LADY DOAK COLLEGE | Katie வில்கஸ் | கேட்டி வில்காக்ஸ்

 கேட்டி வில்காக்ஸ்

            கேட்டி வில்காக்ஸ், 1889 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி அமெரிக்க தேசத்தின் செஸ்டர் நகரில் ஜோசப் மற்றும் அன்னா ஷாஃபர் வில்காக்ஸ் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். ஐந்து சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் என்ற மிகப்பெரிய குடும்பத்தில் இவர் பிறந்தார். பிறந்ததிலிருந்தே பெண் உரிமையை தன் வாழ்வில் அனுபவித்தவர். 1905 ஆம் ஆண்டுகளில் தன் பள்ளிப் படிப்பை டீப் ரிவர் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் மவுண்ட் ஹேலியோக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, 1911 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அக்கல்லூரியின் குறிக்கோள் "யாரும் போக முடியாத இடத்திற்குச் செல்; யாரும் செய்ய முடியாததை செய்" என்பதாகும். இவ்வார்த்தைகள் கேட்டியின் மனதில் ஆழமாகப் பதிந்தது. கல்லூரி நாட்களிலேயே தன் வாழ்க்கை கிறிஸ்துவின் சேவைக்கே என்பதில் உறுதியுடன் இருந்தார்.  

இந்தியாவில் ஊழியம்:

கல்லூரி படிப்பிற்குப் பின், அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே இயேசு கிறிஸ்துவின் அன்பை அதிகம் ருசித்ததால், அவர் மீது அதிக விசுவாசம் கொண்டார். 1915 ஆம் ஆண்டு கேட்டி, தன்னுடைய 26 ஆம் வயதில் இந்தியா வர முடிவு செய்தார். American Board of Commissioners for foreign Mission (ABCFM) என்ற அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பு அவரை இந்தியாவிற்கு அனுப்பியது. 

மதுரை ஊழியங்கள்:

அந்நாட்களில் மதுரையில் பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் கல்லூரியில் படிக்க வேண்டுமானால் சென்னை, திருநெல்வேலி போன்ற மாவட்டத்திற்கு சென்று தான் படிக்க முடியும். முதன்முதலாக கேட்டிக்கு, மதுரை கேப்ரன் ஹால் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கு கல்வி மூலம் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவுள்ளவராக இருந்தார். இப்பள்ளியில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த பிள்ளைகள் கல்வி கற்று வந்தனர். இப்பள்ளியில் சகோதரி நாய்ஸ் அவர்கள் முதல்வராக பணி செய்து வந்தார். இப்பள்ளியில் கேட்டி ஆங்கிலமும், கணிதமும் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் கற்றுக் கொடுத்தார். சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் வாழ்வில் முன்னேற ஆரம்பித்தனர். 

மதுரைக்கு கல்வி கொடுக்க தன் நாட்டில் பண உதவி:

அதுமட்டுமல்ல, 1922 ஆம் ஆண்டு கேட்டி வில்காக்ஸ் தன் தாய் நாடான அமெரிக்காவிற்கு சென்று, தன் நண்பர்களிடம் மங்களாபுரம் பெண்களின் நிலையை எடுத்துக் கூறினார். அதன் பலனாக, அவர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு கேப்ரன் ஹால் பள்ளியில் மேலும் அநேக வகுப்புகள், பயிற்சி நிலையங்கள், விடுதிகள் போன்றவற்றை அமைத்து விரிவுபடுத்தினார். அந்த ஆண்டு மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்ததால், மங்களாபுரம் கேப்ரன் ஹால் பள்ளியின் விரிவாக்கப் பணியை அதிகம் பாதித்தது. ஆகவே பள்ளியின் முதல்வர் சகோதரி நாய்ஸ் அம்மையாரும், கேட்டி அம்மையாரும் இணைந்து வைகை ஆற்றின் வடப்பக்கத்தில் நிலம் வாங்க எண்ணினார்கள். நல்லாகுளத்தினருகில் உள்ள பனை மரக் காடு விலைக்கு வருவதை கேள்விப்பட்டார்கள். இருவரும் உடனே அந்த நிலத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 1926 ஆம் ஆண்டு நாய்ஸ் அம்மையார் நிதி திரட்ட அமெரிக்கா தேசம் சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்கவில்லை. ஆனால் அமெரிக்க திருச்சபை இதற்கு ஒப்புக் கொண்டது. நாய்ஸ் அம்மையார் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என்றாலும், அங்கு அவரது உடல்நிலை சரியில்லாமல் போகவே விரைவாக இந்தியாவிற்கு திரும்பினார். 1929 ஆம் ஆண்டு நல்லாகுளத்தில் இருந்த 31 ஏக்கர் நிலத்தை மிகவும் கஷ்டப்பட்டு வாங்கினார்கள். ஆனால் 1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க தேசத்தையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்க திருச்சபையின் அனைத்து வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையில் 1931 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அன்று நாய்ஸ் அம்மையார் தேவ ராஜ்ஜியம் சென்றடைந்தார். அவரின் இழப்பு கேட்டி அம்மையாரை அதிகம் பாதித்தது. நாய்ஸ் அம்மையார் விட்டுச்சென்ற பள்ளிப் பொறுப்பை ஏற்று, கேட்டி அம்மையார் கேப்ரன் ஹால் பள்ளியின் முதல்வராகவும், நிர்வாகச் செயலாளராகவும் பணி செய்தார்.

மதுரையில் பெண்களுக்கான கல்லூரி: 

அமெரிக்க திருச்சபை, கேப்ரன் ஹால் பள்ளியை விரிவுபடுத்த 25,000 டாலர் பணத்தை நன்கொடையாக அளித்தது. 31 ஏக்கர் நிலத்தில் 14 ஏக்கர் நிலம் உயர்நிலைப் பள்ளிக்காகவும், மீதமுள்ள 17 ஏக்கர் நிலத்தில் பெண்கள் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கும் திட்டமிட்டார். 

பள்ளியை விரிவுபடுத்த நிதி திரட்ட ஆரம்பித்தார். ஏழை - பணக்காரர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என அனைத்து தரப்பு மக்களையும் கேட்டி அம்மையார் சென்று சந்தித்தார். வசதி படைத்தவர்களின் ஆயிரங்களும், ஏழை மக்களின் சில்லறைகளும் கூட அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது. குறிப்பாக, கேப்ரன் ஹால் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை நேரில் சென்று சந்தித்து உதவிகளைப் பெற்றார். சுற்றியிருந்தவர்களின் எதிர்மறையான பேச்சுக்கள் அவரை அதிகம் சோர்வுற செய்தது. என்றாலும், கிறிஸ்து தந்த பெலத்தினால் பணத்தை திரட்டும் பணியில் முன்னோக்கி சென்றார். ஒருமுறை நிதி திரட்ட சென்று கொண்டிருந்தபோது, அவர் கால் செருப்பு அறுந்து விட்டது. அச்சமயம் அவற்றை சரி செய்வதற்கான பணம் கேட்டி அம்மையாரிடம் இல்லை. ஆகவே நிதி திரட்டிய பணத்திலிருந்து காலணாவை எடுத்து, தன் செருப்பை சரி செய்தார். வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக, அந்த காலணாவை தன்னுடைய கணக்கில் எழுதினார். இவ்வாறு சின்ன சின்ன விஷயத்திலும் கேட்டி அம்மையார் உண்மையுள்ளவராக இருந்தார். "Always for the truth" என்று அடிக்கடி கூறுவார். தேவன் தம்முடைய ராஜ்ஜிய கட்டுமான பணியை இப்படிப்பட்ட உண்மையுள்ளவர்களின் கரங்களில் கொடுக்கிறார்.

OCPM பள்ளி:

அமெரிக்க திருச்சபையிடமிருந்து காசோலை ஒன்று பள்ளி கட்டுவதற்காக வந்தது. அத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதில் அமெரிக்காவில் வசித்து வந்த வில்லியம் பியர்ஸ் மற்றும் அவரது மனைவி ஆர்லாண்டோவும் தங்கள் உயிலில் இருந்து 20,000 டாலரை இந்த நிதிக்காக கொடுத்திருந்தனர். அனைவரும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாய்ஸ் அம்மையாரின் தரிசனம் நிறைவேறப்போவதை எண்ணி ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும், அவர் இதைப் பார்க்க இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு பக்கம் காணப்பட்டது.

பள்ளி கட்டிடத்தை ஆர்லாண்டோ சார்லஸ் பியர்ஸ் நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (Orlando Charles Pierce Memorial Women's Higher Secondary School) என்று பெயரிடவும், பள்ளி வளாகத்தை நாய்ஸ் தோட்டம் (Noyes Garden) என்றும் பெயரிட தீர்மானித்தார். இப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என்பது நாய்ஸ் அம்மையாரின் கனவு. ஆகவே, அம்மேல்நிலைப் பள்ளியிலேயே, ஆங்கிலப் பள்ளியையும் (Noyes Matriculation School) உருவாக்கத் திட்டமிட்டார். தேவனுடைய அனாதி தீர்மானத்தின்படி, 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 18-ம் நாளன்று, எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்ற கருப்பொருளின் அடிப்படையில் OCPM பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது கேட்டி அம்மையாரால் திறக்கப்பட்டது. மாணவர்கள் வந்து செல்வதற்காக, முதன்முதலாக மதுரையில் பேருந்து வசதியையும் கேட்டி வில்காக்ஸ் அம்மையார் அறிமுகம் செய்தார்.   

லேடி டோக் கல்லூரி: 

31 ஏக்கர் நிலத்தில் 14 ஏக்கர் நிலத்தில் OCPM பள்ளியை நிறுவிய பின், எஞ்சியுள்ள 17 ஏக்கர் நிலத்தில் பெண்களுக்கான கல்லூரியை நிறுவுவதில் தன் முயற்சியை மேற்கொண்டார். அவருடைய முயற்சிகளுக்கு ஹெலன் டோக் அம்மையாரும் உதவியாக இருந்தார். கிறிஸ்துவின் பணியை இருவரும் இணைந்து ஒருமனமாகச் செய்தார்கள். 

1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சி எப்படி OCPM பள்ளி உருவாக்கும் பணியைத் தடை செய்ததோ, அதேபோல 1939 ஆம் ஆண்டு ஆரம்பித்த இரண்டாம் உலகப்போர் இக்கல்லூரி நிறுவும் பணிக்கும் மிகப்பெரிய தடையாக இருந்தது. உடனடியாக கேட்டி அம்மையார் அநேகரை கூட்டி ஆலோசித்தார். அநேகர் நிதி உதவிகளை செய்தனர். குறிப்பாக, லேடி டோக் மற்றும் அவரது கணவர் ஜேம்ஸ் டோக் ஆகிய இருவரும் கேட்கும்போதெல்லாம் வாரி வாரி கொடுத்தார்கள். இதற்கு மிகச் மிக முக்கிய காரணமாக இருந்தவர் லேடி ஹேலன் டோக் அம்மையார். அன்றே, இனி உருவாகப் போகிற கல்விக்கு இவ்வம்மையாரின் பெயரையே சூட்ட வேண்டுமென கேட்டி அம்மையார் முடிவு செய்தார். 

1948 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி அன்று லேடி டோக் அம்மையாரால் கல்லூரிக்கு அடித்தளம் போடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்று கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. நான்கே மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது என்று ஆச்சரியப்பட வேண்டாம். அனைத்து கட்டிடங்களும் கூரை குடில்கள் மூலமாக அமைக்கப்பட்டது. முதல் கூரையில் சிற்றாலயம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் 12 பேராசிரியர்கள், 81 இன்டர் மீடியட் பயிலும் மாணவர்கள், முழுமையடையாத ஒரு விடுதி ஆகியவையே இயங்கி வந்தது. இக்கல்லூரி ஆரம்பித்த நாட்களில் இருந்தே வேதத்தின் மையப் பொருளான அன்பு, தியாகம், சத்தியம், நியாயம், சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. "Semper Pro Veritable" (உண்மைக்காக எப்போதும்) என்பதை பொன்மொழியாகக் கொண்டு இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பொன்மொழியானது 2 கொரிந்தியர் 13:8-ல் "சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

இறப்பு:

திருமணம் ஆகாமலேயே தன் வாழ்வு முழுவதையும் தேவனுக்காக செலவு செய்தார் கேட்டி அம்மையார்.  தனிமை, நோய், கலாச்சாரம் ஆகியவற்றை இயேசு கிறிஸ்துவின் துணையோடு தாங்கினார். லேடி டோக் கல்லூரியில் இன்றும் செயல்பட்டு வரும் வில்காக்ஸ் (Wilcox) சிற்றாலயம், தினசரி ஜெபங்கள், வேத பாட வகுப்புகள், ஞாயிறு ஆராதனை ஆகிய அனைத்தும் வில்காக்ஸ் அம்மையார் ஆரம்பித்த ஆவிக்குரிய காரியங்களாகும். 1958 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று அமெரிக்காவிற்கு திரும்பினார். அவர் படித்த மவுண்ட் ஹொலியோக் கல்லூரி அவருக்கு Doctors of Humane Letters என்ற கௌரவ பட்டம் அளித்து கௌரவித்தது. 1974 ஆம் ஆண்டு தேவராஜ்யத்தில் இளைப்பாரச் சென்று விட்டார்.

 "இயேசு என்னை அனுப்பினார்; அவர் என்னை தாங்குவார்" என்ற விசுவாசத்தில் 40 ஆண்டுகள் இந்தியாவில் பணி செய்தார். 81 மாணவிகளைக் கொண்டும், ஒரு நூலக அறையில் ஒரு சில புத்தகங்கள், ஒரேயொரு விடுதி, ஒரு சில கூரைமாடி குடில்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த இக்கல்லூரியானது, இன்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அனைத்து தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அரங்குகள் திரையரங்குகள், அழகிய ஆலயம், மருத்துவமனை, உணவகங்கள் என பல்வேறு விதங்களில் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தற்போது இக்கல்லூரியில் சுமார் 4500 மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு சுமார் 211 ஆசிரியர்களும், 139 நிர்வாக பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் சேவை செய்தும் வருகின்றனர். 1978 ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு கல்வி தன்னாட்சி வழங்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் தன்னாட்சி பெற்ற ஆரம்ப கால கல்லூரிகளில் ஒன்றாக இக்கல்லூரி திகழ்கிறது. மதம், மொழி, இனம் தாண்டி பலதரப்பட்ட மாணவிகள் இங்கு கல்வி கற்க வருகின்றனர். கல்லூரியை விட்டுத் திரும்பிச் செல்லும்போது, கிறிஸ்துவின் அன்பை சுமந்து கொண்டு செல்கின்றனர். அவர்களில் பலர் இன்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் வாழ்கின்றனர். 

இவ்வாறு தன் வாழ்வை முழுவதுமாக தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்க்கை ஓட்டத்தை முடித்தார் கேட்டி அம்மையார். இன்று தேவன் நமக்கு கொடுத்துள்ள இந்த வாழ்வை எப்படி கழிக்கிறோம்? அவருக்கு நாம் திரும்ப எதைக் கொடுக்கிறோம்? சிந்தித்துப் பார்ப்போம்.


Katie Wilcox

Katie Wilcox was born on July 26, 1889, in Chester, United States of America, to Joseph and Anna Schaeffer Wilcox. She was born into a large family consisting of nine children including her, with her five sisters and three brothers. Right from her birth she experienced women's rights in her life. Ms. Wilcox completed her schooling at Deep River High School around 1905. Subsequently, she studied at Wesleyan University for two years before transferring to Mount Holyoke College, where she received her degree in 1911. The motto of that college is, "Go where no one can go; do what no one can do." These words got deeply embedded in Katie’s mind. During her college days, she made a firm decision that her life was to be solely dedicated to the service of Christ.

Ministry in India:

After completing his college education, she worked as a teacher in schools in the United States. Having experienced the love of Jesus Christ since childhood, she had a profound faith in Him. In 1915, at the age of 26, Katie decided to come to India. She associated herself with American Board of Commissioners for Foreign Mission (ABCFM) and subsequently was sent to India by that organization.

Ministry in Madurai:

During those days, women’s education in Madurai was in a pathetic condition. Women had to travel to districts like Chennai or Tirunelveli to pursue their college education. For the very first time, Katie got an opportunity to work as a teacher at Capron Hall Secondary School in Madurai. She was very particular that through education, women should receive their due recognition in the society. Children from very poor background received their education in this school. Sister Noyes was the headmistress of this school. In this school, Ms. Katie taught English and Maths to the students in a way they could easily understand. Students from socially disadvantaged backgrounds began to make progress in their lives.

Fundraising efforts in home country to provide education in Madurai:

In 1922 Katie Wilcox travelled to her home country, United States of America, where she explained the plight of women at Magalapuram to her friends. Consequently, with the funds received from them, she carried out extension work at Capron Hall School by building additional classrooms, training centers and hostels. A catastrophic flood that occurred in Madurai that year severely affected the extension work at Magalapuram Capron Hall school. Therefore, Ms. Noyes, the headmistress of the school, and Ms. Katie Wilcox together decided to purchase a land to the North of river Vaigai. When they came to know that a palmyra groove at Tallakulam was on sale, they immediately started to make arrangements to acquire it.

In the year 1916 Ms. Noyes travelled to America to raise funds. She was disappointed that she couldn’t raise the anticipated amount during her visit. Nevertheless, her joys knew no bounds when the American Church accepted to support the cause. Because she fell ill there, she had to return to India sooner. In the year 1929, overcoming significant difficulties, they acquired the 31 acres of land in the Tallakulam area. In 1930, there was a global economic crisis which didn’t spare America either. Because of that, all the activities of the American Church were suspended. Amidst these events, on January 14, 1931, Ms. Noyes had her home calling and entered into God’s kingdom. Her loss deeply affected Ms. Katie Wilcox. As the mantle fell on her, Ms. Katie Wilcox took up the responsibility of the school and functioned both as the correspondent and administrative secretary of Capron Hall School.

Establishing college for Women in Madurai:

The American Mission donated $25,000 for the extension work in Capron Hall School. In the 31 acres of land, Ms. Katie decided to build a high school in 14 acres and a Women’s college in the remaining 17 acres. She began to raise funds to expand the school. Mrs. Katie went out to meet and solicit contributions from people from all walks of life—rich and poor, high and low alike. The 1000s contributed by the rich and the few coins she received from the poor were of immense help to her. She also met the alumnae of Capron Hall school in particular and sought their assistance. The negative remarks made by those around her made her feel depressed. Yet, with Christ’s strength, she carried on with her fundraising efforts. On one occasion, while on her fundraising mission, her slipper strap snapped and she didn’t have money to fix it at that moment. So, to repair her slippers, she took a quarter-anna coin from the fund she had collected. On returning home, her first act was to record the quarter-anna as a debt in her account. In this manner, Ms. Katie remained faithful even in the smallest of matters. She would often say, “Always for the truth”. God entrusted the responsibility of building His kingdom in the hands of such a faithful servants of God.

OCPM School:

A cheque arrived from the American Mission for the construction of a school. Attached to it was a letter stating that William Pierce and his wife, Orlando, residents of the United States, had donated $20,000 from their Will for the construction purpose. There was Immense joy. Though on one hand there was happiness that the dream of Ms. Noyes was coming true, on the other hand an unspoken sadness prevailed because she was not there to witness it.

Ms. Katie decided to name the school as Orlando Charles Pierce Memorial Women's Higher Secondary School and the school campus as Noyes Garden. It was Ms. Noyes’ dream that the children studying in this school should be fluent in English language. So, Ms. Katie planned to start an English-medium school (Noyes Matriculation School) within the premises of the very same higher secondary school. In accordance with God’s eternal plan on December 18th, 1937, with the motto “Let us raise up and build”, OCMP Girls Higher Secondary School was inaugurated by Ms. Katie Willcox. Furthermore, Ms. Katie Wilcox was the first person to introduced school bus facility in Madurai for the students to commute to school.

Lady Dock College:

In the 31 acres of land, after establishing the OCPM school in 14 acres, Ms. Katie Willcox took efforts to establish a women’s college in the remaining 17 acres of land. Lady Helen Doak extended her support to Ms. Katie. They both were united in one accord to carry out the work of Christ.

Just as the global economic crisis of 1930 hindered the construction work of OCPM school, similarly the Second World War, which began in 1939, posed a major obstacle for the establishment of this college. Ms. Katie immediately convened a meeting with numerous individuals and sought their counsel. Many came forward to provide financial assistance. In particular, both Lady Doak and her husband, James Doak, gave lavishly whenever they were approached. The key person responsible for this was Lady Helen Doak. At that moment, Ms. Katie decided to name the college, which was yet to be established, after her.

 The foundation stone for the college was laid by Lady Doak on March 2, 1948. The building was completed and opened on July 14, 1948. Let us not be surprised that it took just four months to complete. All the buildings constructed were thatched huts. The first thatched hut was a small thatched chapel. Initially, the institution operated with just 12 faculties, 81 Intermediate students, and a partially completed hostel. Right from its very inception, this college has been founded upon the core principles of the Scriptures: love, sacrifice, truth, justice, and service. With the motto "Semper Pro Veritable" (Always for the Truth), up to this day, this institution continues to function excellently. This motto is taken from 2 Corinthians 13:8: "For we can do nothing against the truth, but only for the truth."

 Eternal Home Calling:

Staying unmarried, Ms. Katie dedicated her entire life to God. With the help of Jesus Christ, she was able to endure loneliness, illness, and cultural challenges. The Wilcox Chapel, which is functioning till this day at Lady Doak College, the daily prayers, Bible study classes, and Sunday worship services, are the spiritual activities which were initiated by Ms. Wilcox. She retired in 1958 and returned to the United States. Her alma mater, Mount Holyoke College, honored her by conferring an honorary doctorate degree: Doctor of Humane Letters. In 1974, she had her home calling and entered into God's Kingdom.

She served in India for 40 years with a deep-rooted faith that "Jesus sent me; He will sustain me." A college that began with just 81 students, a library room with only a few books, a single hostel, and a few thatched-roof huts, has now progressed in many fields. Today, this college has developed in various aspects, having an auditorium equipped with state-of-the-art technology, a beautiful chapel, a hospital, and cafeterias. Furthermore, approximately 4,500 students are currently pursuing their education at this institution. They are assisted by a dedicated team of around 211 faculty members and 139 administrative personnel. In the year 1978, this college was granted academic autonomy. Consequently, it stands as one of the earliest colleges in the country to attain autonomous status. Students from diverse backgrounds—transcending barriers of religion, language, and ethnicity—come here to pursue their studies. Upon leaving the college, they carry with them the love of Christ. Many of them hold prominent positions in the society today.

In this manner, with dedication Ms. Katie ran and finished her earthly race serving God her entire life. Today, how are we spending the life that God has bestowed upon us? What are we giving back to Him in return? Let us reflect upon this.


Comments

  1. Amazing work by Ms.Katie Wilcox. May her work continue in the years to come. Sumathy Dennis.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

John Hyde, ஜான் ஹைடு

பேராயர் நியூபிகின் 1909-1998 ArchBishop New Begin (Tamil & English)