ஜிம் எலியட் Jim Elliot
கலாச்சாரம் கடந்து தொலைதூரத்தில் செய்யப்படும் மிஷனெரிப் பணி என்றாலும் சரி, அருகில் உள்ளோருக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பைச் சொல்லும் சுவிசேஷப்பணி என்றாலும் சரி, இரண்டிற்கும் இளைஞர்களின் இளம் தோள்கள் அவசியம் தேவை. இளம் தரிசன வீரர் ஜிம் எலியட், அவ்வாறு தரிசனத்தோடு, அழிந்து கொண்டிருக்கும் மால்தோ சமுதாயத்தை மாற்ற தன்னையே கோதுமை மணியாக அர்ப்பணித்தவர். இன்றும் அதன் விளைச்சலை நாம் கண்கூடாக மால்தோ மலையில் பார்க்க முடியும். முன்னோடி ஊழியர் சகோதரர் பேட்ரிக் ஜாஷ்வா - சகோதரி சுஷிலா பேட்ரிக் தம்பதியினருக்கு பிறந்த இரண்டாவது மகன் ஜிம் எலியட். எக்வேடார் பகுதியில் வாழ்ந்த ஆக்கா மக்கள் மத்தியில் சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்று வீர மரணம் அடைந்த ஜிம் எலியட் என்ற அமெரிக்க மிஷனெரியுடைய வாழ்க்கையின் தாக்கத்தினால் இந்த மகனுக்கு ஜிம் எலியட் என பெற்றோர் பெயர் வைத்தார்கள். ஆண் பிள்ளைக்கு அழகு தரும் குறும்பு, மரமானாலும் மலையானாலும் ஏறிப் பார்க்கத் துடிக்கும் சுறுசுறுப்பு, அதிர வைக்கும் ஆர்ப்பரிப்பு, புதியவைகளை கற்பது, எதையும் துருவி ஆராய்வது என வாழ்ந்தவர். அவரைச் சுற்றி அனைத்து தரப்பு வயதினரும் எப்பொழுதும் உண்டு. மத...