கேரியின் டைரி, William Carey's Diary entry (Tamil & English)

கேரியின் ஒரு நாள் தினத்திட்டத்தை பார்த்தாலே போதும், அவர் எவ்வளவு கடின உழைப்பாளி என்பதை நிதானிக்க முடியும்.

* 5.30 மணிக்கு துயில் எழுந்தேன்.

* எபிரேயர் நிருபத்தில் ஒரு அதிகாரம் படித்தேன்.

 * பின் 7 மணி வரை ஜெபித்தேன்.

 * பின்னர் பெங்காலி மொழியில் குடும்ப ஜெபம் நடத்தினேன். 

* தேநீர் தயாரிக்கும் போதே பெரிசிய மொழிப் பயிற்சியை தொடர்ந்தேன். * பின் காலை உணவுக்கு முன் இந்துஸ்தான் மொழியை கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தினேன்.

* காலை உணவு முடிந்ததும் 10 மணி வரை இராமாயணத்தை சமஸ்கிருத பண்டிதரின் உதவியோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன்.

* பின்  ஆசிரியப் பணிக்கென்று அரசு கல்லுரிக்குச் சென்றேன்.

 *1.30 மணிக்கு மதிய உணவு எடுத்தேன். 

*2 மணிக்கு பெங்காலி மொழியில் எரேமியா தீர்க்கதரிசன புத்தகத்துக்கான அச்சுப் பிழைத்திருத்தம் செய்தேன். 

* பின் சமஸ்கிருத மொழியில் மத்தேயு 8ஆம் அதிகாரத்தை 6மணி வரை மொழி பெயர்த்தேன்.

 * பின் தெலுங்கு பண்டிதரின் உதவியுடன் தெலுங்கு கற்றுக்கொண்டேன். 

* 7.30 மணிக்கு பிரசங்கம் செய்தேன்.

 * 9மணிக்கு மேல் எசேக்கியேல் 11ஆம் அதிகாரத்தை பெங்காலி மொழியில் திருப்பினேன்.

* அதன் பின் 11 மணிக்கு கடிதம் எழுதினேன்.

 * இரவு கிரேக்க மொழியில் வேதத்தை தியானித்தேன்.

* பின் எல்லாருக்காகவும் பரிந்து பேசும் ஜெபத்தை ஏறெடுத்தேன்.

 * நித்திரைக்குச் சென்றேன் என்று தொடர்கிறார்.

கடின உழைப்புக்கும், தேர்ந்த ஒப்புதலுக்கும் இது அல்லவா அழகு.

தனது மனைவியின் சுகவீனத்தை அவரது மனதில் போட்டுக்கொள்ளாமல் முழு வேதாகமத்தை 20 மொழிகளிலும்,புதிய ஏற்பாட்டை 40 மொழிகளுக்கும் மேலாக மொழிபெயர்க்க காரணமாய் இருந்தவர். இந்தியாவில் செய்தித்தாள், நீராவியால் இயங்கும் எஞ்சின்கள், சேமிப்பு வங்கிகள், தாவரவியல் சங்கம் என பல்வேறு காரியங்களை இந்தியாவின் நலனுக்காக செயலாக்கத்தில் கொண்டு வந்தவர் கேரி அவர்களே. 40 ஆண்டுகள் பணியாற்றிய அவருடைய செயல் இன்றும் மறக்க முடியவில்லை. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியால் இத்தனை சாதனைகளை செய்ய முடியுமா ?வாழ்க்கையின் இலட்சியம் அவருடைய திருப்புமுனையாக மாறி தேசத்தை திரும்பிப்பார்க்க வைத்தது. இன்றைய நாளின் நம் திட்டம் எப்படி உள்ளது?  


We realise how hardworking Carey was when we go through his activities from his diary entry for a single day.

* woke up at 5.30 am.

* read a chapter from the book of Hebrews.

* prayed till 7am

* conducted family prayer in Bengali language 

* continued the practice of Persian language while preparing tea.

* focused on learning the Hindustan language before breakfast. 

* after breakfast , translated Ramayanam from Sanskrit to English with the help of a sanskrit scholar till 10am

* Go to the Government College to pursue my teaching profession 

* had lunch at 1.30pm 

* at 2 pm did the proof reading for the Bengali translation of the book of Jeremiah 

* translated Mathew chapter 8 in Sankrit till 6pm.

* learnt Telugu with the help of a Telugu scholar.

* preached till 7.30pm

* after 9pm I translated Ezekiel 11th chapter to Bengali 

* I wrote letters after 11pm

* meditated on the Bible in Greek at night 

* then evoked the prayer of intercession for everyone 

*went to sleep 

These entries are a beautiful testimony for hardwork and living in accordance to the will of our Lord. 

He became the reason for translating the whole Bible in 20 languages and the New Testament in more than 40 languages without being affected by his wife's sickness. He was instrumental in bringing the newspaper, steam engines, savings bank and Botany society and many other things for the upliftment of the Indian Society. His forty years of dedicated work has still not been forgotten. 

How was it possible for a cobbler to achieve so much? 

His life goals gave him a turning point and made the whole nation to notice him. 

So how are our life goals? 

Comments

  1. What a gem of person! This is how a true Christian should be. Surely William carey lived a life worth thousand years.

    ReplyDelete
  2. After reading careys life .......iam introspecting my life . Atleast my future should reflect Gods work

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!