக்கு பெலன் தருவார்" என்று கூறினார். உடனே அவரது கரங்களை மாத்திரம் கட்டினார்கள். அவர் தனது இறுதி ஜெபத்தில், "ஆண்டவரே என்னையும் இரத்த சாட்சிகளின் வரிசையில் இணைத்த பாக்கியத்திற்காக நன்றி, என்னை ஜீவபலியாக ஏற்றுக்கொள்ளும், ஆமென்" என்று தைரியமாக ஜெபித்து முடித்தார். ஆமென் என்ற வார்த்தை வந்த அடுத்த நொடியில் நெருப்பு எரியத் தொடங்கியது. நெருப்பு அவரது உடலைத் தாண்டி எறிந்தது. ஆகவே அவரது உடல் சிறிதளவேனும் எரியவில்லை, என்ன அற்புதம்!

 அவரது உடல் அந்த நெருப்பின் நடுவில் தங்கமும் வெள்ளியுமாய் பிரகாசிக்கிறதையும், எரியும் நெருப்பில் இருந்து சுகந்த வாசனை வந்ததாகவும், அந்நிகழ்வை பார்த்தவர்கள் சாட்சி பகருகிறார்கள். தீ அவரை காயப்படுத்தாத காரணத்தால், அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவர் குத்தப்பட்டவுடன், அவரது சரீரத்திலிருந்து வெள்ளமாய் புரண்டோடிய இரத்தம் அத்தீயை அணைத்தது. சிமிர்னாவின் 12வது இரத்த சாட்சியாக போலிகார்ப் மரித்தார்.

இன்று போலிகார்ப்பை போன்ற விசுவாசம் நம்மிடம் காணப்படுகிறதா? "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" (யோவான் 12: 24 ) கோதுமை மணியாக கிறிஸ்துவுக்காக மடிய நாம் ஆயத்தமா?

Believers who accepted Christ in the Roman Empire suffered much persecution. It was a time when the order was given to reject Christ and worship the Roman God. Those who did not worship the Roman gods were thrown to the lions. They were subjected to many kinds of torture and cruelties because they followed Christ. Polycarp, who was one of the apostle John's disciples, lived as a warrior of faith who did not fear death. He who thought it a pleasure to suffer for Christ's sake The Roman government sought to kill the 86-year-old Polycarp, who was serving as the archbishop of tradition. Three days before his arrest, he was praying in his room when he had a vision of his pillow burning. From that day on, he told everyone he met that he would soon be burned alive.

 Even on the day when the soldiers came to capture Polycarp, he asked them to allow him to pray for an hour, saying that only the will of Christ would be done. Although death was imminent, the warriors were surprised to find that Polycarp had prayed for more than two hours. He was brought on a donkey to the ground, where he was to be cremated. The crowd was filled with bloodlust and clamouring to kill him. Suddenly a voice from heaven, "Polycarp be a man; Bocarp be a man," reached the ears of many. The Roman governor tried hard to get Bocarp to deny Jesus. He pushed him to deny Christ by saying words of desire: "If you deny Christ, we will leave you. "Jesus Christ has never forsaken me in 86 years; how can I deny my King?" Bogarpo shouted. The Roman governor said, "I have fierce beasts; throw thee to them, and the next moment thou art a god." Bokarp was not at all afraid of that and said, "Let them come to attack me; my decision is in the hands of my Lord." The Roman governor said, "Perhaps if you are not afraid of beasts, I will burn you." No intimidation was available to Bokarp. He spoke about Christ's love for those who rejected him. And, "You show fear by putting me in a fire that will burn for an hour, but don't you care that you are going to live in a burning hell for eternity? Bring animals or put me in the fire, but you can't shake my faith."

Seeing Polycarp's faith, the Jews and others clamoured to burn him. On the order of the Roman governor, logs were immediately brought and stacked in the middle ground. When they tried to nail him and burn him, he said, "Leave me like this. God, who has given me strength so far, will give me strength to bear this too." Immediately, they only tied his hands. In his final prayer, he boldly concluded by praying, "Lord, thank you for the privilege of joining me in the ranks of blood witnesses; accept me as a living sacrifice, Amen." The next moment the word "amen" came out, the fire started burning. Fire shot past his body. So his body was not burned at all—what a miracle!

Eyewitnesses testify that his body shone like gold and silver in the middle of the fire and that a sweet fragrance came from the burning fire. As the fire did not injure him, he was ordered to be stabbed to death. As soon as he was stabbed, the blood that gushed from his body extinguished the fire. Polycarp died as Smyrna's 12th blood witness.

Do we have faith like that of Polycarp today? "An ear of wheat falls to the ground, remains alone, and bears much fruit in the dead." (John 12:24) Are we ready to die for Christ as an ear of wheat?


Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)