ஹென்றி மார்ட்டின் Henry Martin (Tamil & English)


ஹென்றி மார்ட்டின் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டார். தனது இரண்டாம் வயதில் உடல் சுகவீனம் காரணமாக தாயாரை இழந்தார். தகப்பனாரால் கைவிடப்பட்டு அனாதை ஆனார். இவரது பாட்டியம்மா இவரை ஆண்டவருக்குள்ளாக வளர்த்து,ஆண்டவரிடம் நெருங்கி சேர உதவி செய்தார்கள். வாலிப வயதில் அனேக சபை ஊழியங்களில் ஆர்வமுடன் பங்குபெற ஆண்டவர் உதவி செய்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த இவர்,வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.வழக்கறிஞராக மாற வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வந்தார். ஆனால் ஆண்டவர் அவரை தாயின் கருவில் உருவாகும் முன்னமே முன் குறித்து இருந்ததினால் அவர் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றினார். அச்சமயங்களில் வில்லியம் கேரியின் வாழ்க்கை வரலாறு இவரை அதிக அளவில் பாதித்தது. வில்லியம் கேரியின் ஊழியங்கள் மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகளால் அதிகம் கவரப்பட்டார்.தானும் இந்திய தேசத்திற்கு சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் பண்ணினார்.கல்லூரி படிப்பை முடித்ததும் இவரது திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டது.மணப்பெண்ணான லிடியா, அவரிடம் "நீ என்னை திருமணம் செய்து கொள்ள நினைத்தால் இந்திய தேசத்தை மறந்துவிடு, இந்தியா தான் வேண்டும் என்றால் என்னை மறந்துவிடு" கூறினார்.ஹென்றி மார்டின் சற்றும் யோசிக்காமல் "நீ எனக்கு தேவையில்லை என்னை தேவன் அழைத்திருக்கிறார். இந்திய தேசத்திற்கு தான் நான் செல்வேன்" என்று கூறி தன்னை திரும்பவுமாக ஆண்டவருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தார்.அடுத்த மாதமே இந்திய தேசத்திற்கு வர கப்பலேறினார்.தனது 24வது வயதில் 9 மாத கப்பல் பயணத்தை ஆரம்பித்தார். 9 மாத கடல் பயணத்துக்கு பிறகு கல்கத்தா மாநிலத்திலுள்ள தினாபூர் பகுதியில் வந்து இறங்கினார்.வந்து இறங்கியதுமே,சுட்டெரிக்கும் வெயில் அவர் வெள்ளை தோளில் பட்டதும் அவரது சரீரம் பாதிக்கப்பட்டது. அநேக விதமான வியாதிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அடுத்த மாதமே கல்கத்தா பகுதியில் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. விக்கிரகத்திற்கு தேர் இழுக்கும் போது 8 வயது சிறுவன் ஒருவன் அந்தத் தேர் சக்கரத்தில் விழுந்து,மரித்து போனான். அச்சிறுவனை தொடர்ந்து அநேக சிறுமிகளும் பெண்களும் அவ்வாறே விழுந்து பலியானார்கள்.அப்போது தான் ஹென்றி மார்ட்டினால் மக்கள் விக்கிரகத்தின் மீது கொண்டிருந்த வைராக்கியம் புரிந்தது.இப்படி ஜனங்கள் அறியாமையிலும், மூட பழக்கத்திலும் இருக்கிறார்களே என்ற பாரம் அவரை ஒவ்வொரு நாளும் அழுத்தியது. எப்படி இந்த ஜனங்களை விடுதலையாக்க முடியும் என்று யோசித்து, இதனை குறித்து வில்லியம் கேரியிடம் பேச ஆரம்பித்தார். வில்லியம் கேரி சொன்ன பதில் ஜெபம் என்ற பதில் மட்டுமே. அன்றிலிருந்து இந்திய தேசத்து மக்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். சில நாட்களுக்குப் பின்,கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பார்த்தார். அதுவும் அவரை அதிகமாக பாதித்தது . அதன் பிறகு ஆண்டவர் சமூகத்தில் அதிகமாக காத்திருந்து ஜெபிக்க ஆரம்பித்தார்.ஆண்டவரின் வார்த்தை இம்மக்கள் கையில் கிடைத்தால் மட்டுமே விடுதலை ஆவார்கள் என்று புரிந்து கொண்டார். பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, அரேபியா, பெர்சியன் ஆகிய ஐந்து மொழிகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். இந்த ஐந்து மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்க்க வேண்டும் என்று அதிகமாய் பிரயாசம் எடுத்தார். பகல் முழுவதும் பாட்னாவிற்கு சென்று அங்கு வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த பணத்தைக் கொண்டு இரவு தனது இல்லத்தில் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டார். இவ்வாறு கடினமாக உழைத்து ஆண்டவரின் வார்த்தையை சீக்கிரத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று அதிகம் பிரயாசம் எடுத்தார்.அந்நாட்களில் பிள்ளைகளுக்கும்,பெண்களுக்கும் கல்வி பயில பள்ளியோ,கல்லூரியோ இல்லாமல் கல்வி அறிவு குறைவாக காணப்பட்டது. கல்வி அறிவு கொடுத்தால் மட்டுமே அவர்களால் வேதாகமத்தை படிக்க முடியும் என்று கல்கத்தா நகரத்தில் ஐந்து பள்ளிகளை நிறுவினார். இதனால் அநேக பிள்ளைகள் ஆண்டவரின் அன்பையும் ,கல்வி அறிவையும் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். போர்ச்சுகீஸ் மொழியில் அவர் வேதாகமத்தை மொழி பெயர்த்து முடிக்கும் நிலையில், பண்டிதர்களிடம் மொழிபெயர்ப்பு உரிமை வாங்க வேண்டும்.அதற்காக அவர் முயற்சிகளை மேற்கொள்ளும் போது அவரது உடல்நிலை மிகவும் பலவீனமானது.அவரது நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டு அவரால் நடக்க முடியவில்லை. மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக திரும்பவும் இங்கிலாந்து செல்லுமாறு கூறினார்கள்.ஹென்றி மார்டின் அதனை பொருட்படுத்தாமல்"பெர்சிய மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்கும் பணி முடிவடைந்த பிறகு என் உயிர் போனால் போகட்டும்" என்று கூறினார்.மூன்று மாதம் நடந்தே பெர்சியா சென்றடைந்தார். அங்குள்ள பண்டிதர்கள் அவற்றைப் பார்த்து, "இது சிறுபிள்ளை மொழிபெயர்த்தது போன்று உள்ளது" என்று அவரது தன்னம்பிக்கை குறையும்படி பேசினார்கள். இருப்பினும் அவர் சோர்ந்து போகாமல் ஆண்டவர் தன்னை அழைத்து இருக்கிறார் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் அங்கிருந்த நாட்களில் வெயில் 126 டிகிரி வெப்பநிலை நிலவியது. அதனால் அவர் சரீரம் பாதிக்கப்பட்டதால் அருகிலிருந்த மலைப்பகுதியில் ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து தவறுகளை சரி செய்யும் பணியினை மேற்கொண்டார். திரும்பவும் பெர்சியன் ராஜாவிடம் சென்று மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கினார். அடுத்த மாதமே பெர்சிய மொழியில் வேதாகமத்தை வெளியிட தேவன் உதவி செய்தார்.இதன் மூலமாக அநேகர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். அநேகர் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானார்கள்.ஹென்றி மார்ட்டினின் உடல்நிலை மேலும் அதிக அளவு பாதிக்கப்பட்டது. ஒரு முறை கல்கத்தா நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த 400 பிச்சைக்காரர்களுக்கு சுவிசேஷம் கூறினார்.அவர் நமக்கு பணம் கொடுத்து அனுப்புவார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் ஜீவனுள்ள ஆண்டவருடைய வார்த்தைகளை மட்டுமே கூறினார்.அந்த ஒரே நாளில் 400 பிச்சைக்காரர்களும் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமல்லாது அநேக இஸ்லாமியர்கள் ஆண்டவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இப்படியாக இவரது ஊழியம் வளர ஆரம்பித்தது. ஹென்றி மார்ட்டின் தோற்றம் குள்ளமானவராக, கோழைத்தனமாக இருந்ததால் மக்கள் இவரை ஏளனமாகப் பார்த்தார்கள். ஆனால் ஆண்டவரின் அன்பு அவரது உள்ளத்தில் நிரம்பி வழிந்ததால், அவர் நடந்து செல்லும் போதே மக்கள் முழங்கால் படியிட்டு மரியாதை செலுத்தினார்கள் . உடன்கட்டை ஏறும் பழக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டதற்கு ஹென்றி மார்ட்டினின் பணி மிக முக்கியமாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.தன்னுடைய சொத்துக்களையும், உடல் பெலத்தையும் கிரையம் செலுத்தி இந்திய தேசத்து ஜனங்களை மீட்கப் பாடுபட்டார். அவர் தனது புத்தகத்தில் "கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.ஆனால் இந்த தினாபூரின் கொடுமையான வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லையே.இதை காரணம் காட்டி நான் ஒருநாளும் ஓய்ந்து இருக்க மாட்டேன். இக்காலத்து பாடுகள் இனி வெளிப்படப் போகும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கது அல்ல" என்று சொல்லி தனது பணியினை தொடர்ந்து செய்தார். கொடுமையான வெயில் காலத்தில் அவரது சரீரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டாலும் ஆண்டவருக்காக முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,தனது 31வது வயதில் இங்கிலாந்து நாட்டிற்கு சிகிச்சை எடுப்பதற்காக சென்றார்.திரும்பவும் ஊழியம் செய்ய இந்திய தேசத்திற்கு வர வேண்டும் என்று எண்ணினார். ஆனால் தனது பயணத்திலேயே மரித்து விட்டார். அவர் வாழ்ந்தது வெறும் 31 வருடங்கள் மட்டுமே.ஹென்றி மார்ட்டின் வழக்கறிஞராக மாற வேண்டும் என்ற தனது ஆசை,தனது வருங்கால மனைவி,தனது சொத்து,பெலன் என அனைத்தையும் ஆண்டவருக்காக விட்டுக் கொடுத்தார்.தன் வாழ்வின் இறுதிவரை திருமணம் செய்யாமலேயே தேவனுடைய ராஜ்யத்திற்கு சென்றடைந்தார்.இங்கிலாந்து தேசத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ஊழியர்,நமது தேசத்தின் மீது இவ்வளவு ஆசை கொண்டு,இவ்வளவு பாரம் கொண்டு இத்தனை பணிகளை செய்திருக்கிறார் என்றால் நாம் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள்? இன்று நாம் சிந்திப்போம்... இந்தியா என் தேசம் என்று சொல்லிக்கொண்டு மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவருக்காக நாம் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று சிந்திப்போம். கிறிஸ்துவினுடைய அன்பு நம்மை நெருக்கி ஏவும் போது இவைகள் எல்லாம் பெரியவைகளாக தெரியாது. பவுல்,"அநேக முறை பிரயாசத்தினாலும், வருத்தத்தினாலும், அநேக முறைகளிலும் பசியிலும்,தாகத்திலும் இருந்தேன்.இவை மட்டுமல்லாது எல்லா சபைகளை குறித்த கவலை நாள்தோறும் என்னை நெருங்குகிறது" என்று கூறுகிறார்.இந்த வார்த்தை ஹென்றி மார்ட்டினுக்கு உற்சாகத்தை கொடுத்த வசனம்.ஆண்டவருடைய ராஜ்யம் கட்டுவதற்காக நாம் எதையெல்லாம் இழந்து இருக்கிறோம், என்னென்ன செய்திருக்கிறோம்? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

Henry Martin was born and brought up in a well-situated family. He lost his mother due to a physical illness at the age of two. He was abandoned by his father and became an orphan. His maternal grandmother raised him in the Lord and helped him get closer to Him. The Lord helped him actively participate in many church ministries as a teenager. After completing his college studies at Cambridge University, he joined the Theological College. He lived with the ambition of becoming a lawyer. But the Lord foreordained him before his mother's womb, so he served as the pastor of a church. At that time, William Carey's biography influenced him greatly. William was greatly impressed by Martin's ministry and his life notes. He also decided to go to India and serve.

 After completing his college studies, his marriage was arranged. Lydia, the bride, told him, "If you want to marry me, forget India; if you want India, forget me." Henry Martin said without thinking, "I don't need you; God has called me. I will go to the land of India," and he surrendered himself again to the hands of the Lord. He set sail for India the very next month. At the age of 24, he embarked on a nine-month cruise. After nine months of sea voyage, he landed in the Dinapur region of Calcutta state. As soon as he came down, the scorching sun hit his white shoulder, and his body was affected. He had to face many ailments. Thenext month, Durga Puja was celebrated in Calcutta. While pulling the chariot to the idol, an 8-year-old boy fell on the chariot wheel and died. Following Achiruvan, many girls and women fell to their deaths in the same way. It was then that Henry Martin understood the zeal of the people for the idol. The burden of people living in such ignorance and superstition weighed on him every day. Thinking about how to free these people, William started talking to Martin about this. William Carey's only answer is prayer. Since then, he has started praying for the people of India. A few days later, he saw the custom of the wife climbing the stilts after the death of the husband. That also affected him more.

 After that, the Lord began to wait and pray more in the community. He understood that only if these people got the word of the Lord would they be freed. He started learning five languages, namely Bengali, Sanskrit, Hindi, Arabic, and Persian. He took great pains to translate the scriptures into these five languages. He went to Patna all day and started working there. With that money, he engaged in translation work at home at night. Thus he worked hard and took great pains to translate the word of the Lord as soon as possible. In those days, there was no school or college for children or women, and there was little knowledge of education. He established five schools in the city of Calcutta so that they could read the scriptures only if they were given academic knowledge. Because of this, many children began to receive the love of the Lord and the knowledge of education.

 As he completed the translation of the Bible into Portuguese, he had to acquire the translation rights from scholars. His health is very weak when he makes efforts for it. His lungs were so damaged that he could not walk. The doctors told me to go back to England for medical treatment. Regardless, Henry Martin said, "Let my life go when the work of translating the Bible into Persian is finished." He reached Persia after walking for three months. The pundits there looked at them and said, "It's like a child's translation," to his dismay. However, he did not give up and was clear that the Lord had called him. During the days he was there, it was a sunny 126 degrees. So he stayed for nine months in the nearby mountains and took up the work of correcting the mistakes. Again, he went to the Persian king and bought the translation rights. The very next month, God helped publish the Bible in Persian. Through this, many accepted the Lord. Many were freed from slavery. Henry Martin's health suffered even more. He once preached the gospel to 400 beggars who were walking on the road in the city of Calcutta. They thought he would send us money. But he spoke only the words of the living Lord. On that same day, 400 beggars accepted the Lord. Not only that, many Muslims began to accept God. Thus, his ministry began to grow.

 People looked down on Henry Martin because of his dwarfish and cowardly appearance. But as the Lord's love overflowed in his heart, people knelt down and paid homage as he walked. Henry Martin's work is said to have been instrumental in getting the practise of covening outright banned. He sacrificed his wealth and physical strength to save the people of India. He wrote in his book, “You can get any number of degrees at Cambridge University. But I couldn't stand the brutal heat of Dinapur. I will never rest for a day because of this." The songs of this era are not comparable to the glory that will be revealed," he continued his work.Even though his body suffered greatly in the scorching heat, he never held back the leg he offered for the Lord. As advised by doctors, he went to England for treatment at the age of 31. He thought of coming back to India to serve. But he died on his journey. He lived only 31 years. Henry Martin gave up his desire to become a lawyer, his fiancee, his property, and Belen to the Lord. He reached the kingdom of God without marrying until the end of his life. How blessed are we if a servant who was born and raised in England has done so many tasks with such a desire for our country and so much responsibility? Today we will think that we are living only by saying that India is my country.

Let us think of what we have lost for the Lord. All these things do not seem so great when the love of Christ draws us close. Paul said, "Many times I was in trouble and sorrow, and many times I was hungry and thirsty. Not only these, but the concern about all the congregations comes closer to me every day. These words inspired Henry Martin. Let us think about what we have lost and what we have done to build the Lord's kingdom.

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!