ஜான் கெடி John Geddie (Tamil & English)

ஜான் கெடி ஏப்ரல் 10,1815-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். பிறந்த சில நாட்களிலேயே கெடி மிகவும் பலவீனப்பட்டு மரண தருவாயில் இருந்தார். அவரின் பெற்றோர்  அவருக்காக பாரப்பட்டு ஜெபித்தனர். அவர் குணமாக்கப்பட்டால் அவரை ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்வதாக ஜெபித்தனர். அவர் கொடூரமான மக்கள் மத்தியில் பயமில்லாமல் ஊழியம் செய்வார் என்று யாரும் நினைத்து பார்த்ததில்லை. ஜான் ஒரு சிறந்த மாணவனாக இருந்தார். தன் சிறுவயதில் எந்நேரமும் புத்தகத்தை படித்துக் கொண்டே இருப்பார். தனது  19-ம் வயதில் இரட்சிப்பை பெற்று பிரஸ்பெடிரியன் சபையோடு சேர்ந்தார். தன் இளவயதில் வேதாகம கல்வியில் (Theology) சேர்ந்தார். மார்ச் 13, 1838-ஆம் ஆண்டு போதகராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு போதகராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு சார்லெட் அம்மையாரை திருமணம் செய்தார்.

New Hebrides -இல் (தற்கால Vanvatu நாட்டின்Melensian மற்றும் Polynesian தீவுகளில் வாழும் நர மாமிச பட்சிகள் மத்தியில் ஊழியம் செய்ய நவம்பர் 30, 1846-ல் கெடி தன் குடும்பத்தோடு புறப்பட்டார். அக்டோபர் 17, 1847-ல் அவர் அங்கு சென்றடைந்தார். பின்னர், கெடி 1848-ல் Aneiteum தீவிற்கு சென்றார். அங்கு சென்று எழுத்து வடிவம் இல்லாத அந்த தீவின் மொழியை கற்றவுடன் அந்த மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து சில புத்தகங்களை எழுதினார்.

ஆனால், அங்கு ஒரு ஆத்துமாவும் இரட்சிப்பு பெறவில்லை. அந்த தீவின் மக்கள் மிகவும் வித்தியாசமான உடை அணிந்தும், முகத்தில் வர்ணமிட்டும் இருந்தனர். அந்த மக்கள் மிகவும் முரட்டாட்டமான மக்களாக இருந்தனர். பெண்களை மிகவும் அடிமைப்படுத்தினார்கள். ஒரு ஆண் இறந்தால் அவரோடு அவர் மனைவியையும் கொன்று புதைத்து விடுவார்கள். அந்த மக்கள் மனித உடலை மிகவும் சுவையான உணவாக கருதினார்கள். ஆவி வணக்கங்கள் மற்றும் விக்கிரக ஆராதனையையும் செய்து வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் மத்தியில் தான் கெடி வாழ்ந்தார்.

 கெடி தன் ஊழியத்தை முதலில் பள்ளிகளின் மூலம் ஆரம்பித்தார். பள்ளிகள் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அதிகமான கஷ்டங்களை சந்தித்தார். பிள்ளைகள் பள்ளிக்கு வர இவர் பணம் கொடுத்தார். சுவிசேஷ ஊழியத்திற்கு செல்லும் போது பலர் அவரை கொலை செய்ய முயற்சி செய்தனர். துன்பங்கள் வந்தாலும் அவர் ஆண்டவரின் அன்பை தொடர்ந்து கூறி வந்தார். அதிக ஜெபம் மற்றும் உழைப்பினால் அந்த இடத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு நாள் யாகானு என்ற ஒரு மனிதன் கெடியைப் பார்க்க வந்தார். அவர் மாம்ச பட்சினிகளுக்கு ஒரு தலைவராக இருந்தார். அவன் இருந்த தீவில் சில குழந்தைகள் மட்டுமே இருந்தனர். ஏனென்றால் அவன் அனைத்து குழந்தைகளையும் கொன்று சாப்பிடுவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு கொடூரமான மனிதன் தேவனின் அன்பினால் இழுக்கப்பட்டு கெடியிடம் ஜெபிக்க வந்தார். தொடர்ந்து கூட்டம் கூட்டமாக மக்கள் இயேசுவின் அன்பினை அறிந்து தங்கள் பொல்லாத வழிகளை விட்டு விலகினர். 25 சபைகளில் மக்கள் கூடி தேவனை ஆராதித்தனர். 24 ஆண்டு ஊழயத்தின் கனியே இவையனைத்தும்.

டிசம்பர் 14, 1872-இல் கெடி தேவ இராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட்டார். அவர் கல்லறையில் உள்ள பதிப்பு "ஜான் கெடி 1848-ம் ஆண்டு Aneiteum வருகையில் ஒரு ஆத்துமாவும் இரட்சிக்கப்படவில்லை. ஆனால் அவர் அங்கிருந்து செல்லும் போது ஒரு ஆத்துமாவும் இரட்சிக்கப்படாமல் இல்லை".கெடியின் வாழ்க்கை மாம்ச பட்சினிகளை மனிதனாக மாற்றியது. அவர்கள் ஆண்டவரின் அன்பினை அறியவும் அவருக்காய் வாழவும் உதவியது.

 நம் குறைகளை ஆண்டவரிடம் ஒப்புவித்து அவருக்காய் தேசத்தை சுதந்தரிக்க புறப்படுவோமா?

 John Geddie

John Geddie was born on 10th April, 1815 at Scotland. He was found to be a very weak child and his parents feared that he might not survive even at birth. His parents fervently prayed for his life and vowed to dedicate his life for ministry if he was cured. They did not imagine that he would later become a valiant missionary serving fearlessly among the most gruesome people. Geddie turned out to be an amazing student and was always found reading books. He received salvation at the age of 19 and then joined the Presbyterian church. He pursued Theological studies as a young man and was ordained to be a Pastor on March 13th, 1838. The same year he was also married to Charlotte.

He volunteered to serve among the cannibals in New Hebrides (now Vanuatu) and the Poynesian islands and left with his family on November 30, 1846. He reached the island on October 17, 1847. He later travelled to the Aneiteum island. Geddie formed the script for the Aneiteum language, soon after he learnt to speak in that language. He managed to write a few books in their language.

He was disappointed that not a single soul was saved. The people of the village wore very different clothes and had their faces were painted. They were untamed and the women were treated pathetically. On the demise of the husband, the wife was also killed and buried alongside her dead husband. They were cannibals who enjoyed eating human flesh. Geddie lived among these people who worshipped idols and spirits.

He started his mission work through schools. Though he faced hardship in the beginning, through his work at schools, he lured the children to come to God. Many tried to get him killed for his evangelical work, but he continued to preach the love of God amidst his trials. There was a visible change among the people due to his hard work and unwavering prayers. One fine day, a man named Nohoat, the chief of the cannibals came to visit Geddie. There were very few children left alive in that region as most of them were killed and eaten by their own people. But this cruel person was touched by the love of Christ and came forward to pray with Geddie. Following this incident, there were crowds of people who began to get saved and changed from their older sinful ways. The fruit of Geddie’s 24 years of labour resulted in 25 churches planted at New Hebrides, with people worshipping the one true God

On December 14, 1872 Geddie was laid to rest. The inscription on his tombstone read, “In memory of John Geddie, D.D., born in Scotland, 1815, minister in Prince Edward Island-seven years, Missionary sent from Nova Scotia to Aneiteum for twenty-four years. When he landed in 1848, there were no Christians here, but when he left in 1872 there were no heathen.” It was Geddie’s life that changed these cannibals to human beings and made them realize the love of God and live for Him.

Can we lay down our insecurities at God’s feet and rise to save our Nation for God?

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!