Henry Moorhouse, ஹென்றி மூர்ஹவுஸ் (Tamil & English)

மான்செஸ்டர் எழுப்புதல் இங்கிலாந்து

ஹென்றி மூர்ஹவுஸ் 1840-ல் மான்செஸ்டரில் உள்ள ஆர்ட்விக்கில் (Ardwick) பிறந்தார். அவர் தம் இளவயதிலேயே பலமுறை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். பதினாறு வயதுக்குள் அவர் சூதாட்டக்காரராகவும், அந்த முரட்டு கும்பல் ஒன்றின் தலைவராகவும், மேலும் கட்டுக்கடங்காதவராகவும் உருவெடுத்தார். அதற்குப்பின் அவர் ராணுவ வீரராக பணியாற்ற விரும்பி ராணுவத்தில் சேர்த்தார். ஆனால், அவருடைய தகப்பனார் அதிக பணம் செலவு செய்து வெளியே கொண்டு வந்து விட்டார். அவர் தற்கொலை எண்ணத்தால் அழுத்தப்பட்டு, தேவைப்பட்டால் தன்னைக் கொல்வதற்கென்று ஒரு துப்பாக்கியையும் தன்னோடு வைத்திருந்தார்.

 ஒருநாள் இவர் மான்சென்ஸ்டரில் உள்ள அல்ஹம்பரா என்னும் சர்க்கஸை கடந்து செல்லும் போது ரிச்சர்ட் வீவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்குள்ள இரைச்சலைப் பார்த்து ஏதோ கலவரம் நடக்கிறது என்று எண்ணி தன்னுடைய உடையை அணிந்து உள்ளே சென்றார். அவர் உள்ளே சென்ற போது இயேசு என்ற ஒரு வார்த்தையினால் தொடப்பட்டார். ரிச்சர்ட் வீவருடைய பிரசங்கம் மூர்ஹவுஸை மனமாற்றத்திற்குள் வழி நடத்தியது. உடனே அவர் தன் புது எஜமானின் பணிக்கென்று தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து, திறந்தவெளியில் பிரசங்கித்தார். கிறிஸ்தவ கைப்பிரதிகளை கொடுத்தார். மேலும் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் தனிநபர்களுடன் கிறிஸ்துவை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் அக்காலத்தில் வாழ்ந்த தேவ ஊழியர்களான ரெஜினால்டு ரெட்கினிஃப், ஜான் ஹாம்ப்ன்டான் மற்றும் ரிச்சர்டு வீவர் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களோடுகூட சேர்ந்து தேவ ஊழியத்தை செய்து வந்தார். அவர் அந்த தேவ ஊழியர்களோடு குதிரை பந்தயங்கள், திறந்தவெளிகள், அரங்கங்கள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றும் இடங்கள் போன்ற பகுதிகளுக்குச் சென்று தேவவசனத்தை (சுவிசேஷத்தை) பிரசங்கிக்க மிகவும் அதிகமாக பயணம் செய்தார்.

 1868-ல் பிலதெல்பியாவில் உள்ள டி.எல்.மூடி தேவாலயத்திற்குச் சென்று அங்கு ஏழு இரவுகள் பிரசங்கித்தார். முதலில் மூடிக்கு அவரை அழைப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் யோவான் 3:16-ல் இருந்து அவர் ஒவ்வொரு இரவும் பேசுவதைக் கேட்ட மூடிக்கு தன்னுடைய ஊழியத்தில் ஒரு ஆழமான அனுபவம் கிடைத்தது. மேலும் 19-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தேவ ஊழியரான மூடி சாட்சியாக கூறியது என்னவென்றால், "ஹென்றி மூர்ஹவுஸின் பிரசங்கத்தைக் கேட்டபிறகு தான், ஒரு வித்தியாசமான சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆரம்பித்தேன்; தேவனுக்கும், மனிதருக்கும் முன்பாக வல்லமையோடு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்" என்றார்.

தன்னுடைய வாழ்வின் கடைசி சில வருடங்கள் ஹென்றி சோர்வின்றி சுவிசேஷத்தை பிரசங்கித்தார். சுவிசேஷ பிரதிகளை விநியோகித்தார். வேதாகமத்தையும் புதிய ஏற்பாட்டையும் விற்பனை செய்தார். இரண்டு வருடங்களில் அவர் 1,50,000 வேதாகமத்தையும், புதிய ஏற்பாட்டு பிரதிகளையும் விற்றார். மேலும் கோடிக்கணக்கான புத்தகங்களையும், கைப்பிரதிகளையும் கொடுத்தார்.

எப்போதுமே ஆரோக்கியத்தைக் காணாத அவர், தனது இளவயதில் அதாவது 40-வது வயதில் இறந்தார். அவர் உடல் மான்செஸ்டரில் உள்ள அர்ட்விக் கல்லறை தோட்டத்தில் ரிச்சர்டு வீவரின் கல்லறை அருகே புதைக்கப்பட்டது.



Revival in England

Moorhouse was born in Ardwick, Manchester in the 1840s. Even as a teenager, he was imprisoned several times. Before he turned 16, he was notorious for gambling, and was a gang leader of one of the deadliest gangster groups. He was ruthless but later he became a soldier as he wanted to join the Army. His father paid a huge sum to bring him out of the Army. Moorhouse was suicidal and even kept a gun ready to kill himself whenever he was upset.

One day as he was walking past the Alhambra Circus in town, he heard Richard Weaver preaching. He first thought that it was a riot and wore his gangster clothes to witness what was happening. He was immediately lured by the love of Jesus Christ as the preacher spoke passionately about God. He quickly repented of his sins. Immediately, he decided to live his life only for the Master’s Service and began to preach in open streets. He distributed tracts to the passers-by and whenever he had free time, he shared the love of Christ to his friends. Not only that, he was in constant fellowship with the great ministers of God of his time – Reginald Radcliffe, John Hampton and Richard Weaver. He joined them in ministry. He visited horse race clubs, open fields, gaming zones and the gallows to reach out to people who desperately needed the gospel. He began to travel widely as he preached.

In 1868, he was invited to preach at the church of D.L. Moody in Philadelphia and preached seven days. At first, Moody hesitated to invite but when he heard him preach from John 3: 16 for those severn days, he began to have a deeper experience. D.L. Moody, the greatest preacher of the 19th century, says of Moorhouse thus: “ Only after I heard Moorhouse’s preaching, did I see a great breakthrough in my own preaching and began to preach before God and men with great might.”

Even during his final days, Moorhouse preached without weariness. He still distributed tracts. He sold Bibles and New Testaments to people. In two year’s time, he sold more than 1,50,000 Bibles and New Testaments. He distributed millions of scriptural books and tracts.

Combatting many health issues all  through his life, he died at an early age of 40. He was laid to rest at Ardwick Cemetry beside the cemetery of Richard Weaver.

Comments

Popular posts from this blog

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் Graham Staines

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)