Posts

Ludwig Nommensen (Tamil & English)

Image
லூட்விக் நோமன்ஸ்    லூட்விக் நோமன்ஸ் ஜெர்மன் தேசத்திலுள்ள டென்மார்க்கில் பிறந்து வளர்ந்தார் . இயேசு கிறிஸ்து என்ற பெயரை கேட்டிராத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்கிற பெரிய பாரத்தை தேவன் அவர் உள்ளத்தில் தந்தார் . குறிப்பாக இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிக்க செல்ல வேண்டும் என்கிற பாரத்தை தந்தார் . தன்னுடைய 20- வது வயதில் அங்கு செல்ல வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் . எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவருடைய கால் எலும்பு முறிந்து விட்டது . எழுந்து நடக்க முடியாதபடி படுத்த படுக்கையானார் . ஒரு நாள்… இரண்டு நாட்கள் அல்ல ; ஒரு மாதம்… இரண்டு மாதங்கள் அல்ல . சுமார் நான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே தன் வாழ்வை கழித்து வந்தார் . தன் தாய் தனக்கு கற்று கொடுத்த என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் ( யோவான் 14:4) என்ற வசனத்தை கூறி ஜெபித்துக் கொண்டே இருந்தார் நான்கு ஆண்டுகளாக .   ஒரு நாள் தன் தாயிடம் , இயேசு கிறிஸ்து என்னை சுமத்திரா தீவிற்கு சுவிசேஷத்தை சுமந்து செல்ல முன் குறித்திருக்கிறார் . ஆனால் என் கால் மறுபடியும்

Henry Moorhouse, ஹென்றி மூர்ஹவுஸ் (Tamil & English)

Image
மான்செஸ்டர் எழுப்புதல் இங்கிலாந்து ஹென்றி மூர்ஹவுஸ் 1840- ல் மான்செஸ்டரில் உள்ள ஆர்ட்விக்கில் ( Ardwick ) பிறந்தார் . அவர் தம் இளவயதிலேயே பலமுறை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் . பதினாறு வயதுக்குள் அவர் சூதாட்டக்காரராகவும் , அந்த முரட்டு கும்பல் ஒன்றின் தலைவராகவும் , மேலும் கட்டுக்கடங்காதவராகவும் உருவெடுத்தார் . அதற்குப்பின் அவர் ராணுவ வீரராக பணியாற்ற விரும்பி ராணுவத்தில் சேர்த்தார் . ஆனால் , அவருடைய தகப்பனார் அதிக பணம் செலவு செய்து வெளியே கொண்டு வந்து விட்டார் . அவர் தற்கொலை எண்ணத்தால் அழுத்தப்பட்டு , தேவைப்பட்டால் தன்னைக் கொல்வதற்கென்று ஒரு துப்பாக்கியையும் தன்னோடு வைத்திருந்தார் .   ஒருநாள் இவர் மான்சென்ஸ்டரில் உள்ள அல்ஹம்பரா என்னும் சர்க்கஸை கடந்து செல்லும் போது ரிச்சர்ட் வீவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார் . அங்குள்ள இரைச்சலைப் பார்த்து ஏதோ கலவரம் நடக்கிறது என்று எண்ணி தன்னுடைய உடையை அணிந்து உள்ளே சென்றார் . அவர் உள்ளே சென்ற போது இயேசு என்ற ஒரு வார்த்தையினால் தொடப்பட்டார் . ரிச்சர்ட் வீவருடைய பிரசங்க