Dr Paul Brand (Tamil & English)

டாக்டர் பால் பிராண்டின் தகப்பனார் ஜெசிமென் பிராண்ட் தொழுநோயாளிகளின் மத்தியில் பணி செய்தவர்.இவர் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை பகுதியில் பிறந்து வளர்ந்தார்.1914 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி பிறந்தார்.பெற்றோர் ஊழியத்தில் முழுநேரமாக பணியாற்றியதால் இவரது தங்கையை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பும் பால் பிராண்டின் மேல் இருந்தது. இவரது தாயார் இவரிடம், "மகனே, இந்த அடர்ந்த இருண்ட காட்டிற்குள் நீ தனியாக இருப்பதாக நினைக்க வேண்டாம் ;ஆண்டவர் உன் கூடவே இருந்து உன்னை கவனித்து காப்பாற்றுவார்" என்று தினமும் ஊழியத்திற்கு செல்லும் முன் கூறுவார்கள். அதனால் பால் பிராண்டின் விசுவாசம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பித்தது. காட்டுப்பகுதிக்குள் இவர்கள் வாழ்ந்ததால் சரியான கல்வி வசதி பால் பிராண்டுக்கு கிடைக்கவில்லை. எனவே பால் பிராண்டின் தாயார் ஆசிரியராக இருந்து ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களை தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார். பால் பிராண்ட் தன் தந்தையின் ஊழியத்தை அதிகம் நேசித்து கவனித்து வந்தார். பால் பிராண்டின் 15வது வயதில் அவரது தந்தை கொடிய காய்ச்சலினால் மரித்துப் போய் விட்டார் .

இந்தப் பதினைந்து வருடங்கள் தன் தந்தையைப் பார்த்து கற்றுக் கொண்டது தான் இவரை பெரிய ஊழியக்காரராக மாற்றியது. பால் பிராண்டின் தந்தை ஜெசிமென் பிராண்ட் மக்களோடு மக்களாக வாழ்ந்தார். மிஷனெரியாக இருக்க வேண்டிய நேரங்களில் மிஷனெரியாகவும், மருத்துவராக இருக்க வேண்டிய நேரங்களில் மருத்துவராகவும், வழக்குகளை தீர்த்து வைக்கிற வழக்கறிஞராகவும் இருந்தார். வீடு கட்டுகிறதிலும், நிலங்களில் பயிரிட அதிக நுணுக்கங்களையும் மக்களுக்கு சொல்லிக் கொடுத்து உதவினார். ஒருமுறை பால் பிராண்டின் தந்தையை பார்க்க கைகளில் அடிப்பட்ட மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களை ஜெசிமென் பிராண்ட் தனியே அழைத்து ஒரு பாறையில் அமரவைத்து அப் புண்களுக்கு மருந்திட்டு மருத்துவம் பார்த்தார். தன் மகனிடம், "அவர்களுக்கு பயன்படுத்திய உபகரணங்களையும், அவர்களையும் தொடக் கூடாது" என்று கூறினார். இவ்வார்த்தை பால் பிராண்டின் மனதிற்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. ஏன் அவர்களை தொடக்கூடாது? அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள் தானே! என்று சிந்திக்க ஆரம்பித்தார் . ஆகவே, தன் தந்தையிடம் அதற்கான காரணத்தையும் கேட்டார். தந்தை தன் மகனுக்கு தொழு நோயாளிகளை பற்றி எடுத்துக் கூற ஆரம்பித்தார். "இவர்களைத் தொட்டால் நமக்கும் அந்த நோய் தொற்றிக் கொள்ளும். அந்த நோய் சுகமாக வாய்ப்பே கிடையாது" என்ற தகப்பனாரின் பதில்,பால் பிராண்டின் மனதில் ஆழமாகப் பதிந்தது. இந்த மக்களுக்காக என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தார். அப்போது வேதத்தை வாசிக்கும் போது, இயேசு தொழு நோயாளிகளை சுகப்படுத்திய சம்பவத்தை பற்றி தியானித்தார். இயேசு கிறிஸ்துவால் இந்த தொழு நோயாளிகளை சுகப்படுத்த முடியும் என்ற விசுவாசம் அவருக்குள் பிறந்தது. எப்படியாவது இவர்களுக்கு உதவி செய்து, தொழுநோயிலிருந்து சுகம் கொடுக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தார். தந்தையின் மரணம் காரணமாக, கல்வி கற்க அமெரிக்க தேசத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு பால் பிராண்ட் அனுப்பப்பட்டார். அங்கு அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பால் பிராண்டின் நினைவுகள், உள்ளங்கள் எல்லாமே இந்திய தேசத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நிறைந்திருந்தது .

மருத்துவப் படிப்பை அங்கு முடித்துவிட்டு, இந்தியா வந்தார். வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இவரது நண்பர் ராபர்ட், ஒரு நாள், "நீ ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். உடைந்த உறுப்புகளை எப்படி சரி செய்கிறாயோ, அதேபோல தான் இந்த தேசத்தில் தொழுநோயால் தங்களுடைய கை, கால், கண் இப்படி உறுப்புகளை இழந்து மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நீ அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து முடிவு செய்"என்று கூறினார். பால் பிராண்ட் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி அதிகமாக சிந்திக்க ஆரம்பித்தார். கண் அறுவை சிகிச்சை நிபுணரான, மார்க்ரெட் என்ற பெண்ணை மணந்தார். இருவரும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து இணைந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கொல்லிமலைக்கு வந்தனர். ஜெசிமென் பிராண்ட் அவர்கள் விட்டுச் சென்ற பணியை அவரது மகன் பால் பிராண்ட் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார். பால் பிராண்ட் அவர்கள் தொழு நோயாளிகள் குணம் பெற பல ஆராய்ச்சிகளை செய்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. கை-கால்களை இழந்த போர் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பால் பிராண்டை அழைத்தனர். எனவே அவர் அங்கு சென்று, போர்வீரர்களுக்கு காயம் கட்டும் போது, அநேகவற்றை ஆராய்ச்சி செய்தார். "தொழு நோயாளிகளுக்கு காயம் ஏற்படும் போது முதலில் நரம்பு பாதிக்கப்படுகிறது. ஆண்டவரின் மிகப்பெரிய பரிசு வலி .ஆனால் தொழுநோயாளிகள் வலி என்கின்ற இந்த பரிசை இழந்து போய்விட்டார்கள்" என்று பால் பிராண்ட் எழுதுகிறார். தொழுநோயாளிகளின் கை,கால்களை அறுவை சிகிச்சை மூலம் செயல்பட வைக்க முடியும் என்பதனை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தார். பால் பிராண்டின் மனைவி மார்க்ரெட் போரில் கண்களை இழந்த போர் வீரர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்று கண் பொருத்தினார். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.

கொல்லிமலையில் உள்ள தொழு நோயாளிகளுக்கு ஆண்டவரின் அன்பை சொல்ல ஆரம்பித்த போது,பால் பிராண்டின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கை கால்கள் செயலிழந்த தொழு நோயாளிகளை தொட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆண்டவர் உதவி செய்தார். அப்படிப்பட்ட ஒரு தாழ்மையான அர்ப்பணத்தோடு தனது பணியை செய்தார். அனேக தொழுநோயாளிகள் சுகம் பெற்றதோடு, கிறிஸ்துவையும் ஏற்றுக் கொண்டனர். இந்த காலத்தில் தொழுநோயாளிகள் பற்றி சிந்தித்தால், நம் மனதில் முதலில் வருபவர் டாக்டர் பால் பிராண்ட் அவர்கள் தான். அந்த அளவுக்கு ஆண்டவருக்காக அநேக காரியங்களை செய்தார் .சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்த தொழு நோயாளிகளை ஆண்டவரின் அன்பினால் மாற்ற முடியும் என்ற தரிசனத்தோடு பணி செய்தார். தொழுநோயாளிகளுக்கு இவ்வளவு செய்தும் தன்னை மேன்மை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை என்று பால் பிராண்ட் கூறுகிறார். "தான் ஆண்டவருக்குள் இருந்ததால் மட்டுமே தன்னால் இப்பணியை செய்ய முடிந்தது" என்று கூறுகிறார் .பால் பிராண்ட் மிகப் பெரும் தாக்கத்தை தொழுநோயாளிகள் மத்தியில் செய்துள்ளார். "எந்த ஒரு மருத்துவர்களும் செய்ய முடியாத அளவுக்கு தொழுநோயாளிகள் மத்தியில் அறுவை சிகிச்சையை பால் பிராண்ட் செய்துள்ளார்" என்று சரித்திரம் கூறுகிறது .தொழு நோயாளிகளுக்காக பால் பிராண்ட் ஆராய்ச்சி மேற்கொண்டதற்கான காரணம், "ஆண்டவர் மேல் அவர் வைத்த அன்பு, அர்ப்பணிப்பு". ஆண்டவர் நமக்கு கொடுத்து இருக்கின்ற ஒரே ஒரு வாழ்க்கையில் நாம் எதற்காக வாழ்கிறோம்? என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒருவேளை நாம் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று யோசிக்கலாம். நாம் பேசுவதில் ,நாம் சிந்திப்பதில், நாம் பார்ப்பதில் நம்மிடம் ஆண்டவருடைய சாயலை மக்கள் பார்க்கிறார்களா? என்பதை சிந்திப்போம். ஒருவேளை பால் பிரண்டை போல வெளியில் சென்று எதையும் ஆண்டவருக்காக செய்ய முடியவில்லை என்றாலும், நாம் இருக்கும் இடத்தில் அநேகரை ஆண்டவருக்குள்ளாக கொண்டுவர முடியும். இன்றே அர்ப்பணிப்போம்.

Dr. Paul Brand's father, Jessemen Brand, worked among lepers. He was born and brought up in the Kollimalai area of Namakkal district in Tamil Nadu. Born on July 8, 1914. Paul Brand had the full responsibility of taking care of his younger sister from home as his parents worked full-time in the ministry. His mother used to say to him, "Son, don't think you are alone in this thick, dark forest; the Lord will be with you and watch over you," every day before going to work. And so Paul Brandt's faith began to grow in Christ. Because they lived in the forest, they did not have proper education facilities. So Paul Brandt's mother became a teacher and taught her children English and math. Paul Brandt loved and cared for his father's ministry. When Paul Brandt was 15, his father died of a deadly fever.

These fifteen years of watching and learning from his father made him a great servant. Paul Brand's father, Jessemen Brand, lived among the people. He was a missionary when he should have been a missionary, a doctor when he should have been a doctor, and a lawyer who settled cases. He helped the people by teaching them the intricacies of building houses and cultivating the land. Once, three men with beaten hands came to see Paul Brand's father. Jessimen Brant took them alone, sat them on a rock, and treated them with medicine. He told his son, "Don't touch the equipment used for them." This word raised a question in Paul Brandt's mind. Why not touch them? They are humans like us! He started thinking about that. So he asked his father why. The father began to tell his son about lepers. "If we touch them, we will also get the disease. The father's reply, "There is no chance of a cure for that disease," struck a deep chord in Paul Brand's mind. He started thinking about what he could do for these people. While reading the scriptures, he meditated on the incident of Jesus healing the lepers. Faith was born in him that Jesus Christ could heal these lepers. He started thinking that somehow he should help them and cure them of leprosy. Due to his father's death, Paul Brandt was sent to relatives in the United States to be educated. There, he could not concentrate on his studies. Milk Brand's memories and hearts were full of helping the leprosy sufferers in the Indian nation.

After completing his medical studies there, he came to India.  worked as a doctor at CMC Hospital, Vellore. His friend Robert said one day, “You are a surgeon. Just as you mend broken limbs, in this country people suffer from losing their limbs like hands, feet, and eyes due to leprosy. Think and decide what you can do for them." Paul Brandt began to think more about lepers. He married Margaret, an eye surgeon. Both of them came to Kollimalai to dedicate their lives together to helping people suffering from leprosy. His son, Paul Brand, continued the work left behind by Jessimen Brand. Paul Brandt did a lot of research on the healing of lepers. It was during World War II. Paul Brand was called upon to treat war veterans who had lost their arms and legs. So he went there and did a lot of research while dressing up the wounds of the warriors. "The nerve is the first to be affected when the patient is injured." God's greatest gift is pain. But the lepers have lost this gift of pain," writes Paul Brandt. Through research, he discovered that the hands and feet of lepers can be made functional through surgery. Paul Brandt's wife, Margaret, surgically implanted replacement eyes in war veterans who lost their eyes in battle. He helped people suffering from diabetes.

 Paul Brand's life took a turning point when he began to share the Lord's love with the poor patients in Kollimalai. The Lord helped him touch and heal lepers who were crippled. He did his work with such humble dedication. Many lepers were healed and accepted Christ. When we think of lepers these days, Dr. Paul Brandt is the first person who comes to mind. To that extent, he did many things for the Lord. He worked with the vision that the love of the Lord could transform these leprous patients who were left aside by society. Paul Brand says that doing so much for the lepers has nothing to commend him for. "He was able to do this work only because he was in the Lord," he says. Paul Brandt has made a huge impact among lepers. "Paul Brandt performed surgery among lepers as no other physician could." The story says that Paul Brandt's reason for researching leprosy patients was "his love and devotion to the Lord". Why do we live the one life that the Lord has given us? Let's think about it. Maybe we think there is nothing we can do. Do people see the Lord's image in us in what we speak, what we think, and what we see? Let's think about it. Although we may not be able to go out and do anything for the Lord like Paul Brandt, we can bring many to the Lord where we are. Let's dedicate it today.

Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!