Posts

Evelyn Brand

Image

Clarinda -Clorinda (Tamil & English)

Image
குளோரிந்தாள் அம்மையாரின் பழைய பெயர் லட்சுமி என்னும் கோகிலா என்று கூறப்படுகிறது.   1746 -  ஆம் ஆண்டு பிறந்த   இவர்   மராட்டிய பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.    அவரது தந்தை ,  தஞ்சை மன்னரின் தலைமைப் புரோகிதர். ஒரு நாள் தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் சிறுமியாக இருந்த கோகிலா மற்றப் பெண்களுடன் மலர்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நச்சுப் பாம்பு கோகிலாவைக் கடித்தது. சிறுமியர் இது கண்டு கூக்குரலிட்டனர். அப்பொழுது காவலிலிருந்த ஆங்கிலப் போர் வீரன் லிற்றில்டன் என்பவர் ஓடி வந்து உடைவாளால் பாம்பு கடித்த இடத்தைக்   கீறி, தன் வாயால் உறிஞ்சி விஷத்தை துப்பியவுடன் கோகிலா பிழைத்தாள். ஆண்டுகள் பல சென்றன. லிற்றில்டன் தலைமையில் ஒரு சிறிய படை   சென்னையிலிருந்து தஞ்சைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் வயல் நடுவிலே பாதையில் வந்து கொண்டிருந்தபோது ஆற்றின் ஓரம் மேடான இடத்தில் ஒரு கூட்டம் காணப்பட்டது. அங்கே ஒரு பிணம் , அடுக்கப்பட்டு விறகுக் கட்டைகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. இறந்தவன் ஒரு பிராமணன். கோகிலாவின்   கணவர். பிணத்தை அவள் சுற்றி வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டாள்.  மேளதாளங்கள்   முழங்கின. முதல் முறை சு

Dr. Nancie Monelle (Tamil & English)

Image
நான்சி மோனெல் அமெரிக்க தேசத்தின் நியூயார்க் பட்டணத்தில் 1841 - ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே தன்னுடைய தகப்பனாரை இழந்ததால், தகப்பனுடைய அன்பு கிடைக்காமலேயே வாழ பழகிக் கொண்டார். ஆகவே மனதளவில் கிறிஸ்துவுக்குள் எதையும் தன்னால் செய்ய முடியும் என்ற வேகத்துடனும் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் அன்பு அவரை செயல்பட உந்தித் தள்ளியது.  அந்நாட்களில் இந்தியாவில் காலனிய ஆட்சி நடந்து வந்ததால், வெவ்வேறு சபை பிரிவுகளைச் சார்ந்த மிஷனெரிகள் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக உலகின் பல மூ லை களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவிற்குள்ளும் அநேக மிஷனெரிகள் வந்து சுவிசேஷ பணியை செய்து கொண்டிருந்தனர்.. குறிப்பாக, ஆண் மருத்துவ மிஷனெரிகள் பலர் வந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். பெண் மருத்துவ மிஷனெரிகள் இந்தியாவில் பணி செய்வது சற்று கடினமான காரியமாக இருந்தது. வித்தியாசமான கால சூழ்நிலை, கலாச்சாரம், பின்தங்கிய சமுதாயம் போன்றவை அவர்களுக்குத் தடையாக அமைந்தது. அதிலும் தகவல் பரிமாற்றம், இடத்திற்கு இடம் மாறுபடுவதால், அவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. இத

Evelyn Brand

Image

Alexander Duff (Tamil &English)

Image
1806 - ஆம் ஆண்டு ஏப்ரல் 25 - ஆம் தேதி ஜேம்ஸ் டப்ஃக்கும் ஜின் ராட்ரேக்கும் பிறந்த அலெக்ஸாண்டர் டப்ஃ என்பவர் தனது பள்ளி நாட்களில் முதல் மாணவனாகவும் படிப்பில் சிறந்தவனாகவும் காணப்பட்டார். டாக்டர். சாமர்ஸ் என்ற தலை சிறந்த ஆசிரியரின் மாணவனாக இருந்த அவர் கல்லூரியிலேயே முதல் மாணவனாக வெளிவந்தார்.  சீனாவின் மிஷனெரியாகப்‌ பணிபுரிந்து வந்த டாக்டர் மோரிஸனுடன் நெருங்கிய தொடர்பு உடைய தனது தோழன் ஜான் உர்க் ஹார்ட் மூலம் மிஷனெரி பணிக்கு செல்லும் விருப்பத்தை பெற்றார். 1827- ஆம் ஆண்டு முழுநேர பணிக்கென்று தன்னை ஒப்புக் கொடுத்திருந்த தன் நண்பன் மறுமைக்குள் செல்லவே, அவரது தோழன் அலெக்ஸாண்டர் டப்ஃ அப்பணியில் நுழைய முடிவு செய்தார். புனித ஆன்டிரூஸ் பேராயம் மூலம் பிரசங்கிக்கும் அனுமதி பெற்ற இவர் 1829 - ஆம் ஆண்டு, ஸ்காட்லாண்டு திருச்சபையின் மூலம் கிடைத்த அழைப்பிற்கிணங்கி கல்கத்தாவிற்கு மிஷனெரியாக செல்ல முடிவு செய்தார்; ஆகஸ்டு 12 - ஆம் தேதி அன்று டாக்டர் சாமர்ஸ் மூலமாக ஆனி ஸ்காட்டிரிஸ்டேல் என்ற அம்மையாருடன் திருமணத்தில் இணைந்ததுடன், அன்றைய தினமே, புனித ஜார்ஜ் ஆலயத்தில் போதகராக அபிஷேகம் செய்யப் பெற்றார். இரண்டு முற

William Carey-4 (Tamil & English)

Image
 ‌ வில்லியம் கேரி தான் செய்த ஒவ்வொரு பணியையும் தேவ‌‌ ஒத்தாசையோடும், பெலத்தோடும் செய்து வந்தார். தேவன் அவரை‌ வல்லமையாக‌ பயன்படுத்தினார். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கங்கை நதியில்‌ கூடுவது வழக்கம். தங்களுக்குக்‌ குழந்தை இல்லை என்றும், கங்காதேவி தங்களுக்குக் குழந்தை ‌தந்தால் ஒரு குழந்தையை கங்கா தேவிக்கே திரும்ப கொடுப்போம் என்று அவர்கள் உறுதி கூறுவார்கள். எனவே ஆயிரமாயிரமான பெண்கள் தங்கள் உறுதியை நிறைவேற்ற ஜனவரி மாதம் கங்கை நதியில்‌ கூடுவார்கள். "தேவி எழும்பி வருகிறாள்" என்ற குரல் கேட்டவுடன் தங்கள் அழகுப்‌ பிள்ளைகளை கங்கை நதியில்‌ வேகமாக வீசுவார்கள். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும். இந்த நிகழ்வை தடுக்க வேண்டி கேரி, தேவனை நோக்கி ஜெபித்து வந்தார். வெல்லெஸ்லி பிரபு‌ இந்தியாவின் கவர்னர் என்ற முறையில் இதனைத் தடை செய்து சட்டம் போட முடியுமா? என்று யோசித்து அவரைத் தொடர்பு கொண்டார். "இந்து மக்களின் வேதத்தில் இப்படி‌ச் செய்வது எழுதி இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் மத உரிமைகளில் நான் தலையிட இங்கிலாந

William Carey-3 (Tamil & English)

Image
அச்சுக் கூடம் வாங்கியாயிற்று. அதில் வேலை செய்ய ஆட்கள் அநேகர்  தேவைப்பட்டனர். அச்சுக்கலை தெரிந்த ஒருவர் குறிப்பாக வார்டு என்ற அந்த வாலிபன் இங்கிலாந்திலிருந்து வரமாட்டானா  என கேரி ஆவலோடு எதிர்பார்த்தார். அவரது 15 வயது மூத்த மகன் பேலிக்ஸ் தன் தகப்பனோடு தானும் உதவி செய்வேன் என்று உதவ முன் வந்தான். வில்லியம் கேரிக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்த தேவன் இங்கிலாந்தில் கிரியை செய்ய ஆரம்பித்தார். மூன்று குடும்பங்களும், ஒரு சகோதரியும் இந்தியாவிற்கு புறப்பட்டு வந்தனர். அவர்களில் வார்டும் ஒருவர்.  அவர்களைப் பார்த்தவுடன் கேரிக்கு மிகவும் சந்தோஷம். தான் எதிர்பார்க்கும் பெரிய காரியங்களை தேவன் தனக்குத் தருகிறார் என்று கேரி புரிந்து கொண்டார்.        செராம்பூர் பகுதியானது டேனிஷ் அரசுக்கு சொந்தமாக இருந்தது. அதனால் கிழக்கு இந்திய கம்பெனியின் தொந்தரவு இல்லாமல் இருந்தது. எனவே கேரியின் குழுவினர் செராம்பூரில் தங்கி தங்கள் பணியை செய்து வந்தனர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலை வேளையில் அனைவரும் கூடி அந்த வாரத்தின் பணிகளை பரிசீலனை செய்து, புதிய வாரத்திற்கு தங்கள் வேலையை திட்டம் செய்து தங்களை ஆயத்தப்படுத்த