William Booth (Tamil & English)

 
வில்லியம் பூத் அவர்கள் இரட்சண்ய சேனை என்ற இயக்கத்தை உருவாக்கியவர். 1829 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி லண்டன் மாநகரத்தில் பிறந்தார் .இவர் குடும்பத்தின் வறுமை காரணமாக,  படிப்பைத் தொடர முடியாத நிலையில் அடகு கடையில் பணிபுரிந்தார். அதில் அவருக்கு திருப்தி இல்லாத நிலை காணப்பட்டது. அப்போது ஆண்டவரை ஏற்றுக் கொண்டு அவர்  அன்பை உணர ஆரம்பித்தார். ஆண்டவருக்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, தன்னை முழு நேர பணிக்கென அர்ப்பணித்தார். வில்லியம் பூத் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும் போது  ராணுவ சேனை போல ஒரு பெரிய சேனையாக உருவாக்க வேண்டும் என்று எண்ணி, கிறிஸ்டியன் மிஷன் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் .

அச்சமயத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் திருமணத்தில் நான்கு நபர்கள் மட்டுமே பங்கு பெற்றனர் .இவ்வாறு மக்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு வாழ்ந்தார்.  ஆனாலும்  ஆண்டவரின் ஊழியத்தை உற்சாகமாக செய்து கொண்டு வந்தார். வரலாற்றில் இவரை "சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர்" என்று கூறுகிறார்கள். தான் ஸ்தாபித்த கிறிஸ்டியன் மிஷன் இயக்கத்தில் பணி
செய்வோர், ராணுவ வீரர்கள் போல் பணியாற்ற வேண்டும் என விரும்பி, அவர்களுக்கான பிரத்தியேக  உடையை வழங்கினார்.  ராணுவத்தில் என்னென்ன பெயர்கள்  வழங்கப்பட்டதோ, என்னென்ன முறைகள் பின்பற்றப்பட்டதோ, அதே போல தன்னுடைய இயக்கத்திற்கும் பெயர்களை வழங்கினார் .ஏனென்றால் "நாம் ஆண்டவருடைய பணிகளை செய்கின்றோம். நாம் சாதாரணமானவர்கள் கிடையாது .நமது உடையும் உள்ளமும் ராணுவ வீரர்களைப் போல வீரமுள்ளதாக இருக்க வேண்டும்" என்று விரும்பினார். அதனால் இவர் ஜெனரல் என்று அழைக்கப்பட்டார். 

வில்லியம் பூத்தின் ஊழியம் அனேக நாட்களாக திரைமறைவில் செய்வதைப் போலிருந்தது. ஆனால்,லண்டனில் மட்டும் 1878ல், இவருக்குக் கீழ் 31 முழுநேர பணியாளர்கள் சுமார் 29 இடங்களில் பணி செய்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை லண்டன் மாநகரில் பவனி செல்வார்கள். பலவிதமான இசைக்கருவிகளை வாசித்து, ஆண்டவரை பற்றிய சுவிசேஷத்தை கூறுவார்கள். 8 வருடத்திற்குள் 31 முழு நேர பணியாளர்கள் 2260 பணியாளர்களாகவும்,  29 இடங்கள் ஆயிரம் படைகளாகவும் மாறியது. 30 நபர்கள் பங்குகொண்ட பவனி 5,000 நபர்களாக வளர்ந்தது . இவ்வளவாக ஆண்டவர் இவருடைய சுவிசேஷப் பணி விரிவடைய உதவி செய்தார் .இவர் மூலமாய் அநேகர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டனர். விசுவாசிகளாக அல்ல, ஒவ்வொருவரும் ஒவ்வொரு சேனைகளாக உருவானார்கள். ஆண்டவருக்கு ஊழியம் செய்வதிலும், சுவிசேஷத்தை சொல்வதிலும், ஜெபிப்பதிலும் ஒரு சேனையாக மாறினார்கள் .அதன்பிறகு கிறிஸ்டியன் மிஷன் என்பது இரட்சணிய சேனை என்ற இயக்கமாக மாறியது.இரட்சணிய சேனை இயக்கம் லண்டனில் மட்டுமல்லாது 71 தேசங்களில் விரிவடைந்தது. வில்லியம் பூத் எவ்வாறு சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு வந்தாரோ, அதே போல உலக அளவில் தீண்டத்தகாதவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், குடிசைகளில் வாழ்கின்றவர்கள், குடிகாரர்கள் போன்றோர் மத்தியில் இவரது ஊழியம் ஆரம்பமானது .வில்லியம் பூத்தை "ஏழைகளின் தலைவன்" என்று அழைக்கின்றார்கள். "வாழ்வதும் ,மடிவதும் இயேசுவுக்காக" என்பது இவர்களின் தாரக மந்திரமாக இருந்தது .சாப்பிட கஷ்டப்படும் மக்களுக்காக 5 காபி ஷாப்களை திறந்தார். ஏழைகளில் ஒருவேளை உணவுகூட கிடைக்காதவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கினார். இவ்வாறு சமுதாய சேவைகள் மூலமாக ஆண்டவரின் அன்பை எடுத்துக் கூறினார். இதுமட்டுமல்லாது வியாதியோடு இருப்பவர்களுக்கு முதல் உதவி செய்வதற்காக மெடிக்கல் சென்டர், first-aid கம்யூனிட்டி சென்டர் உருவாக்கினார்.கோடிக்கணக்கான மக்கள் இவர் மூலமாக ஆண்டவரை ஏற்றுக் கொண்டுள்ளனர். வில்லியம் பூத் தனது வாழ்நாளில் 27 மில்லியன் மக்களுக்கு உணவு கொடுத்து இருக்கிறார். 11 மில்லியன் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். 9 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது .இவ்வாறு இரட்சணிய சேனை இயக்கத்தின் தளபதியாக வாழ்ந்து முடித்திருக்கிறார்.

 தனது 83 ஆவது வயதில் தனது ஓட்டத்தை முடித்து தேவ ராஜ்யம் சென்றார்.  இவரது அடக்க ஆராதனைக்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் கூடி இருந்தார்கள். ஆலயத்தில் இடம் கொள்ளாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அனேகர் இவரது அடக்க ஆராதனையில் பங்கு கொள்ள முடியவில்லை என கவலை அடைந்தனர். அன்று 7000 பேர் ராணுவ உடை அணிந்து 40 பேண்ட் செட் கருவிகளை வாசித்து, இவரை அடக்கம் பண்ணினார்கள் .அநேக ராஜாக்களும், இளவரசர்களும், இளவரசிகளும் இவருக்கு   மரியாதை செலுத்தி, நல்லடக்கம் செய்தனர்.லண்டன் மாநகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவரது ஊழியம், இன்று 131 நாடுகளில் பரவி இருக்கிறது .இன்றும் ஜூலை 2ஆம் தேதி என்றால் இரட்சணிய சேனையின் பிறந்தநாள் என்று பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. காரணம், ஒரு தனி மனிதன் ஆண்டவருடைய கரத்தில் தன்னை அர்ப்பணித்ததினால், திறள் கூட்ட சேனைகள் இவர் மூலமாக எழும்பி இருக்கிறார்கள்.
வில்லியம் பூத்திற்கு  மூன்று ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளுமாக,எட்டு பிள்ளைகள் இருந்தார்கள். உலகப்பிரகாரமான  வேலைகளுக்கு செல்லாமல், இவரது இரட்சணிய சேனையில் இணைந்து ஊழியர்களாக பணி செய்தனர் . நம்மையும் ஆண்டவர் இவரைப் போன்று  ஒரு இரட்சண்ய சேனையாக, ஆண்டவருக்காக வாழ வேண்டுமென்று விரும்புகிறார்.  நம் மூலமாக அநேக திரள் கூட்டமான ஜனங்கள் சேனையில் இணைய வேண்டும் என்று விரும்புகிறார். இரட்சணிய சேனையின் ஒரே தாரக மந்திரம் என்னவென்றால் "Go and Do Something". இவர் தன்னுடன் ஊழியம் செய்யும் ஊழியர்களிடமும், ஏதாவது ஆண்டவருக்காக செய்யுங்கள் என்பதை தான் கூறுவார். நம்மிடமும் ஆண்டவர் இதையே தான் எதிர்பார்க்கிறார். அவருக்காக நாம் எதையாவது செய்யலாமா? 

William Booth was the founder of the Salvation Army movement. He was born on April 10, 1829, in the city of London. Due to his family's poverty, he was unable to continue his studies and worked in a pawnshop. He was not satisfied with it. Then he accepted the Lord and started feeling love. Thinking that he should do something for the Lord, he devoted himself to full-time work. When William Booth dedicated himself to the Lord, he thought of creating a large army like an army and started a movement called Christian Mission.

 At that time, he got married. Only four people took part in his marriage. Thus, he lived an isolated life, neglected by the people. But he enthusiastically did the Lord's service. He is called "one of the social reformers" in history. Work in the Christian Mission Movement he founded. He wanted the workers to work like soldiers and provided them with a special uniform. He gave names to his movement in the same way that names were given to the army and methods were followed. Because "we are doing the Lord's work." We are not ordinary people. Our dress and spirit should be as brave as soldiers." So he was called General.

For many days, William Booth's ministry seemed to be behind the scenes. But in London alone in 1878, he had 31 full-time employees working in about 29 locations. They visit Procession in London once a year. They play various musical instruments and preach the gospel of the Lord. Within 8 years, 31 full-time employees became 2260 employees, and 29 positions became a thousand troops. The procession grew from 30 people to 5,000 people. Thus the Lord helped his evangelical work expand. Through him, many accepted the Lord. Not as believers, but each as an army. They became an army serving the Lord, evangelising, and praying. The Christian Mission then became the Salvation Army movement. The Salvation Army movement spread not only in London but also in 71 countries. Just as William Booth was marginalised and neglected in society, his ministry began among the untouchables, the outcasts, the slum dwellers, the alcoholics, etc. on a global scale. William Booth has been called the "Leader of the Poor". " "Live and bow for Jesus" was their mantra. He opened five coffee shops for people who had difficulty eating. He provided free mid-day meals to the poor, who could not even afford food. Thus he received the Lord's love through community services. Apart from this, he created a medical centre and a first-aid community centre to provide first aid to the sick. Millions of people have accepted the Lord through him. William Booth fed 27 million people during his lifetime. He has built houses for 11 million families. 9,000 people have jobs. In this way, he has finished his life as the commander of the Salvation Army movement.

 He completed his journey at the age of 83 and went to the Kingdom of God. About 35 thousand people gathered for his funeral. The temple was too crowded to accommodate everyone. Many were worried that they could not attend his funeral. On that day, 7000 people dressed in military uniform and playing 40 band sets of instruments buried him. Many kings, princes, and princesses paid respect to him and respected him. His ministry, which started in the city of London, is now spread over 131 countries. Even today, July 2 is widely celebrated as the birthday of the Salvation Army. The reason is that because a single man has committed himself to the hands of the Lord, legions of sheep are rising up through him. William Booth had eight children: three sons and five daughters. Instead of going for worldly jobs, they joined the Salvation Army as employees. The Lord wants us to live for him as a saving army like him. He wants a great multitude of people to join the army through us. The Salvation Army's only mantra is "Go and Do Something" He would tell his servants to do something for the Lord. The Lord expects the same from us. Can we do something for him?

 

Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!