Ludwig Nommensen (Tamil & English)



லூட்விக் நோமன்ஸ்

  லூட்விக் நோமன்ஸ் ஜெர்மன் தேசத்திலுள்ள டென்மார்க்கில் பிறந்து வளர்ந்தார். இயேசு கிறிஸ்து என்ற பெயரை கேட்டிராத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்கிற பெரிய பாரத்தை தேவன் அவர் உள்ளத்தில் தந்தார். குறிப்பாக இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிக்க செல்ல வேண்டும் என்கிற பாரத்தை தந்தார். தன்னுடைய 20-வது வயதில் அங்கு செல்ல வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவருடைய கால் எலும்பு முறிந்து விட்டது. எழுந்து நடக்க முடியாதபடி படுத்த படுக்கையானார். ஒரு நாள்… இரண்டு நாட்கள் அல்ல; ஒரு மாதம்… இரண்டு மாதங்கள் அல்ல. சுமார் நான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே தன் வாழ்வை கழித்து வந்தார். தன் தாய் தனக்கு கற்று கொடுத்த என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் ( யோவான் 14:4) என்ற வசனத்தை கூறி ஜெபித்துக் கொண்டே இருந்தார் நான்கு ஆண்டுகளாக.

 ஒரு நாள் தன் தாயிடம், இயேசு கிறிஸ்து என்னை சுமத்திரா தீவிற்கு சுவிசேஷத்தை சுமந்து செல்ல முன் குறித்திருக்கிறார். ஆனால் என் கால் மறுபடியும் சரியாகி நான் செல்ல முடியாது என நினைக்கிறேன். கிறிஸ்துவால் என்னை குணப்படுத்த முடியாதா? எனக்காக அவர் குறிக்கப்பட்ட தரிசனம் எப்பொழுது நிறைவேறும்? என்று கேட்டார். தாயோ தன் மகனை தைரியப்படுத்தி, மீண்டும் அந்த வசனத்தையே நினைப்பு+ட்டி ஜெபிக்க சென்னார். என்ன ஆச்சரியம். ஒரு நாள் படுக்கையிலிருந்தவாரே உணவருந்திக் கொண்டிருந்த லூட்விக் மனதில், ஆண்டவர் இடைபட ஆரம்பித்தார். தன் கால்கள் சரியாகி விட்டது என்ற விசுவாசத்தோடு எழுந்து நடக்க உந்தப்பட்டார். அவ்வாறே "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனக்கு சுகம் உண்டாவதாக" என்று கூறி எழும்பினார். நான்கு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த லூட்விக் அற்புத சுகத்தை பெற்றார்.

சுகத்தை பெற்றவர் தேவன் தன் வாழ்க்கையை குறித்து வைத்திருந்த நோக்கத்தை நிறைவேற்ற எண்ணினார். சுமத்திரா தீவிலுள்ள பேபோக் என்ற மக்களுக்கு சுவிசேஷத்தை சுமந்து சென்றார். கிறிஸ்து என்ற பெயரை ஒரு முறை கூட கேள்விப்படாத மக்கள் இவர்கள்.

 கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு செவி சாய்க்காத கடின உள்ளம் கொண்டிருந்தனர். மிகவும் கடினப்பட்டு ஊழியத்தை செய்து வந்தார். தன் தாய் தனக்கு கற்று கொடுத்த வசனத்தின் படி இயேசுவின் நாமத்தினாலேயே அந்த மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபித்து வந்தார். நாளடைவில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவின் அன்பிற்கு அடிபணிந்தனர். லூட்விக் மரிக்கும் போது 1,80,000 மக்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தார்.

 சரித்திரம் என்ன சொல்கிறது என்றால், இன்று முழு இந்தோனேஷியாவிலும் சுமத்திரா தீவில் தான் அதிக கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர் என்று. இந்தோனேஷியாவின் எழுப்புதல் சுமத்திரா தீவிலிருந்து புறப்பட்டது என்றும் சரித்திரம் கூறுகிறது. "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கும் ஜெபமே எழுப்புதலுக்கு காரணம்" என லூட்விக் எழுதுகிறார்.

இன்று நம்முடைய ஜெபம் எப்படி இருக்கிறது என யோசித்துப் பார்ப்போம். இயேசுவின் நாமத்தின் பேரில் ஜெபிக்கிறோமா? அல்லது வெறுமனே அழகான வார்த்தைகளினால் ஜெபிக்கிறோமா? இயேசு என்னும் நாமத்திற்கு மிகுந்த வல்லமை உண்டு.

 Power in the Name of the Lord

Ludwig Nomanns

Ludwig Nomanns grew up in the then German state of Denmark. The Lord gave him a massive will to share the gospel with those who hadn’t heard of the name of Jesus Christ. Specifically, He was burdened by the yearning to go to Sumatran islands in Indonesia. He was trying to go when he was 20. Unexpectedly, he met with an accident that fractured his legs. He was bedridden and unable to walk. For almost four years, he spent his days in bed. In those four years, he repeatedly prayed professing the verse his mother taught him. It was John 14:4 ,’Whatsoever you shall ask in my name, it shall be given to you’

One day, he asked his mother,” Jesus Christ has appointed me to go to the Sumatran islands but I don’t think I can go on my own legs. Can’t Christ heal me? When will God’s vision for me come true? His mother encouraged him to be reminded of God’s word and not to give up on prayer.

What a surprise! One day God kindled the heart of Ludwig who was having his meal, lying on the bed. He was tempted to give a try to stand on his legs. He tried to stand up and walk with the belief that his legs had been healed. He tried to stand up saying,” In Jesus’ name, let me be healed’. Ludwig who was bedridden for four years had experienced an amazing healing.

As he had been healed, he intended to carry forth with the vision God had for him. He carried the Gospel to the people of Pebok in the islands of Sumatra. These people had not heard of the name of Christ even once.

They were hard-hearted who would not listen to the warnings of Ludwig. He continued his mission work amidst great difficulty. He continued praying believing on the verse his mother had taught him. Eventually, the people submitted to the love of Christ. When Ludwig passed away, around 1,80,000 people had accepted Christ as their Saviour.

History noted that in all of Indonesia, the highest number of Christians live in Sumatra and that the revival of Indonesia began in Sumatra. Ludwig has written, "the reason behind the revival is the prayer through Jesus’ Name”.

Let us retrospect our prayers. Are we praying in the Name of Jesus? or are we throwing vain words as a prayer? There is much power in the name of Jesus.


Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!