விசுவாசத்தில் வல்லவர்- ஜார்ஜ் முல்லர், George Muller (Tamil & English)

     
விசுவாசத்திற்குக் எடுத்துக் காட்டு 
ஜார்ஜ் முல்லர் ஆவார். வேதாகமத்தில் ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று எப்படி அழைக்கப்படுகிறாரோ, அதே போல நடைமுறை வாழ்விலே ஜார்ஜ் முல்லரை விசுவாசத்தில் வல்லவர் என்று  கூறுகிறார்கள். அவரது வாழ்வில் எல்லா காரியங்களையும் விசுவாசத்தால் மட்டுமே சாதித்தார். ஜார்ஜ் முல்லர் இங்கிலாந்து தேசத்தில் அநேக அனாதை இல்லங்களை நடத்தி கொண்டு வந்தார். தாய், தந்தை இல்லாத சிறுவர், சிறுமிகள் சுமார் ஒன்றரைலட்சம் பேர் அங்கே இருந்து படித்தார்கள். அனாதைப் பிள்ளைகளுக்கென நடத்தப்பட்ட விடுதி என்பதால் அதன் மூலம் அவருக்கு எந்த மாத வருமானமும் இல்லை. அவர்களை பராமரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி சிறிதளவும் கூட அவர் கவலைப்படாமல், ஆண்டவரையே முழுமையாக நம்பி இருந்தார்.ஒரு நாள், அனாதை இல்லத்தில்  குழந்தைகளுக்குக் காலை உணவு பரிமாறப்பட வேண்டும், ஆனால் இல்ல பணியாளர்கள்  பிள்ளைகளுக்கு உணவளிக்க ஒன்றுமே இல்லை, என்ன செய்வது என்று ஜார்ஜ் முல்லரிடம் கேட்டனர். ஜார்ஜ் முல்லரோ பிள்ளைகளை சாப்பிட மேஜையில் அமர வைக்கக் கூறினார். பணியாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சாப்பிட எதுவுமே இல்லை, இவரோ பிள்ளைகளை அமர வைக்க கூறுகிறாரே என்று நினைத்து முல்லரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். பிள்ளைகள் வரிசையாக தட்டை எடுத்து வந்து உட்கார்ந்தார்கள். ஜார்ஜ் முல்லர் பிள்ளைகளிடம், "உணவுக்கு உண்பதற்கு முன்பாக ஜெபிப்போம் அல்லவா? இன்றும் நாம் ஜெபிக்கலாம், இயேசப்பா நமக்கு உணவு தருவார்" என்று கூறினார். பிள்ளைகளும் ஆண்டவரிடம், இன்று காலை உணவு தந்ததற்காக ஸ்தோத்திரம் என்று நன்றி ஜெபம் ஏறெடுத்தார்கள். 

ஆமென் என்று சொல்லி ஜெபத்தை முடிப்பதற்கு முன்பாக, கதவை தட்டும் சத்தம் கேட்டு பணியாளர்கள் கதவைத் திறந்தார்கள். ரொட்டி தயாரிக்கும் நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர், என்னால் நேற்று இரவு தூங்க முடியவில்லை. உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் எழுந்தது. அதனால் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, புதிதாக ரொட்டிகளைத் தயாரித்து கொண்டு வந்துள்ளேன் என்று கூறினார். பிள்ளைகளின் தட்டுகளில் சூடான ரொட்டிகள் பரிமாறப்பட்டு, பிள்ளைகள் திருப்தியாக சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடிக்கும் முன்பாகவே மீண்டும் ஒருவர் வந்தார். அவர் ஒரு பால்காரர். தன்னுடைய பால் வண்டி பழுதாகி விட்டதாகவும், அதை சரி செய்து கொண்டு செல்வதற்குள் அதில் உள்ள பால் எல்லாம் கெட்டு போய்விடும் என்றும், அதனால் வண்டியில் உள்ள எல்லா பாலையும் அனாதை இல்லத்திற்கென்று எடுத்துக் கொள்ளுமாறும் கூறினார். இல்லப் பணியாளர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். 

நமது ஆண்டவர் ஒன்றுமில்லாததில் இருந்து உருவாக்குகிறவர் என்பதை ஜார்ஜ் முல்லர் உறுதியாக நம்பினார். ஜார்ஜ் முல்லருக்கு இவ்வளவு விசுவாசம் எப்படி வந்தது என்று யோசிக்கிறீர்களா?  92 வருடங்கள் உயிரோடு வாழ்ந்த முல்லர், தனது வாழ்நாளில் சுமார் 200 முறைகள் வேதாகமத்தை வாசித்துள்ளார். இதில் 100 முறைகள் முழங்காலில் நின்றே வாசித்து முடித்துள்ளார் என்று சரித்திரம் கூறுகிறது.

அதனால் ஆண்டவரின் வார்த்தை அவரது இருதயத்தை முழுவதுமாக நிரப்பி அவர் வாழ்வில் கிரியை செய்தது. அதனால் தான், தேவை என ஒன்று வரும் போதெல்லாம் மனிதர்களை அவர் சார்ந்து இருக்கவே இல்லை. மாறாக, ஆண்டவரை முழுவதுமாக சார்ந்திருக்கப் பழகினார். அசைக்க முடியாத விசுவாசம் அவருக்குள் உருவானதற்கு காரணம், ஆண்டவரின் வார்த்தை தான். இன்று நம்முடைய உள்ளம் ஆண்டவருடைய வார்த்தையாலா அல்லது சந்தேகத்தால் நிரம்பி உள்ளதா?

An example of faith is George Muller. Just as Abraham is called the father of faith in the Bible, George Muller is said to be a master of faith in practical life. He achieved everything in his life only through faith. George Muller ran many orphanages in England. About one and a half lakh fatherless boys and girls studied there. As the hostel was run for orphans, he did not have any monthly income from it. He did not care in the slightest about the cost of maintaining them but fully trusted in the Lord. One day, breakfast was to be served to the children at the orphanage, but the home staff had nothing to feed the children and asked George Muller what to do. George Muller asked the children to sit at the table to eat. The staff didn't understand anything. There was nothing to eat, and they looked at Müller strangely, thinking that he was telling the children to sit down. The children brought the plates in a row and sat down. George Muller said to the children, 

"Let's pray before we eat, shall we? We can pray today, and Jesus will give us food." The children also offered a prayer of thanksgiving to the Lord for giving him food this morning. Before concluding the prayer by saying Amen, the servants opened the door after hearing a knock. A baker was standing. I couldn't sleep last night. I felt the urge to help you. So he got up at 2 in the morning and said that he had freshly prepared rotis and brought them. Hot breads were served on the children's plates, and the children ate contentedly. Before we finished eating, another one came. He is a milkman. He said that his milk cart had broken down and all the milk in it would be spoiled before it could be repaired, so he asked him to take all the milk in the cart to the orphanage. The housekeepers were very surprised.

George Muller firmly believed that our Lord is a creator out of nothing. Wondering how George Mueller gained so much credibility? Muller, who lived for 92 years, read the Bible about 200 times in his lifetime. History says that he recited it 100 times while standing on his knees. So the word of the Lord filled his heart completely and worked in his life. That's why he never depends on humans whenever the need arises. Instead, he practised complete dependence on the Lord. The word of the Lord was the reason why unshakable faith was formed in him. Is our heart today filled with the word of the Lord or doubt?

Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!